.

Pages

Sunday, February 26, 2012

[ 5 ] பயண அனுபங்கள் – சீனா

எனது அலைப்பேசி ஒலித்தது. எடுத்தேன்.... பேசினேன்..................! மறுமுனையில் என் சீன நண்பன் “ஜேம்ஸ்” எனக்காக “XingGongDong”  மெட்ரோ ஸ்டேஷனில் காத்துக்கொண்டிருப்பதைக் கூறினான்.
ரயில் மெதுவாக நின்றது.......ரயிலிருந்து இறங்கிய நான், எனது நண்பனுடன் நம்மைப்பற்றிய விவரங்களைப் பதிவு செய்து “அடையாள அட்டை” ( Badge ) பெறுவதற்காக அருகில் உள்ள ஏற்றுமதி இறக்குமதி வணிகச் சந்தையின் ( Trade Fair ) பதிவு அலுவலகத்துக்கு சென்றோம். முதல் நாள் என்பதால் கடுமையான கூட்டமாகக் காணப்பட்டது.

1.    நுழைவுக்கட்டணம் RMB 200 ( Chinese Currency ) செலுத்தி ( முதல் தடவையாக பதிவு செய்பவர்கள் மாத்திரம் இக்கட்டணத்தை செலுத்தவேண்டும் ) எனது பாஸ்போர்ட், பிஸ்னஸ் கார்டு மற்றும் இரண்டு போடோக்களைக் அவர்களிடம் கொடுத்து பதிவு செய்து அடையாள அட்டையைப் பெற்றுக்கொண்டேன்.
2.    இவ்அடையாள அட்டை வணிகச் சந்தை நடக்கும் அரங்கத்திற்குள் நாம் நுழைவதற்கு உதவும்.
3.    ஒரு முறை பதிவு செய்துவிட்டால் ஒவ்வொரு வருடமும் இருமுறை நடக்கும் இவ்வணிகச் சந்தைக்கு ( Trade Fair ) நம் நாட்டில் உள்ள சீன தூதரகத்தில் விசா பெற இலகுவாக நமது முகவரிக்கு இவ்வணிகச் சந்தையின் அமைப்பாளரால் அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும்.
4.    இவ்அடையாள அட்டையைப் பயன்படுத்தி நிரந்தரமாக வணிகச் சந்தையில் நாம் பங்குபெறலாம். 

 1957ம் ஆண்டு முதல் துவங்கிய இவ் ஏற்றுமதி இறக்குமதி வணிகச் சந்தை ( Trade Fair ) ஒவ்வொரு ஆண்டும் வசந்த காலம் ( Spring ) மற்றும் இலையுதிர்க் காலம் ( Autumn ) என இரண்டு காலக் கட்டங்களில் நடைபெறுகிறது. சீன வரலாற்றில் மிக நீண்டகாலம் நீடித்து, மிகப் பெரியளவில் நடைபெறும் பல்நோக்கு சர்வதேச வர்த்தகப் பொருட்காட்சியாக, சீன வெளிநாட்டு வர்த்தகத்தின் வெளிப்பாடாகவே இவைக் கருதப்படுகிறது.
பல ஆண்டுகளாக வெற்றிகரமாக நடந்துகொண்டு இருக்கிற இவ்வணிகச் சந்தையின் ( Trade Fair ) மூலம் சீனாவின் தொழில் வளர்ச்சிகள், பொருளாதார மேம்பாடுகள் உயர்ந்த நிலையில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்களின் பங்களிப்புடன் சிறந்து விளங்குவது குறிப்பிடத்தக்கது. 

 1957ம் ஆண்டு முதல் துவங்கிய இவ் ஏற்றுமதி இறக்குமதி வணிகச் சந்தை ( Trade Fair ) ஒவ்வொரு ஆண்டும் வசந்த காலம் ( Spring ) மற்றும் இலையுதிர்க் காலம் ( Autumn ) என இரண்டு காலக் கட்டங்களில் நடைபெறுகிறது. சீன வரலாற்றில் மிக நீண்டகாலம் நீடித்து, மிகப் பெரியளவில் நடைபெறும் பல்நோக்கு சர்வதேச வர்த்தகப் பொருட்காட்சியாக, சீன வெளிநாட்டு வர்த்தகத்தின் வெளிப்பாடாகவே இவைக் கருதப்படுகிறது.
பல ஆண்டுகளாக வெற்றிகரமாக நடந்துகொண்டு இருக்கிற இவ்வணிகச் சந்தையின் ( Trade Fair ) மூலம் சீனாவின் தொழில் வளர்ச்சிகள், பொருளாதார மேம்பாடுகள் உயர்ந்த நிலையில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்களின் பங்களிப்புடன் சிறந்து விளங்குவது குறிப்பிடத்தக்கது.
சீனர்கள் தங்கள் நாட்டில் உற்பத்திச் செய்யப்படும் ஒரு சிறிய பொருளை எவ்வாறு சந்தைப்படுத்தப்பட வேண்டும் ?
குறிப்பாக............
1.    பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்களின் தேவைகள் என்ன ? என்பதை ஆய்வு செய்தல்
2.    திட்டமிடல்
3.    முறைப்படுத்தப்பட்ட நிர்வாகம்
4.    சர்வதேச வணிக சட்ட திட்டங்கள்
5.    மூலப் பொருள்கள் எளிய வழியில் சேகரித்தல்
6.    பொருட்களின் தரம்
7.    விலைகளை நிர்ணயம் செய்தல்
8.    எளிய வகையில் தகவல் பரிமாற்றம்
9.    எளிய வகையில் விநியோகம்
10.  சர்வதேச வணிகச் சந்தைகளில் பங்குபெருதல்
11.  விளம்பரம்
போன்ற வணிக நுணுக்கங்களை நன்கு அறிந்தவர்களாக உள்ளார்கள். நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் மிகப்பெரிய அளவில் பங்காற்றும் அவர்களின் திறமைகள் எனக்கு பெரும் வியப்பாகவே இருந்தது. 
சீன மாணவர்களைப் பொறுத்த வரையில் அதிகளவில் “வணிகத்” தொடர்பான படிப்புகளையே தேர்ந்தெடுத்து படிக்கிறார்கள்.  இவர்கள் பிற நாட்டினரோடு நண்பர்களாகப் பழகுவதை பெரிதும் விரும்புகிறார்கள். குறிப்பாக ஆங்கில மொழி பேசும் திறனை நன்கு வளர்த்துக்கொள்ள இது உதவும் என்பதால் இந்த கூடுதல் ஆர்வம் அவர்களிடையேக் காணப்படுகிறது.
அடையாள அட்டையைப் பெற்றுக்கொண்ட நான், உலகப்புகழ் பெற்ற மிகப்பெரிய அரங்கத்தின் நுழைவாயிலை நோக்கி பயணமானேன்.
நுழைவாயிலில் நடைமுறைப் பணிகளை முடித்துக்கொண்டு அருகே ராஜ கம்பீரத்துடன் ( ? ) காட்சியளிக்கும் ( ! )...............................................

இறைவன் நாடினால்  !   “ பயண அனுபவங்கள் ” தொடரும்.....................

Friday, February 24, 2012

திருச்சி விமான நிலையம் : வழியனுப்பிய உறவினர்களின் நெகிழ்ச்சி !

அதிரையிலிருந்து சுமார் 110 கிலோ மீட்டர் தொலை தூரத்தில் உள்ள திருச்சி விமான நிலையம், இந்தியாவில் உள்ள பழமையான விமான நிலையங்களில் ஒன்றாகும். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விமான நிறுவனங்கள் தங்களின் விமான சேவையை இயக்கி வருகின்றன.
அபரிதமான வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கும் திருச்சி விமான நிலையத்திற்கு, சர்வதேச அந்தஸ்து அளிக்க வேண்டும் என்பது பயணிகள்-பொதுமக்களின் நீண்ட கால விருப்பமாகும்.
குறைந்தபட்சம் 9,000 அடி நீளத்துக்கு ஓடுதளத்தை உயர்த்தினால் மட்டுமே சர்வதேச விமான நிலைய அந்தஸ்து கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
விமான நிலையத்தை வடிவமைத்த நிபுணர் மத ஈடுபாடு உள்ளவராக இருப்பாரோ ! என்னவோ ? மதச்சார்பற்ற இந்தியாவில் உள்ளோம் என்பதை மறந்துவிட்டு கோபுரம் அதன் மீது கவசங்கள் இருப்பது போல் உருவாக்கி கொடுத்துள்ளார்.

மனதை வருடிய காட்சிகள் :
வழியனுப்ப வந்துள்ள தங்களின் உறவினர்களிடம் பயனாளிகள் நெகிழ்ச்சியுடன் விடைபெற்றுக்கொண்டது. மனதை வருடிய காட்சிகள்
குறிப்பாக.....................
1.       குழந்தைகள் தங்களின் வாப்பாவைக் ( Father ) “டாட்டா” க் ( Bye Bye  ) காண்பித்து வழியனுப்பியது..............................விரைவில் வந்துவிடுவேன்ட “செல்லம்” ,  “தங்கம்” என கன்னத்தில் தட்டி கண்ணீரை அடக்கிக்கொண்டு குழந்தைகளுக்கு ஆறுதல் கூறியது...........................
2.       அன்பான மனைவியோ தங்கள் கணவன் இரண்டு மூன்று ஆண்டுகளில் திரும்ப வந்துவிடுவார் என்ற நினைவில் மூழ்கியவாறு கண்களில் கண்ணீருடன் முகத்தில் எந்த சலனத்தையும் காட்டாமல் வழியனுப்பியது.........................
3.       பெற்றோர்களோ தங்களின் எதிர்பார்ப்பில் “ நாம் கஷ்டப்பட்டு படிக்க வைத்து உருவாக்கிய நமது மகன் நம்முடைய கஷ்டங்கள் அனைத்தையும் நிச்சயமாக போக்குவான் ” என்ற நம்பிக்கையில் கையசைத்து வழியனுப்பியது......................
4.       அன்பான மனைவியின் பிரிவு, குழந்தைகளின் படிப்புச் செலவுகள், சகோதரிகளின் திருமணச் செலவுகள், பெற்றோர்களின் மருத்துவச் செலவுகள், நிலம் வாங்குதல், வீடு கட்டுதல், நகைகள் வாங்குதல் போன்ற என்னற்றக் கடமைகளை ( ? ) மனதில் சுமந்துவாறு “கையசைத்து” விட்டு நுழைவாயிலை நோக்கி நடந்து சென்ற பயனாளிகளின் முகத்தை பார்த்தது......................
இவைகள் எல்லாம் என் மனதை வருடியது.

கவனத்தில் கொள்ள வேண்டியவைகள் :
1.       விமான நிலையங்களில் அறிமுகமில்லாத நபர்களிடம் பார்சல்களை வாங்குவதை தவிர்த்துக்கொள்ளுங்கள் அவர்கள் பெண்களாக இருந்தாலும் சரி......................
2.       பதற்றத்துடன் பயணம் செய்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
3.       பயணம் மேற்கொள்ளும் முன் தங்களின் உடமைகளை சரிபார்த்துக்கொள்ளவும் குறிப்பாக தங்களின் பாஸ்போர்ட், விமான டிக்கெட் போன்றவைகளை.
4.       கூடுதல் எடைகளுடன் கூடிய பொருட்களை தவிர்க்கவும். விமான நிறுவனங்களால் அனுமதிக்கப்பட்டவை மாத்திரம் கொண்டுசெல்லவும்.

குறிப்பு : இன்று திருச்சி விமான நிலையத்திற்கு நண்பர் மற்றும் எனது உறவினர் ஆகியோர்களை “துபாய்” நாட்டிற்கு வழியனுப்பி வைப்பதற்காகச் சென்றேன். அங்கே கண்ட என் மனதை வருடியக் காட்சிகளை இங்கே பதிந்துள்ளேன்.

இறைவன் நாடினால்  !            தொடரும்......................

Tuesday, February 21, 2012

“ஆட்டிசம்” ஓர் விழிப்புணர்வு !


முயன்றால் முடியும் ஏன் ? எதற்கு ? எப்படி ? என புரியாத நோய்களில், "ஆட்டிசமும்" ( Autism ) ஒன்று. இதை நோய் என சொல்வது தவறு. இது ஒரு குறைபாடே. மூளையில் ஏற்படும் குறைபாடு. ஆனால், இக்குறைபாட்டை பெரிய அளவில் சரி செய்ய முடியாது என்பது வேதனைக்குரிய விஷயம்.

குழந்தை இப்படி பிறந்துவிட்டதே என வேதனைப்பட்டு, பல பெற்றோர் தங்கள் ஆரோக்கியத்தை கெடுத்து கொள்வதோடு, குழந்தையின் எதிர்காலத்தையும் பாழாக்கி விடுகின்றனர். அதற்கு பதிலாக, விடா முயற்சியுடன் போராடினால் வெற்றி பெற முடியும். வேதனைப்படும் அளவுக்கு ஆட்டிசம் குறைபாடு என்ன பாதிப்புகளை ஏற்படுத்தும் என இனி பார்ப்போம்.


ஆட்டிசம் என்றால் என்ன ?ஆட்டிசம் என்பது மூளை வளர்ச்சியில் ஏற்படும் குறைபாடாகும். மூளையின் முக்கிய செயல்பாடுகளாகிய பேச்சு திறன், சமுதாய தொடர்பு மற்றும் புலன் உணர்வு ஆகியவற்றை பாதிக்கும் நோய். மற்ற குழந்தைகளை போல் பேச முடியாது, நடக்க முடியாது, நாம் யார், எங்கு இருக்கிறோம் என்ற விவரங்கள் தெரியாது. இதனால், அவர்களால் மற்றவர்களை போல் இயல்பு வாழ்க்கை வாழ முடியாது. ஆட்டிசம் பிறவி குறைபாடாக இருந்தாலும், பிறந்த உடனே கண்டுபிடிக்க முடியாது. 6 மாதம் முதல் 3 வயதுக்குள் ஆட்டிசம் குறைபாட்டை கண்டுபிடிக்க முடியும். இதுகுறித்து விழிப்புணர்வு இல்லாததால், பலர் 3 வயதுக்குள் கண்டுபிடிக்க தவறிவிடுகின்றனர். 3 வயதுக்குள் கண்டுபிடித்தால் உரிய பயிற்சி அளித்து, ஓரளவு குறைபாட்டை சரி செய்துவிடலாம். எதனால், ஆட்டிசம் குறைபாடு ஏற்படுகிறது என இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. பெண் குழந்தைகளை விட, ஆண் குழந்தைகள் தான் இக்குறைபாட்டால் 4 மடங்கு பாதிக்கப்படுகின்றனர். இதற்கான காரணமும் இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை. 10 ஆயிரம் குழந்தைகளில், 5 பேருக்கு இக்குறைபாடு ஏற்படுகிறது.

அறிகுறிகள் :1. யார் முகத்தையும் பார்க்காதிருத்தல்

2. தனியாக இருப்பதை விரும்புதல்.

3. காது கேளாது போல் இருத்தல்.

4. காரணமின்றி மற்றவர்களை தாக்குதல்.

5. அதிக வலியை தாங்கிக் கொள்ளுதல்.

6. கை, கால்களை வேகமாக அசைத்து வித்தியாசமாக சத்தம் போடுதல்.

7. தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்ளுதல்.

8. பேச்சுத்திறன் குறைதல்.

9. விரல் சூப்புதல், நகம் கடித்தல்.

10. பதட்டநிலை.

11. அடம் பிடித்தல்.

மற்ற குழந்தைகளிடம் எப்படி வேறுபடுகின்றனர் ?மற்ற குழந்தைகளைப் போல் அல்லாமல் இக் குழந்தைகளின் பார்வை, கூரையையே வெறித்து பார்ப்பது போல், ஒரே இடத்தில் நிலைத்திருக்கும்.நாம் ஒருவரிடம் பேசும் போது கண்ணைப் பார்த்து பேசுவது போல், ஆட்டிசம் குழந்தைகள் கண்ணைப் பார்த்து பேசாது. கைகளை உதறிக் கொண்டே இருக்கும்.மற்ற குழந்தைகளை நாம் கட்டி அணைப்பது போல், இக்குழந்தைகளை கட்டி பிடித்தால் கோபம் வரும். சில குழந்தைகள் மூர்க்கமாக நடந்து கொள்வர். தண்ணீர் வேண்டும் என்றால் வாய் திறந்து கேட்காமல், சைகை மூலம் கேட்பார்கள். சில குழந்தைகள் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருப்பார்கள். பாத்ரூம் செல்வதற்கு தண்ணீர் வேண்டும் என்பார்கள், தண்ணீர் வேண்டும் என்றால் பாத்ரூம் போக வேண்டும் என்பார்கள். சில குழந்தைகள் தனக்கு தானே பேசிக் கொண்டிருப்பார்கள். வேறு சில குழந்தைகள் திடீரென சிரிக்கும், சில குழந்தைகள் திடீரென அழும். எதற்காக சிரிக்கிறார்கள், எதற்காக அழுகிறார்கள் என தெரியாது. வலி, சிறிய அளவில் இருந்தாலும் “ஓ’ என அலறும். சில குழந்தைகள் கடும் வலி இருந்தாலும் வலியை உணர்வதில்லை.


ஆட்டிசம் குறைபாடு இருந்தால் செய்ய வேண்டியது என்ன ?நம் வாழ்வின் அன்றாட பழக்க வழக்கங்களை கற்றுக் கொடுப்பது தான், ஆட்டிசம் குழந்தைகளுக்கு நாம் கொடுக்கும் முதல் சிகிச்சை. ஆம். இவர்களுக்கு பயிற்சி தான் சிகிச்சை.

எதை கற்றுக் கொடுப்பது :ஏற்கனவே சொன்னது போல், ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட எல்லா குழந்தைகளுக்கும், ஒரே மாதிரியான பிரச்னை இருக்காது. எனவே, நம் குழந்தைக்கு என்ன விதமான குறைபாடு உள்ளது என, முதலில் புரிந்து கொள்ள வேண்டும். எது வேண்டும், எது வேண்டாம் என சொல்ல தெரியாது. உதாரணமாக, சிறுநீர் கழிக்க வேண்டும் என, உணர்ந்து சொல்ல தெரியாது. ஒவ்வொரு குழந்தைக்கும், ஒவ்வொரு விதமான பிரச்னை இருக்கும் என்பதால், எல்லா குழந்தைகளுக்கும் பொதுவான பயிற்சி முறைகளை வகுக்க முடியாது. ஒவ்வொரு குழந்தையையும் சரியாக புரிந்து கொண்டு, அதற்குகேற்ப பயிற்சிகளை வடிவமைக்க வேண்டும். அவர்களது செயல்களால் கோபப்படாமல், அவர்களை புரிந்து கொண்டு, பொறுமையாக பயிற்சி அளிக்க வேண்டும். இக்குழந்தைகள் வேண்டுமென்றே இதை செய்வதாக கருதி, மிரட்டக் கூடாது. இது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். எக்காரணத்தை கொண்டும் எதற்கும் கட்டாயப்படுத்தக் கூடாது. இவர்களுக்கு முதலில் கல்வி என்பது, அன்றாட பழக்க வழக்கங்களை கற்றுக் கொடுப்பது தான்.ஒரு விஷயத்தை திரும்ப திரும்ப சொல்லிக் கொடுக்கும் போது, அவர்கள் அதைப் புரிந்து கொண்டு அதன்படி நடப்பர். மற்றக் குழந்தைகளை போல் இவர்களால், பாடங்களை படிக்க முடியாது. எனவே இவர்களை, சிறப்பு பள்ளிகளில் சேர்த்து படிக்க வைக்கலாம். அங்கு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மூலம் கற்றுக் கொடுப்பது எளிதாக இருக்கும்.வழக்கமான கல்வி படித்து, மற்றவர்களை போல் வேலைக்கு செல்ல முடியாது என்பதால், இவர்களுக்கு சிறப்பு தொழில் பயிற்சி அளிக்கப்படுகிறது. தையல் கற்றுக் கொடுப்பது உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கலாம். இக்குழந்தைகள் சில அற்புதத் திறமைகளை கொண்டிருப்பர். அதைக் கண்டுபிடித்து ஊக்கப்படுத்த வேண்டும். மனதை ஒரு நிலைப்படுத்துவதற்கான பயிற்சிகளை அளிக்க வேண்டும். வண்ணம் தீட்டுவது, பேனா, பென்சில் கொடுத்து ஏதாவது கிறுக்க செய்வது என, பல்வேறு பயிற்சிகள் மூலம் அவர்களை அன்றாட வாழ்க்கைக்கு தயார் படுத்த வேண்டும்.


உணவு :

இக்குழந்தைகளுக்கென தனி உணவு தேவையில்லை என்றாலும், பால், கோதுமை, பிஸ்கட், சாக்லேட், பாஸ்ட்புட் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். அரிசி பால் எடுத்து சமைத்து கொடுக்கலாம். முடிந்தளவு அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும். மருந்து இல்லை: இந்த நோய்க்கு மருத்துவ சிகிச்சை இல்லை. ஆனால், மூர்க்கத்தனமாக செயல்படும் குழந்தைகளை அமைதிப்படுத்த சில மருந்து கொடுக்கப்படுகின்றன.

பெற்றோர் செய்ய வேண்டியது என்ன ?இக்குழந்தைகளுக்கு பெற்றோரின் பங்கு முக்கியம். அவர்களால் தான், இக்குழந்தைகளை இயல்பு வாழ்க்கைக்கு அழைத்து வர முடியும். இது ஒரு குறைபாடு என உணர்ந்து அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இதை அவமானம் என கருதக் கூடாது. நாம் நம் குழந்தையை ஏற்று, அதற்குரிய முக்கியத்துவம் கொடுத்தால் தான், இச்சமூக மக்களும் மரியாதை கொடுக்க முன் வருவர். நமது இன்ப, துன்பத்தை அவர்களால் உணர முடியாது. ஒரு துயரமான சூழலில் சிரித்துக் கொண்டிருப்பர். இதற்காக, அவர்களை வெறுக்கக் கூடாது. மூளை குறைபாட்டால்தான், அவர்கள் அப்படி இருக்கின்றனர் என புரிந்து கொள்ள வேண்டும். அவர்களை வெளியே அழைத்துச் செல்லுங்கள்; அப்போது தான் தன்னம்பிக்கை அதிகரிக்கும். குறைந்த எடையுடன் இருந்தால் உஷார் குறைந்த எடையுடன் அல்லது குறை மாதத்தில் பிறக்கும் குழந்தைகள், ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட வாய்ப்பு அதிகம். குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகளில், 5 சதவீத குழந்தைகள், ஆட்டிசம் நோயால் பாதிக்கப்படுகின்றனர். இயல்பான எடையுடன் பிறக்கும் குழந்தைகளில், 1 சதவீத குழந்தைகள் ஆட்டிசம் நோயால் பாதிக்கப்படுகின்றனர் என, சமீபத்திய ஆய்வில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. குறைந்த எடையுடனோ அல்லது குறை மாதத்தில் பிறக்கும் குழந்தைகளை பரிசோதிப்பது அவசியம்.


Source : ஸ்வயம் சிறப்பு கல்வி மையம்

Saturday, February 18, 2012

[ 4 ] பயண அனுபவங்கள் – சீனா

என் வீட்டிற்க்கு நாங்கள் வந்தததும் என் சீன நண்பன் “ஜேம்ஸ்“ என்னிடம் “ ஸ்ஸீ” “ ஸ்ஸீ “ Xie Xie ( நன்றி வருகிறேன் ) என்று சொல்லி விடைப்பெறத் தயாரானான்.

அப்பொழுது என்னுடைய “உம்மம்மா” கொடுத்தனுப்பிய நம்மூர் “நூர் லாட்ஜ்” அல்வா, மௌலானா “தம்ரூட்” , சொட்டை சாகுலாக்கா “பனியான்”, வல்கூஸ் ராத்தா “நானக்கொத்தான் “ போன்றவைகளை அவனுக்குக் கொடுத்து வழியனுப்பினேன்.

அவனும் பதிலுக்கு சீனர்கள் விரும்பி பருகக்கூடிய “கிரீன் டீ” பாக்கெட்டை என்னிடம் தந்தான். கிரீன் டீயில் அதிக அளவில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது என்றும், எனவேதான் சீனர்கள் சராசரியாக 90 வயதை தாண்டி வாழ்வதாக ( ! ? )ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுவதாக ஒரு கருத்து (?) நிலவுகிறது.

மேலும் அவன் தந்த சிம் கார்டையும் ( China Mobile ) வாங்கி வைத்துக்கொண்டேன்.


நான் கொண்டுவந்த பார்சலைப் பிரித்து அதில் உள்ள மசாலாப் பொருள்கள், நூடுல்ஸ் ( சீனாவுக்கே நூடுல்ஸா ? ), டேட்ஸ், பிரட், சீஸ் போன்றவைகளை எடுத்து சமையலறையில் வைத்துவிட்டு, தொழுவதற்கு இலகுவாக “ Qibla Direction ” கருவியை வைத்து “கிப்லா” வின் திசையையும் அறிந்துகொண்டேன்.

நாளை சர்வதேச ஏற்றுமதி இறக்குமதி வணிகச் சந்தைக்கு ( Trade Fair ) செல்ல இருப்பதால், கீழ்க்கண்ட தேவையான பொருட்களை முன்கூட்டியே எடுத்து வைத்துக்கொண்டேன்.


1. Pen, Note Book , Stapler
2. Business Card
3. Passport
4. Photos - 2
5. Trolley Bag
6. Booth List ( இறைவன் நாடினால்’ இதைப் பற்றி பின் வரும் வாரங்களில் விவரிக்கிறேன் )

சிறிது உணவு எடுத்துக் கொண்டுவிட்டு உறங்கச் சென்றுவிட்டேன்............................

அடுத்த நாள் : காலைப்பொழுது


அருகில் உள்ள “மெட்ரோ” ரயில்வே ஸ்டேஷனை நோக்கி பயணமானேன்.
அங்கே உள்ள இயந்திரத்தில் பொருட்காட்சி நடக்கக்கூடிய இடமாகிய “XingGongDong” ஐ தேர்வு செய்து பயணச் சீட்டைப் ( Token ) பெற்றுக்கொண்டேன்.


உலகில் அதிவேக ரயில் போக்குவரத்தினை மேற்கொள்ளும் நாடுகளுள் சீனாவும் ஒன்று. குவாங்சோ ( Guangzhou ) நகர போக்குவரத்தைச் சீர்படுத்தியதில் “மெட்ரோ” ரயில் பெரும் பங்கு வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


சிறிது நேரத்தில் அமைதியாக ஆரவாரங்கள் இன்றி வந்த ரயிலில் ஏறி இருக்கையில் அமர்ந்து கொண்டேன். மெதுவாக நகர்ந்தது........................


புதிய தொழில் நுட்பத்தின் படி உருவாக்கப்பட்ட “மெட்ரோ ரயில்” கள் தடம் புறளும் வாய்ப்புகள் குறைக்கப்பட்டு வழக்கமான ரயில் பாதையாக இல்லாமல் தட்டையான பாதையாகவே உள்ளது. வேகம் எடுக்கும் போது மெதுவாக ஊர்ந்து தான் செல்லும் , ஏனெனில் உராய்வு சத்தங்கள் எதுவும் பயணம் செய்யும் போது கேட்கவே இல்லை. ( நம்மூர் ரயில்களின் இரைச்சல் செவியைப் பிளக்கும், ஆடு மாடுகள் அலறி அடித்துக்கொண்டு ஓடும், கரும்புகைகளைக் கக்கி சுற்றுச்சூழலை மாசுபடுத்தும், இருப்புபாதைகளை கடக்கும் முன் விபத்துகள் ஏற்படுத்தும்.............. )


சீன இளைஞர்களும், பெண்களும் ஒரே உருவ ஒற்றுமையுடனும் காட்சியளித்தார்கள். அவர்களின் உடைகள் பளிச்சென்று காணப்பட்டது. ( துணிகளை நம்மூர் “உஜாலா” வை போட்டு துவைத்திருப்பார்களோ ? ) அதேபோல் சுறுசுறுப்புடன் கூடிய கடின உழைப்பாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.


ரயில் அடுத்த ஸ்டேஷனில் நின்றதும், வயதான சீன தம்பதிகள் இருவர் அதில் ஏறினார்கள். அருகில் இருந்த சீனர்களோ தங்களின் இருக்கைகளை ஒதுக்கி அதில் அவர்களை அமரச் செய்தார்கள். குறிப்பாக வயதானவர்களுக்கு சீனர்கள் மரியாதையுடன் கூடிய அன்பை பொழிவதைக்கண்டு நான் வியந்தேன், நெகிழ்ந்தேன், மகிழ்ந்தேன். “நமதூரில் இன்னும் வயதான தங்களின் தகப்பன்களை அவர்களின் முதுமை கருதி தங்களின் வீட்டில் ஓய்வு எடுக்க அனுமதிக்காமல் பணிபுரிய விட்டு வேடிக்கை பார்க்கும் கூட்டங்கள் ஏராளமாகவே உள்ளது...........! அதிகாலை நேரங்களில் அவர்களின் முதுமை கருதி வயிற்றுப்பசிகளை ஆற்றுவதற்கு உணவுகளைக் கொடுக்க தாமதப்படுத்துபவர்கள் கவனிக்கப்பட வேண்டியவை...................”

எனது அலைப்பேசி ஒலித்தது. எடுத்தேன்.... பேசினேன்..................!


இறைவன் நாடினால் ! “ பயண அனுபவங்கள் ” தொடரும்.....................

Saturday, February 11, 2012

காணவில்லை !!!


1. பெயர் : அதிரைப் பட்டினம் பேருந்து நிலையம்


2. வயது : மிகவும் பழமை வாய்ந்தது

3. இவ்ஊரின் தொழில் : விவசாயம், வணிகம்


4. சிறப்புகள் : சுமார் நாற்பதாயிரம் மக்கள்கள் வசிக்கக்கூடிய வரலாற்று சிறப்புக்கள் மிகுந்தப் பகுதியில் அமைந்து இருந்தது.


5. தொகுதி : தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை தொகுதி


6. நான்கு எல்லைகள் : பட்டுக்கோட்டை, மதுக்கூர், கடற்க்கரையோரப் பகுதியான முத்துப்பேட்டை, மல்லிப்பட்டினம் போன்ற பகுதிகளை ஒட்டிய ஊரில் அமைந்து இருந்தது.


7. சமீபத்திய சாதனை : ஓராண்டுக்கு முன் இத்தொகுதி MP அவர்களால் தேர்தல் நேரத்தில் “ பஸ்ஸ்டாண்டு வரும் “ என அறிவிப்பு “மாத்திரம்” செய்தது.


8. எதிரிகள் : யாரென்று அப்பாவி மக்கள்களுக்கு அறிய (?) முடிய வில்லை


9. பாதிப்புகள் : அதிரை மற்றும் இதனைச் சுற்றியுள்ள பொது மக்கள்கள்.


10. கருத்து : வரும்.........! ஆனா வராது........................!! ( ஹி ஹி ஹி )

Friday, February 10, 2012

[ 3 ] பயண அனுபவங்கள் – சீனா

என் நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அடுக்குமாடி குடியிருப்பு அருகே வந்து நின்றது எங்களது கார்.

நானும் எனது நண்பன் “ஜேம்ஸ்” ம் காரிலிருந்து இறங்கியவுடன்
"நீ ஹாவ்" ( நீங்கள் நலமா ? ) என்றேன் எனது குடியிருப்பின் பாதுகாவலரிடம் அவனோ “ ஹாவ் ” ( நலம் ) என்றான்.


இங்கே அடுக்குமாடி குடியிருப்புகளைப் பொருத்தவகையில் சதுர மீட்டரில் கணக்கீடு செய்து விலைகளை நிர்ணயம் செய்துகொள்கிறார்கள், விலைகளைப் பொருத்தவரையில் மலிவாகவே உள்ளது. மேலும் முறையாக அரசின் அனுமதிப்பெற்று அதில் பூங்கா, வாகன நிறுத்துமிடம், மின் கசிவு தடுப்பு சாதனம், பாதுகாப்பு சாதனம், குழாய் எரிவாயு இணைப்பு போன்றவைகள் அமையப்பெற்றிருக்கும். மேலும் ஒவ்வொரு வீட்டிலும் பயன்தரும் அனைத்து இல்லப் பொருள்களும் அடங்கியிருக்கும். “ குறிப்பாக நம்மூர் ரியல் எஸ்டேட் எஜமானிகள் கவனிக்கப்படவேண்டியவை, வயல் வரப்புகள், வாய்க்கால்கள், புறம்போக்கு போன்ற நிலங்கள் கூறுபோட்டு “குழிகள்”, “செண்டுகள்”, “சதுர அடிகள்” என கணக்கீடுகள் செய்து அரசின் அனுமதி பெறாமல் விற்பனை செய்வது என்பது ஓரளவுக் குறையும்.”
இக்குடியிருப்பு பாதுகாப்பு பணிகளுக்காக தனியார் நிறுவன ஊழியர்களிடம் பொறுப்புக்களை ஒப்படைத்து, இவர்களின் அன்றாடப் பணியாக குடியிருப்புதாரர்களைப் பாதுகாப்பது, மின்சாரம், தண்ணிர் விநியோகம், குப்பைக் கழிவுகள் அகற்றுதல், வாகனங்கள் கண்காணிப்பு, விபத்துகள் தடுப்பு, தோட்டங்கள் அமைத்தல், ஒழுக்க கட்டுப்பாடுகளை நிலை நிறுத்த வாரம் ஒருமுறை என அணிவகுப்புகள் போன்ற பணிகளில் ஈடுபடுகின்றனர். இவர்களின் ஊதியமாக ( Management Fees for Security ) ஒவ்வொரு மாதமும் குடியிருப்புதாரர்களால் செலுத்தப்பட வேண்டும்.

சீன நாணயத்தைப் பொருத்தவரை ஒரு யுவான் (ரெமிங்பி) என்பது இந்திய ரூபாயின் மதிப்பில் 7.85 ஆக உள்ளது இன்றைய நிலவரம்.

“ Tianhe ” என்றழைக்கப்படும் இப்பகுதியில் மும்பை மற்றும் குஜராத் மாநிலத்தை சார்ந்த குறிப்பிட்ட இந்தியர்களே வசிக்கிறார்கள். வெளிநாட்டைச் சார்ந்த ஏராளமான தொழிலதிபர்கள் தங்களின் தொழில் நிமித்தமாக வந்து தங்கிச்செல்லக் கூடிய பாதுகாப்பான மற்றும் அனைத்து வசதிகளும் அமையப்பெற்றுள்ள ஒரு சிறந்த பகுதியாகவே கருதப்படுகிறது.

குறிப்பாக,1. அதிவேக ரயிலில் ( Train ) ஹாங்காங் செல்ல இலகுவாக “Guangzhou East Railway Station “


2. விமான நிலையத்திற்கு செல்ல இலகுவாக அருகிலே “ AIRPORT EXPRESS BUS ” வசதி.


3. இந்நகரின் மற்றப் பகுதிகளுக்கு செல்ல இலகுவாக ஆறு வழி தடங்களைக் கொண்டுள்ள “ Metro Train “ வசதி.

4. உலகப்புகழ் பெற்ற மிகப்பெரிய விளையாட்டு அரங்கம்.

5. வெளிநாட்டுத் தொழில் அதிபர்கள் தங்குவதற்கு இலகுவாக நட்சத்திர அந்தஸ்துப் பெற்ற “ சர்வதேச ஓட்டல்கள் ” ( International Hotel ) மற்றும் சாதாரண “ ஓட்டல்கள் “ என உள்ளது.

6. வெளிநாட்டுத் தொழில் அதிபர்கள் தங்கள் நாட்டின் நாணயங்களை பரிமாற்றங்கள் செய்துகொள்ள இலகுவாக “ Bank of China, ICBC, Standard Chartered Bank, HSBC, ABN Amro, City Bank “ போன்ற வங்கிகள் இருப்பது சிறப்பாகும்.

7. சைனீஸ், அரேபிய, இந்திய “ஹலாலான” உணவு வகைகளும், மேலை நாடுகளில் வசிக்கக்கூடிய மக்கள்கள் விரும்பி சாப்பிடக்கூடிய “ விரைவு உணவுகள் “ ( Fast Foods ), “KFC, Pizza Hut, Mcdonald ” போன்ற நிறுவனங்களிலிருந்து கிடைக்கிறது.


என் வீட்டிற்க்கு நாங்கள் வந்தததும் என் சீன நண்பன் என்னிடம் “ ஸ்ஸீ” “ ஸ்ஸீ “ Xie Xie ( நன்றி வருகிறேன் ) என்று சொல்லி விடைப்பெறத் தயாரானான்.


அப்பொழுது என்னுடைய “உம்மம்மா” கொடுத்தனுப்பிய...........................

இறைவன் நாடினால் ! “ பயண அனுபவங்கள் ” தொடரும்.....................

Tuesday, February 7, 2012

புதிய ரேஷன் கார்டு பெறுவது எப்படி ?


புதிய குடும்ப அட்டை பெற தகுதியுடையோர் யார் ?தனிக் குடும்பமாக உள்ள இந்திய குடிமக்கள்கள் அனைவர்களும் தகுதியுடையோர் ஆவார்கள்.

குடும்ப அட்டை பெற விண்ணப்பம் படிவம் எங்கு கிடைக்கும் ?தமிழக அரசு விண்ணப்ப படிவங்களை ஆங்கிலம் மற்றும் தமிழில் நிர்னையித்துள்ளது. இவை அனைத்து தாலுக்கா அலுவலங்களிலும் மற்றும் ஜெராக்ஸ் எடுக்கும் கடைகளிலும் கிடைக்கும். மேலும் http://www.tn.gov.in/tamiltngov/appforms/ration_t.pdf என்ற அரசு தளத்திலும் தரைஇறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்ப படிவத்தினை யாருக்கு அனுப்ப வேண்டும் ?அந்தந்த தாலுக்கா அலுவலங்களில் உள்ள வட்ட உணவுப் பொருள் வழங்கல் அதிகாரி ( TSO ) அவர்களிடம் தாக்கல் செய்யவேண்டும்.

விண்ணப்ப படிவத்துடன் இணைக்க வேண்டிய சான்றுகள் எவை ?
விண்ணப்ப படிவத்தில் அதில் கோரப்பட்ட விவரங்கள் அனைத்தையும் பூர்த்திசெய்து கையொப்பம் இட வேண்டும். முழுமையற்ற படிவம் நிராகரிக்க வாய்ப்புகள் அதிகம்.

தேவையான ஆவணங்கள் :1. இருப்பிட சான்று
2. தேர்தல் வாக்காளர் அடையாள அட்டை
3. வீட்டு வரி / மின்சார கட்டணம் செலுத்திய / தொலைப்பேசி கட்டண போன்றவைகளின் ஏதாவது ஒரு ரசீதுகள் / வங்கி கணக்கு புத்தகத்தின் முதல்பக்க நகல் / பாஸ்போர்ட் நகல் ( இதில் ஏதாவது ஓன்று மட்டும் போதுமானவை )
4. முந்தைய முகவரியில் குடும்ப அட்டை வழங்கு அதிகாரியிடம் ( TSO ) பெறப்பட்ட பெற்றோர் அல்லது பாதுகாவலர் குடும்ப அட்டையிலிருந்து பெயர் நீக்கல் சான்று அல்லது பெயர் சேர்க்கப்படவில்லை என்பதற்கான சான்று.
5. முந்தைய முகவரியில் குடும்ப அட்டை இல்லை எனில் அதற்கான “ குடும்ப அட்டை இல்லா “ சான்று.
6. எரிவாயு இணைப்பு ஏதேனும் இருப்பின், இணைப்பு யாருடைய பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது மற்றும் எரிவாயு இணைப்பு முகவர் மற்றும் எண்ணெய் நிறுவனத்தின் பெயர்.
7. விண்ணப்பதாரரின் தனது விண்ணப்பம் குறித்த தகவல்கள் பெற இலகுவாக தங்களின் கைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை விண்ணப்பத்தில் பூர்த்தி செய்யவும். அல்லது சுய முகவரியிட்ட தபால் தலையுடன் கூடிய தபால் உறை அல்லது அஞ்சல் அட்டை இணைக்கலாம்.

மனுதாரர் தனது விண்ணப்பத்தின் முடிவினை அறிந்து கொள்ள முடியுமா ?1. தமிழக அரசு புதிய குடும்ப அட்டை பெறுவதற்கான விண்ணப்பத்தின் பேரில் 60 நாட்களுக்குள் குடும்ப அட்டை வழங்க அல்லது மனுவின் முடிவை தெரிவிக்க கால நிர்ணயம் செய்துள்ளது.
2. வட்ட வழங்கல் அலுவலகத்திலிருந்து மனு பெறப்பட்ட நாளிலிருந்து அடுத்த 30 நாட்களுக்குள் தணிக்கை அதிகாரிகளால் மனுதாரரின் விண்ணப்பத்தின் உண்மை நிலவரத்தை அறிந்துகொள்ள மனுதாரரின் வீட்டிற்க்கே வந்து ஆய்வு செய்வார்கள்.
3. விண்ணப்பத்தினை அளித்த உடன் விண்ணப்பத்தின் வரிசை எண், தேதி, அலுவலக முத்திரையுடன் மற்றும் இறுதி முடிவு தெரிந்து கொள்ளும் தேதி ஆகியவற்றுடன் கூடிய ஒப்புகை சீட்டினை மனுதாரர் பெற்றுக்கொள்ள வேண்டும்.

புதிய குடும்ப அட்டை பெற கட்டணம் உள்ளதா ?ரூ 5 /- கட்டணம் நிர்ணயித்து. இந்த தொகையை உணவு வட்ட வழங்கல் அலுவலகத்தில் செலுத்த வேண்டும்.

அணுக வேண்டிய முகவரி : ( தஞ்சை மாவட்டதாரர்களுக்கு )

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் :-
மாவட்ட உணவு வழங்கல் அதிகாரி ( DSO )
Tel : 04362 231336
Mobile : 9445000286
E-mail : dso.tnj@tn.gov.in மற்றும் dso.tntnj@nic.in

பட்டுக்கோட்டை தாலுக்கா அலுவலகம் :-வட்ட உணவு வழங்கல் அதிகாரி ( TSO )
Tel : 04373 235049
Mobile : 9445000293
E-mail : tsotnj.patukottai@tn.gov.in

குறிப்பு : புதிய குடும்ப அட்டை பெற வேண்டி தரகர்களிடம் செல்வதை தவிர்க்க வேண்டும். மேலும் கையூட்டு கொடுப்பது இந்திய சட்டப்படி குற்றமாகும்.

இறைவன் நாடினால் ! தொடரும்......................

Friday, February 3, 2012

[ 2 ] பயண அனுபவங்கள் – சீனா

சலாம் சகோதரர்களே !
முன்னுரை :
“ பயணங்கள் அனுபவம் – “ சீனா “
இக்கட்டுரையை எழுதக்காரணம், புதிதாக வெளிநாடுகளுக்கு செல்லக்கூடிய நமது சகோதரர்களுக்கு விமான நிலையங்கள் மற்றும் அவர்கள் செல்லக்கூடிய அந்தந்த நாடுகளில் ஏற்படும் பல இன்னல்கள் மற்றும் அவர்களின் பய உணர்வுகள் இவைகளைக் கருத்தில் கொண்டு விழிப்புணர்வுடன் இருப்பதற்காக வேண்டி, இப்பதிவுகள் தொடர்ச்சியாகப் பதியப்படும் ( இன்ஷா அல்லாஹ் ! )

குறிப்பாக இளைய தலைமுறையினர் வெளிநாடுகளுக்கு செல்லும் முன் ஆங்கில மொழி பேசும் திறமையை நன்கு வளர்த்துக் கொள்ள வேண்டும்.
மேலும் தொழில் சம்பந்தமாக ஏராளமான தகவல்கள் இக்கட்டுரைகளில் இடம் பெற இருப்பதால், புதிய தொழில் தொடங்க முனைவோர், இப்பதிவுகளை தொடர்ச்சியாகப் வாசித்துப் பயனடைமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


இக்கட்டுரை பதிவிற்காக நேரிலும், தொலைப்பேசியிலும், மின்னஞ்சல்கள் மூலமாகவும் ஊக்கப்படுத்திய உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கக்கூடிய நண்பர்கள், சகோதரர்கள் என அனைவர்களுக்கும் என் வாழ்த்துகள்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு பயணங்கள் அனுபவம் – “ சீனா “ பகுதி ஒன்றைப் பார்த்தோம்.அதன் தொடர்ச்சியாகப் பகுதி இரண்டு........


தற்சமயம் தங்களது சீன நண்பர்களைக் காண நேர்ந்தால், “கொங் சீ ப சாய்” ( சீனப் புத்தாண்டு நல்வாழ்த்து ) என்று சொல்லலாம். அல்லது “வன் சீ ரூ யீ” ( நல்லதே நடக்கட்டும் ) என்றும் சொல்லலாம். சீனர்கள் புத்தாண்டு விழாவை கொண்டாடிவரும் இவ்வேளையில், மேலே சொன்ன இரண்டு வார்த்தைகள் அதிகளவில் அவர்களிடேயே உச்சரிக்கப்படுபவை என்பது குறிப்பிடத்தக்கது.


ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒரு விலங்கின் பெயர்களை அதாவது எலி, மாடு, புலி, முயல், சீன நாகம், பாம்பு, குதிரை, ஆடு, குரங்கு, கோழி, நாய், பன்றி என்று சூட்டப்பட்டு, அதன்படி இவ்வாண்டை “ டிராகன் ” ( Dragon ) ஆண்டு என கணக்கிடுகிறார்கள்.


சீனப்புத்தாண்டின் சிறப்பம்சம் என்னவெனில், மதச்சார்பற்ற அனைத்து சீனர்களும் ஒன்றாக கொண்டாடுவதுதான்.


“ குவாங்சோ “ ( Guangzhou ) ஏர்போர்ட்டிலிருந்து நானும் எனது சீன நண்பன் “ஜேம்ஸ்” ம் காரில் ஏறிப் புறப்பட்டோம். அங்கிருந்து 50 கிலோ மீட்டர் தூரத்தில் “ குவாங்சோ “ நகருக்குள் வருவதற்கு சுமார் ஒரு மணி நேரம் வரைச் செல்லும்.அங்கிருந்து “ CALL TAXI “ களிலும் நகருக்குள் செல்லலாம்.
மேலும் அந்நகரின் சார்பாக முக்கியமான இடங்களுக்கு பதினைந்து நிமிடங்களுக்கு ஒரு முறை என செல்லக்கூடிய “ AIRPORT EXPRESS BUS “ வசதியும் உள்ளது. இவ்வாகனம் குறைந்த கட்டணத்தில் பாதுகாப்பாக பயணம் செய்யக் கூடியவையாக கருதப்படுகிறது.


மக்கள் தொகையில் முதன்மையான தேசம் மட்டுமல்ல, நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் அத்தனை பொருட்களையும் உற்பத்தி செய்து குவிக்கும் தொழில் தேசம் சீனா என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நகரின் உள்கட்டமைப்புகள், சாலைகளின் அழகிய செடிகளுடன் கூடிய அலங்கரிப்புகள், வாகன நடமாட்டத்தில் ஒரு கட்டுப்பாடு, போக்குவரத்து நெரிசலை தவிர்க்க வானுயர மேம்பாலங்கள், பொது இடங்களில் மக்கள் நடத்தையில் ஒரு ஒழுக்கம் என சிறந்து விளங்குகிறது. குறிப்பாக “ வாயும் வயிறுமாக ” உள்ள நம்மூர் அரசியல்வாதிகள், பணிகளில் ” மாமுலான ” அதிகாரிகள், “ ஊக்கம் கொடுத்து ” பணிகள் எடுக்கும் ஒப்பந்தக்காரர்கள் போன்றவர்கள் தங்களின் வாழ்வில் ஒரு முறையேனும் வந்து பார்த்து உணர்ந்து கொள்ளக்கூடிய பகுதியாக விளங்குகிறது.

என் நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அடுக்குமாடி குடியிருப்பு அருகே வந்து நின்றது எங்களது கார்.


இறைவன் நாடினால் ! “ பயண அனுபவங்கள் ” தொடரும்.....................

Wednesday, February 1, 2012

இஸ்லாமிய பொது அமைப்புகளுக்கு ஓர் வேண்டுகோள் !

அதிரையில் உள்ள அல் பாக்கியத்துஸ் சாலிஹாத் பள்ளியில் சிறுவர், சிறுமிகளுக்கு மார்க்க கல்வி பயிற்றுவிக்கும் வகுப்புகள் தினமும் ( வெள்ளிக்கிழமை தவிர ) காலை மணி 6.30 முதல் மணி 8.00 வரை நடைபெறுகிறது. இதற்காக மெளலவி அப்துல் மஜீது ஆலிம் – ( இப்பள்ளியின் இமாம் ), மெளலவி மாலிக் மீரான், மெளலவி முஹம்மத் இத்ரீஸ் – (அரபி பேராசிரியர் KMC ), அஸ்கர் அலி போன்ற ஆசிரியர்களால் குரான் ஓதும் பயிற்சிகள், ஹதீஸ்களின் விளக்கங்கள், சூராக்கள் மனனம், இஸ்லாமிய பொதுஅறிவு கேள்வி-வினாக்கள் போன்றவைகள் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
இப்பகுதியை சேர்ந்த ஒரு சில நல் உள்ளங்களின் நிதி உதவியால் நடைபெறும் இப்பயிற்சி வகுப்புகளால் சிறுவர், சிறுமிகள் நல்ல ஒழுக்கத்துடன் கூடிய கட்டுப்பாடுகளை பின்பற்றுவது அனைவர்களையும் வியக்க வைக்கிறது. ஆசிரியர் குழுவால் மாதம் ஒரு முறை சிறுவர், சிறுமிகளின் பெற்றோர்களை வரவழைத்து தங்களின் குழந்தைகளின் நிலைகளை விளக்குவது குறிப்பிடத்தக்கது.

இஸ்லாமிய பொது அமைப்புகளுக்கு ஓர் வேண்டுகோள் !

இருபத்திஒன்பது மஸ்ஜித்களைக் கொண்ட வரலாற்று சிறப்புமிக்க நமதூரில் ஒருசில மஸ்ஜித்களில் மட்டுமே சிறுவர், சிறுமிகளுக்கான “குரான் ஓதுதல் பயிற்சிகளின்” வகுப்புகள் நடைபெறுகின்றன. உலகக்கல்வியை சிறப்பாக கற்கும் நமது சிறுவர், சிறுமிகள், மார்க்க கல்வியை அவர்களுக்கு பயிற்றுவிப்பது என்பது அவசியமாகிறது. இதற்காக நமதூரில் உள்ள இஸ்லாமிய பொது அமைப்புகள் குரான் ஓதுதல் பயிற்சிகள் நடைபெறாத மற்ற மஸ்ஜித்களை கண்டறிந்து அதற்குண்டான ஏற்பாடுகளை செய்து ஸாலிஹான தலைமுறைகளை உருவாக்க வேண்டுமாய் தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் இதற்கு உதவி புரிவானாக ! ஆமின் !

இறைவன் நாடினால் ! தொடரும்.....................
Pro Blogger Tricks

Followers