.

Pages

Thursday, August 28, 2014

[ 10 ] மகவே கேள் : தருணம் !

மகவே கேள் : தருணம் ! 
சில புத்திசாலிகள் வாய்ப்புகளுக்காக காத்திருப்பார்கள். தக்க தருணம் வரும்போது அந்த வாய்ப்பை பயன் படுத்தி வாழ்க்கையை வெற்றியின்பால் வழி  நடத்தி செல்வார்கள். சிலருக்கு பலவாய்ப்புகள் அவர்கள் காலடியில் கொட்டி கிடக்கும் ஆனால் அதை பயன் படுத்த தெரியாமல் .நழுவ விட்டு விடுவார்கள். இதுவே இந்த பதிவில் எழுத விரும்புகிறேன் .

* இளம்வயதில் தாய் தந்தை ..சகோதர பாசம் கிடைப்பதில் கவனம்
செலுத்து.அந்த வாய்ப்பை நழுவ விடாதே .

* படிக்கும் பருவத்தில் நல்ல கல்வி பெறுவதில் கவனம் செலுத்துதல் .

* உனக்குள் ஒழிந்திருக்கும் திறமை என்ன என்பதை அறிந்து .அந்த திறமையை  வளர்த்துக்கொள் .அது உன் எதிர்கால வாழ்வில் ஒளி ஏற்ற வல்லதாக இருப்பின் அதனை ஈர்த்துகொள்.

* இவை அல்லாது நீ பயணிக்கும் வாழ்வில் சந்திக்கும் நபர் மூலம்
ஏற்படும் நட்பினால் கிடைக்கும் வாய்ப்பு  அதனையும் நழுவ விட்டு
விடாதே . 

* ஏதாவது ஒன்றின் மேல் ஆசை படு .வாய்ப்பு உன்னை தேடி வரும் .

ஓரளவு வசதியான குடும்பத்தில் பிறந்த ஒருவர் சிறு வயது முதல்
தனது வாழ்நாள் லட்சியம் என்று ஒரு குறிக்கோள் வைத்திருந்தார்
வழக்குரைஞராக வரவேண்டும் என்ற எண்ணம் .அதற்க்கான வாய்ப்பு
வந்தது .மிக இலகுவாக அக்கல்லூரியில் சேர்ந்து பயின்று தனது
வாழ்நாள் லட்சியத்தை நிறைவேற்றி கொண்டார் .

கவிஞர் வாலி அவர்கள் திருச்சி வானொலி நிலையத்தில் .நிகழ்ச்சி
தயாரிப்பளாக இருந்தார் .அவருக்கு கவிதை எழுதும் திறமை இருந்தது வாய்ப்பு வந்தது .தருணத்தை வீணாக்காமல் சென்னை வந்து லட்சியத்தினை நிறைவேற்றி வாழ்வில் வெற்றி கண்டார் .

மறைந்த இயக்குனர் மணிவண்ணன் அவர்கள் சிறந்த படைப்பாளி
பாரதிராஜா அவர்களின் படத்தை பாராட்டி ஒரு கடிதம் எழுதினார்
ஒவ்வொரு காட்சியையும் விளக்கி பாராட்டிய விதம் பாரதி ராஜா
அவர்களுக்கு பிடித்து போகவே தனக்கு உதவியாளனாக அழைத்தார்
வாய்ப்பை பயன் படுத்தி .தக்க தருணத்தில் புகழ் ஈட்டிகொண்டார் .

எத்தனையோ பேர் கிடைத்த வாய்ப்பை நழுவ விட்டு விட்டு .நான்
அப்படி இருக்க வேண்டிய ஆள் இப்படி ஆகி விட்டேன் .

நேரடியாக பார்த்த நபர் அதிராம்பட்டினத்தில் சாதாரன நபராக காட்சி
அளித்தார் .நீதி கட்சி உடைந்த போது அறிஞர் அண்ணா  அவர்கள்
தனது கட்சி  தி.மு.க வில் முக்கிய பொறுப்பு வகிக்க அழைத்தார் .அந்த தருணத்தை பயன் படுத்த தவறியதால் அவர் அரசியல் வாழ்வு சூன்ய மாகி போனது .

தருணத்தை பயன் படுத்துவது எப்படி ..என்பதை அறிந்து கொண்டீர்களா ...?
அடுத்த தலைப்போடு  மீண்டும் சந்திக்கிறேன்.
அறிவுரை தொடரும்...
'பத்திரிகைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்

Friday, August 22, 2014

இவரும் மகாக்கஞ்சன்

உன்னிடம் இருப்பதில்
ஒருவன் கேட்டால்
என்னிடம் இல்லை
என்று பதில்கூறுவார்

இருப்பதில் குறைவு
ஏற்படும் என்று
உருப்படியாக எதயையும்
உளமொன்றிச் செய்யார்

தனக்குத் தெரிந்ததைத்
தன்னுள்ளே வைத்துக்கொண்டு
எனக்கு எதுவும்
என்றுமே தெரியாதென்பார்

இவர்கள் எல்லாம்
இகத்தே வாழும்
விவரமாக இருக்கிறோமென்ற
விசித்திரக் கஞ்சன்கள்

ஆனாலும் அதைவிட
ஆசையைக்கூட அளந்து
போனாலும் போகட்டுமென்ற
புதுமை மாகக்கஞ்சனாமே !

எவரென்றால் ? எப்போதுமே
எண்ணும் எண்ணத்தில்கூட
இவர் உயர்ந்ததை
என்றுமே எண்ணாதவரே !

நபிதாஸ்

Sunday, August 17, 2014

பசுமை உலகில் படர் !

இரண்டற்றான் எண்ணம் இருப்போரை நாட
பரம்பொருளின் வாசம் படுமே - அரச
உரம்கொண்ட வல்லோர் உணர்வில் இயல்பாய்
சரளமாகும் ஆளும் சடங்கு.

சடங்கில் இருப்பதெல்லாம் சத்தியத்தின் பாதை
முடங்கின் முடியாதே முக்தி - தடங்கல்
அடங்கின் திறக்கும் அவன்வாசம் பற்ற
இடங்கள் உனதில் இருப்பு.

இருப்பாய் எதனில் இருக்க அதுவே
அரும்பும் அதுவாய் அறிக - ஒருங்கே
கருத்தில் கரைசேர்க்கும் கல்லாதான் தன்னில்
உருக்க மனதில் உசுப்பு.

உசுப்ப உனதின் உணர்வு அவனில்
அசுத்தத் துவைதம் அகலும் -நசுங்கப்
பொசுங்க அவனாய் நனவாகும் அந்தப்
பசுமை உலகில் படர்.

நபிதாஸ்

இலக்கணம் : அந்தாதி நேரிசை வெண்பா  

Friday, August 8, 2014

போலிகள் !? [ இலாப யுக்தி உற்பத்தியாளர்கள் ]

அறிவுத்தேன் II
பொதுவாக அதிகமக்கள் விபரம் புரியாமலோ அல்லது தனது பொருளாதார வாங்கும் சக்திக்கேற்பவோ விலை குறைவானதையே வாங்கக் கூடியவர்களாக இருப்பார்கள். அதனால் அசலை செய்து விற்பவருக்கு வியாபாரம் குறைவாகிப் போக நேரிடலாம். இதனைக் கருத்தில் கொண்ட, உணவுப் பொருள் உற்பத்தி செய்யாத எந்திரங்கள் அல்லது அன்றாட பயன்பாட்டிற்கு உதவும் மின்சாதனம் அல்லது மின்சாரமற்ற சாதனங்கள் அல்லது வாகனப் பாகங்கள் அல்லது உதிரிப் பாகங்கள் போன்றவைகள் செய்யும் சிலத் தொழில் அதிபர்கள் போலிகளை ஒழிக்க முடியாமையினாலும் அவர்கள் வேறு ஒரு நிறுவனைத்தை வேறு நாட்டில் நிறுவியோ அல்லது ஒப்பந்தம் செய்தோ அதில் இவர்களே அல்லது இவர்கள் தொடர்புகளுடனோ தரமற்றவைகளையும் செய்து விற்பார்கள்.

இவ்வாறு இவர்கள் உற்பத்தி செய்யும் இந்த பொருட்கள் நீண்டகாலம் உழைக்காதது மட்டும் அல்ல மனித உயிர்களுக்கும் பாதிப்புகள் உண்டாக்காது. இந்த வகையில் உபயோகிப்பாளர்கள் அதிகம் பேர் இவர்கள் உற்பத்தி செய்யும் பொருள்களை வாங்குவதால் இவர்களுக்கு அதிக இலாபம் கிடைக்கும். இவர்கள் மக்கள் மன நிலைக்குத் தக்கவாறு தொழில் செய்து இலாபம் ஈட்டக்கூடியவர்களாக இருக்கின்றனர்.

இவ்வாறு அசல் பொருளைச் செய்பவர்களே தரமற்றவைகளையும் செய்து விற்பார்கள். ஆனாலும் கவனக் குறைவானவர்கள், பாமரர்கள் அதனை அசல் என்று வாங்கிவிடுவதும் நிகழாமல் இல்லை. பயன்பாட்டில் காலப்போக்கில்  இந்தப் பொருள்களும் போலிகள் என்றே வழக்கில் அழைக்கப்படும்.

போலிகள் அல்லது தரமற்றவைகள் அதிகமாக விற்பதால் உற்பத்தி செய்பவர்களுக்கு அதிக இலாபம். வாங்கி விற்பவர்களுக்கு அசலைக்காட்டிலும் மிகக் குறைவான விலையில் இருப்பதால் அதிகமாக பொருள் வாங்கி விற்கப்படும். அதன் மூலம் அதிக இலாபம் கிடைக்கும். வாங்குபவர்கள் (நுகர்வோர்கள்) விலை குறைவானதாக இருப்பதால் அதனையே வாங்கும் நிலை ஏற்படும். அதனால் தரமற்றவைகள் அல்லது போலிகள் மிக விரைவாகவும், இலகுவாகவும் பரவிவிடும். போலிகளுக்கு எந்த உத்திரவாதமும் இல்லையாதலால் அதனில் அதன்மூலம் அதிக நன்மைகள் இருக்காது. . போலியை அசல் என்று ஏமாற்றி விற்பதினால் சில சமயம் சிலப் பொருள்கள் மூலம் பெரும் பாதிப்புகளும் ஏற்படும்.

பெரும்பாலான அசல் உதிரிப் பொருள்களை உற்பத்தி செய்து விற்பவர்கள் தரமற்றவைகளை (பாமரர்களைப் பொறுத்தமட்டிலும் போலிகளை) அவர்களே உற்பத்திச் செய்து விற்பது கிடையாது. ஆனால், உலக வர்த்தகம் செய்யும் சில நாடுகள் தன் நாட்டில் அசல் பொருள்களை உற்பத்திச் செய்து விற்பனைக்கு உலகெங்கும் அனுப்பும். ஆனால் அதன் உதிரி பாகங்கள் (Parts) அவர்களிடமிருந்து உடன் கிடைக்காது. அதே நேரத்தில் அதன் உதிரிப்பொருள் (Accessories) அல்லது உதிரி பாகங்கள் அசல் உற்பத்தி செய்யும் நிறுவனத்திடமிருந்து கிடைப்பதைக்காட்டிலும் வேறு நாட்டிலிருந்து அசல் அல்லாத உதிரிப் பாகங்கள் உடனே கிடைக்கும்.

இதில் முக்கியம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் உற்பத்தி செய்தவுடன் உடனே போலிகள் வெளிவாராது. இது பொதுவான வழக்கம். ஆனால் வாகனம், செல்போன் போன்றவைகள் புது மாடலில் வெளிவந்தவுடன் அதன் உதிரி பாகங்கள் அசலைக்காட்டிலும் போலியில்தான் உடன் கிடைக்கும் இதனை வெளி நாட்டில் உள்ளவர்கள் எளிதில் கண்கூடாகப் பார்க்கலாம்.

அந்தந்த நாட்டில் போலிகள் செய்து விற்பது எப்பொழுது ஏற்படும் என்றால், அந்த உற்பத்தி செய்து விற்கப்படும் பொருள் மிகப் பிரபலம் ஆனவுடன் தான் பிறர் போலிகளை செய்து விற்கின்றனர். ஆனால் தரமற்றவைகள் அவ்வாறல்ல.
(தொடரும்)
நபிதாஸ்

Wednesday, August 6, 2014

[ 9 ] மகவே கேள் : எளிதாக எண்ணி விடாதே !

ளிதாக எண்ணி விடாதே...!
வாழ்க்கை பயணத்தில் நாம் சந்திக்கும் மனிதர்கள் பலபேர், பலதரப்பட்ட மக்களை சந்திக்க கூடிய சூழல் ஏற்படும். நீ வசீகர தோற்றமுடையவனாக இருக்கலாம், நல்ல படித்த பட்டதாரியாக இருக்கலாம் ,இதன் காரணமாக இறுமாப்பு கொண்டு விடாதே ! தோற்றத்தால் சாதரனமான்வராக
இருக்கலாம் அவரை ஏளனம் செய்து விடாதே.

* ஒவ்வொரு மனிதனின் உள்ளமும் ஒரு உலகம் அதில்
அவனே கதாநாயகன் .

* நீ எவ்வளவு பெரிய இடத்தில இருந்தாலும் நீ மற்றவர்க்கு
ஒரு கதாபாத்திரம் தான்

* சில சமயங்களில் நீ சாதரனமனவனாக எடை போட்ட மனிதர்
உன் வாழ்க்கையில் இன்றியமையாத ஒருவராக அமையலாம்.

* அல்லது அவர் தம் உறவினரின் தேவை உனக்கு இன்றி அமையாதாக அமையலாம்.

ஒருவர் புதிய பணக்கார மிக குறிகிய காலத்தில் கோடிக்கணக்கான
பணத்திற்கு சொந்த காரர் எவருடைய உதவியும் தமக்கு தேவை இல்லை என்ற உணர்வு அவருக்கு பெரியவர் சிறியவர் என்ற பேதமில்லாமல் எடுத்தெறிந்து பேசி வருவார். அவருக்கு பின்னால் அவரை புது பணக்காரன், பணத்திமிரில் ஆடுகிறான் என்பார்கள்.

ஒரு சூழல் வந்தது அவர் தேர்தலில் போட்டியிட்டார் .ஒவோருவரிடமும் வாக்கு சேகரிக்க சென்ற போது நீ அப்படி பேசினாயே ,இப்படி நடந்து கொண்டாயே என்று பலரும் கேட்க, மன்னித்து கொள்ளுங்கள் என்று ஒவ்வொரு வராக சொல்லி திரிந்தது நகைச்சுவையாக இருந்தது.

சினிமாவில் கூட இது போன்ற காட்சிகள் ...மாற்றலாகி வரும்
பள்ளி ஆசிரியர் மாணவர்களால் பரிகாசிக்கப்பட்டு நொந்து போய்
அடுத்த நாள் பள்ளிக்கு வருவார். பரிகாசம் செய்த மாணவன்
வகுப்பறையில் விழி பிதுங்க நிற்கும் காட்சி.

அதே போன்று வங்கி மேலாளர் மாற்றலாகி  ஊர் வருவார் அதே
வங்கி ஊழியரால் பரிகாசிக்க பட்டு அதன் பின்னர் மேலாளர் என
தெரிந்ததும் அவர் படும் பாடு நகைப்புக்குரியதாக அமையும் ..

மகவே கேள் ! யாரையும் எளிதாய் எண்ணிவிடாதே..!
அறிவுரை தொடரும்...
'பத்திரிகைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்
Pro Blogger Tricks

Followers