.

Pages

Sunday, September 30, 2012

பிலால் நகரும் அதன் சிறப்புகளும்...

பிலால் நகர் – இப்பகுதியின் வடக்கே செடியன் குளமும், தெற்கே சேது பெருவழிச்சாலையும், மேற்கே குறுகிய ரயில் ( மீட்டர் கேஜ் )பாதையும், கிழக்கே காதிர் முகைதீன் கல்லூரியும் அமைந்துள்ளன.

பெரும்பாலான இடங்கள் முள்ளும் முள்ளு சார்ந்த பகுதியாக இருந்தாலும் நமதூரைச் சேர்ந்த பல்வேறு தெருக்களிலிருந்து குடிபெயர்ந்தோராக ஏறக்குறைய ஆயிரத்து ஐநூறு பேர் வசிக்கின்றனர். இதில் பெரும்பாலானோர் ஏழை எளியோர், முதியோர், நலிவுற்றோர், கணவனால் கைவிடப்பட்டோர், அன்றாடம் தொழில் செய்து பிழைப்போர், வீட்டு வேலை செய்வோர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வெளியூர்வாசிகள், ஆதி திராவிடச் சகோதரர்கள் போன்றவர்கள் வசிக்கின்ற இப்பகுதியில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளான ரேஷன் கடை, ஆரம்ப சுகாதார நிலையம், பள்ளிக்கூடம், வாக்குச்சாவடி, சமுதாயக்கூடம், ஊராட்சி அலுவலகம், குடிநீர், சாலை வசதி போன்றவற்றில் பின்தங்கியிருப்பது ஒரு பெரும் குறையாக இருந்தாலும் ரியல் எஸ்டேட் முதலாளிகளுக்கு பெருத்த லாபத்தை அள்ளித்தந்த பகுதி என்ற சிறப்பைப் பெறுகின்றது. 
மஸ்ஜீத் பிலால் ( ரலி ) :
அல்லாஹ்வின் உதவியால் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு நமதூரைச் சேர்ந்த கண்ணியத்திற்குரிய சகோதரர்களின் பெரும் முயற்சியால் கட்டி முடிக்கப்பட்ட இப்பள்ளியால் இப்பகுதி பெரும் சிறப்பைப் பெறுகின்றன. குறிப்பாக தனி மஹல்லா என்ற அந்தஸ்தை பெற்றிருக்கின்றது. இப்பள்ளியில் புனித ரமலான் மாதத்தில் வழங்கப்படும் நோன்பு கஞ்சி நமதூரில் பெரும் வரவேற்பைப் பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

பிலால் நகரின் நுழைவாயில் :
சேது பெருவழிச்சாலையில் அதிகாலை, மாலைப் பொழுதுகளில் நடை பயணம் மேற்கொள்ளும் நமதூர் சகோதரர்கள் இந்நுழைவாயிலைக் கண்டவுடன் அருகிலுள்ள பள்ளிக்கு சென்று தனது தொழுகையை நிலை நிறுத்த வேண்டும், அதன் பிறகு அருகிலுள்ள கடைகளில் சூடான/சுவையான டீ அருந்து வேண்டும் போன்ற நினைவூட்டல்களைப் பெறுகின்றனர்.

NCC : துப்பாக்கி சுடும் பயிற்சி முகாம் :
மாணவர்களிடம் ஒழுக்கம் மற்றும் நற்பண்புகளை வளர்ப்பதும். இளைஞர்கள் நாட்டு நற்பணி சேவைகளில் ஈடுபட்டு, ஆபத்து காலங்களில் ராணுவத்தினருடன் சேர்ந்து மீட்பு மற்றும் பாதுகாப்பு பணிகளில் உதவி புரியவும், மனிதனின் ஆளுமைத் தன்மையை வளர்க்கவும், நாட்டுக்காக சேவை புரிவதிலும் முழுப்பங்களிப்பு செய்வதே தேசிய மாணவர் படையின் நோக்கமாக உள்ளன. துப்பாக்கி சுடுதல், சமூக சேவையில் ஈடுபடுதல் போன்றவற்றிற்கான பயிற்சிகளிலும் ஈடுபடுகின்றனர்.

பல வருடங்களுக்கு முன்பு இப்பகுதியில் அமைந்துள்ள  NCC – துப்பாக்கி சுடும் பயிற்சி முகாமில் டமால், டுமீல், டிஸ்  என்ற சப்தத்துடன் கேட்ட ஓசைகள் இன்றோ மிகவும் அடக்கமாகக் காணப்படுகின்றன. கம்பீரமாக காட்சியளித்த மதில்சுவரோ இன்று கருவமுள்ளு பாதுகாப்புடன் கழிவறைச் செல்லும் முகாமாக இருப்பது வேதனைத் தருவதாக உள்ளது.

அதிரை தாருத் தவ்ஹீத்தின் ‘மக்தப்’ :
பிலால் நகரில் வசிக்கும் சிறார்களுக்கு குர்ஆன் ஓதிக்கொடுப்பதற்கும், பெண்களுக்கான வாராந்திர பயான் நடைபெறுவதற்கும் சமுதாய அமைப்பான அதிரை தாருத் தவ்ஹீத்தின் சார்பாக மக்தப் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இறைவன் நாடினால் இதன்மூலம் இப் பகுதியில் வசிப்பவர்கள் மார்க்கக் கல்வியை அறிந்துகொள்ளும் சிறப்பைப் பெறுவார்கள்.

பிலால் நகரின் முதல் வீடு :
கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு நடுத்தெருவைச் சார்ந்த மர்ஹூம் H. முஹம்மது புஹாரி அவர்களால் கட்டப்பட்ட இவ்வீடு இப்பகுதியின் முதல் வீடு என்ற சிறப்பைத் தட்டிச்செல்கின்றது.

காதிர் முகைதீன் கல்லூரியின் மகளிர் விடுதி :
காதிர் முகைதீன் கல்லூரி சார்பாக கட்டப்பட்ட மகளிர்க்கான தங்கும் விடுதி இப்பகுதியில் அமைந்துள்ளன. மிகப்பிரமாண்டமான இக்கட்டடத்தில் மகளிர் கல்லூரி அல்லது மகளிர் மேல் நிலைப்பள்ளி இதில் ஏதாவது ஓன்று எதிர்காலத்தில் அமையவேண்டும் என்பது இப்பகுதியில் வசிக்கும் பெரும்பாலானோர் கோரிக்கையாக இருக்கின்றது.

வாடகை வீடுகள் :
பிலால் நகர் என்றாலே வாடகை வீடுகளுக்கு பஞ்சமில்லை. குறைந்த முதலீட்டில் வீடுகள் கட்டப்பட்டு ஏழை எளியோர் பயன்பெறும் வகையில் குறைந்த வாடகைத் தொகையை நிர்ணயம் செய்து அதாவது மாதம் ஒன்றிற்கு ரூ 500/- லிருந்து ரூ 700/- வரை என்று விடப்படுகின்றன. இதில் பெரும்பாலானோர் ஏழை எளியோர், முதியோர், நலிவுற்றோர், கணவனால் கைவிடப்பட்டோர், அன்றாடம் தொழில் செய்து பிழைப்போர், வீட்டு வேலை செய்வோர் என வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

குறிப்பு : இறைவன் நாடினால் மற்ற தெருக்களின் சிறப்புகளும் பதியப்படும்...
சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! தொடரும்...

Saturday, September 29, 2012

இவிய்ங்களே என்ன செய்யலாம் !?


1. மீண்டும் மீண்டும் தவறுகள் செய்துவிட்டு நான் செய்ததுதான் சரி என்று நியாப்படுத்தும் ஆறறிவு ஜீவிகளைக் கண்டு மனம் வெறுப்படைகின்றீர்களா ?

2. வேகாத வெயிலில் வேர்த்து விறுவிறுக்க கால் கடுகடுக்க வரிசையில் நிற்போரை சட்டை செய்யாமல் குறுக்குவழியில் உள்ளே நுழைகின்றோரை ஓங்கி அறையனும் போல் உள்ளதா ?

3. குடி குடியைக் கெடுக்கும் எனத் தெரிந்தும் மீண்டும் மீண்டும் அத்தவறை செய்துவிட்டு தன்னையும் தன் குடும்பத்தையும் அழித்துக்கொள்வோரை நினைத்து வேதனைப்படுகின்றீர்களா ?

4. தன் கடமையை செய்வதற்காக நாக்கை தொங்கப்போட்டுக்கிட்டு ஊக்கத்தொகை கேட்டு நச்சரிக்கும் மக்கள் சேவகர்களை நினைத்து வருந்துகிறீர்களா ?

5. சாலை விதிகளை கடைப்பிடிக்காமல் வேகமாகப் பயணம் செய்து விபத்துகளை ஏற்படுத்தி அதில் தன்னையும் பிறரையும் துயரத்திற்கு இழுத்துச் செல்வோரை நினைத்து வெட்கப்படுகின்றீர்களா ?

6. பணத் தேவையுடையோரை தேடிப்பிடித்து பணத்தைக் கொடுத்து மீட்டர் வட்டி, நாள் வட்டி, வார வட்டி, மாதவட்டி, கந்துவட்டி, சீட்டு, ஒத்திக்கு போன்ற பெயர்களைச் சொல்லி பண வசூல் செய்யும் கொடூரவாதிகளின் மூஞ்சில் காறி உமிழத் தோன்றுகிறதா ?

7. சமூகத்தில் முக்கியமாகக் கருதப்படுகின்ற கல்விப்பணி, மருத்துவப்பணி போன்றவற்றில் இருந்துகொண்டு பிறருக்கு எடுத்துக்காட்ட இருக்கக்கூடியவர்கள் தவறுகள் செய்யும்போது ஏற்படும் இழப்பீடுகள் உங்களை அச்சமடையச் செய்கின்றதா ?

8. வயதான தன் பெற்றோர்களை அவர்களின் முதுமைக் கருதி ஓய்வெடுக்க அனுமதிக்காமலும், அவர்களுக்குரிய பணிவிடைகளைச் செய்யாமலும் எந்நேரமும் எரிஞ்சி விழும் சிடுமூஞ்சிக்காரர்களிடமிருந்து எட்டி நிற்க தோன்றுகிறதா ?

9. மனிதாபிமானம், அன்பு, பாசம், குழந்தைகள்,அவர்களின் எதிர்காலம், பெற்றோர்களின் கண்ணியம் என்று எதையுமே பொருட்படுத்தாமல் சுயநலம், சபலம், காமம், துரோகம் என்பதை மட்டுமே கருத்தில் கொண்டு கள்ளக்காதலில் ஈடுபடும் கேடு கெட்ட மனிதர்களைக் கண்டவுடன் கோபம் கொள்கிறீர்களா ?

10. தவறுகள் நடக்கும் இடத்தில் ஆணித்தரமாகக் தவற்றைச் சுட்டிக்காட்டி தடுக்காமல் தன் பதவியை தக்கவைத்துக் கொள்வதற்காக வளைந்து கொடுக்கும் பதவி வெறிப்பிடித்தவர்களின் போலி வேஷத்தைக்கண்டு கொதிப்படைகின்றீர்களா ?

இவிய்ங்களே என்ன செய்யலாம் !?

சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! தொடரும்...

'சந்திப்பு' : 'இணையதள குற்றப்பிரிவு புலனாய்வாளர்' சகோ. உபையதுல்லாஹ்


Technology increases and with this crime also increased. There are great assortments of knowledge which starts with cyber crimes are also reach at the peak.

These cyber crimes includes losses of credit card, net banking forgery, stocking, terrorist operations, encrypted files, porn and sex crime, some job related fraud and many more

The below questions has been emailed to Brother Ubaiyathullah and asked him to answer it for 'SANTHIPPU' series...

1. About Midea...
2. Our Community People in Media
3. Advice to our Brothers who is in Midea
4. Specific of Adirai Authors ?

About Mr. Ubaiyathullah... 
He has worked in Cyber Crime Investigation Agency as Cyber Security Researcher...& also doing business of automobile spare parts in his home town and Currently is living in Singapore.

1. About Midea...
Media is the place where we all get to know about what  happening around us and the world. its a wonderful communication medium which can reach the people very quickest manner to deliver the message instantaneously. Media available in different forms now days like Television, News paper, Internet, mobile phone.The actual meaning behind the media is delivering message to the  society with credible news without tampering the news. But the media can easily exploited by someone who  misused by politics and other anti social elements in the form of rumors, cinemas celebrities. which can cause result in society degradation like students and youngsters are getting false news,and it creates problems among the communities and parties unnecessarily.

2. Our Community People in Media      
Its really very good job that done by our Muslim brothers and sister who ever  involving in the  media to be expressed the truthfulness out of the world  and they keep track on  finding the credible news and it can be reach until the low level people also  understand the truth. They are the pillars of the Islamic news take it into next level of society formation. Now days the new generation are growing like anything with advancement of technology result in reach ability.But our sounds are not upto the level to reach the top of the government. so we need to work hard to escalate them, then they will understand our truth.

3. Advice to our Brothers who is in Midea
Dear brothers whenever you getting news or message from someone or closed one don't get into action immediately without knowing the credibility of the message, it will loose your reputation from the society.

4. Specific of Adirai Authors ?
Adraiyans Always rocks in all fields, keep go with that..!!!

சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! 'சந்திப்புகள்' தொடரும்...

Thursday, September 27, 2012

‘சந்திப்பு’ : ‘சமூதாயச் சேவகர்’ சகோ. ராஃபியா அவர்கள் [காணொளி]

வாழ்வில் அறிவைத்தேடுதல் மிகவும் முக்கியம்...அதிலும் தான் பெற்ற/கற்ற அறிவை பிறர் அறியவைப்பது என்பது மிகச்சிறந்த சேவையாகும்.

'சந்திப்பு’ தொடருக்காக...

1. ஊடகத்துறையைப் பற்றி...
2. ஊடகத்துறையில் நமது சமுதாயத்தினரின் பங்கு...
3. இளம் பதிவர்களுக்கு கூறும் அறிவுரைகள்...
4. நமதூர் பதிவர்களின் தனிச்சிறப்பு...

ஆகிய கேள்விகளுடன் சகோ. ராஃபியா அவர்களுக்கு மின்னஞ்சல் செய்து அவர்களின் கருத்தைப் பெற்றோம்.

சகோ. ராஃபியா அவர்களைப் பற்றிய சிறுகுறிப்பு :
ஜித்தா நகரில் கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக வசித்து வரும் இவர் 'ராஃபியா' என்ற பெயரில் அனைவராலும் அன்பாக அழைக்கப்படுபவர். பல நாடுகளுக்கு தொழில் நிமித்தமாக சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளதோடு மட்டுமல்லாமல் பன்மொழி பேசும் திறன்கொண்டவரும் ஆவார். நகைசுவை உணர்வுடன் தன் கருத்தை அழகாக  எடுத்துரைப்பது இவரின் தனிச்சிறப்பாகும்.

பல்வேறு பொது அமைப்புகளில் நிர்வாகியாகத் தொடர்ந்து சமுதாயச் சேவை ஆற்றிவருவது நமதூருக்கு பெருமை சேர்ப்பதாக உள்ளன. குறிப்பாக அதிரை  பைத்துல்மாலின் ஓவர்சீஸ் பிரதிநிதி-அய்டாவின் முன்னாள் தலைவர்-மெப்கோ பொது நிதி கல்வி நிறுவனத்தின் துணைத்தலைவர்  - மற்றும் ஜெத்தா தமிழ் சங்கம் -GRIT (GULF RESIDENCE OF INDIAN TAMILS) போன்றவை குறிப்பிடத்தக்கது ஆகும்.


சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! 'சந்திப்புகள்' தொடரும்...

'சந்திப்பு' : ‘புதுமைக்கவி’ சகோ. அதிரை அப்துல் ரஜாக் [காணொளி]


சிந்திக்கும் ஆற்றலைப் பெற்றுள்ள நாம், சமூக மேம்பாட்டிற்காக செயல்படுத்தக்கூடிய நல்ல விஷயங்கள் மற்றும் சமூகத்திற்கு கேடு விளைவிக்கக்கூடிய தீங்குகள் போன்றவற்றின் சாதக/பாதகங்களில் விழிப்புணர்வுடன் இருப்பது என்பது அவசியமானதாகக் கருதப்படுகிறது.

‘சந்திப்பு’ தொடருக்காக...

1. சமுதாய விழிப்புணர்வு...
2. கல்வியின் அவசியம்...

ஆகிய கேள்விகளுடன் சகோ. அதிரை  அப்துல் ரஜாக் அவர்களைச் சந்தித்து அவர்களின் கருத்தைப் பெற்றோம்.

அதிரை  அப்துல் ரஜாக் அவர்களைப் பற்றிய சிறுகுறிப்பு :
கடந்த ஐம்பது ஆண்டுகாலமாக எழுத்துத்துறையில் பங்களிப்பாற்றும் இவர் இஸ்லாமிய இதழ்களான நர்கீஸ், முஸ்லீம் முரசு, மறுமலர்ச்சி, நற்சிந்தனை, சமரசம், மக்காச்சுடர், மணிச்சுடர், அல்இஸ்லாம் போன்றவற்றில் பல்வேறு சமூக ஆக்கங்கள் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

‘புதுமை பூக்கள்’ என்ற நூலை எழுதிருப்பதோடு மட்டுமல்லாமல் மார்க்க பேச்சாளராகவும், சமூக ஆர்வலராகவும் இருப்பது இவருக்கு கூடுதல் சிறப்பாகும்.
சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! 'சந்திப்புகள்' தொடரும்...

Tuesday, September 25, 2012

'சந்திப்பு' : ‘தொழில் அதிபர்’ சகோ. மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) அவர்கள் [காணொளி]



வணிகம் என்பது சமுகத்திற்கு மிக பயனளிக்கும் ஒரு சேவையாகும்  மனிதன் தனது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள  வேண்டி பொருளீட்டுதலை பெருக்கிக்கொண்டான். தொழிலில்  தனது அறிவுத்திறனை பயன்படுத்தி நேர்மையை கடைபிடித்தால் நீண்ட நாள் நீடிக்கலாம்.

‘சந்திப்பு’ தொடருக்காக...

1. தொழில்துறையைப் பற்றி....
2. தொழிலில் எற்பட்ட ஆர்வம்...
3. புதிதாக தொழில் முனைவோருக்கு கூறும் அறிவுரை....

ஆகிய கேள்விகளுடன் சகோ. மு.செ.மு. சபீர் அஹமது அவர்களைச் சந்தித்து அவர்களின் கருத்தைப் பெற்றோம்.

சகோ. மு.செ.மு. சபீர் அஹமது அவர்களைப் பற்றிய சிறுகுறிப்பு :
கடந்த இருபது ஆண்டுகளாக திருப்பூரில் தொழில் புரியும் இவர் நமதூர் காதிர் முஹைதீன் பள்ளி மற்றும் கல்லூரியில் கல்வி பயின்றவர். எந்தவொரு கருத்தையும்  நகைச்சுவை உணர்வோடு எடுத்துச்சொல்ல வேண்டும் என்று விரும்பும் இவர் பத்திரிக்கைதுறையில் கூடுதல் ஈடுபாடு கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! 'சந்திப்புகள்' தொடரும்...

Monday, September 24, 2012

மிரட்டும் மின்வெட்டால் அதிரையில் தண்ணீர் தட்டுப்பாடு [காணொளி] !!!





கடும் மின் பற்றாக்குறை காரணமாக  அதிரையில் மின் வெட்டு நேரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கடந்த சில நாட்களில் மட்டும் 16  மணி நேர அறிவிக்கப்படாத மின் வெட்டு இருந்து வருகின்றன.

குறிப்பாக, மாலை மற்றும் இரவு நேரங்களில் அமலாக்கப்படும் மின் வெட்டால் பொதுமக்கள் மாத்திரமல்ல பள்ளிகளில் காலாண்டுத்தேர்வுகள் எழுத தயாராகும் மாணவ, மாணவிகளும் மிகவும் அவதியுறும் நிலை ஏற்பட்டு உள்ளன.

மேலும் இதனால் அதிரையில் குடிநீர் விநியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளதோடு பொது மக்களின் அன்றாட பணிகளும் முடங்கிப் போயுள்ளன.

குடிநீருக்காக ஆங்காங்கே பொதுமக்கள் காலிக்குடத்துடன் காட்சியளிப்பது மனதை நெருடவைக்கின்றன. ஒரே ஒரு ஆறுதலான விஷயமென்றால் குறிப்பிட்ட பகுதிகளில் டேங்கர் வண்டிகள் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருவதுதான்.

குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்கும் நோக்கில் பொதுமக்கள் நலன் கருதி மேற்கொள்ளும் நடவடிக்கை தொடர்பாக நமதூர் பேரூராட்சி தலைவர் அவர்களிடம் விளக்கத்தைக் கேட்டோம்.

Friday, September 21, 2012

தமிழக அரசின் கனிவான கவனத்திற்கு !!!



தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், 149, எரிபுறக்கரை கிராமத்திற்கு உட்பட்ட பிலால் நகர், காட்டுப்பள்ளிவாசல் தெரு, M.S.M. நகர் K.S.A.லேன் ஆகிய பகுதியை உள்ளடக்கிய ஆதம் நகர் போன்ற பகுதிகள் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளான ரேஷன் கடை, ஆரம்ப சுகாதார நிலையம், பள்ளிக்கூடம், வாக்குச்சாவடி, சமுதாயக்கூடம், ஊராட்சி அலுவலகம், குடி நீர், சாலை வசதி போன்றவற்றில் பின்தங்கியிருப்பது ஒரு பெரும் குறையாக இருந்தாலும், இப்பகுதி மிகவும் தாழ்வான நிலப்பரப்பில் அமைந்துள்ளதால். இதனால் ஒவ்வொரு வருடமும் பெய்கின்ற மழையினால் அருகில் உள்ள ஏறக்குறைய 3 ஹெக்டர் 39 ஏர்ஸ் பரப்பளவைக் கொண்டுள்ள செடியன் குளத்திலிருந்து வழிந்து நிரம்புகின்ற நீரானது ஆக்கிரமிக்கப்பட்ட வடிகால்களை முறையாக தூர் வாரப்படாததல் அப்பகுதியைச் சுற்றியுள்ள பிலால் நகர், காட்டுப்பள்ளிவாசல் தெரு, M.S.M. நகர் K.S.A.லேன் ஆகிய பகுதியை உள்ளடக்கிய ஆதம் நகர் போன்ற குடியிருப்பு பகுதிகளில் புகுந்து ஆங்காங்கே நீர் தேங்கி குண்டும் குழியுமாக குளம் போல் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கும்.

மேலும் கீழ்கண்ட பாதிப்புகளையும் ஏற்படுத்தி விடுகின்றன.

1. மழைக் காலங்களில் ஆங்காங்கே நீர் தேங்கி நிற்பதால் ஏற்படும் தொற்றுக் கிருமிகளால் நோய் பரவும் வாய்ப்பு.

2. பொதுமக்களின் அன்றாட பணிகள் பாதிப்புக்குள்ளாவது.

3. இப்பகுதிகளில் இருந்து பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள், கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் வயதானவர்கள் என சாலைகளில் நடந்துசெல்ல முடியாமல் பெரும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.

4. இரவு நேரங்களில் மஸ்ஜித்க்கு சென்று தொழக்குடியவர்களும் அவதிக்குள்ளாகின்றனர்.

இது போன்ற சிரமங்களைக் கருத்தில் கொண்டு சம்பந்தபட்டப் பகுதி பட்டுக்கோட்டை தொகுதிக்கு உட்பட்ட ஏரிபுறக்கரை கிராம உள்ளாட்சியில் வருவதால் இப்பகுதி மக்களின் சார்பாக ஆக்கிரமிக்கப்பட்ட வடிகால்களை முறையாக அகற்றி தூர் வாருதல் தொடர்பாக கோரிக்கை மனு ஓன்று ஏரிபுறக்கரை கிராம பஞ்சாயத்து தலைவர் அவர்களிடம் கடந்த 11-08-2011 அன்று கொடுக்கப்பட்டது. அதைப் பெற்ற அவர்களும் கிராம சபையைக்கூட்டி தீர்மானம் ஓன்று நிறைவேற்றி அத்தீர்மானத்துடன் கிராம நிர்வாக அலுவலகர் சான்றிதழுடன் இணைத்து பட்டுக்கோட்டை தாசில்தார் அவர்களிடம் கொடுத்து நடவடிக்கை எடுக்கக் கேட்டுக்கொண்டனர்.
இதைத் தொடர்ந்து பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தலைவரின் முயற்சியில் தஞ்சை மாவட்ட ஆர்.டி.ஓ அவர்கள் வெள்ளப்பகுதியை பார்வையிட்டு சென்றதோடு மட்டுமல்லாமல் உடனடியாக ஆய்வு செய்வதாகவும் உறுதியளித்துவிட்டுச் சென்றார்.

இதன் தொடர்ச்சியாக சில மாதங்களுக்குப் பிறகு தஞ்சை மாவட்ட ஆர்.டி.ஓ, பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தலைவர், எரிபுறக்கரை கிராம தலைவர், தாலுக்கா சர்வேயர், கிராம நிர்வாக அலுவலர், தலையாறி மற்றும் பொதுமக்கள் ஆகியோர் முன்னிலையில் குளம் மற்றும் இதனைச்சுற்றியுள்ள ஆக்கிரமணம் செய்யப்பட்டப் பகுதிகளை ஆய்வுக்கு உட்படுத்தி உடனடியாக வடிகால் வாய்க்கால்களை தூர்வாறுவதற்கு ஆவணம் செய்வதாக உறுதியுடன் எங்களிடம் சொல்லிவிட்டு சென்றவர்கள் வருடம் ஒன்றாகியும் இதுவரையில் அதற்குரிய பணிகளை மேற்கொள்ளவில்லை.



தமிழக அரசின் கனிவான கவனத்திற்கு !
இக்குளத்தின் தாழ்வானப்பகுதிகளில் முறையான தடுப்புச்சுவர் இல்லாத காரணத்தினால் உடையும் அபாயநிலைக்கு தள்ளப்பட்டுள்ளன ( ஏற்கனவே ஒரு முறை உடைந்து தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பை உண்டாக்கியுள்ளது ) இதனால் தாழ்வான பகுதியாக கருதப்படுகிற காட்டுபள்ளிவாசல் தெரு, பிலால் நகர் மற்றும் M.S.M. நகர் K.S.A.லேன் ஆகிய பகுதியை உள்ளடக்கிய ஆதம் நகர் போன்ற பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு பாதிப்பு உண்டாவதை தடுக்கும் நோக்கில் இக்குளத்தை ஆய்வுக்குட்படுத்தி முறையான தடுப்புச்சுவரை ஏற்படுத்தி, ஆக்கிரமிக்கப்பட்ட வடிகால் வாய்க்கால்களை அகற்றி குளத்திலிருந்து வழிந்து நிரம்புகின்ற நீரை வாய்க்காலின் வழியாக சீராகச் செல்லுவதற்கு இலகுவாக தூர் வாரப்பட வேண்டும் என்று தமிழக அரசை இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சார்பாக அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! தொடரும்...

குறிப்பு : இறைவன் நாடினால் ! விரைவில் இக்கோரிக்கையை தமிழக முதல்வர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு மின்னஞ்சலில் அனுப்பி நடவடிக்கை எடுக்கக் கேட்டுக்கொள்ளப்படும்.

கவனம் : 'பொருட்கள்' வாங்கும் முன் !



1986 ஆம் ஆண்டு நமது நாட்டில் இயற்றப்பட்ட நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தை பயன்படுத்தி நுகர்வோர் மத்தியில் விழிப்புணர்வு பெறுவதன் மூலம் நுகர்வோர் உரிமை நலன்களைப் பெருமளவு நாம் பாதுகாக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

எடுத்துக்காட்டாக,

1. ஒரு பொருளை வாங்கும்போது அதில் குறைபாடு காணப்பட்டால், நுகர்வோர் அப்பொருளை வாங்க மறுக்கலாம்.

2. பேருந்தில் பயணிக்கும் ஒருவர் தன் குழந்தைக்கு அறை டிக்கட் வாங்கிருந்தாலும் அக்குழந்தை உட்காருவதற்குரிய இடத்தை ஒதுக்குவது ஒரு நடத்துனரின் கடமை என்பதை சுட்டிக்காட்டலாம்.

3. குறிப்பாக பொருளின் எடை அளவில் குறைபாடு இருந்தால் அப்பொருளை வாங்க மறுக்கலாம்.

4. உணவு அல்லது பானம் ஏதேனும் கெடுதி விளைவிக்கக் கூடியதென்று தெரிந்தும் அதை உணவாகவும், பானமாகவும் விற்பனை செய்தால் அதைத் தவிர்க்கலாம்.

இதுபோன்று நுகர்வோரின் கடமைகளைச் சொல்லிக்கொண்டே போகலாம்...

நுகர்வோர் கவனத்தில் கொள்ள வேண்டியவை :
1. பொருளை வாங்கும் முன் அப்பொருள் உற்பத்தி செய்த நாள், பயன்படுத்தப்பட வேண்டிய கால அவகாசம், தர மதிப்பீடு போன்றவைகள் அதில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

2. அதேபோல் பொருளின் எடை, விலை, சுத்தம் ஆகியவற்றை கண்காணித்தல் அவசியம்.

நுகர்வோர் குறை தீர் மன்றத்தில் புகார் செய்யும் முறை :
1. புகாரில் பெயர், முகவரி தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

2. புகாருக்குரிய பொருட்கள், சேவை குறைபாடு, சேதம் ஏற்பட்டிருந்தால் அதன் மதிப்பீடு போன்றவற்றில் முழு விவரங்கள் அதில் இடம்பெற்றிருக்க வேண்டும்.

3. பொருள் வாங்கிய ரசீது இணைத்தல் அவசியம்.

4. புகாரை மாவட்ட/மாநில அளவில் அனுப்புவதாக இருந்தால் நான்கு நகல்களும், தேசிய அளவில் அனுப்புவதாக இருந்தால் ஆறு நகல்களும் இணைக்க வேண்டும்.

5. புகார் அனுப்பிய 90 நாட்களில் வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

6. புகாரை கீழ்கண்ட முகவரியில் மாவட்ட/மாநில/தேசிய குறை தீர மன்றத்தில் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம். புகாருக்கு எவ்வித கட்டணமும் கிடையாது.

Thanjavur District Forum
Elango Commercial Complex
Court Road
Needhi Nagar
Thanjavur 613002
Tel : 04362-272507

Tamil Nadu State Consumer Disputes Redressal Commission,
Slum Clearance Board Building, II Floor,
(Southern Wing), No.212, R.K. Mutt Road, Mylapore,
CHENNAI – 600 004
Phone: 044 24951718 / 24640687
E-mail: scdrc@tn.nic.in or
tn-sforum@nic.in

National Consumer Disputes Redressal Comission
A Wing, 5th Floor, Janpath Bhawan
Cannaught Place
New Delhi 110001
Fax: (011) 23712456

சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! 'சந்திப்புகள்' தொடரும்...

Wednesday, September 19, 2012

'சந்திப்பு' : ‘மார்க்க பிரச்சாரகர்’ சகோ. A. அஸ்ரப்தீன் பிர்தெளசி [காணொளி]



‘சந்திப்பு’ தொடருக்காக....

இஸ்லாத்தில் கவிதை... ?

என்ற கேள்வியுடன் ‘மார்க்க பிரச்சாரகர்’ சகோ. A. அஸ்ரப்தீன் பிர்தெளசி அவர்களைச் சந்தித்து அவர்களின் கருத்தைப் பெற்றோம்.

சகோ. A. அஸ்ரப்தீன் பிர்தெளசி அவர்களைப் பற்றிய சிறு குறிப்பு :
மதுரையை சொந்த ஊராகக் கொண்ட இவர் சிவகங்கை மாவட்டம் வரிச்சியூர் என்ற ஊரில் தப்லிக் மதரஸாவில் ஆரம்ப மார்க்கக் கல்வியை பயின்று பிறகு நாகர்கோயில் அல் ஜாமியத்துல் பிர்தெளசி மதரஸாவில் பட்டம் பெற்றவர். தமிழகம் முழுவதும் கடந்த பதினைந்து ஆண்டுகளாக மார்க்க பிரச்சாரத்தை மேற்கொண்ட இவர் நமதூரில் ஐந்து ஆண்டுகளாக மார்க்கப்பணிகள் செய்துவருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவர் எழுதிய ‘அதிசய மனிதர் தஜ்ஜால்’, ‘சொர்க்கம் நரகம்’, ‘இஸ்லாத்தின் பார்வையில் விருந்து’ ஆகிய நூல்கள் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளன.


சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! 'சந்திப்புகள்' தொடரும்...

Saturday, September 15, 2012

‘பஞ்சு மிட்டாய்’ : டிங்... டிங்... டிங்...



தெருவில் “டிங்” “டிங்” “டிங்” என்ற மணியோசையுடன் “பஞ்சு மிட்டாய்”யைப் பார்த்தவுடன் சட்டென்று நமது குழந்தைகளின் முகத்தில் மட்டற்ற மகிழ்ச்சியைக் காணலாம்.

இவை...

கையில் தொட்டால் சினுங்கும்...
நாவினில் பட்டால் சுருங்கும்...
காற்றுப் பட்டால் கரையும்...
வித வித வண்ணத்தில் மிளிரும்...

டிஸ்கி : 
1. குழந்தைகள் அதிகம் விரும்பும் இவற்றை தவிர்ப்பது நலம் !
2. கல்வி கற்க வேண்டிய வயதில் மணியை ஆட்டிக்கொண்டு தெருத்தெருவாக பஞ்சு மிட்டாய் வியாபாரம் செய்யும் இச்சிறுவனின் பரிதாப நிலையைப் இப்படத்திலே காணுங்கள்...

Thursday, September 13, 2012

'சந்திப்பு' : பதிவர் சகோ. M .H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) 


பின்னூட்டம் என்பது ஒரு தனிக்கலை. நல்ல பின்னூட்டமும், விமர்சனமும் படைப்பாளிக்கு ஊக்கமும் உற்சாகமும் தருவதோடு மட்டுமல்லாமல் நல்ல ஆக்கங்களும் அவரிடமிருந்து பெறுவதாக அமையும் .

‘சந்திப்பு’ தொடருக்காக...

1. ஊடகத்துறையைப் பற்றி...
2. ஊடகத்துறையில் நமது சமுதாயத்தினரின் பங்கு...
3. இளம் பதிவர்களுக்கு கூறும் அறிவுரைகள்...
4. நமதூர் பதிவர்களின் தனிச்சிறப்பு...

ஆகிய கேள்விகளுடன் சகோ. M .H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு)அவர்களுக்கு மின்னஞ்சல் செய்து அவர்களின் கருத்தைப் பெற்றோம்.

சகோ. M .H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) அவர்களைப் பற்றிய சிறு குறிப்பு :
இணையத்தோடு அதிக தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு தனது தமிழ் ஆர்வத்தை நன்கு வளர்த்துக்கொண்டவர். நமது சகோதர வலைதளங்களில் பதியும் சிறந்த ஆக்கங்களுக்கு பதிவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் தொடர்ந்து பின்னூட்டமிட்டு வருகின்றார்.

கட்டுரை, கவிதைகள் என நமது சகோதர வலைத்தளத்தில் பதிந்துள்ள இவர் சமூக ஆர்வலரும் கூட.

சகோ. M .H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) அவர்களின் தந்தை M.A.M. முஹம்மது ஹனீபா அவர்கள் :


ஊடகத்துறையைப் பற்றி...
இது நமது சமுதாயத்துக்கு மிக முக்கியம். காரணம் அக்காலங்களில் இதில் நம்மவர்கள் ஈடுபடாததன் விளைவை நாம் சந்தித்திக் கொண்டிருக்கிறோம்.

அவையில் சில,
வரலாற்றின் பின்னணியில் பெரும்பாலும் நம்மவர்களின் பங்கு புறக்கணிக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.மேலும் நம்மவர்களை பற்றி இட்டுக்கட்டி தவறாகவே அதிகம் சொல்லப்பட்டு வருகிறது.பெரும்பாலான இத்துறையில் நம்மவர்களின் பங்கு மிகக் குறைவாக இருப்பதால் நமக்கு ஏற்படும் பாதகங்களை இருட்டடிப்பு செய்து நம்மை படிப்படியாக பின்னோக்கி  2 ம் தர குடிமகனாக தள்ளி வருகிறது இந்த ஊடக குறையை களைய நம்மவர்கள் பங்கு அவசியம்.

இளம் பதிவர்களுக்கு கூறும் அறிவுரைகள்...
தற்போது இதில் ஈடுபடும் இளம் பதிவர்களின் சேவை பாராட்டக் கூடியது. அவர்களின் வளர்ச்சியும் சொல்லத்தக்க புகழத்தக்க வகையில் இருப்பது மகிழ்ச்சி. அதே சமயம் ஏதாவது செய்தி வேணுமே என்று இல்லாததை இட்டுக்கட்டி எழுதுவதை தவிர்க்க வேண்டும். செய்தி சாராம்சத்தில் ஆதாரம் உண்மை  அறிந்து அவசரப்படாமல் நிதானமாக வெளியிடுவது பல்வேறு சர்ச்சைகளை தவிர்க்கும்.ஆள்பவர்களை அணுசரித்து அவர்களிடம் அழகாக பக்குவமாக எடுத்துரைக்க வேண்டும்.அது போல ஆளாத அடுத்த நிலையில் உள்ளவர்களுடனான விரோதப் போக்கு ஏதும் இருந்தால் அதை இரு தரப்பாரிடம் நடுநிலையாளர்களை வைத்து இஸ்லாமிய அடிப்படையில் தீர்த்து வைக்க பாடுபட வேண்டும். குறைகளை இணையத்தில் வெளியிடுவதோடு நின்று விடாமல் அத்தகவல் ஆள்பவரையும் அடையச்செய்திடல் வேண்டும்.

மேலும் வெளியிடப்படும் செய்திகள் ஒரு சார்பில்லாமல் நடுநிலையோடு இருக்க பார்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக தமிழ்த்தவறுகள் நம் ஊடகங்களில் அதிகம் காணப்படுகிறது. இவற்றை களைய அதிரை அகமது காக்கா, இப்ராஹிம் அன்சாரி காக்கா, ஜெமீல் காக்கா மற்றும் நம் தமிழ் அறிஞர்களை நாடி நல்ல தமிழுக்கு முக்கியத்துவம் காட்ட வேண்டும். CMN சலீம் அவர்களின் விழிப்புணர்வு தகவல்களையும் அவ்வப்போது பிரசுரிக்கச் செய்திடல் வேண்டும்.

பின்னூட்டம் என்பது மேலும் பண்படுத்தும் ஊக்கமாக மட்டும் இருக்க வேண்டுமே ஒழிய மனதை புண்படுத்தும் தாக்கமாக இருக்கக் கூடாது. மாற்று கருத்தென வரும் போது அதில் கண்ணியம் காக்கப்பட வேண்டும். போலிப் பெயர்களில் வரும் கருத்துக்கள் ஆக்கத்திற்கு எதிராகவும் வரலாம், நாளை அதை வெளியிடும் தளத்திற்கு எதிராகவும் அமையலாம். எனவே போலிகள் இன்று நல்லதாக தெரிந்தாலும் அறவே அனுமதிக்ககூடாது. நம்மவர்களின் எழுத்துக் கூர்மை எதிர்காலத்தில் தமிழகம் முழுக்க அனைத்து பத்திரிக்கை துறைகளிலும் பிரதிபலிக்க ஆயத்தமாவோமாக !

நமதூர் பதிவர்களின் தனிச்சிறப்பு...
அல்ஹம்துலில்லாஹ் நமது பெரும்பாலான பதிவர்கள் மிகச்சிறப்பாக நமதூர் செய்திகளை வீடியோ புகைப்பட ஆதாரத்தோடு சிறப்பாக வழங்குவதோடு சமுதாய, மார்க்க  செய்திகளையும் சிறப்பாக வெளியிட்டு சிறந்த சேவை செய்யும் நம்மவர்கள்  மேலும் மேலோங்கிட துஆ செய்தவனாக.

சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! 'சந்திப்புகள்' தொடரும்...

‘சந்திப்பு’ : பதிவர் சகோ. அப்துல் மாலிக்




‘சந்திப்பு’ தொடருக்காக...

1. ஊடகத்துறையைப் பற்றி...
2. ஊடகத்துறையில் நமது சமுதாயத்தினரின் பங்கு...
3. இளம் பதிவர்களுக்கு கூறும் அறிவுரைகள்...
4. நமதூர் பதிவர்களின் தனிச்சிறப்பு...

ஆகிய கேள்விகளுடன் சகோ. அப்துல் மாலிக் அவர்களுக்கு மின்னஞ்சல் செய்து அவர்களின் கருத்தைப் பெற்றோம்.

சகோ. அப்துல் மாலிக் அவர்களைப் பற்றிய சிறு குறிப்பு :
ஆசிரியர் மர்ஹூம் அப்துல் சமது அவர்களின்  இளைய மகனான இவர் , தற்போது துபாயில் ஐடி துறையில் பணி செய்துக்கொண்டிருக்கிறார். விளையாட்டு துறையில் சிறந்து விளங்கிய இவர் நமதூர் காதிர் முகைதின் கல்லூரியில் சாம்பியனாக இருந்தவர். எண்ணற்ற கவிதைகள், கட்டுரைகள் போன்றவற்றை எழுதியுள்ள இவர் சமூக ஆர்வலரும் கூட.

நமது சகோதர வலைதளங்களில் பதியும் சிறந்த ஆக்கங்களுக்கு பதிவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் தொடர்ந்து பின்னூட்டமிட்டு வருகின்றார்.

சகோ. அப்துல் மாலிக் அவர்களின் தந்தை மர்ஹூம் ஆசிரியர் அப்துல் சமது அவர்கள் (முன்னாள் உதவி தலைவர் - அதிரை பைத்துல்மால், தலைவர் - பெற்றோர்-ஆசிரியர் கழகம் )


ஊடகத்துறையை பற்றி :
ஊடகத்துறை என்பது மக்களிடையே அதிக நெருக்கத்தை ஏற்படுத்தி அவர்களிடையே ஒன்றெனக்கலந்து விவாதிக்கும் ஒரு இத்தியாதியாக இருக்கிறது. முன்னெல்லாம் ஜர்னலிசம் (Journalism) பட்டம் படித்தவர்கள் மட்டுமே தேர்ந்தெடுத்து செயல்படுத்தியது போக இப்போ கூகிளின் கட்டற்ற சேவையான பிளாக் (BLOG) என்ற தனகென்ற வலைத்தளம் கணக்கை உருவாக்கி தன் மனதில் பட்டது, கண்டது, செயல் படுத்த நினைப்பது, விருப்பு, வெறுப்பு அனைத்தையும் எழுத்தின் வடிவில் மக்களை சென்றடைய எழிய வழியாக உருவாகி இருக்கிறது. இதற்கென ஒரு வரைமுறையை கையாண்டு புரட்சியின் மூலம் எதையும் சாதிக்கமுடியும், இயலாத பட்சத்தில் அந்த துறையை கொஞ்சமேனும் அசைத்துப்பார்க்கலாம்.

நானும் ஒரு ரேஞ்சர் சைக்கிள் வைத்திருக்கிறேன் என்று சொல்லுவதற்காக மட்டும் எனக்கு ஒரு வலைத்தளம் ஆரம்பித்து பிறகு அதன் வளர்ச்சியால், எழுத்தினால் எதையும் சாதிக்கலாம் என்ற நிலை வரும்போதுதான் ஊடகத்துறையில் என்னாலும் முடிந்த கருத்துக்களை மக்களிடம் எடுத்துசொல்ல ஏதுவாக இருந்தது.  முதன் முதலில் கருத்துக்கள் வரவில்லை என்று எண்ணி யாருமேயில்லாத டீக்கடையில் யாருக்காக தேத்தனி ஆத்தனும் என்று சோர்வுற்ற போதெல்லாம் மூத்த பதிவர்கள் சிலர் உன் பதிவுகள் பதிவிட்ட அடுத்த நிமிடம் பல நூறு வாசகர்கள் வாசிக்கிறாங்க என்ற உண்மையை சொன்னாங்க.

இதுலே நிறைய பேர் வாசிக்க மட்டுமே செய்றாங்க, யாருமே கருத்து சொல்லுறது இல்லை, இது நமக்கேன் வம்பு என்று ஒதுங்கி செல்கிறார்களா இல்லை பயமா இல்லை தட்டச்சு பிராப்ளமா என்று தெரியவில்லை. நம் சமூகத்தில் நடக்கு அவலங்களை நோட்டீஸ் அடிச்சி ஒட்டவேணாம், ஒரு சில கருத்து சொல்லி நம் மனதை தேத்திக்கலாம், நல்லவற்றை எடுத்து சொல்லி பாராட்டலாம். இப்படி ஒரு சிறு உந்துத்தால் சிறந்த சமூகத்திற்காக குரல் கொடுப்பவர்கள் மேலும் சிறப்பாக செயல்பட ஊக்கமாக அமையும்.

ஊடகத்துறையில் அச்சுத்துறையை விட எலக்ட்ரானிக் துறையே அதிவீத வளர்ச்சி கண்டுள்ளது என்பதற்கு இணையம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. அச்சில் ஏற்றியவகைகளை தேடி காலங்கார்த்தாலே தேத்தனியும் பேப்பர் கையுமா இருக்கனும் என்ற அவசியமில்லை. அதற்காக நேரம் விரயம் செய்து படித்த காலம் போய் இன்று கையடக்க ஆண்ட்ராய்ட் அலைபேசியினூடே அனைத்து செய்திகளையும் அறிய முடிகிறது என்பது மறக்கமுடியாத உண்மை

ஊடகத்துறையில் நமது சமுதாயத்தினரின் பங்கு...
மாநிலத்துக்கு ஒன்று ஊடகம் இருந்த காலம் போய் தெரு/ஆளுக்கு ஒன்று என்று விரிவடைந்திருப்பது ஊடகத்துறையில் நம்மவரின் பங்கு அலப்பறியது. ஆலிம்சாமார்களை தேடிப்போய் விளக்கம் கேட்ட காலம்போய் இன்று கையடக்கத்தில் எல்லாமே. கடந்த நோன்பில் ஒரு நாள் சரியாக காலை 6 மணிக்கு உணவு சரியில்லாமல் வாந்தியும் பேதியும் போனது, நிறைய பேர் நோன்பு முறிந்துவிட்டது எனவே மறுபடியும் நோன்பிருக்கவேண்டும் என்று சொன்னார்கள், இணையத்தில் தேடினேன் ஆதாரமுள்ள ஹதீஸ் கிடைத்து நோன்பு ஏற்றுக்கொள்ளப்படும் என்று தெரிந்தேன், ஆகவே இன்று எந்தவித கேள்விக்கும் விடை எலக்ட்ரானிக் ஊடகத்துறையினால் சாத்தியமே.

மேலும் எது வளர்ச்சியடைகிறதோ அதுவே வீழ்ச்சிக்கும் வழிவகை செய்கிறது. நம் சமுதாயத்தவர்கள் இந்த ஊடகத்தை வைத்துக்கொண்டு தன்னை சார்ந்த சமூகத்தவரையே எதிரியாக்கி அவர்களை பற்றிய கட்டுரைகளை பரப்பும் குணம் அதிகரித்துள்ளது. ஒரு மெயில் குழுமத்தில் என்னை இணைத்தனர் அது ஹதீஸ் குரானை ஆராயும் தளமாக இருந்தது. நாள் பட அத்தளம் இவர்/அவரை தாக்கியும் குறிபிட்ட செய்தியை எடுத்து வாதாடுவதும் எந்தளவுக்கு நாம் கால விரயத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறோம் என்றெண்ணி வருத்தம்தான் மிஞ்சுகிறது. இவ்வளவு வளர்ச்சியுள்ள இந்த ஊடகத்தை நாம் சரியான வழியில் சிந்தித்து செயல்படுத்தினால் நாளை நம் சமுதாயம் உச்சத்தில் இருக்கும், நம் மரபுவழி சமுதாயம் பயனடைய நாம் ஏன் அடிக்கோலிடக்கூடாது..

அறிவுரை..! 
அறிவுரை என்பது எல்லோரும் எல்லோருக்கும் இலவசமாக தருவாங்க,  அதையே நானும் செய்ய விரும்பல, திறமையானவங்க நிச்சயம் நல்ல ஆரோக்யமான ஊடகமாக செயல்பட்டு இச்சமுதாயத்தை கல்வியின் பக்கம் முன்னேற்றமடைய செய்வாங்க. இன்று நம்மூரில் நிறைய இளைஞர்கள் நகைச்சுவையாகவும், அறிவுடனும் திறமையாகவும் எழுதுறாங்க என்பது மிக்க சந்தோஷம். எனக்கு தெரிந்து அதிரையில்தான் அதிகமானோர் தனித்தனி பிளாக் வைத்திருக்காங்க. நல்லவழிகளில் பயன்படுத்தினால் நாளை நீயும் வரலாற்றில் ஒரு அங்கமாக இருப்பாய்.

நமதூர் பதிவர்களின் தனிச்சிறப்பு :
இதை பற்றி சொல்லவேண்டுமானால் தனி பதிவே போடவேண்டும், எவ்வளவு கவிதைகள், கட்டுரைகள், சமுதாய சிந்தனைகள் மாஷா அல்லாஹ். நம்மவர்கள் சாப்பிடதான் லாயக்கு என்ற காலம் போய் இன்று எல்லா துறைகளிலேயும் சாதித்த்து சாதித்துக்கொண்டிருப்பதை கண்கூடாக காண்கிறோம். ஊரில் இருப்பவர்களை விட வெளிநாடுகளில் வாழுவோர் உடனுக்குடன் உள்ளூர் செய்திகளை அறிய தருகிறார்கள், இதை நானு அனுபவித்திருக்கேன். எந்த ஒரு நிகழ்வும் இந்த ஊடகத்துறையின்மூலம் சாத்தியமே அதை நம்மக்கள் செய்துக்கொண்டும் இருக்கிறார்கள்.

சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! 'சந்திப்புகள்' தொடரும்...

Tuesday, September 11, 2012

அரசின் இலவச வேலைவாய்ப்பு பயிற்சித் திட்டங்கள் !



அரசால் பிற்படுத்தப்பட்ட இனத்தவரை பொருளாதார ரீதியாக மேம்படுத்தும் வகையில் வேலைவாய்ப்புமிக்க பல்வேறு துறைகளில் குறுகிய கால திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

அவைகளில் சில...

கணினி சார்ந்த கணக்கியல் நிர்வாகம் ( Computer Aided Accounting & Management ) :

1. பயிற்சிக் கட்டணம் : முழுவதும் அரசால் வழங்கப்படுகின்றன.
2. பயிற்சிக் காலம் : ஆறு மாதங்கள்
3. தகுதிகள் :
a. ஏதேனும் ஒரு பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.
b. தமிழ்நாட்டை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்திருக்க வேண்டும்.
c. குடும்ப ஆண்டு வருமானம் ரூபாய் ஒரு இலட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
4. கல்வித்தகுதி சான்றிதழ்
5. சாதிச் சான்றிதழ்
6. வருமானச் சான்றிதழ்
7. தொடர்புகொள்ள வேண்டிய முகவரி :
சிறப்பு அலுவலர் ( திட்டம் )
பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினர் மற்றும் சிறுபான்மை நலத்துறை,
சேப்பாக்கம், சென்னை-600 005, தொலைப்பேசி : 044-28511124

தோல் பொருள் தயாரிப்பில் சான்றிதழ் படிப்பு ( Certificate Course in Leather goods Manufacturing ) :

1. பயிற்சிக் கட்டணம் : முழுவதும் அரசால் வழங்கப்படுகின்றன.
2. பயிற்சிக் காலம் : பன்னிரெண்டு மாதங்கள்
3. தகுதிகள் :
a. பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.
b. தமிழ்நாட்டை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்திருக்க வேண்டும்.
c. குடும்ப ஆண்டு வருமானம் ரூபாய் ஒரு இலட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
4. கல்வித்தகுதி சான்றிதழ்
5. சாதிச் சான்றிதழ்
6. வருமானச் சான்றிதழ்
7. தொடர்புகொள்ள வேண்டிய முகவரி :
சிறப்பு அலுவலர் ( திட்டம் )
பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினர் மற்றும் சிறுபான்மை நலத்துறை,
சேப்பாக்கம், சென்னை-600 005, தொலைப்பேசி : 044-28511124

டெஸ்க் டாப் பப்ளிஷிங் ( Job Oriented DTP ) :

1. பயிற்சிக் கட்டணம் : முழுவதும் அரசால் வழங்கப்படுகின்றன.
2. பயிற்சிக் காலம் : மூன்று மாதங்கள்
3. தகுதிகள் :
a. பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.
b. தமிழ்நாட்டை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்திருக்க வேண்டும்.
c. குடும்ப ஆண்டு வருமானம் ரூபாய் ஒரு இலட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
4. கல்வித்தகுதி சான்றிதழ்
5. சாதிச் சான்றிதழ்
6. வருமானச் சான்றிதழ்
7. தொடர்புகொள்ள வேண்டிய முகவரி :
சிறப்பு அலுவலர் ( திட்டம் )
பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினர் மற்றும் சிறுபான்மை நலத்துறை,
சேப்பாக்கம், சென்னை-600 005, தொலைப்பேசி : 044-28511124

பேக்கரி மற்றும் கன்பெக்க்ஷனரி ( Bakery & Confectionary ) :

1. பயிற்சிக் கட்டணம் : முழுவதும் அரசால் வழங்கப்படுகின்றன.
2. பயிற்சிக் காலம் : பன்னிரெண்டு மாதங்கள்
3. தகுதிகள் :
a. பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.
b. தமிழ்நாட்டை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்திருக்க வேண்டும்.
c. குடும்ப ஆண்டு வருமானம் ரூபாய் ஒரு இலட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
4. கல்வித்தகுதி சான்றிதழ்
5. சாதிச் சான்றிதழ்
6. வருமானச் சான்றிதழ்
7. தொடர்புகொள்ள வேண்டிய முகவரி :
சிறப்பு அலுவலர் ( திட்டம் )
பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினர் மற்றும் சிறுபான்மை நலத்துறை,
சேப்பாக்கம், சென்னை-600 005, தொலைப்பேசி : 044-28511124

கணினி வன்பொருள் மற்றும் நெட்வொர்க்கிங்  ( Hardware & Networking ) :

1. பயிற்சிக் கட்டணம் : முழுவதும் அரசால் வழங்கப்படுகின்றன.
2. பயிற்சிக் காலம் : பன்னிரெண்டு மாதங்கள்
3. தகுதிகள் :
a. பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.
b. தமிழ்நாட்டை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்திருக்க வேண்டும்.
c. குடும்ப ஆண்டு வருமானம் ரூபாய் ஒரு இலட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
4. கல்வித்தகுதி சான்றிதழ்
5. சாதிச் சான்றிதழ்
6. வருமானச் சான்றிதழ்
7. தொடர்புகொள்ள வேண்டிய முகவரி :
சிறப்பு அலுவலர் ( திட்டம் )
பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினர் மற்றும் சிறுபான்மை நலத்துறை,
சேப்பாக்கம், சென்னை-600 005, தொலைப்பேசி : 044-28511124

தகவல் உள்ளீடு செய்யும் பயிற்சி  ( Data Entry Operator ) :

1. பயிற்சிக் கட்டணம் : முழுவதும் அரசால் வழங்கப்படுகின்றன.
2. பயிற்சிக் காலம் : மூன்று மாதங்கள்
3. தகுதிகள் :
a. பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.
b. தமிழ்நாட்டை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்திருக்க வேண்டும்.
c. குடும்ப ஆண்டு வருமானம் ரூபாய் ஒரு இலட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
4. கல்வித்தகுதி சான்றிதழ்
5. சாதிச் சான்றிதழ்
6. வருமானச் சான்றிதழ்
7. தொடர்புகொள்ள வேண்டிய முகவரி :
சிறப்பு அலுவலர் ( திட்டம் )
பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினர் மற்றும் சிறுபான்மை நலத்துறை,
சேப்பாக்கம், சென்னை-600 005, தொலைப்பேசி : 044-28511124

ஆட்டோ கேட் ( கணினி பயிற்சி ) :

1. பயிற்சிக் கட்டணம் : முழுவதும் அரசால் வழங்கப்படுகின்றன.
2. பயிற்சிக் காலம் : இரண்டு மாதங்கள்
3. தகுதிகள் :
a. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.
b. தமிழ்நாட்டை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்திருக்க வேண்டும்.
c. குடும்ப ஆண்டு வருமானம் ரூபாய் ஒரு இலட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
4. கல்வித்தகுதி சான்றிதழ்
5. சாதிச் சான்றிதழ்
6. வருமானச் சான்றிதழ்
7. தொடர்புகொள்ள வேண்டிய முகவரி :
சிறப்பு அலுவலர் ( திட்டம் )
பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினர் மற்றும் சிறுபான்மை நலத்துறை,
சேப்பாக்கம், சென்னை-600 005, தொலைப்பேசி : 044-28511124

சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! இதன் தொடர்ச்சி விரைவில் பதியப்படும்...

Sunday, September 9, 2012

'ஸ்மார்ட் கிளாஸ்' - அப்புடின்னா என்ன ?



தற்போது - ஸ்மார்ட் கிளாஸ் என்ற பெயரில் புதிய வகுப்பு முறை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. பாடங்களை ஆசிரியர் சொல்லிக் கொடுத்த பின்னர் மாணவர்களுக்குப் புரிகின்றதோ இல்லையோ மனப்பாடம் செய்து தேர்வு எழுதும் முறையை மாற்றி பாடங்களையே படங்களாக்கிக் காட்டி பல்வேறு உதாரணங்களையும் இம்முறை மூலம் எடுத்துக்காட்டும் போது வகுப்பறைகளில் மட்டுமின்றி வாழ்க்கையில் எங்கு எதைப் பார்த்தாலும் அதனுடன் தான் படித்த பாடத்தை ஒப்பிட்டு நோக்கும் முறையை இந்த ஸ்மார்ட் கிளாஸ் சிஸ்டம் ஏற்படுத்தித் தருகிறது என்றால் அது மிகையல்ல.

படிப்பது என்ன என்பது மாணவர்களுக்குப் புரிய வேண்டும். வெறும் தாள்களில் அச்சிட்ட பாடத்தை வாசிப்பதனாலும், மனப்பாடம் செய்து தேர்வில் மதிப்பெண்கள் வாங்குவது என்பது உபயோகமாக இருக்காது. கற்கும் முறையை விட கற்பிக்கும் முறை எளிதாக இருந்தால் கற்பதிலும், கற்பிப்பதிலும் ஆர்வம் கூடிக் கொண்டே இருக்கும். இந்த முறையை ஸ்மார்ட் கிளாஸ் எனப்படும் தொழில் நுட்பத்தின் மூலமான கல்வி வழங்குகிறது.

இந்த ஸ்மார்ட் வகுப்புக்கு ஒரு சர்வர், ஒவ்வொரு வகுப்பறையிலும் எல்.சி.டி. மானிட்டருடனான கம்ப்யூட்டர் தேவை. இந்த சர்வர்களில் நமக்குத் தேவையான அனைத்துப் பாடங்களையும் நாம் பதிவு செய்து கொள்ள முடியும். இதைத் தவிர இன்டர்நெட் மூலம் தேவையான விஷயங்கள், எஜூசாட் மூலம் கிடைக்கும் விஷயங்களை டவுன்லோட் செய்து தேவையான நேரத்தில் வகுப்பறைகளில் காண்பிக்கவும் சர்வர் உதவும்.

புத்தகத்தைப் பார்த்து பாடம் படிப்பதை விட, செயல் வழி மற்றும் "விஷுவல்' முறையில் படிப்பது அதிக பலன் அளிக்கிறது. வெளிநாட்டு பள்ளிகளில் இந்த திட்டம் மூலம் படிக்கும் மாணவர்கள் புத்திக்கூர்மையுடன் விளங்குகின்றனர்.

இதற்கான பாடங்கள், "இன்டர்ஆக்டிவ் போர்டில்' தயாரிப்பின்போதே புகுத்தப்படுகிறது. பாடம் தொடர்பான சந்தேகங்களுக்கு, மாணவர்களே திரையில் விடையை கண்டுபிடிக்க முடியும். ஜீரண மண்டலம் போன்ற பாடங்களை அசையும் படங்களுடன் வண்ணமயமாக காணொளியாக திரையில் காண முடிவதால், பாடங்கள் எளிதில் மனதில் பதியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Thanks : http://viduthalai.periyar.org.in

'சந்திப்பு' : பதிவர் சகோ. அபூ சுஹைமா [காணொளி] !



இணையத்தினை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே செல்வதுடன் மட்டுமல்லாமல் ஒவ்வொருவரின் வீட்டிலும் கணிணி என்பது கட்டாயத் தேவை என்ற அளவிற்கு, இதன் பயன்பாடு கூடிக் கொண்டே செல்கிற்து.

இணையம் எல்லோருக்கும் பொதுவானது. யாருக்கும் சொந்தமில்லாதது. அறிவியலின் "அடுத்தக் கட்டம்" என்று சொன்னால் மிகையாகாது அந்தளவிற்கு நிமிடத்தில் எண்ணற்ற பக்கங்கள் கொண்ட தகவல்கள் அப்லோடு செய்யப்படுகின்றன. மாணவ, மாணவிகள் இணையதளத்தை பயன்படுத்தும் போது அதில் பயனுள்ள பகுதிகளை மட்டுமே பார்க்க பழகிக்கொண்டால் சாதிக்க நிறையவே இருக்கிறது” என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வாரம்...

1. ஊடகத்துறையைப் பற்றி...
2. ஊடகத்துறையில் நமது சமுதாயத்தினரின் பங்கு...
3. இளம் பதிவர்களுக்கு கூறும் அறிவுரைகள்...
4. நமதூர் பதிவர்களின் தனிச்சிறப்பு...

ஆகிய கேள்விகளை முன்வைத்து சகோ. அபூ சுஹைமா அவர்களைச் சந்தித்து அவர்களின் கருத்தைப் பெற்றோம்.

சகோ. அபூ சுஹைமா அவர்களைப்பற்றிய சிறு குறிப்பு :
அபூசுஹைமா - பிரபல மார்க்க அறிஞர் மர்ஹூம் முஹம்மது அலிய் ஆலிம் அவர்களின் புதல்வரும் மூதறிஞர் மர்ஹூம் அபூபக்கர் ஆலிம் அவர்களின் பேரரும் ஆவார். பள்ளிப்படிப்பை கா.மு. மேல் நிலைப்பள்ளியிலும், பட்டப் படிப்பை சென்னை புதுக்கல்லூரியிலும் படித்து இளங்கலை பட்டம் பெற்றவர்.

கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போதே பகுதி நேரமாக அச்சகத் துறையில் பணியாற்றி, பிறகு சுயமாக கணினி வரைகலையில் நிபுணத்துவம் பெற்றார்.அச்சுப்பதிப்புத் துறையிலிருந்ததால் பல்வேறு அறிஞர்களின் நூற்களையும் தட்டச்சு செய்யும்போது வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தமிழ், ஆங்கிலம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் சரளமாகப் பேச, வாசிக்க அறிந்தவர். வளைகுடா நாடுகளான ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் குவைத்தில் இருந்ததால் அரபு மொழியையும் பேச, வாசிக்க அறிந்தவர்.

இணையம் பிரபலமடையத் தொடங்கிய காலகட்டத்தில் வலைப்பூக்களில் பல்வேறு கட்டுரைகளை எழுதியுள்ளார். தற்போது அதிரை பைத்துல்மால் குவைத் கிளையின் பொறுப்பாளர்களில் ஒருவராகவும் இருக்கிறார்.


சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! 'சந்திப்புகள்' தொடரும்...

Friday, September 7, 2012

‘சந்திப்பு’ : ‘பத்திரிக்கை நிபுணர்’ சகோ. அதிரை சித்திக்























ஊடகத்துறை என்பது சமூகத்தில் நடைபெறும் நிறை, குறைகளை உலக மக்களின் கவனத்திற்குக் கொண்டு செல்வதோடு மட்டுமல்லாமல் சம்பந்தப்பட்டவர்களின் பார்வைக்கும் சென்றடைந்து அதற்குரிய தீர்வும் எட்டுகிறது. இதனால் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும், சமுதாயத்தின் வளர்ச்சிக்கும் வித்திட முடிகிறது.

‘சந்திப்பு’ தொடருக்காக...

1. ஊடகத்துறையைப் பற்றி...
2. ஊடகத்துறையில் நமது சமுதாயத்தினரின் பங்கு...
3. இளம் பதிவர்களுக்கு கூறும் அறிவுரைகள்...
4. நமதூர் பதிவர்களின் தனிச்சிறப்பு...

ஆகிய கேள்விகளுடன் சகோ. அதிரை சித்திக் அவர்களுக்கு மின்னஞ்சல் செய்து அவர்களின் கருத்தைப் பெற்றோம்.

சகோ. அதிரை சித்திக் அவர்களைப்பற்றிய சிறு குறிப்பு :
'அதிரை சித்திக்' என்ற பெயரில் தனது பதினைந்தாவது வயதில் எழுத்துப் பணியை தொடங்கிய இவர் 'தினசரி'’என்ற நாளிதழுக்கு முகவராகவும், நிருபாராகவும் இருந்தவர். மேலும் பல்வேறு மாத இதழ்களுக்கு குறிப்பாக 'சுற்றுலா', 'தமிழூற்று'  போன்றவற்றிக்கு ஆசிரியராகவும் இருந்துருக்கிறார்.

பல்வேறு சிறுகதைகள், ஆய்வுக் கட்டுரைகள், கவிதைகள் என எழுதியுள்ள இவர், பத்திரிக்கைதுறை பணியின் போது முன்னாள் அமைச்சர் Y.S.M. யூசுப் அவர்களிடம் பலமுறை பேட்டி எடுத்தது, மலேசியாவில் இந்தியா பத்திரிகை யாளராகச் சென்று திரு. டத்தோ சாமுவேல் அவர்களை பேட்டி எடுத்தது இவருக்கு மேலும் சிறப்பை அளிக்கின்றன.

ஊடகத்துறைப் பற்றி...
முப்பது வருடத்திற்கு முன்பெல்லாம் செய்தி துறை என்றே அழைக்க பட்டது. அதன் துறையை சார்ந்தவர்கள் செய்தியாளர் ,பத்திரிக்கையாளர்
என்றே அழைக்கப் பட்டனர். அந்த காலங்களில் செய்தி தாள் நடத்துவதென்பது மிக கடின மான காரியம் .விளம்பர துறை அவ்வளவு வலிமையானதாக இல்லை எனவே வருமானத்தை பேருக்கும் விதமாக ஒவ்வொரு நாளிதழ் நிறுவனமும் வார மாத இதழ்கள் நடத்தி வந்தன

அதில் கதை ஊர் நடப்புகள் அரசியல் வாதிகள் நடிகர்கள் பேட்டிஇடம்பெறும் இதன் மூலம் செய்தியாளர்கள் .எழுத்தாளர்கள் ஒரே குடையின் கீழ் வர நேர்ந்தது காலம் செல்ல செல்ல நவீனங்கள் உட்புகந்தன .வானொலி ,தொலைகாட்சி செய்தி துறைக்கு உதவும் விதமாக அமைந்தது .
தனியார் நிறுவனங்கள் நிகழ்ச்சி தயாரிப்பாளர்களாக அனுமதிக்க பட்டனர் .வானொலி .,தொலைக்காட்சி அரசிடம் இருந்த வரை செய்தி வெளியிடுவதில் மிகவும் கவனமாக இருந்தது .தணிக்கை குழு அமைத்து கண் காணித்து வந்தது

விஞ்ஞான வளர்ச்சி அதி வேகத்தால் எல்லாத்துறையும் முன்னேறியது போல் செய்தி துறையும் முன்னேறியது ..செயற்கைகோல் அனுப்புவதில் வெற்றிகண்ட உலகம் செய்தி துறைக்கு பரிசளித்தது  தொலை காட்சிகள் செயல்படுவது மிக இலகுவானதால் ஆட்சியாளர்கள் தனது கொள்கைகளை மாற்றி கொண்டார்கள் ..அச்சு தொழில் இருந்த தனியார் துறை தொலை காட்சி மற்றும் வானொலிகளை கைப்பற்றி வணிக துறையாக மாற்றிக் கொண்டது .எழுத்து மட்டுமே செய்தி துறையாக இருந்தது ..சொல்லாற்றல் .காட்சி வடிவமைப்பும் செய்தி துறையின் அங்கமாக மாற எல்லா செயல்பாடுகளுக்கும் ஒட்டு மொத்த பெயராக (மீடியா )ஊடகம் என்ற பெயரில் அழைக்கலாயிற்று.

செய்தி துறை என்ற நலிந்த துறை செல்வம் கொழிக்கும் ஊடகதுரியாக மாறியது .அரசின் தணிக்கை கொள்கையை மாற்றிக் கொண்டது .
வரைமுறைகளை சுரிக்கிகொண்டது .நாட்டின் பாதுகாப்புக்கு ,இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்க கூடாது என்ற ஒற்றை வரி கொள்கையை கையாண்டு வருகிறது ..ஆனால் நாட்டில் வாழ்கின்ற மக்களின் மனதை புண்படுத்தும் நிகழ்வுகளை கண்டுகொவதில்லை ..அரசின் கட்டுப்பாட்டில் இருந்த ஊடகம் .அரசை நிர்ணயிக்கும் சக்தியாக மாறியது. உலகின் அணைத்து அரசியல்வாதிகளும் பயப்படும் ஒரே துறை ஊடக துறை மட்டும் தான்.

இதற்கு ஒரு உதாரணம், ஒருவர் செல்ல பிராணியாக வளர்க்க எண்ணி ஒரு விலங்கை வளர்த்தார் .அவருக்கு உதவியாக இருக்கவேண்டும் என்பதே அவர் நோக்கம் ..காலபோக்கில் அது அசுர வளர்ச்சி அடைந்து எஜமானையே கொன்று  திண்டு விட்டது .அக்கம் பக்கத்தினர் பயம் கொண்டதை போன்று பொய்யும் புரட்டும் கொண்ட ஊடகத்தை கண்டு அரண்டு ஓடும்  நிலை உள்ளது.

"மலேசிய முன்னாள் அதிபர் மகாதீர் முகமது அவர்கள் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டு எழுதி இருந்தார்கள் .கி.பி.15 ம் நூற்றாண்டில் எந்த சமூகம் காலார் படை வைத்து இருந்ததோ அந்த சமூகம் உலகை ஆழ முடிந்தது ..பிறகு கடற் படை வைத்திருந்த சமூகத்தின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது ..அதன் பின்னர் விமான படை உள்ள நாடுகளை ஆதிக்கம் .அடைந்ததை அறிந்தோம்

தற்போது சிறு சமூகம் ஊடகத்துறையை தன கையில் எடுத்துக் கொண்டு உளைகையே ஆட்டி படைக்கிறது ..ஒவ்வொரு சமூகமும் ஊடகத்தில் பங்கு கொள்ள வேண்டும் .அதன் செயல் பாடுகளை உன்னிப்பாக கவிக்க வேண்டும் அதில் நம்மவரும் ஈடுபாட்டுடன் இருப்பது விழிப்புணர்வுக்கு வித்தாகும்

ஊடகத்துறையில் நமது சமுதாயத்தின்  பங்கு...
இஸ்லாத்தில் செய்தி தொடர்பு துறை என்ற அதிக முக்கியத்துவம் கொடுக்கபடாததன் விளைவோ என்னவோ. கடந்த காலங்களில் நம்மவர்கள் அதிகம் ஈடுபாடு காட்டவில்லை அவசியம் இல்லாமல் புகை படம் எடுப்பது ஹராம் என்ற நிலை இருந்தது ..இதன் மூலமே செய்தி துறைக்கு முக்கியத்துவம் கொடுப்பதை நம்மவர் தவிர்த்து வந்தனர் .காலம் செல்ல செல்ல இஸ்லாமிய கல்வியாளர்கள் பதிவு துறையில் ஈடுபட்டார்கள்.

"பிறை"என்ற மாத இதழ் பிரபலமானது இதில் மார்க்க அறிஞர்கள் எழுதிய கட்டுரைகள் ஹதீஸ் விளக்கத்துடன் இடம் பெற்றிருக்கும் வருட சந்தா அடிப்படையில் அவ்விதழ் செயல் பட்டு வந்தது  ஊர் ஊராக சென்று வருட சந்தா வசூலிப்பது மிக பரிதாபமாக இருக்கும் காலப்போக்கில் பிறை மறைத்து விட்டது அடுத்து முஸ்லிம்முரசு ,நர்கிஸ் போன்ற பத்திரிகைகள் தலை எடுத்தன ..சிறுகதை போன்ற படைப்புகள் புகுத்தப்பட்டன அதே கால கட்டத்தில் முஸ்லீம் லீக் அரசியல் கட்சியின் பிரபலமான பிரமுகர் நாவலர் திருச்சி யூசுப் சாகிப் அவர்களால் மறுமலர்ச்சி என்ற வார இதழ் துவங்கப்பட்டு முஸ்லீம்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியது கொஞ்சமும் அச்சமின்றி கட்டுரைகள் அதிக அளவில் இடம் பெற்றிருந்தன.

அதன் பிறகு முஸ்லிம் லீகின் தலைவர் அப்துல் சமது சாகிப் அவர்களால் மணி சுடர் என்ற அவர்களால் நடத்த பட்டது. ஊடகம் கலை மற்றும் நாடகம் சினிமா போன்றவைகளால் ஈர்க்க பட்டதால் முஸ்லீம்கள் ஊடக துறையில் நுழைய தயக்கம் காட்டினர் அதுவே ஊடகம் முஸ்லீம்களுக்கு எதிராக திரும்பியது எனலாம்
 
தற்போது முரட்டு தனமான .அசுர வளர்ச்சி அடைந்த ஊடகம் ..முஸ்லீம் களின் சிறிய கடிவாலத்திற்கு அடங்கா குதிரையாக உள்ளது ..ஊடகத்தில் முற்றிலுமாக நுழைத்தால் இஸ்லாத்தின் கொள்கைகளை மறந்து காணாமல் போய் விடுவோம் ..மிகவும் கவனம் தேவை ..மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் அனைத்தும் ஊடகம் என்றே அழைக்க படுகிறது அதன் அடிப்படையில் சினிமாவும் ஊடகத்தின்னூடே வருகிறது சற்று கவனம் சிதறினாலும் ..இஸ்லாத்தின் கோட்பாடுகளை இழக்க நேரிடும் என்பதால் ஊடகத்தில் இஸ்லாமியர்களின் பங்கு குறைவாகவே உள்ளது எனலாம்.

ஊடகத்துறையில்  ஈடுபடும்  இளைஞர்களுக்கு  எனது அறிவுரை ...!
ஊடகத்துறையில் ஈடுபடும் யாராக இருந்தாலும் அதிலிருந்து மீள்வது என்பது மிக கடினம். அது ஒரு வகையான போதை. நாம் தரும் ஆக்கம் ஒரு தாகத்தை ஏற்படுத்தி விட்டால்...பிறர் கவனம் நம் மீது திரும்பி விட்டால்... ஈடுபாட்டின் வீரியம் கூடும்... இரவு பகல் பார்க்காது உழைக்க தோன்றும் ஆனால் நமது வாழ்வாதாரத்திற்கு சரியான பதில் இருக்காது ..ஊடகத்தின் உச்சத்திற்கு சென்றால் நல்ல வழி உண்டு ஆனால் அது இலகுவான காரியம் அல்ல எனவே உங்களுக்கென்று ஒரு துறையை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் அதில் பொருள் ஈட்டுங்கள் ஊடகத்துறையின் தொடனாக இருங்கள் அதன் மூலம் சமுதாயம் பலன் பெறட்டும் ..ஊடகம் மூலம் பொருளீட்டல் வேண்டாம்.

நம்மவர்கள் ஊடகத்தில்..... 
ஊடகத்துறையில் பல உட்பிரிவுகள் உள்ளது .அனைத்திலும் கற்ற பக்குவம் காண்கிறேன். சில சமயங்களில் வீரியமான எழுத்துகள் வேண்டும் ..அது போன்ற எழுத்துக்கள் சமுதாய அவலங்களை போக்கும். அதுவே எனக்கு பிடிக்கும். அரட்டை போன்ற விசயங்கள் அளவுடன் இருக்க வேண்டும். சமுதாய விழிப்புணர்வுடன் செயல் பட வேண்டும் ..

நமதூர் இளைஞர்களின் ஊடக துறை அறிவு ..தமிழகத்தின் தலை சிறந்த பத்திரிகை நடத்தும் அளவிற்கு உள்ளது

சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! 'சந்திப்புகள்' தொடரும்...

Thursday, September 6, 2012

சந்திப்பு : ‘நகைச்சுவை தென்றல்’ அதிரை புஹாரி [காணொளி]



"வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்பர்கள்"  சிரிக்கத் தெரிந்த ஒரே இனம் மனித இனம் தான். "சிரிப்பு" என்பது இறுக்கமான சூழ்நிலையை இணக்கமாக்க உதவுவதோடு மகிழ்ச்சியையும் வெளிப்படுத்த உதவுகிறது.

1. ஆட்டையே கழுதையாக்கின ஊரா அதிரை ?
2. கடந்த காலங்களில் அதிரையில் நடந்த பல்சுவை நிகழ்வுகள்...

ஆகிய கேள்விகளை முன்வைத்து ‘சந்திப்பு’ தொடருக்காக அதிரை புஹாரி அவர்களை ஒரு அருமையான இடத்தில் வைத்து அவர்களின் நகைச்சுவை உரையைக் காணொளியாகப் பதிந்தோம்.

அதிரை புஹாரி அவர்களைப் பற்றிய சிறு குறிப்பு :

அதிரையின் மூத்த பத்திரிக்கையாளர் அதிரை புஹாரி அவர்கள் 1977 ஆம் ஆண்டு பிரபல வார இதழான குமுதத்தில் தனது முதல் நகைச்சுவை துணுக்கு பிரசுரமானதிலிருந்து எழுத்தார்வத்தை வளர்த்துக்கொண்டவர். இதன் தொடர்ச்சியாக பல்வேறு பத்திரிக்கையில் குறிப்பாக குமுதம், ஆனந்த விகடன், தினத்தந்தி, துக்ளக், குங்குமம், பாக்கியா, கல்கி  போன்றவற்றிற்கு இவர் எழுதி அனுப்பும் பல்வேறு பல்சுவை துணுக்குகள் தொடர்ந்து பிரசுரமாகி வருவதால் தொடர்ந்து மகிழ்ச்சியுடன் எழுதி வருகிறார்.

காதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மூத்த மாணவர்களில் ஒருவரான இவர், இதுவரை 1000 க்கும் மேற்பட்ட ஜோக்ஸ்களை எழுதியுள்ளதோடு, பிரபல தமிழ் பத்திரிக்கையாளர்கள், எழுத்தாளர்களுடன் தொடர்பில் உள்ளவர்.


சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! ‘சந்திப்புகள்’ தொடரும்...

‘சந்திப்பு’ : அதிரையின் முதல் ‘பிசியோதெரபிஸ்ட்’ ஜம்ஷித் முஹம்மது [காணொளி]



சக மனிதனுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற உயரிய எண்ணம் கொண்ட உடலியக்க மருத்துவத்துறை ( பிசியோதெரபி ) நோயாளிகளின் நோயையும், வலியையும் நீக்கி அவர்களை எழுந்து நடமாட வைக்கின்றது

பக்கவாதம், முகவாதம், தண்டுவடம் போன்ற நரம்பியல் நோய்கள், மூட்டுவலி, கழுத்து வலி, எலும்பு முறிவு, தசைப் பிடிப்பு போன்ற எலும்பியல் நோய்கள் உட்பட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதில் உடலியக்க மருத்துவமுறை முக்கிய பங்கு வகிக்கிறது.

மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, எலும்பு முறிவு அறுவை சிகிச்சை உள்ளிட்ட சிகிச்சைகளை மேற்கொள்வோர் மற்றும் குறை பிரசவ குழந்தைகளின் மறுவாழ்வில், "பிசியோதெரபிஸ்ட்'களின் பங்கு என்பது குறிப்பிடத்தக்கது.

‘சந்திப்பு’ தொடருக்காக இந்த வாரம்...

1. பிசியோதெரபியைப் பற்றி.....
2. வலிகள் ஏற்பட காரணம் என்ன ?
3. குழந்தைகளுக்கு ஏற்படும் மூளை வாத நோய்க்கு ஆலோசனைகள்....
4. பெண்களுக்கு ஏற்படும் கை/கால் மூட்டு வலிகளுக்கு கூறும் அறிவுரை...

ஆகிய கேள்விகளுடன் பிசியோதெரபிஸ்ட் ஜம்ஷித் முஹம்மது அவர்களை சந்தித்து அவர்களின் கருத்தைப் பெற்றோம்.

ஜம்ஷித் முஹம்மது அவர்களைப் பற்றிய சிறு குறிப்பு :

நான்கு வருடம் ஆறு மாத கால B.PT  என குறிப்பிடும் ‘பிசியோதெரபி’க் கல்வியை பயின்றுள்ள இவர் நமதூரின் முதல் பிசியோதெரபிஸ்ட் என்ற பெருமையை தட்டிச்செல்கின்றார்.

தற்போது கோவையில் பிரபல ‘கங்கா மருத்துவமனை’யில் பணிபுரியும் இவர் நமதூரில் பிசியோதெரபி சேவையைத் தொடர வேண்டும் என்ற தன்னுடைய எண்ணத்தை சந்திப்பின் போது வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.


சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! 'சந்திப்புகள்' தொடரும்...

'சந்திப்பு' : ‘குழந்தைகள் நல நிபுணர்’ டாக்டர். ஹாஜா முஹைதீன் [காணொளி]



மருத்துவத்துறையில் குழந்தை நலம் சார்ந்த மருத்துவம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 'குழந்தைகளுக்கு ஏற்படும் தொற்று நோய்களில் 90 சதவிகிதம், குழந்தைகளின் பாதுகாப்பில் சரிவர கவனம் செலுத்தாததன் காரணமே நிகழ்கிறது' என்பது ஆய்வு அறிக்கை.

குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமல்,  காய்ச்சல், வயிற்றுப்போக்கு, அம்மை நோய், மஞ்சள் காமாலை, சிறுநீரகப் பிரச்னை போன்ற நோய்கள் அதிக பாதிப்பை ஏற்படுத்தி விடுகின்றன.

‘சந்திப்பு’ தொடருக்காக இந்த வாரம்...

1. மழைக்காலங்களில் ஏற்படும் தொற்றுநோய் கிருமிகளிடமிருந்து குழந்தைகளை பாதுகாப்பது தொடர்பாக......

என்ற கேள்வியுடன் ‘குழந்தைகள் நல நிபுணர்’ டாக்டர். ஹாஜா முஹைதீன் அவர்ளை ஒரு அருமையான இடத்தில் சந்தித்து அவர்களின் கருத்தைப் பெற்றோம்.

டாக்டர். ஹாஜா முஹைதீன் அவர்களைப் பற்றிய சிறு குறிப்பு :

பிறந்தது தொண்டி என்ற ஊராயிருந்தாலும் நமதூரிலே குடும்பத்துடன் தங்கி நோயாளிகளுக்கு சிகிச்சை மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது. மேலும் குழந்தைகள் நல மருத்துவத்துடன் கூடுதலாக இருதய மற்றும் பொதுநல சம்பந்தப்பட்ட மருத்தவத்திற் ஆலோசனைகள் வழங்குவது இவரின் தனிச்சிறப்பு.

நமதூர் ஆஸ்பத்திரி தெருவில் இவரின் ‘மருத்துவ கிளினிக்’ செயல்பட்டுக் கொண்டுருக்கின்றது.


சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! 'சந்திப்புகள்' தொடரும்...

Tuesday, September 4, 2012

'சந்திப்பு' : ‘புகைப்படக்கலை வல்லுனர்’ சகோ. சாகுல் ஹமீத்



புகைப்படம் எடுப்பது என்பது ஒரு கலை. தொழிநுட்பங்களை முறையாக கையாண்டால் மட்டுமே சிறந்த புகைப்படங்களை நாம் பெறமுடியும். புகைப்படங்கள் மூலம் சமூகத்தில் மாற்றங்கள் ஏற்படுத்தவும், நீண்ட செய்திகளை சுருக்கமாக பிறர் புரிந்துகொள்ளவும் ஊடகத்துறைக்கு இவை பயன்படுகின்றன.

‘சந்திப்பு’ தொடருக்காக இந்த வாரம்...

1. ஊடகத்துறையைப் பற்றி...
2. ஊடகத்துறையில் நமது சமுதாயத்தினரின் பங்கு...
3. இளம் பதிவர்களுக்கு கூறும் அறிவுரைகள்...
4. நமதூர் பதிவர்களின் தனிச்சிறப்பு...

ஆகிய கேள்விகளுடன் சகோ. சாகுல் ஹமீத் அவர்களுக்கு மின்னஞ்சல் செய்து அவர்களின் கருத்தைப் பெற்றோம்.

சகோ. சாகுல் ஹமீத் அவர்களைப் பற்றிய சிறு குறிப்பு :
‘புகைப்படக்கலை வல்லுனர்’ என இணையத்தோடு தொடர்புடைய நண்பர்களால் பாரட்டப்படுகிற சகோ. சாகுல் ஹமீத் அவர்கள் தான் படிக்கும் காலங்களில் ‘பூப்பந்து’ விளையாட்டில் பல போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளை தட்டிச்சென்றுள்ளவர்.

காமிராவை தனது மூன்றாவது கண் போல் பாவிக்கும் இவர் ‘பேசும்படம்’ என்ற பெயரில் அழகிய புகைப்படங்களை நமது சகோதர வலைதளங்களில் பதிந்து பல அறிவியல் சார்ந்த சமூக விழிப்புணர்வு ஆக்கங்களை நமதூர் தமிழில் அழகாக எழுதியுள்ளார். இயற்கையாகவே நகைச்சுவை உணர்வுடன் பேசும் இவருக்கு ஏராளமான நட்பு வட்டாரம் உள்ளன.

பல நாடுகளில் பணியாற்றிய பிறகு தற்போது தன் சுய தொழிலாக சவூதி தமாம் நகரில் ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் செய்து வருகிறார்.

இவர் சமிபத்தில் ‘கிளிக்’கிய  அழகிய புகைப்படம் :

1. ஊடகத்துறையைப் பற்றி...
இன்றைய காலத்தில் ஊடகங்கள் அன்றாட வாழ்வில் பெரும் பங்கு வகிக்கின்றன . நமது வாழ்வோடு ஊடி  இருப்பதால்தான் இவைகளுக்கு ஊடகங்கள் என்று பெயர் வந்ததோ என்னவோ தெரியவில்லை . நமதூரில் பிறந்து வாழ்ந்தவர்களுக்கு தெரியும்  ஊடகம் என்று ஒருவகை மீனுக்குப் பெயர் உண்டு  நல்ல ருசியாக இருக்கும். செய்திப்பகிர்வு நிறுவனங்களுக்கு ஊடகம் என்று பெயர் வந்த காரணம் எனக்கு சரியாக விளங்கவில்லை. ஆனால் பலர் இரவில் படுக்கும் முன்பும் இணையதள ஊடகங்களைப் பார்த்துவிட்டே படுக்கிறார்கள். அதுபோல் எழுந்ததும் அவற்றின் முகத்திலேயே விழிக்கிறார்கள். காபியை உறிஞ்சும் நேரத்தில் ஊடகங்களில் வரும் செய்திகளையும் கண்கள் உறிந்து மூளைக்கு அனுப்புகின்றது.

பேருந்துகளில் பயணிக்கும்போது பேருந்தில் ஒலிபரப்பப்படும் திரைப்பாடல்களுக்கு போட்டியாக பயணிகள் கையில் இருக்கும் தொலைபேசி ரிங்க் டோன்கள் நம்மைப்படுத்தும் இம்சை நாய்ஸ் பொல்லுசன் சகிக்கவில்லை. இருந்த போதிலும் அரசுத்துறைகள் அனைத்தும் கணிணி மயமக்கப்படுதல், கல்வித்துறை கணினிமயமாக்கப்பட்டு தொலைதூர பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு, வீட்டில் இருந்தவாறே ஆன்லைன் வர்த்தகம்,  ரயில், பஸ், விமானசீட்டுக்களை எளிதாக வீட்டில் இருந்தவாறே பெறுதல், மருத்துவத்துறையில் அறுவை சிகிச்சையின் லைவ் களை பதிவு செய்தல் உட்பட பல வியக்கத்தக்க முன்னேற்றங்கள் ஊடகத்துறையின் வழியாக நமக்கு கிடைத்த பொற்குவியலாகும்.

2. ஊடகத்துறையில் நமது சமுதாயத்தினரின் பங்கு...
ஊடகத்துறையில் நமது சமுதாயத்தினரின் பங்கும் அளப்பறியதாக இருக்கிறது. சமுதாயத்தின் பல பகுதிகளில் வாழ்வோரும் தாங்கள் சார்ந்திருக்கும் சமுதாயத்துக்காக ஒரு வலைதளத்தை உருவாக்கிக்கொண்டு தங்களது பிரச்னைகளை ஹைலைட் செய்து காட்டுவதற்கு உதவியாக இருக்கிறது.

இன்று வலைத்தளம் உருவாகுவது அன்று ஐந்து பைசாவுக்கு அஞ்சல் அட்டை வாங்குவதைவிட இலகுவாகிவிட்டது. உதாரணமாக சிறு குக்கிராமங்களிண் பெயர்களில்கூட உதாரணம் உடையநாடு, சம்பை , செந்தலை என்ற பெயர்களில் எல்லாம் வலைதளங்கள் உருவாக்கப்பட்டுவிட்டன.

3. இளம் பதிவர்களுக்கு கூறும் அறிவுரைகள்...
இளம்பதிவாளர்களுக்கென்று  நான் ஆலோசனை கூற நான் தகுதிபெரவில்லை காரணம் நான் இன்னும் இளைஞனாகவே இருப்பதாக மனத்தால் கருதுகிறேன். ஆனாலும் மூத்த பதிவாளர்கள் அதிரை அஹமது காக்கா, மற்றும் இப்ராஹீம் அன்சாரி மாமா ஆகியோர் கூறியதுபோல் இளைஞர்கள் சமூக வாஞ்சையுடன் கூடிய பதிவுகளுக்கு முன்னுரிமை கொடுத்து பதிய வேண்டுமென்று கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். சமுதாய முன்னேற்றம் என்பது கல்வி வளர்ச்சி, சிந்தனை மாற்றம் ஏற்படாமல் ஏற்படாது. இவைகளுக்கும் இவை சார்ந்த விழிப்புணர்வுகளுக்கும் இளையவர்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். எனது பதிவுலகில் அடிக்கடி குப்பை கூளங்கள் ஒழிப்பதன் அவசியம் கருதிய புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறேன்.

4. நமதூர் பதிவர்களின் தனிச்சிறப்பு...
 நமதூர் பதிவர்களின் தனிச்சிறப்பு என்னவெனில் நமது பதிவர்கள் பெரும்பாலும் பல நாடுகள் கண்டவர்கள்.கண்டம் விட்டு கண்டம் போய் வந்தவர்கள்  அவர்கள் தங்களது அனுபவங்களை அதிகம் பதிகிறார்கள். இந்த ஊடகத்தின் மூலம் குடத்தில் இட்ட விளக்குகள் போல் இருந்த பல பதிவாளர்கள் குன்றின் மேல் இட்ட விளக்காக பிரகாசிக்கிறார்கள். உலகத்தரம் வாய்ந்த கவிதைகள், கட்டுரைகள், ஆராய்ச்சி கட்டுரைகள் , விளக்க விமர்சனங்கள் என தரமிக்க ஆக்கங்களை நமது ஊர் பதிவர்கள் பதிவது நமது ஊரின் தரத்தை உலகுக்கு அறிவிப்பதாக இருக்கிறது. நமது தளங்களில் வரும் ஆக்கங்கள் மற்ற தளங்களில் அடிக்கடி எடுத்துப்போடப்படுவது வாடிக்கையாகிவிட்டது.

வலைதள நெறியாளர்கள் நமது ஊர் பதிவர்களின் ஆக்கங்களை பதிய முடியாமல் அவைகளை வாரக்கணக்கில் வரிசையில் காக்கவைத்திருப்பது ஒரு ஆரோக்கியமான அடையாளமே. குறிப்பாக நமது ஊர் கவிகளைப் பொருத்தவரை சபீர் அவர்கள் இணையற்ற கவிதைகளை தந்து வருகிறார். கவியன்பன் கலாம் அவர்கள் யாப்பு இலக்கணம் கற்று அவைகளை அளித்து வருகிறார். மார்க்கம் தொடர்பான ஆராய்ச்சி கட்டுரைகள் அதிரை அஹமது காக்கா அவர்களாலும், அலாவுதீன் அவர்களாலும், சகோ. ஜாகிர் அவர்களால் எழுதப்பட்டுவரும்   'படிக்கட்டுகள்' போன்ற கட்டுரைகளும், ஷேக்கனா M. நிஜாம் அவர்களால் எழுதப்படும் பல கட்டுரைகளும் நமது மக்களிடயே விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றன, அரசியல் பொருளாதார சமய கட்டுரைகள் இப்ராஹீம் அன்சாரி மாமா அவர்களாலும் அனைவரும் அறியும் வண்ணம் ஆரோக்கியமான கல்வியை புகட்டிவருகிறது. இப்படி இன்னும் பட்டியல் நீண்டுகொண்டே போகும்...

சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! 'சந்திப்புகள்' தொடரும்...

Monday, September 3, 2012

‘சந்திப்பு’ : தலைமை ஆசிரியர் ஹாஜி S.K.M. ஹாஜா முஹைதீன் [காணொளி]


சமூக மேம்பாட்டுக்கும், மாற்றத்துக்கும் வித்திடக்கூடியக் கல்வி சமூகத்தில் ஒரு முக்கிய பங்கை வகிக்கின்றன என்றால் மிகையாகாது. இக்கல்வியை ஒரு சேவை எனக்கருதி மாணாக்கர்களுக்கு திறம்பட புகட்டுவது நமது ஆசிரியப் பெருமக்களே !

மேலும் மாணவர்களின் எதிர்காலத்தை நிர்மாணிப்பதிலும் பெரும் பங்கு வகிக்கும் ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் தினமாக ‘ஆசிரியர் தினம்’ கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.

‘சந்திப்பு’ தொடருக்காக இந்த வாரம்...

1. ஆசிரியர் தினத்தைப்பற்றி...
2. ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு கூறும் அறிவுரைகள்...

ஆகிய கேள்விகளை முன்வைத்து நமதூர் கா.மு. ஆண்கள் மேல் நிலைப்பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் ஹாஜி S.K.M. ஹாஜா முஹைதீன் அவர்களை ஒரு அருமையான இடத்தில் வைத்து அவர்களின் கருத்தைப் பெற்றோம்.

ஹாஜி S.K.M. ஹாஜா முஹைதீன் அவர்களைப் பற்றிய சிறு குறிப்பு :

நமதூர் கா.மு. ஆண்கள் மேல் நிலைப்பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் ஹாஜி S.K.M. ஹாஜா முஹைதீன் அவர்கள் கணிதத்துறையில் பட்டம் பெற்றிருந்தாலும் தமிழ் இலக்கியத்தின் மீதுள்ள ஆர்வத்தால் சிறந்த சொற்ப்பொழிவாளராகவும், எழுத்தாளராகவும் இருக்கின்றார். இவர் எழுதிய ‘என்றும் எதிலும் இஸ்லாம்’, கல்வி கற்போர் கடமை’ ஆகிய நூல்கள் பிரபலமானவை ஆகும்.

இவரால் எழுதப்பட்ட ‘மாவீரன் அலெக்ஸாண்டர்’, ‘தீரன் திப்பு சுல்தான்’ போன்ற நாடகங்களும், பள்ளி மாணவர்களுக்கான அறிவுத்திறன் போட்டிகளும் ( வினாடி-வினா ) வானொலியில் ஒலிப்பரப்பாகியுள்ளது மேலும் ‘உமறுப் புலவரின் சிந்தனைகள்’ என்ற தலைப்பில் வானொலியில் உரை நிகழ்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பள்ளி மற்றும் கல்லூரிகளில் இவர் எழுதிய சமூக விழிப்புணர்வு நாடங்கள் பல்வேறு மேடைகளில் அரங்கேற்றுப்பட்டுள்ளன குறிப்பாக ‘தாயகமே உனக்காக’, திறக்கட்டும் சிறைக்கதவு’, ‘புலித்தேவன்’,அட்வகேட் சுந்தரம் BA., B.L, ‘மாவீரன் அலெக்ஸாண்டர்’, ‘தீரன் திப்பு சுல்தான்’ போன்றவைகளாகும்.
                     'புலித்தேவன்' என்ற சமூக விழிப்புணர்வு நாடகத்தில் பங்குபெற்ற மாணவனுக்கு பரிசு வழங்கும்
                     நமது தலைமை ஆசிரியர் S.K.M. ஹாஜா முஹைதீன் அவர்கள்.

‘தேசிய நல்லாசிரியர் விருது’ பெறுவதற்குரிய அனைத்து சிறப்புகளை பெற்றிருந்தும் இரண்டு முறைகள் கல்வித்துறையால் பரிந்துரை செய்யப்பட்டு ‘விருது’ கைநழுவிப்போனது அவருக்கு மட்டுமல்ல நமதூருக்கே பெரும் ஏமாற்றமே !


சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! ‘சந்திப்புகள்’ தொடரும்...
Pro Blogger Tricks

Followers