அன்பிற்கினிய சமூக விழிப்புணர்வு பக்கங்களின் பங்களிப்பாளர்கள் மற்றும் வாசக நேசங்களுக்கு அன்பான அறிவிப்பு !
இன்றைய சமூகத்தில் அன்றாடம் நடக்கக்கூடிய அவலங்களின் உண்மையை பொதுமக்களிடம் தோலுரித்துக் காட்டவும், அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி நல்லதொரு தீர்வு எட்ட தூண்டுகோலாய் அமைய வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் உருவாக்கப்பட்டதுதான் 'சமூக விழிப்புணர்வு பக்கங்கள்' என்ற அனைத்து தரப்பினருக்கும் பொதுவான இந்த வலைதளம் எவ்வித லாப நோக்கமின்றி தன்னார்வலர் சிலரின் கடுமையான பணிச்சுமைகளுக்கிடையே தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த தளத்தில் பொதுமக்களுக்கு பயன்தரக்கூடிய அரசு சார்ந்த பல்வேறு தகவல்கள், சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள் ஆகியோருடனான சந்திப்புகள், கலந்தாய்வுகள், பயண அனுபவங்கள், விழிப்புணர்வு கவிதைகள், பல்வேறு தலைப்புகளில் தலையங்கம், புதிய தொழில்முனைவோருக்கான கட்டுரைகள், வேலை வாய்ப்பு செய்திகள், அரசு தொழிற்பயிற்சி முறை குறித்த தகவல்கள், கல்வி உதவி பெறும் வழிமுறைகள், ஒவ்வொரு துறைகளிலும் சிறந்து விளங்கிய சாதனையாளர்கள் என இப்படி பதிவுகளின் பட்டியல் நீண்டு கொண்டேச்செல்லும்...
உள்ளூர் படைப்பாளிகளின் திறமைகளை உள்ளூரில் மாத்திரமல்லாமல் உலகளவில் தமிழ் பேசும் அன்பர்களிடம் எடுத்துச்செல்லும் விதமாக இதில் பதியப்படுகின்ற ஒவ்வொரு ஆக்கங்களையும் உள்ளூர் செய்தி தளமாகிய அதிரை நியூஸ்'ஸில் இடம்பெறுவதோடு மட்டுமல்லாமல் உலகளவில் தமிழில் பிரபலமாக இருக்கக்கூடிய அனைத்து திரட்டிகளிலும் இணைக்கப்பட்டதில் பல படைப்புகள் அதிகமான வாசகர்களால் வாசிக்கப்பட்டு பிரபலமான - சூடான இடுகையாக தொடர்ந்து இருந்து வருகின்றன.
படைப்பாளிகளுக்கு நல்லதொரு ஊக்கம் தரும் வகையில் இதில் பதிகின்ற ஆக்கங்கள் ஒவ்வொன்றையும் சிறப்பாக வரவேற்கும் வகையில் உலகெங்கிலும் வசித்து வருகின்ற தமிழ் வாசகர்களின் சிறந்த விமர்சனங்களையும் பெற்று வருகின்றன. இவை படைப்பாளிகளுக்கு மேலும் சிறந்த படைப்பை உருவாக்க தூண்டுகோலாக அமையும் என்பதில் ஐயமில்லை. மேலும் வாசகர்களின் கருத்துரிமையை காக்கும் விதத்தில் தளத்தில் மட்டுறுத்தல் இன்றி சுதந்திரமாக தமது கருத்துகளை பதிய அனுமதி அளிக்கப்பட்டுள்ளதை அடுத்து, கட்டுரையை வாசிக்கும் அனைவராலும் படைப்பில் ஏற்படும் நிறை - குறைகளை அறிந்து நல்லதொரு தெளிவான விளக்கத்தை பெறவும் உதவுகிறது.
சமூக விழிப்புணர்வு பக்கங்களின் தளத்தை மேலும் மெருகூட்டும் வகையில் கீழ்கண்ட மாற்றங்களை செயல்படுத்த உத்தேசித்துள்ளோம்.
1. எழுத்தார்வத்தை வளர்க்கும் நோக்கில் புதிய பதிவர்களை தளத்தில் அறிமுகப்படுத்துவது...
2. தளத்தின் முக்கிய கொள்கைகளில் ஒன்றாகிய மதம் சம்பந்தப்பட்ட பதிவுகளை தவிர்த்துக்கொள்வது என்பதை மீண்டும் நடைமுறையில் கொண்டுவருவது...
3. சமூகத்தில் அன்றாடம் ஏற்படும் நிகழ்வின் அடிப்படையில் உருவாகும் ஆக்கங்களை தளத்தில் உடன் பதியக்கூடிய கட்டாயச்சூழலால், பங்களிப்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட ஒவ்வொரு நாள்களும் தற்காலிகமாக நிறுத்தி வைப்பது...
4. தளத்தில் பதியப்படும் படைப்புகளை ஒரே நேரத்தில் பிற சமூக வலைதளங்களிலும் பதிந்து வாசகர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தும் படைப்புகளை முன்னறிவிப்பின்றி நிறுத்தி வைப்பது...
5. 'கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்' என்ற வாசகத்தை ஒவ்வொரு பதிவிலும் அடிக்குறிப்பிடுவது...
உள்ளிட்ட மாற்றங்கள் அமல்படுத்த இருப்பதால் தங்களின் மேலான கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை எங்களுக்கு வழங்கி சமூக விழிப்புணர்வு பக்கங்கள் தளம் மேம்பட உதவ நிர்வாகம் சார்பாக அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
மேற்குறிப்பிட்ட ஐந்து மாற்றங்கள் தொடர்பாக பங்களிப்பாளர்கள் - வாசக நெஞ்சங்கள் ஆகியோரிடமிருந்து கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.
நன்றி !
நிர்வாகம் - சமூக விழிப்புணர்வு பக்கங்கள்