.

Pages

Wednesday, May 14, 2014

[ 4 ] மகவே கேள் ! அறிவுரை தொடர்கிறது...

குருவிற்கான சேவை :
உன் வாழ்வை துவங்க நீ சமுதாயத்தில் தலை நிமிர்ந்து நிற்க நீ கற்றவனாக வளம்வர வேண்டும். இதனை நன்கு உணர வேண்டும். பண்டை காலத்தில் கல்வி கிடைப்பது என்பது மிக கடினமான ஒன்று. மன்னர் ஆட்சி நடந்த காலத்தில் கடந்தஇரண்டு நூற்றாண்டிற்கு முன் எழுத்தறிவு பெற்றவர்கள் மிக அரிதாகவே காணப்பட்டனர்.

குலதொழில் அதிகம் காணப்பட்ட காலம். தொழில் கற்க கூட குருவை தேடி செல்ல வேண்டிய காலம் ஐந்து பேர்களுக்கு மேல் குரு மாணவர்களை சேர்த்துக்கொள்ள  மாட்டார்.

முதல் ஒரு வருடம் குருவிற்கு தனிப்பட்ட சேவை செய்ய வேண்டும். பிறகுதான் பாடங்களையே ஆரம்பிப்பார். அந்த மாணவரிடம் கல்வி மீதுள்ள நாட்டம் மேலோங்கி நிற்கும் எப்போது குரு நமக்கு கல்வி கற்பிப்பார் என்ற ஆவல் மேலோங்கி நிற்கும்.

மன்னராட்சி நிகழ்ந்த காலமதில் எழுபது சதவிகிதம் விவசாயி
மீதம் உள்ளவர்கள் சிப்பாயி..மிக சொற்ப மாணவர்கள் கலை வல்லுநர்
கல்வியாளர் என்றிருப்பர்..கல்வி கற்க சிறு வயதில் குரு குலம்
சென்று குரு ..பொறுமைக்கு வைக்கும் பரிச்சையில் ..துண்டை காணோம்
துணியை காணோமே என ஓடியவர்கள் மிக அதிகம். அதை எல்லாம்
சகித்து ..காலத்தை வென்று பெரும் கல்வியாலராய் வளம் வருபவர்கள்
மிகச்சிலரே ..கற்றவர் என்றால் அவ்வளவு மரியாதை ..சிறப்பும்
நிறைந்த தருணமாய் அமைந்து இருந்தது.

இன்றைய காலத்தில், உனது காலடியில் கல்வி ! நீ வீட்டு வாசலை விட்டு வெளியே  வந்தால் வாகனம் காத்திருக்கிறது. பள்ளிக்கு சென்றால் அங்கு உனக்கு இலகுவாகவே  கல்வி கிடைக்கிறது. நீ  குருவிற்கு சேவை செய்துதான் கல்வி பெற வேண்டும் என்ற நிலை இப்போது இல்லை. ஆனால் நீ உன் வாழ்வில் மிளிர வேண்டும் என்றால் உன் மீது குருவின் பார்வை பட வேண்டும்.

தமிழில் ஒரு பலமொழி உண்டு.

"குருவின் பார்வை பட்டால் கோடி பலன்"

ஆனால் எத்தனை மாணவர்களுக்கு இந்த பாக்கியம் கிடைக்கிறது. ஒரு வகுப்பறையில் ஐம்பது மாணவர்கள் இருக்கிறார்கள் என்றால் பத்து அல்லது இருபது மாணவர்களே மிளிருவர். மற்றவர்கள் குருவின் பார்வையிலேயே படுவதில்லை. இவர்களை போல நீ இருந்து விடாதே ..!நீ பயிலும் வகுப்பில் ஐந்து ஆசிரியர் தினமும் வந்து செல்வர் ..குறைந்த பட்சம் ஒரு ஆசானின்
பார்வை உன் மீது பட்டால் அவரின் வழிகாட்டல் உன் கல்வி பயணத்திற்கு உதவியாக இருக்கும்.

இன்றைய கால கட்டத்தில் குருவிற்கு செய்யும் சேவை அவருடைய பணியை இலகுவாக்குவதுதான்.

* ஆசிரியர் தரும் வீட்டு பாடத்தை சரிவர செய்வது
* வகுப்பறையில் அமைதி காப்பது
* பாடத்தை நன்கு கைவத்து ஆசிரியர் கேட்கும் பாடம் பற்றிய கேள்விக்கு பதில் அளிப்பது மூலம் குருவின் பார்வை உன் மீது படும் நீ கோடி பலன் பெறுவாய்.

கேள் மகவே கேள் ! அடுத்த வாரம் சமுதாயத்திற்கு செய்யும் சேவை பற்றி காண்போம்...
அறிவுரை தொடரும்...
'பத்திரிகைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்

Tuesday, May 13, 2014

ஒற்றுமைதான் அமைதிக்கு உயர்வான வழி என்போம் !

உற்றாரும் எதிரிகளாய் உறவினரும் வலம்வருவர்
பற்றாரும் பண்புகளை பகைமூட்டி வளர்த்திடுவார்
அற்றாரும் அதன்நடுவில் ஆட்சியாரால் கைதாவார்
பெற்றவரும் பதைபதைத்தே பீதியாலே பரிதவிப்பார்

மல்லுகட்டி நிற்பதினால் மல்லிபட்டி னம்குழம்பி
சொல்லவிலாச் சோகத்தில் சோர்ந்திட்டே மனம்கலங்கி
நல்லுறவு நசிந்திட்டே நல்வாழ்வு சிதறிவிட்டே
நல்வணக்கம் புரிந்தோர்கள் நாசகரால் மாட்டினரே

தூண்டிடுவார் பாவிகளும் துவேசம் வளர்ந்திடவே
வேண்டாதார் உடைத்திட்டார் வேதனைத்தான் மிஞ்சியதே
ஆண்டவனை நம்பிடுவோம் அறிவோடு செயல்புரிவோம்
சீண்டுவாரின் நோக்கங்கள் சீர்குலையச் சிந்திப்போம்

பற்றிடவே ஆட்சியினை பாவிகளும் திட்டமிட்டார்
புற்றீசல் போலவே புகைமூட்ட கிளம்பிவிட்டார்
ஒற்றுமைதான் அமைதிக்கு உயர்வான வழிஎன்போம்
கற்றவரின் துனையினிலே கயவர்கள் வென்றிடுவோம்

சூழ்ச்சிகளும் சூத்திரமும் சூழ்ந்திட்டே சுற்றினாலும்
வீழ்ச்சிகளே ஏற்படுத்த விவேகமேதான் கொண்டிடனும்
பாழ்பண்ணும் குணங்களுமே பாய்ச்சிட்டப் போதிலுமே
வாழ்வொன்றைச் சிந்தித்தே வல்லமையில் வாழ்ந்திடனும்

கேடுகெட்டார் சூழ்ச்சியினால் கீறிடுவார் வெடித்திடவே
வீடுகளை மனதினிலே வேண்டிட்டே பொறுத்திடணும்
போடுமிந்தக் கருத்துக்கள் பொதுவாக யாவருக்கும்
பாடுமிந்தப் பாவினிலே பகுத்தறிவுப் பார்த்திடுவீர்

நபிதாஸ்

கலிவிருத்தம் காய் காய் காய் காய் வாய்ப்பாடு.

Thursday, May 1, 2014

அன்புள்ள மணிமொழிக்கு !

அன்புள்ள மணிமொழிக்கு,

அன்பு தந்தையின் அன்பான அறிவுரைகள்.

மகளே !
அன்று செல்வச் செழிப்பில் ஏக்கம்; தேக்கம். இன்றோ அதனை வென்று மனித நடைமுறை வாழ்க்கையில் ஏக்கம்; தேக்கம்.

அன்று, இன, மொழி, நிறம், இடம் வேறுபாடற்று ஒருவொருக்கொருவர் ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்தோம்.

இன்று, இனத்திலும், மொழியிலும், நிறத்திலும், இடத்திலும் வேற்றுமை விதைகளைத் தூவி வேற்றுமை உணர்வுகளை செழிக்கச் செய்து வருகின்றனர்.

மகளே ! வாழ்க்கையே இன்று யுத்தக் களம். போரிடுவோர்கள் ஒருவரல்ல பலர்.

அமைதியும் அன்பும் மனிதருள் தழைத்து இன்பமுடன் செழித்து வாழ அன்று போதிக்கப்பட்டது. பின்னால் அது மதம் என்று முத்திரைக் குத்தப்பட்டது.

ஒவ்வொருக் காலக் கட்டத்திலும், வேறுபட்ட ஒவ்வொரு இடத்திலும் நுண்ணறிவு ஜீவிகளால் மனித நல் வாழ்வு அமைய அவ்வாறு ஆங்காகே போதனைகள் வகுத்துத் தரப்பட்டன. மனிதர்களைப் பிரிப்பதற்கன்று மாறாக புனிதர்களாகப் பக்குவப்படுத்தப்படவே.

அந்த நுண்ணறிவு ஜீவிகள் தாங்கள் புகழப்பட வேண்டும் என்றோ, அல்லது தமக்கு முன் வாழ்ந்த நுண்ணறிவு ஜீவிகள் அல்லது மற்ற நுண்ணறிவு ஜீவிகள் அவர்களால் வகுத்துத் தந்த வழிமுறையை விட்டு தன் வழிமுறைகள் வேறுப்பட்டுக் காணப்பட வேண்டும் என்றோ எண்ணியதில்லை. அந்தந்தக் கலக்காட்டம் இடம் சூழல் இதற்கேற்ப வாழ்க்கை முறைகளை வகுத்துத் தந்தனர்.

அறிவு போதனைகள் தந்த அவர்கள் பெயர்களால் அல்லது போதனையின் மையக் கருவின் பொருளால் அல்லது இடத்தால் அவ்வழிமுறைகள் பெயர்கள் வைத்து அழைக்கப்பட்டு அமைதியும், அன்பும் போதிக்கப்பட்டே வந்தன; வருகின்றன.

பின்னாளில் காலத்தாலும், இடத்தாலும் தோன்றிய இம்மனித நல்வாழ்வுப் போதனைகளில், அதஅதனைப் பின்பற்றுபவர்கள் அவர்களின் அறிவு தெளிவிற்கு ஏற்ப ஆழமான நுண்ணறிவுகளை சில அனுஷ்ட்டானங்களில் அமைத்து இறைச் சிந்தனையுடன் வகுத்துத் தந்ததனால் அதனில் தெளிவடையாதனாலும், அப்போதனையின் நோக்கம் உலகில் மனிதனின் அமைதி, அன்பு என்பதை அறியாமாலும், புரிந்துக்கொள்ள முடியாமைனாலும்,
( தான் பின்பற்றும் வழிமுறைகளில் விளங்கிக்கொள்ளாமல் ஊறிப் போனதாலும்,) அனுஷ்ட்டானத்தின் தெளிவுகள் பின்னாளில் தோன்றிய நுண்ணறிவு ஜீவிகளால் இடத்திற்கேற்பவும், காலத்திற்கேற்பவும் மக்களின் அறிவுப்பரிணாம வளர்ச்சி இதற்கேற்பவும், பழமையும் காத்து அக்கால மனித நல்வாழ்வு போதனைகளை அமைத்துத் தந்த அதனை, பழமையின் தொடர்வாகப் புரிந்துக்கொள்ள முடியாமையினாலும், அல்லது இறைச் சிந்தனையுடன் தான் ஏற்ற போதனைகள் பின்னப்பட்டதால் தெய்வக் குற்றம் என்றாகி உண்டாகி விடுமோ என்று பின் தோன்றிய நுண்ணறிவு ஜீவிகளின் தெளிவுப் பரிணாமங்களை புரிந்துக் கொள்ளமுடியாமையினாலும்,
( அல்லது அவைகளை ஒன்றிணைத்து வழிகாட்டப்பட்டவைகளை புரிந்துக்கொள்ளும் திறன் இல்லாமையினாலும் ) இதுபோல அந்நுண்ணறிவு ஜீவிகளான அம்மகான்களின் நிலையை இவர்களால் எட்ட முடியாமையினாலும், அவ்வழிமுறைகளில் புனித நிலையடைந்தவர்கள்; தெளிவடைந்தவர்கள் இவ்வறிவில் பெரும்பான்மையான பாமரநிலை மக்கள் மனதில் தங்கள் வழிமுறை மீதுக் கொண்ட பற்று சிதைந்து விடாமல் இருப்பதற்காகவும், அமைதி; அன்பு இதனை உலகில் நிலைக்க வேண்டிச் செய்த நல்வழிகளை, அவ்வழிகளிலேயே இவ்வாறான நிலைகளினால் வேறு வேறாகப் பிரித்துப் பிரித்தே இனம் காட்டி, பிரிவினைகளை வளர்த்து உலகில் மனிதனின் அமைதி; அன்பு இவைகளைத் தான் அறியாமலே சிதைக்கின்றனர். இவர்கள் ஒருவகை வகையானப் போராளிகள்.

தான் ஏற்று நம்பிய வழியின் மூலம் போதனைப் பெற்றவர்கள் வழித் தலைமுறையில் பின்னாளில், இதுவரை ஏற்று வந்த அப்போதனைகளை அவர்கள் தன் சுய (த்தெளிவில்லா அல்லது தெளிவை அடைய முடிய) அறிவுக் கண்ணோட்டத்தினால் அவ்வழிமுறைகளிலே பிரிவினைக் கொண்டு; கண்டு அமைதியும், அன்பும் அதற்கு வேறுச் சுய அர்த்தங்களை கொண்டு; கற்பித்துப் பிரிவினைகளை தன் மதத்துக்குள்ளே ஏற்படுத்தினார்கள். நாங்கள் கூறுவதுதான் சரியான ஆதாரப்பூர்வ உண்மையான நல் வழிகாட்டல்கள் என்றும் கூறுகின்றனர்.

இவ்வாறு ஒவ்வொரு மதத்தினுள்ளும் அமைதியும்;  அன்பும் அதனை தாம் அழிக்கின்றோம் என்பதை அறியாமலே அவர்களுக்குள்ளும் அமைதி; அன்பு அதனை அழிக்கின்றானர். எங்கள் வழியே உயர்ந்தது;  சிறந்தது. அதிலே அமைதியும்;  அன்பும் கொண்டு வாழலாம் என்று சமூகத்தில் நிலைக்கவேண்டிய அமைதியையும்;  அன்பையும் பிரிவினையால் குலைக்கின்றார்கள். இவர்கள் ஒருவகைப் போராளிகள்.

மகளே ! இவைகள் மனித வாழ்வியல் கொள்கையை வைத்துப் பிரிவினைகள் ஆக்கியவைகள், ஆக்கியுள்ளனர். இதோடல்லாமல் இன்னும் பலப் போராளிகள் உள்ளனர். அவர்களையும் நீ தெரிந்துக்கொள்ள வேண்டும்.

அன்று, அமைதியும்; அன்பும் நிலைக்க, மக்கள் இனிமையாக வாழ, 'என்னிடமே அல்லது என் தலைமையின் கீழே நல்ல நிர்வாக ஆட்சி அமைப்பு உள்ளது', என்ற எண்ணத்தில், ஆளுமையில் ஆசைக்கொண்டு, நாங்களே சிறந்த திறமையுள்ளவர்கள் என்று, இம்மாதரியான இந்த குணத்தைக் கொண்டு மனிதனின் அமைதி; அன்பு இவைதான் முக்கியம் என்பதை அறியாமலும்; உணராமலும் தன் சுய நலத்திற்காக அடுத்த நாட்டுடன் போரிட்டு மனிதர்களை அழித்தார்கள்.

இன்று சமூகத்தில் பல கருத்துக்களில் பிரிவினைகளைத் தூவி அல்லது புதிதாக ஒன்றைக் கிளப்பி அதில் பிரிவினையைத் தடவித் தூவி எங்களுக்கே ஆதரவுத் தாருங்கள் என்று தன் சுய நலத்திற்காக அமைதியையும், அன்பையும் மக்கள் வாழ்வில் அழித்து; குலைத்து, ( மக்களுக்குள் பிரிவினைகளை ஏற்படுத்தி ) ஆட்சி பீடத்தில் உட்காரத் துடிக்கின்றார்கள். இவர்கள் ஒருவகைப் போராளிகள்.

அமைதியும், அன்பும் அதனை, 'நான் தலைவனாகி என்கீழ்தான் கொண்டு வரமுடியும், நல்லாட்சி தரமுடியும்', என்று அந்த ஒவ்வொரு கட்சிக்குள்ளும் அக்கட்சியில் உள்ள சிலர் தான் தலைவனாக ஆசைப்பட்டு அக்கட்சியை உடைத்துப் புதுப்புது எண்ணிறைந்த கட்சிகளையும் ஏற்படுத்தி, அமைதியும்; அன்பும் ஒரு குறிப்பிட்ட தன் இன மக்களிடம் மட்டும் என்ற இலக்கணத்திலாக்கி பொது மனித அமைதியையும், அன்பையும் அழிக்கின்றார்கள். இவர்கள் ஒருவகைப் போராளிகள்.

மகளே ! இதுமட்டுமல்ல ! இதோ இவர்களையும் தெரிந்துக்கொள்.

அமைதியும், அன்பும் நாங்கள் பேசும் மொழி இனத்தார்களுக்குள் மட்டும் தான் உண்டு என்று அமைதியையும், அன்பையும் மொழிக்குள்ளே அடைத்து மொழிவாரி அமைதியையும், அன்பையும் அழிக்கின்றானர். இவர்கள் ஒருவகைப் போராளிகள்.

அமைதியும், அன்பும் இன்று குடும்பம்வாரியாக, தெருவாரியாக, ஊர்வாரியாக, மாநிலம்வாரியாக, நாடுகள்வாரியாக, கண்டங்கள்வாரியாக சுருக்கப்பட்டு, பிரிக்கப்பட்டு அதன் உணமைப் பொருளை அழித்து வழிகாட்டப்படுகின்றன; வழிகாட்டப்படுகின்றனர். இவ்வாறான இவர்களும் ஒருவகை வகையானப் போராளிகள்.

அறியாமையை அகற்றாமல் கற்றவர்கள்; கல்லாதவர்கள், உயர்ந்தவன்; தாழ்ந்தவன் என்றும் இனம் பிரிக்கப்பட்டு அமைதியையும், அன்பையும் அழித்தும் அறியாமையால் அறிவாக்கப்படுகிறது. இவர்களும் ஒருவகைப் போராளிகள்.

இவ்வாறு ஏதாவது ஒரு அடிப்படையில் பிரிக்கப்பட்டு அமைதியும், அன்பும் அழிக்கப்படுகிறது மகளே !

நீ இதற்கெல்லாம் அடிமைப்படாது தன்னைப் போலவே அனைவரையும்; அனைத்தையும் கருதி, அதுதான் உண்மை, அதனை உணர்ந்து நேசித்து வாழ்ந்தால் அமைதியும்; அன்பும், தழைக்கும்; செழிக்கும், உன்னிடமும்; உன்மூலம்.

அப்போதும் உன்னைத் தெய்வப் பிறவி என்று பிரிக்கத்தான் இவர்கள் பார்ப்பார்கள். உன் அளவிற்கு அனைவரும் உயர நீ வேறுபாடுப் பிரிவினைகளைக் காட்டாவிட்டாலும், உன் அறிவளவிற்கு இவர்கள் உயரச் சிந்திக்க மாட்டார்கள். உன் கண்ணியம்; புனிதம் புரியாமாட்டார்கள். ஆனால், அங்குமட்டும் சமத்துவம் கண்டு சக மனிதன் என்றுக் கூறி, உன்னை அவர்கள் அறிவுக்கு தாழ்த்திப் பேசுவார்கள். அல்லது "தான்; நான்" என்ற அகம்பாவத்தால் உன் புனித நிலையை மறக்கடித்து தன் பெயரை நிலைநாட்டப் பேச்சில் மட்டும் அமைதி; அன்பு என்றும் பேசுவார்கள். இவர்களும் ஒருவகைப் போராளிகள்.

இந்த வகை வகையானப் போராளிகளினால்தான் அன்றும் செல்வச் செழிப்பில் ஏக்கம்; தேக்கம். இன்றோ அதனை ஓரளவு வென்றாலும் மனித நடைமுறை வாழ்க்கையில் அமைதி; அன்பு இல்லாமல் ஏக்கம்; தேக்கம்.

கவனம் மகளே ! அமைதியும், அன்புடனுமே நீ வாழ் வேண்டும்.
அமைதியும், அன்பும் தழைக்க, செழிக்க விரும்பும்

தந்தை

நபிதாஸ்
Pro Blogger Tricks

Followers