.

Pages

Wednesday, August 29, 2012

'சந்திப்பு' : மனிதவள மேம்பாட்டுத் துறை நிபுணர் மூத்த சகோ. இப்ராகிம் அன்சாரி [காணொளி]
இணைய ஊடகத்துறையில் ஈடுபட்டுள்ள நமதூர் சகோதரர்களுக்கு நேரிலும், மின்னஞ்சல் மூலமாகவும் சில கேள்விகளை அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதையடுத்து, இதன் தொடர்ச்சியாக ஏராளமான மூத்த பதிவர்கள் மற்றும் இளம் பதிவர்கள் என அவரவர்களுக்குரிய தனித்தன்மையுடன் கருத்துகளைக் காணொளியில் பதிந்தும், மின்னஞ்சல் மூலமாக அனுப்பியும் வருகின்றனர். ( அல்ஹம்துலில்லாஹ் )

இதன் மூலம் ஒன்று மட்டும் மிகத்தெளிவாக நாம் அறிய முடிகின்றது. அவை ஊடக ஒற்றுமை, புரிந்துணர்வு, சமூக அக்கரை மற்றும் தன்னலமற்ற சேவைகள் மட்டுமே என்றால் மிகையாகாது. மேலும் இவர்களால் பதியப்படும் கருத்துகள் இளம் பதிவர்களுக்கு ஊடகத்துறையில் காலூன்றுவதற்கு உதவும். ( இன்ஷா அல்லாஹ் ) !

இந்த வாரம்...

1. ஊடகத்துறையைப் பற்றி...
2. ஊடகத்துறையில் நமது சமுதாயத்தினரின் பங்கு...
3. இளம் பதிவர்களுக்கு கூறும் அறிவுரைகள்...
4. நமதூர் பதிவர்களின் தனிச்சிறப்பு...

ஆகிய கேள்விகளை முன்வைத்து மனிதவள மேம்பாட்டுத் துறை நிபுணர் மூத்த சகோ. இப்ராகிம் அன்சாரி அவர்களைச் சந்தித்து அவர்களின் கருத்தைப் பெற்றோம்.

மூத்த சகோ. இப்ராகிம் அன்சாரி அவர்களைப்பற்றிய சிறு குறிப்பு :

‘பொருளாதார நிபுணர்’, ‘சமூக நீதியின் முரசு’ என இணையத்தோடு தொடர்புடைய நண்பர்களால் பாரட்டப்படுகிற மூத்த சகோதரர் இப்ராகிம் அன்சாரி அவர்கள் நமதூர் காதிர் முஹைதீன் கல்லூரி, வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரி, திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி போன்றவற்றில் பயின்றவர் ஆவார்.

கல்லூரி நாட்களில் நமது சமுதாயம் சார்ந்த பல கட்டுரைகளை துடிப்புடன் எழுதி அதற்கு பல பரிசுகளும் பெற்றுவர். குறிப்பாக கல்கத்தா பாரதி தமிழ் சங்கம் நடத்திய கட்டுரைப் போட்டியில் கலந்துகொண்டு “பாரதி இதயம்” என்ற தலைப்பிற்காக அகில இந்திய முதல் பரிசு பெற்றிருப்பது இவருக்கு மட்டுமல்ல நமதூருக்கே பெருமை.

பல்வேறு உலக நாடுகளில் கணக்காளராகவும், மனிதவள மேம்பாட்டுத் துறையிலும் பணிபுரிந்துள்ள இவர் அமீரகத்தில் இந்திய தூதரகம் சார்பாக நடத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை பற்றிய கருத்தரங்கில் தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக பங்கேற்று உரை நிகழ்த்தியது. மேலும் ORACLE மென்பொருள் நிறுவனம் சார்பாக மனிதவள மேம்பாட்டுத்துறையில் சிறப்பு பயிற்சி பெற்றதற்கான பாராட்டு கேடயம் பெற்றிருப்பது இவருக்கு கூடுதல் சிறப்பாகும்.

நமது சகோதர வலைதளங்களில் பொருளாதார, சமூக, அரசியல் போன்ற விழிப்புணர்வு ஆக்கங்கள் எழுதிவருவதோடு மட்டுமல்லாமல் இயற்கையாகவே சமுதாயப்பணி மற்றும் கல்விப்பணியில் ஆர்வமிக்கவர். குறிப்பாக இவர் எழுதி வரும் ‘மனு நீதி மனித குலத்துக்கு நீதியா ?‘ என்ற நெடுந்தொடர் அனைவரும் பயன்பெறும் நோக்கில் விரைவில் புத்தகமாக வெளியிடுவதற்குரிய முயற்சியில் இறங்கியுள்ளார்.


சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! பதிவர்களின் சந்திப்பு தொடரும்...

Tuesday, August 28, 2012

பள்ளிக் ‘கல்விக்குழு’ சீரும் சிறப்பா செயல்படுதா !?அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பள்ளி நிர்வாகக்குழு அமைக்கப்பட்டு உள்ளன. இந்தக் குழுவின் பதவிக் காலம் 2 ஆண்டுகள் ஆகும்.

இக்குழுவின் நிர்வாகிகள் மற்றும் அதன் பணிகள், திட்டங்கள் கீழ்க்கண்டவாறு இருக்க வேண்டும் என்பது அரசால் குறிப்பிடப்படுகிறது.

குழுவின் நிர்வாகிகள் :

1. குழுவில் 75 சதவீதம் பெற்றோர்கள் மற்றும் காப்பாளர்கள் இடம்பெற வேண்டும். பொருளாதார, சமூக ரீதியாக பின்தங்கியுள்ளவர்களுக்கும் குழுவில் வாய்ப்பளிக்க வேண்டும். மீதமுள்ள 25 சதவீத உறுப்பினர்கள் பின்வரும் விகிதத்தில் இடம்பெற வேண்டும்.

2. மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் உள்ளாட்சி அமைப்புகளில்
தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் இருந்தும், மற்றொரு பங்கு உறுப்பினர்கள்
அந்தப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களில் இருந்தும், இன்னொரு பங்கு
உறுப்பினர்கள் உள்ளூர் கல்வியாளர்களிலிருந்தும் நியமிக்கப்பட வேண்டும்.

3. பெற்றோர் உறுப்பினர்களில் இருந்து குழுவின் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அந்தப் பள்ளியின் தலைமையாசிரியர், அவர் இல்லாத பள்ளிகளில் பள்ளியின் மூத்த ஆசிரியர் இந்தக் குழுவின் பதவி வழி உறுப்பினராகவும், அமைப்பாளராகவும் செயல்படுவார்.

4. இந்தக் குழு மாதத்துக்கு ஒருமுறையாவது கூட வேண்டும். கூட்டத்தில்
விவாதிக்கப்படும் விஷயங்களை பொதுமக்களின் பார்வைக்கும் வைக்க வேண்டும். குழுவில் மொத்தமாக 50 சதவீத பெண்கள் இடம்பெற்றிருக்க வேண்டும். பள்ளி நிர்வாகக் குழுவில் 20 உறுப்பினர்கள் இருக்க வேண்டும்.

குழுவின் பணிகள் : 

1. ஆசிரியர்கள் நேரம் தவறாமல் பள்ளிக்கு வருவதை உறுதிப்படுத்த வேண்டும்.

2. இப்பகுதியை சுற்றி வசிக்கும் அனைத்து குழந்தைகளும் பள்ளியில் சேர்வதையும்,     அவர்கள் தொடர்ந்து கல்வி பயில்வதையும் உறுதிப்படுத்த வேண்டும்.

3. குழந்தைகளின் உரிமை மீறப்படும்போதோ, அவர்கள் துன்புறுத்தப்படும்போதோ, பள்ளிகளில் சேர்க்கை மறுக்கப்படும்போதோ உள்ளூர் கல்வி அதிகாரியின் கவனத்துக்குக் கொண்டுவர வேண்டும்.

4. குழந்தைகள் கல்வி பயில்வதற்குத் தடையாக
கல்விக் கட்டணம் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

5. சத்துணவு வழங்கும் திட்டத்தை மேற்பார்வையிட வேண்டும். பள்ளிகளில் கற்பித்தலைத் தவிர ஆசிரியர்கள் தனிப் பயிற்சி எடுக்காமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

பள்ளி மேம்பாட்டுத் திட்டம் : 

1. ஒவ்வொரு பள்ளி நிர்வாகக் குழுவும் ஒவ்வொரு ஆண்டுக்கும் பள்ளி
மேம்பாட்டுத் திட்டத்தைத் தயாரிக்க வேண்டும். நிதியாண்டு முடிவதற்கு
குறைந்தபட்சம் மூன்று மாதங்கள் முன்னதாக இந்தத் திட்டத்தை உருவாக்க வேண்டும்.

2. பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தில் பள்ளி நிர்வாகக் குழுத் தலைவர் அல்லது
துணைத் தலைவர், அமைப்பாளர் ஆகியோர் கையெழுத்திட்ட பிறகு, உள்ளாட்சி அமைப்பிடம் வழங்க வேண்டும்.

3. பள்ளி ஆசிரியர்களுக்கு கல்விப் பணிகள் தவிர வேறு பணிச் சுமைகள் இல்லாமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

4. மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, பேரிடர் நிவாரணப் பணிகள், தேர்தல் பணிகள் தவிர பிற பணிகளுக்கு அவர்களைப் பயன்படுத்தாமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

5. பள்ளிச் செலவுக் கணக்குகளையும், உள்ளாட்சி அமைப்புகளிலிருந்து பெறப்படும் நிதி குறித்த கணக்குகளையும் தனியாகப் பராமரிக்க வேண்டும்.

6. இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி, அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பள்ளியிலும் பள்ளி நிர்வாகக் குழுவை
அமைப்பதற்கான நடவடிக்கைகளை திட்ட இயக்குநர் எடுக்க வேண்டும்.

சரி விசயத்திற்கு வருவோம்....

அரசு மற்றும் அரசு உதவி பெரும் கல்விக் கூடங்கள் பல உள்ளன. இவற்றில் நிர்வாகிகளாக செயல்படுபவர்கள் நான்கில் மூன்று பங்கினர் அந்தந்த பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் அல்லது காப்பாளர்களாக இருக்க வேண்டும். ஆனால் அரசின் விதிக்கு மாற்றமாகவே இக்குழுவின் நிர்வாகிகளாக நியமிக்கப்படுகின்றனர். அதாவது குழுவின் தலைவரின் பிள்ளைகள் தான் பொறுப்பு வகிக்கும் அந்தந்த பள்ளிகளில் கல்வி பயில வேண்டும் என்பது விதியாக இருந்தாலும் அரசியலில் பொறுப்பில் உள்ளவர்கள், சமூக ஆர்வலர் எனச் சொல்லி பதவி விரும்புவோர், அவருக்கு வேண்டியவர், இவருக்கு நெருக்கமானவர், தெருவாசிங்க, இவரு முக்கிய புள்ளிப்பா ன்னு சொல்லி தொடர்ந்து பொறுப்பில் இருப்பது அரசால் குறிப்பிடப்படும் நிர்வாகக்குழு முறைக்கு மாற்றமாகவே உள்ளன.

சரி இவ்வாறு தொடர்ந்து பொறுப்பில் இருக்கும் இவர்களால் மாதத்துக்கு ஒருமுறையாவது பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணாக்கர்கள் ஆகியோர் பங்களிப்புடன் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து மாணாக்கர்களின் கல்வி அறிவு, ஒழுக்கம், கட்டுப்பாடு ஆகியவற்றின் நிலை என்ன ? பெற்றோர்களின் ஒத்துழைப்பு எவ்வாறு இருக்க வேண்டும் ? ஆசிரியர்களின் கற்பிக்கும் முறை எவ்வாறு அமைய வேண்டும் ? பள்ளியின் வளர்ச்சி மற்றும் அதன் தேர்ச்சி விகிதம் எவ்வாறு இருக்க வேண்டும் ? என இதுபோன்ற ஆலோசனைகள் செய்யப்படுகிறதா என்றால் இல்லை என்றே சொல்லலாம்.

ஒவ்வொரு வருடம் குடியரசு தினம், சுதந்திர தினம் போன்ற நாட்களில் பள்ளியின் சார்பாக நடைபெறும் கொடிஏற்றம் நிகழ்ச்சிக்கும், ஆண்டு விழா நிகழ்ச்சிக்கும், அரசால் வழங்கும் நிதி உதவியை பெற காசோலையில் கையொப்பம் இடுவதற்கும் அதன் நிர்வாகிகள் சார்பாக ஓன்று கூடுதல் நடைபெறுவதாக ஒரு கருத்து நிலவுகின்றன.

பள்ளிகளின் தலைமை ஆசிரிய ஆசிரியைகளுக்கு அன்பான வேண்டுகோள் !

சமூக மேம்பாட்டுக்கும்,  மாற்றத்துக்கும் வித்திடக்கூடியக் கல்வி ஒரு முக்கிய பங்கை வகிக்கின்றன என்றால் மிகையல்ல. உங்களால் கற்றுத்தருகிற இக்கல்வி அவர்களுக்கு நல்ல பயனுள்ள வகையில் உதவ வேண்டும். இக்கல்வியை திறம்பட கற்பித்தல் மூலம் சிறந்த மாணவர்களை உருவாக்கி அவர்களால் நம் சமூகம் முன்னேற்றமடைவதோடு மட்டுமல்லாமல் நமது நாடும் முன்னேற்றப்பாதையில் செல்லும்.

இதற்காக அரசால் குறிப்பிடப்படுகின்ற பள்ளிக் ‘கல்விக்குழு’வின் நிர்வாகிகள் மற்றும் அதன் பணிகள், திட்டங்கள் போன்ற பணிகளுக்கு தகுதியுடையோரை இனங்கண்டு அவர்களை நியமனம் செய்வதன் மூலம் மாணாக்கர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோரின் ஒத்துழைப்புடன் ஒவ்வொன்றையும் சிறப்பாக செயல்படுத்த முடியும்.

இதனால் மாணாக்கர்களின் கல்வி அறிவு, ஒழுக்கம், கட்டுப்பாடு போன்றவைகள் சிறப்பானவையாக அமையப்பெற்று பள்ளியின் வளர்ச்சி மற்றும் அதன் தேர்ச்சி விகிதம் உயர்ந்து காணப்படும்.

சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! தொடரும்...

Monday, August 27, 2012

'உம்மம்மா' நான் பாஸாயிட்டேன் !

"டேய் எழுந்துருடா.........என் கண்ணான வாப்பா.... "

என மெல்லிய குரலில் சப்தமிட்டவாறே.....

காதில் அலுக்கத், கழுத்தில் அஷரப் காசுமாலை, பொட்டிப்பீஸ் மேத்துணி, ஜெமிலாப்பத்தை வேட்டி...

என அணிந்திருந்த உயரமான திடகாத்திரமான உருவம் ஓன்று நிழலாக நின்றது அந்த சுபுஹு நேரத்தில், பட்டென்று கண்விழித்துப் பார்த்தால் அருகில் என் “உம்மம்மா”

“உம்மம்மா இன்னிக்கி “டீயுசன்” இல்லம்மா “சனிக்கிழமை” 4 வது “C” சார் வரமாட்டாரும்மா” என்றேன்....

அது இல்லடா இன்னிக்கு “ரெத்தனம்” தோப்பிலே தேங்காய் வெட்டு சீக்கிரம் குத்பா பள்ளி ஹஜரத்திட்டே “குரான்” ஓதிட்டு வந்துரு மகிழங்கோட்டை போவனும்..... எனச் சொல்லிவிட்டு சிறிது நேரத்தில் “அரிக்கன்”லைட்டை எனது கையில் தந்து வழியனுப்புகிறார்.

இங்கே எனது உம்மம்மாவைப் பற்றிச் சொல்ல வேண்டும். என் மீது அன்பு கலந்த பாசத்தை பொழியக்கூடியவர் மட்டுமல்ல எனது படிப்பின் மீது அதிக அக்கரை எடுத்துக்கொண்டு “குடும்பத்தில் முதல் பட்டதாரி” யாக உருவாக்க வேண்டும் என்ற வைராக்கியத்தோடு எனக்கு தேவையானதை வாங்கிக் அவ்வப்போது கொடுப்பவர்.

குரான் ஓதிட்டு வந்தவுடன் நானும் எனது உம்மம்மாவும் தோப்பிற்கு சென்றோம்.

அங்கே காத்திருந்த வெட்டுக்காரர்களிடம் “வேலையை சீக்கிரம் ஆரம்பிங்கையா” லேட்டாவுது எனச் சொல்லியவாறு அவர்களை துரிதப்படுத்திவிட்டு தேங்காய் குமித்து போடும் “பற்றறை” க்குச் செல்கிறார் என் உம்மம்மா.

அப்போது என்னருகே வந்து மெல்லிய குரலில் டேய் “வாப்பா”........இந்த தோப்பு உனக்குத்தாண்ட.... அதனாலே கவனமா எல்லாத்தையும் பார்த்துக்க என்றதும்...

ஆமா... ஆமா...வேலைக்காக பெரிசா “ஐஸ்”ல்லாம் தலையில் தூக்கி வைக்காதே..... என பதிலைச் சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தேன்.

தேங்காய் ஏதும் தாளைக்குள் விழுகிறதா ? வெட்டுக்காரர் ஒவ்வொரு மரத்திலும் தேங்காய்ப் பறிக்கிறாரா ? அது “நெத்து” க்காயா உள்ளதா ? பாலை, பூக்கமலை போன்றவற்றை எடுத்து ஓரிடத்தில் சேர்த்தவாறே கண்காணித்துக் கொண்டுச் செல்கிறேன்.

தேங்காய் வெட்டி முடிக்கப்பட்டு வீட்டிற்கும் வந்துவிட்டோம்.

காலங்கள் பல உருண்டு ஓடின....

இத்தனை நாள் பத்தாவது வரை யாரையும் பெயிலாக்க கூடாதுன்ற கவர்மெண்ட்டு சட்டம் ஒருபுறம் இருந்தாலும் ஒரு ஒரு வகுப்பாக கவனமாகப் படித்து பாஸாயி வந்து இப்ப பத்தாவது முழுப்பரிச்சையும் எழுதியாச்சு... இனி ரிசல்ட்டுதான் “யா அல்லாஹ்” நான் பாஸாயிடனும் அதை முதலில் என் உம்மம்மாவிடம் சொல்ல வேண்டும் என மனதில் எண்ணியவாறே “மாலை மலர்” பேப்பர் வாங்க நம்ம MP காக்கா கடைக்கு ஓடுறேன்...

பேப்பரை வாங்கிப் பார்த்தவுடன் எனக்கு மகிழ்ச்சி காரணம் “நான் பாஸாயிட்டேன்”.... இரவு பகல் எனப் பாராமல் விடா முயற்சியுடன் கவனமாக படித்த எனக்கு மகிழ்வைத் தந்த அந்த அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தியவனாக... இம்மகிழ்ச்சியைப் எனது உம்மம்மாவிடம் பகிர்ந்துகொள்வதற்காக எனது வீட்டை நோக்கி ஓடுகிறேன்...

வீட்டின் அருகே உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் என ஒரேக் கூட்டமாகக் காணப்பட்டார்கள். உள்ளேச் சென்றால் எனது “உம்மம்மா” கட்டிலில் படுக்கையாய் காட்சியளித்தார்....தம்பி உம்மம்மா ”மவுத்தா போச்சுடா” என என் காக்கா சொன்னவுடன் எனது அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் “உம்மம்மா நான் பாஸாயிட்டேன்”..... “உம்மம்மா நான் பாஸாயிட்டேன்”......என கத்தியவாறு அழுகிறேன்... இதைக்கண்டவுடன் அருகே உள்ள எனது உறவினர்களும் கூடி அழுதனர்.

மாதங்கள் பல ஓடின...

எனது உம்மம்மாவின் நினைவாக வீட்டில் உள்ள அந்த பொட்டகத்தை திறந்து ஒவ்வொன்றாய் பார்க்கின்றோம் எனது பெயருக்கு “ஹிப்பத்” செய்யப்பட்ட “ரெத்தனம்” தோப்பின் பத்திரம் அதில் இருந்தது.

தொலைந்த பொருளைத் தேடுவது போல் வாழ்க்கையில் “கல்வி”யை தேடிக்கொண்டே இருங்கள்... அது நிச்சயம் உங்களுக்கு பலனளிக்கும் ( இன்ஷா அல்லாஹ் ! )

ஒரு சகோதரனின் டைரியிலிருந்து.... !

சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! தொடரும்...

Sunday, August 26, 2012

'சந்திப்பு' : எழுத்தாளர் மூத்த சகோ. அதிரை அஹ்மது [காணொளி] !ஜனநாயகத்தின் நான்காவது தூணாக !? வர்ணிக்கப்படும்  ஊடகத்துறையை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். ஒன்று அச்சு ஊடகத்துறை, மற்றொன்று மின்னணு ஊடகத்துறை.

ஊடகத்துறை என்பது சமூகத்தில் நடைபெறும் நிறை, குறைகளை உலக மக்களின் கவனத்திற்குக் கொண்டு செல்வதோடு மட்டுமல்லாமல் சம்பந்தப்பட்டவர்களின் பார்வைக்கும் சென்றடைந்து அதற்குரிய தீர்வும் எட்டுகிறது. இதனால் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும், சமுதாயத்தின் வளர்ச்சிக்கும் வித்திட முடிகிறது.

இத்தகைய ஊடகத்தை நமது சமூகத்தினர் பயன்படுத்தி நமது சமுதாயம் எதிர்கொண்டிருக்கும் பிரச்சனைகள், சமுதாய வளர்ச்சி, சமூக விழிப்புணர்வு போன்ற நல்ல நோக்கங்களுக்காக சரித்திரம் படைக்க இளம் தலைமுறையினர் சவால் நிறைந்த ஊடகங்களில் அடியெடுத்து வைத்து சாதிப்பதற்கு தயாராக வேண்டும் !

இதற்கு எடுத்துக்காட்டாக நமதூரைச் சேர்ந்த பிரபல பதிவர்கள் மின்னணு துறையாகிய இணையதளத்தைப் பயன்படுத்தி சமூகம், கல்வி, அரசியல் போன்றவற்றை சார்ந்த விழிப்புணர்வு ஆக்கங்கள், மார்க்க விளக்கங்கள், முக்கிய நிகழ்வுகள், சிந்தணையத் தூண்டும் செய்திகள், உடல் நல குறிப்புகள், விளையாட்டு செய்திகள், அறிவிப்புகள், வரலாற்று ஆய்வுகள், அழகிய கவிதைகள், புகைப்படங்கள், காணொளிகள், கடிதங்கள் போன்றவற்றை அவரவர்களின் தனித்தன்மையுடன் பிறர் விழிப்புணர்வு பெற வேண்டும் என்ற நோக்கில் நமது சகோதர இணையதளம் மற்றும் வலைத்தளங்களில் பதிந்து வருகின்ற இவர்களால் பலர் பயனுற்று பாராட்டுகளையும் அளிக்கின்றனர்.

நமதூர் பதிவர்களிடம் ...

1. ஊடகத்துறையைப் பற்றி...
2. ஊடகத்துறையில் நமது சமுதாயத்தினரின் பங்கு...
3. இளம் பதிவர்களுக்கு கூறும் அறிவுரைகள்...
4. நமதூர் பதிவர்களின் தனிச்சிறப்பு...

ஆகிய கேள்விகளை முன்வைத்து ஒவ்வொருவராக தனித்தனியே சந்தித்து அவர்களின் கருத்தைப் பெறுவது என உத்தேசித்துள்ளேன். இதன் அடிப்படையில் வாரம் ஒரு பதிவர் என அவர்களின் கருத்துகளைப்பெற்று கூடுதலாக அவர்களைப்பற்றிய சிறு குறிப்புகளுடன் நமது சகோதர வலைதளங்களில் தொடராகப் இடம்பெறுவதற்கு முயற்சித்துள்ளேன் ( இன்ஷா அல்லாஹ் ) !

வெளிநாடு வாழ் நமதூர் பதிவர்களுக்கு தனித்தனியே மின்னஞ்சல் மூலம் கேள்விகள் அனுப்பப்பட்டு அவர்களின் கருத்தைப்பெற்று அவர்களைப்பற்றிய சிறு குறிப்புகளுடன் பதிவு செய்யப்படும் ( இன்ஷா அல்லாஹ் ) !

அந்த வரிசையில் பிரபல எழுத்தாளார், மூத்த பதிவர் சகோ. அதிரை அஹ்மது அவர்களை இந்த வாரம் சந்தித்து அவர்களின் கருத்தைப் பெற்றோம்.

இவர்களைப் பற்றிய சிறு குறிப்பு :

“தமிழ் அறிஞர்” என்று இணையத்தோடு தொடர்புடைய நண்பர்களால் பாரட்டப்படுகிற மூத்த சகோதரர் அதிரை அஹ்மது அவர்கள் மார்க்கப்பணி, சமூகப்பணி, கல்விப்பணி, எழுத்துப்பணி போன்றவற்றில் மூழ்கியிருப்பதோடு மட்டுமல்லாமல் நமதூருக்கு பெருமை சேர்க்கும் அளவு பல புத்தகங்களை எழுதிருப்பவர் குறிப்பாக இஸ்லாமிய இலக்கிய சிந்தனை, இஸ்லாம் ஓர் அறிமுகம், மழைப்பாட்டு உரை, ஒருமைப்பாட்டு, சிறுமிப்பாட்டு, பெண்மணி மாலை, அருமையான வாழ்வும் அமைதியான இறப்பும், ஏசுவை நேசித்தேன், நபி வரலாறு சிறுவருக்கு, பேறுபெற்ற பெண்மணிகள் – பாகம் ஓன்று, பேறுபெற்ற பெண்மணிகள் – பாகம் இரண்டு, வட்டியை ஒழிப்போம், இறைத்தூதர் முஹம்மது (ஸல்), தமிழ்மொழிப் பெயர்ப்பு செய்யப்பட்ட ஆங்கில நூல்களாகிய Salma Al Farisi, Khabbab Bin Aratt, Abu Zar Ghifari, Abu Abdullaah Zubair Bin Al Awaam, Miqdad Bin ‘Amr Al Aswad’, தன்னால் எழுதப்பட்ட ஆங்கில நூலாகிய Wisdom in the Dawn மற்றும் அதன் தமிழாக்கம் இளமை பருவத்திலே போன்ற நூல்களும், நமது சகோதர வலைதளங்களில் ‘நல்ல தமிழ் எழுதுவோம்’ மற்றும் ‘கவிதை ஓர் இஸ்லாமியப் பார்வை’ போன்ற நெடுந்தொடர்களும் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பல நூல்களுக்கு முன்னுரை, கருத்துரை வழங்கியுள்ளார் என்பதும் இவர்களின் கூடுதல் சிறப்பாகும்.


இறைவன் நாடினால் ! பதிவர்களின் சந்திப்பு தொடரும்...

Thursday, August 23, 2012

வருந்த வைக்கும் மருந்து விலை !!!ஒரு மருத்துவனையில் சிகிச்சை மேற்கொள்ளும் ஒருவர் டாக்டரால் பரிந்துரை செய்யப்படும் மருந்து மாத்திரைகளுக்காக செலவிடப்படுகிற தொகை 50 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை என்பது மருத்துவதுறையின் ஆய்வு அறிக்கைகள்.


சற்றுத் தெளிவாக குறிப்பிட வேண்டுமேன்றால் மருத்துவத்திற்காக இந்தியா செலவிடும் தொகை மொத்த வருவாயில் 4.2% ஆக இருக்கிறது. மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட புள்ளிவிவரத்தின்படி தனிநபர் சராசரி மருத்துவச் செலவு இந்திய அளவில் ரூ.1,201 ம், தமிழக அளவில் ரூ.1,256 ஆகவும் இருக்கிறது.


மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் தங்களின் விற்பனை பிரதிநிதிகளை மருத்துவர்களை சந்திக்கவைத்து அவர்களால் தரப்படும் வாக்குறுதிகளாகிய “எங்கள் புராடக்ட்’களை நுகர்வோருக்கு பரிந்துரை செய்தால் நாங்கள் உங்களுக்கு அது வழங்குவோம்...இது வழங்குவோம்” என இதுபோன்ற ஆசை வார்த்தைகளைச் சொல்லி மயக்கி விடுகின்றனர். இதனால் ஒரே மருந்து, அதைத் தயாரிக்கும் நிறுவனங்களைப் பொருத்து பெரும் லாபம் வைத்து பல விலைகளில் விற்பனை செய்யப்படுகின்றது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்தியாவில் திட்டக் கமிஷனுக்கு அளிக்கப்பட்டுள்ள புள்ளிவிவரத்தின்படி, 2011 -12 நிதியாண்டில் இந்திய வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்பட்ட மருந்து மாத்திரைகளின் அளவு ரூ.56,000 கோடி. இந்த மருந்துகள் அரசு மருத்துவமனையால் கொள்முதல் செய்யப்படும் விலைக்கும், வெளிச்சந்தையில் விற்கப்படும் விலைக்கும் உள்ள வித்தியாசம் 100% முதல் 500% வரை !

டாக்டரால் பரிந்துரை செய்யும் மெடிக்களுக்கு சென்று மருந்து மாத்திரைகளை பெற்றுக்கொள்ளும் நாம் அதற்குரிய தொகையை ஒரு நயா பைசா பாக்கியில்லாமல் அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள M.R.P விலைகளின்படி செலுத்த வேண்டும். இதற்காக எவ்வித தள்ளுபடியோ, கழிவுத்தொகையோ நுகர்வோருக்கு தரப்படுவதில்லை.

'மருத்துவம்' என்பது சமுதாயத்தின் உயிர்நாடியாக இருப்பதனால் இத்துறையில் நிகழும் லஞ்சமும், தவறுகளும் ஒழிக்கப்பட வேண்டும் இதற்காக இந்தியாவில் தயாரிக்கப்படும் ஒவ்வொரு மருந்தின் உற்பத்தி செலவினங்களை அறிந்து விற்பனை விலையை நிர்ணயிக்கும் பொறுப்பு அரசின் நேரடி கண்காணிப்பில் இருப்பது அவசியமான ஓன்று என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

நுகர்வோர் அடையும் ஆறுதலான விசயம் என்னவெனில் குறைந்த செலவில் நிறைய மருந்துகள் சில மொத்த மருந்து வியாபாரிகளின் சில்லறை விலைக் கடைகளிலோ, சேவை நிறுவனங்கள் நடத்தும் கடைகளிளோ, 10 முதல் 20 சதவீதம் வரை M.R.P விலையில் இருந்து தள்ளுபடி விலையில் மருந்து கிடைக்கும். ஒரு மாதத்திற்குத் தேவையான மருந்துகளை இதுபோன்ற கடை களில் வாங்கினாலே கணிசமான பணம் மிச்சமாகும். சில கடைகளில் போனில் ஆர்டர் கொடுத்தால் இலவச டோர் டெலிவரி வசதியும் உண்டு.

குறிப்பாக அரசால் வாடிக்கையாளர்களின் நலன்கருதி கூட்டுறவு மருந்து கடை மூலம் விற்பனை செய்யப்படும் மருந்து பொருட்களுக்கு 12 சதவீதம் வரை விற்பனை விலையில் நுகர்வோர்களுக்கு தள்ளுபடி வழங்கப்படுகிறது. அலோபதி மருந்துகளோடு சித்த, ஆயுர்வேத, யுனானி ஆகிய இந்திய மருந்துகளும் இவற்றில் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. நுகர்வோர் இவற்றை நன்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.

சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! தொடரும்....

Tuesday, August 21, 2012

எப்புடி இருந்த நீ !? ஏன் இப்புடி ஆயிட்டே !?

எப்புடி இருந்த நா.....!

அதிரைப்பட்டினம் “செடியன்” குளம் என்றாலே இம்மண்ணில் பிறந்த ஒவ்வொருவரும் சற்றேன்று நினைவு கொள்ளுமளவு ஒரு மகிழ்ச்சி ஏற்படும். அந்தளவிற்கு நமதூரைச் சேர்ந்த ஏராளமான சகோதர சகோதரிகள் ஒருமுறையாவது இக்குளத்தில் நீராடி மகிழ்ந்துருப்பார்கள். 

ஏறக்குறைய 3 ஹெக்டர் 39 ஏர்ஸ் பரப்பளவில் உள்ள இக்குளம் மிகவும் பழமைவாய்ந்த அதிரை மற்றும் அதனைச்சுற்றியுள்ள பொதுமக்களுக்கு மிகவும் பயன்பட்டு ஊருக்கே பெருமைச் சேர்த்ததென்றால் மிகையாகாது. குச்சி மிட்டாய் சாப்பிடும் குழந்தைகள் முதல் நடுநிசி வேளையில் குளித்து மகிழும் தோனாக் கானா வரை பயனடைந்தோர் ஏராளம் !
இப்புடி ஆயிட்டேன்....!!
இதன் நிலையைப் படத்தில் காணுங்கள்.....அந்தோ பரிதாபம்...! பரப்பரப்பாக எந்நேரமும் சலசலப்புடன் காணப்படும் இக்குளம் இன்றோ வெறிச்சோடிக் காணப்பட்டு குறிப்பிட்ட நபர்கள் மாத்திரம் அதாவது அடிக்கடி பாத்ரூம் போகும் ஆசாமிகளும், நுரை வர வர நல்ல “சோப்பு” போடும் நபர்களும் புழங்கக்கூடிய இடமாக மாறிவிட்டன.

உரிய நேரத்தில் இதன் மீது பார்வை படாத அந்த “மழை” ஒரு காரணமாக இருக்குமோ !? என்னவோ !?

Saturday, August 18, 2012

கடற்கரைத்தெரு : இளம் விஞ்ஞானி ‘பிரைட் மீரா’வின் அசத்தும் கண்டுபிடிப்பு [காணொளி] !

அதிரையின் பழமைவாய்ந்த மற்றும் பாரம்பரியமிக்க தெருக்களில் ஒன்றாகிய கடற்கரைத் தெருவைச் சார்ந்த சகோதரர் இளம் விஞ்ஞானி ‘பிரைட் மீரா’ அவர்கள் நமது இந்திய நாட்டின் மீதுள்ள அளவில்லா பற்றுதலை பறைசாற்றும் விதமாக ஒவ்வொரு சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற நாட்களில் தனது விடா முயற்சியின் கீழ் பல கண்டுபிடிப்புகளை தனது சொந்த செலவில் உருவாக்கி நமது சமூகத்திற்கு வழங்கி பெருமை சேர்த்து வருகின்றார்.

பொதுமக்கள் மற்றும் ஏராளமான மாணாக்கர்கள் வியப்புடன் இவரின் அசத்தும் கண்டுபிடிப்புகளை கண்டு மகிழ்வது அவருக்கும் மேலும் உற்சாகத்தை தருகின்றது.

இதற்கு அங்கிகாரமாக பல்வேறு தனியார் தொலைக்காட்சிகளும், இணையதளங்களும், பத்திரிக்கைகளும் இவற்றை படம்பிடித்து செய்தியாக பரப்பி வருகின்றன.


மேலும் தனது நாட்டை நேசிக்கும் இவரின் மிகுந்த பற்றுதல் காரணமாக “தேசபற்று மிக்கவர்” என்ற விருதும் பெற்றுள்ளார் என்பது கூடுதல் சிறப்பு.

நமதூருக்கு பெருமைத் தேடித்தந்துகொண்டிருக்கும் சகோ. இளம் விஞ்ஞானி ‘பிரைட் மீரா’ அவர்களுக்கு நாமும் நம்முடைய வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக்கொண்டோம்.

Friday, August 17, 2012

குடை அப்பாவின் "EID MUBARAQ" !பள்ளிவாசலில் ஈத் தொழுகைக்கு ஓதப்படும் தக்பீர் ஒலித்துக் கொண்டிருந்தது. சாரை சாரையாய்ப் புது ஆடைகள் அணிந்தும், தலையில் விதவிதமான தொப்பிகள் அணிந்தும் பெரியவர்கர்ளும் சிறுவர்களும் பல்வேறு வாசனைத் திரவியங்களின் வாசனையைப் பரப்பியபடி பள்ளிவாசலில் குழுமியபடி இருந்தனர். பள்ளிவாசலின் முக்கால் வாசிக்கும் அதிகமான முன் வரிசைகள் நிரம்பி விட்ட நிலையில் வந்து கொண்டிருந்தவர்கள் பின் வரிசைகளில் இடம் பிடித்து உட்கார்ந்து கொண்டிருந்தார்கள்.

அனைவரும் தக்பீர் உச்சரித்துக் கொண்டிருந்த வேளையில் குடை அப்பா மட்டும் அனைவருக்கும் ஒரு பெரிய தட்டில் இருந்த பேரீச்சம் பழங்களை விநியோகித்துக் கொண்டிருந்தார். குடை அப்பாவைப் பார்த்த அனைவரின் முகங்களிலும் ஆச்சரியம் படர்ந்திருக்க தக்பீர் ஓதிக் கொண்டிருந்த சிலர் அப்சலைப் பற்றி பக்கத்திலிருந்தவர்களிடம் ஏதோ கூறி புன்னகைத்துக் கொண்டனர்.

குடை அப்பா இதையெல்லாம் கண்டு கொள்ளவில்லை. அதற்குள் தொழுகை நேரம் நெருங்கிவிட, தொழுகையை நடத்திட இமாம் எழுந்து நிற்க, அதுவரையிலும் தக்பீர் ஓதிக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் அவரைப் பின் தொடர்ந்து எழுந்து நின்றனர். அங்கே திடீரென ஒரு நிசப்தம். இமாம் தொழுகையைத் துவங்கி முடித்து குத்பா ஓதிக்கொண்டிருந்தார்.

குடை அப்பாவைப் பற்றி ஒருவர் மற்றவரிடம் கூறிக் கொண்டிருந்ததில் காரணம் இல்லாமலில்லை. குடை அப்பாவுக்கு வயது எப்படியும் அறுபதைத் தாண்டியிருக்கும். இந்த வயதிலும் நல்ல திடகாத்திரமாய் இருந்தார். சோன்பப்டியை நினைவு படுத்தும் தலைமுடி. வெள்ளையில் கொஞ்சமாய் கருப்பு கலந்த குறுந்தாடி. அனைவரிடமும் கலகலப்பாய் பேசும் சுபாவம். தேடி வருபர்களுக்கு எப்படியும் உதவும் மனப்பான்மை. சாதி மதம் பாராமல் அனைவருடனும் பழகும் போக்கு. பெருநாளுக்குப் பெருநாள் மட்டுமே பள்ளிவாசலில் தென்படும் பழக்கம்.

மற்ற நாட்களில் யாராவது, "என்ன அப்பா பள்ளிவாசல் பக்கமே பார்க்க முடியலியே ! பள்ளிவாசலுக்கும் வாங்க அப்பா. அல்லாஹ்வோட கொடை கிடைக்கும் "என்று சொன்னால்" நான் என்னப்பா  பாவம் பண்றேன்! எல்லாம் அவனுக்குத் தெரிந்தது தானே" என்று பதில் சொல்வதிலிருந்தே கேட்டவர் "இவனைக் கேட்டதைக் காட்டிலும் சும்மா இருந்திருக்கலாமே ! அப்படின்னா பள்ளிவாசல் போறவங்க எல்லாமே பாவம் பண்ணியவங்களா !" என்று நொந்து கொள்ளச் செய்து விடுவார். வெள்ளிக்கிழமைகளில் கூட மற்றவர்கள் கடைகளை மூடிவிட்டு பள்ளிவாசலுக்குச் சென்று கொண்டிருக்க இவர் மட்டும் கருமமே கண்ணாய் வியாபாரத்தைக் கவனித்துக் கொண்டிருப்பார். மழைக்காகக் கூட பள்ளிவாசல் பக்கம் ஒதுங்கி இவரை யாரும் பார்த்திருக்க முடியாது.

அதற்குக் காரணமில்லாமல் இல்லை. அவருக்குள் அந்த அளவுக்கு விரக்தி இருந்தது. தந்தை அவர் பிறப்பதற்கு முன்பே ஓர் விபத்தில் இறந்து விட்டார். பின்னர் வயது முதிர்ந்த தாத்தாவின் பொறுப்பில் சேர அவர் அரைஞாண் கயிறு விற்றுக் கிடைத்த சொற்ப வருமானத்தில் தன்னையும் பேரனையும் இருவேளை வயிறு வளர்க்கப் பெரும்பாடு பட்டார். அவரும் ஆறு வயதாக இருக்கும் போது ஒரு மழை நாளில் இரவு வீடு திரும்பும் போது சாலையில் அறுந்து கிடந்த மின்சாரக்கம்பியில் கால் பதித்து மின் அதிர்ச்சியால் இறையடி சேர அன்று முதல் இன்று வரையிலும் எத்தகைய ஒட்டும் உறவும் எவரோடும் இல்லாமலேயே காலத்தைக் கழிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு எதிர் நீச்சல் போட்டு உழைத்து இன்று ஒரு சிறுகடை வியாபாரியாய் திருமணம் கூட செய்து கொள்ளாமல் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார்.

ஏட்டுக் கல்வியோ, மதப் போதனையோ, பந்த பாசமோ எதுவுமே அவருக்குக் கிடைக்காததும் இதற்குக் காரணமாய் இருக்கலாம். அவரின் தற்போதைய சொத்து நற்பெயரும், நல்ல நண்பர்களுமே.

இப்படியாக இருந்தவர் இந்த ரமலான் மாத துவக்கத்திலிருந்தே தவறாமல் நோன்பு நோற்பதும், ஐந்து வேளைத் தொழுகைக்கு தவறாமல் பள்ளிக்குச் செல்வதும், நோன்பு திறப்பதற்கு நெடுநேரம் முன்னதாகவே பள்ளிக்குச் சென்று அங்கிருக்கும் கஞ்சிக் குவளைகளில் நோன்பாளிகளுக்காகக் கஞ்சி பரிமாறுவதும், தண்ணீர்,பழங்கள் பரிமாறுவதும், குர்ஆன் ஓதுபவர்களுக்குக் குர்ஆனை விநியோகிப்பதும், நோன்பு திறந்து முடித்த பின் அவ்விடத்தைச் சுத்தம் செய்வதும் என்று பணிவிடைகள் செய்வதும், இதற்கு முன் அவரைப் பள்ளியில் பார்த்திராத அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்ததில் வியப்பேதுமில்லை.

இமாம் குத்பாவை ஓதி முடித்த பின் அனைவரும் எழுந்து ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி ஈத் முபாரக்! என்று கூறி வாழ்த்துக்களைப் பரிமாற குடை அப்பாவையும் பலரும் சூழ்ந்து முறையாய் வாழ்த்த குடை அப்பாவின் விழிகளில் ஆனந்தக் கண்ணீர். குடை அப்பாவை நோக்கிப் பலரும் தேடிவந்து வாழ்த்த குடை அப்பாவின் கண்களோ வேறு எவரையோ தேடின.

திடீரென அவரின் கண்களில் ஒரு ஒளி. அவர் தேடிக் கொண்டிருந்த சிறுவன் மீராஷா . எப்போதாவது தன் தந்தையுடன் கடைக்கு வருவான். அப்படி வருகின்ற போது குடை அப்பாவிடம் வந்து வாயாடிக் கொண்டிருப்பான். மிகவும் சுறுசுறுப்பானவன். இச்சிறுவயதிலேயே கல்வி ஞானமும், மார்க்க ஞானமும் கொண்டவன்.

சமீபத்தில் ஒரு நாள் அவனுடன் பேசிக் கொண்டிருக்கும் போது அவன் குடை அப்பாவிடம், " அப்பா நீங்கள் ஏன் என் வாப்பாவைப் போல் ஐந்து வேளை பள்ளிக்குப் போவதில்லை. நாமெல்லாம் பெரியவர்களாகி செத்து அல்லாஹ் கிட்டப் போகும் போது அல்லாஹ் நான் உன்ன பூலோகத்தில் அனுப்பி வெச்சேனே நீ என்ன செஞ்ச ?-ன்னு கேட்டா என்ன பதில் சொல்லுவீங்க ?" என்று கேட்ட கேள்வியே அவரின் இந்த மாறுதலுக்கான காரணமாய் ஆனது.

அவரும் ஆழ்ந்து சிந்திக்க ஆரம்பித்தார். நமக்கோ வயது அறுபதைத் தாண்டிவிட்டது. இன்னும் இருக்கும் ஆயுளோ எவ்வளவு என்று தெரியாத பட்சத்தில் இருக்கிற நாட்களையாவது அல்லாஹ்விற்காக சேவை செய்யலாமே என்று தோன்றிய இறையச்சமே அவரின் மாற்றத்துக்கான காரணமாய் அமைந்து விட்டது.

குடை அப்பா கூட்டத்தை முந்திக் கொண்டு சென்று சிறுவன் மீராஷாவைக் கட்டித் தழுவி "ஈத் முபாரக் !" என்று கூறியபடியே சட்டைப் பையில் இருந்து ஐநூறு ரூபாய் நோட்டு ஒன்றை முதன்முறையாக தன் வாழ்நாளில் ஈத் பரிசாக வழங்க வெளியே எடுத்தார்.....

நன்றி : மின்னஞ்சலில் அனுப்பிய நண்பருக்கு

Wednesday, August 15, 2012

அதிரை : தலைவர்களின் சுதந்திர தினச்செய்தி [காணொளி] !!!இந்திய சுந்திரம் பெற்று 65 ஆண்டுகளைக் கடந்து 66 ஆம் ஆண்டை நோக்கி செல்லும் இவ்வேளையில் நமதூரைச் சேர்ந்த சமூக மற்றும் அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள், மருத்துவர், வழக்கறிஞர், செய்தியாளர் என கீழ்கண்டோரைச் சந்தித்து சுதந்திர தினச்செய்தியாக அவர்களின் கருத்துகளைப் பெற்றோம்.

 • S.H. அஸ்லம் - தலைவர் [ அதிரை பேரூராட்சி ]
 • பேராசிரியர் அப்துல் காதர் – செயலாளர் [ அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு ]
 • பேராசிரியர் பரகத் – தலைவர் [ அதிரை பைத்துல்மால் ]
 • A.அப்துல் முனாப் – [ வழக்கறிஞர் ]
 • ஜமீல் M.ஸாலிஹ் - செயலாளர் [ அதிரை தாருத் தஃவ்ஹீத் ]
 • முஹம்மது தமிம் ஆலிம் – இமாம் [ தக்வா பள்ளி ]
 • K.K. ஹாஜா – நகர தலைவர் [ முஸ்லீம் லீக் ]
 • M.O. செய்யது முஹம்மது புஹாரி - நகர பொருளாளர் [ ம.ம.க மற்றும் த.மு.மு.க. ]
 • அப்துல்லா – நகர தலைவர் [ SDPI ]
 • தோணா-கானா. முத்து மரைக்காயர்
 • டாக்டர் பஜ்லூர் ரஹ்மான் BDS
 • அதிரை புதியவன் – ஹசன் [ செய்தியாளர் / சமூக ஆர்வலர் ]
இன்று முதல் வறுமை, ஊழல், தீண்டாமை போன்றவைகள் ஒழியவும், மனித நேயம், சகோதரத்துவம், கல்வி அறிவு, சமூக விழிப்புணர்வு ஆகியவைகள் வளரவும் முயற்சிப்போம் ( இன்ஷா அல்லாஹ் )!

சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! தொடரும்...

Monday, August 13, 2012

மீட்டர் வட்டியில் மூழ்கியுள்ள பிலால் நகர் சகோதரிகளின் உருக்கமான வேண்டுகோள் [காணொளி] !!!

தமிழகத்தில் முஸ்லிம்கள் பெருபான்மையாக வாழக்கூடிய, வரலாற்றுச் சிறப்பு மிக்க பிரபல கல்வி நிறுவனங்கள், மார்க்கத்தைப் பயிற்றுவிக்கும் மதரசாக்கள், மனித நேயத்தை வளர்க்க மஸ்ஜித்கள், சமுதாயச் சேவைகளுக்கென்று இஸ்லாமிய அமைப்புகள், பைத்துல்மால், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிரபல அரசியல் கட்சிகள் அமையப்பெற்ற ஊர்களில் அதிரைப்பட்டினமும் ஒன்று. இவ்வூரில் - பிரபல தொழில் அதிபர்கள், கல்விச் சீமான்கள், கொடை வள்ளல்கள், மார்க்க அறிஞர்கள், கல்வி பயின்ற மேதைகள், கணினி வல்லுனர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், சட்ட வல்லுனர்கள், பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் வாழ்ந்த, வாழ்ந்து கொண்டுருக்கின்ற ஊரில் - வட்டி !

மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட, கடுமையாக விலக்கி வைக்கப்பட்ட இவ்வட்டியினால் எத்தனையோ குடும்பங்கள் அவர்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து நடு வீதிக்கு வந்துள்ளார்கள்.

நமதூரில் பல தெருக்களைச் சார்ந்தவர்கள் வட்டியில் முழ்கி இருந்தாலும் ஏழை எளியோர், முதியோர், நலிவுற்றோர், கணவனால் கைவிடப்பட்டோர், அன்றாடம் தொழில்செய்து பிழைப்போர், வீட்டு வேலை செய்வோர் என வாழ்ந்து வருகின்ற பிலால் நகரில் வட்டிக்கடனில் மூழ்கிருப்போர் சற்றுக் கூடுதலாகவே உள்ளனர் என்றால் மிகையாகாது.

இனி மீட்டர் வட்டியில் மூழ்கியுள்ள பிலால் நகர் பகுதியைச் சார்ந்த சகோதரிகளின் உருக்கமான வேண்டுகோளைக் காண்போம்....


இதுபோன்ற வட்டிக்கு பணம் கொடுக்கும் கந்துவட்டி கொடூரர்கள், வசூல் ராஜாக்கள் என நமது சமூகத்திலும் இருக்கின்றனர் என்பது பெரும் அதிர்ச்சியளிப்பதாகவும் வேதனைதருவதாகவும் உள்ளன.

நமதூர் இஸ்லாமிய பொது அமைப்புகளுக்கு ஒரு வேண்டுகோள் !

1. இது போன்ற மக்களிடேய விழிப்புணர்வை ஏற்படுத்த முன்வர வேண்டும்.......

2. வரவுக்கேற்ற செலவு செய்ய ஒவ்வொரு குடும்பமும் முன்வந்து, ஒரு ஒழுங்கு முறையைப் பின்பற்ற கேட்டுக்கொள்ளலாம்........

3. இம்மக்களிடையே COUNSELLING செய்து, அவர்களுடைய அறியாமையை அகற்றிட முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.......

4. உரியவர்களை இனம்கண்டு நிபந்தனைக்கு உட்பட்ட “வட்டியில்லாத கடன்”களை வழங்க ஏற்பாடு செய்யலாம்.......

5. அதிரையில் உள்ள மக்கள் பிரதிநிதிகள், இஸ்லாமிய அமைப்புகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், பிரபல அரசியல் கட்சிகள் மற்றும் வெளிநாடுவாழ்  சகோதரர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, இதனால் மக்களுக்கு ஏற்படுகிற இழப்புகளைக் கருத்தில் கொண்டு, சட்டச் சிக்கல்களை ஆராய்ந்து, தெருவில் புழங்கும் வசூல் ராஜாக்களையும், நமதூரில் உள்ள பைனான்ஸ் நிறுவனங்களையும் தடை செய்வதற்கு உரிய முயற்சிகள் மேற்கொள்ள முன்வரவேண்டும்......


சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! தொடரும்...

Tuesday, August 7, 2012

காதிர் முகைதீன் கல்லூரியின் தாளாளர் டாக்டர் முஹம்மது அஸ்லம் அவர்களுடன் ஒர் அழகிய சந்திப்பு ( காணொளி )


அதிரை மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதி மாணவ, மாணவிகளுக்கு “கல்வி” என்ற சிறந்த சேவையை வழங்கி வருகின்ற அதிரை காதிர் முகைதீன் கல்லூரி, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் சிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றாக விளங்கி “அதிரைப்பட்டினம்” என்ற நமதூருக்கு பெருமையை தேடித்தந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக காலஞ்சென்ற “கொடை வள்ளல்” காதிர் முகைதீன் அப்பா மற்றும் “கல்வித்தந்தை” மர்ஹூம் ஹாஜி S.M. சேக் ஜலாலுதீன் மரைக்காயர் போன்றவர்கள் ஆற்றிய எண்ணிலடங்காத் தொண்டுகள் மட்டுமே என்றால் மிகையாகாது.

தன் தந்தையாரைப் போல கல்விச்சேவையை தொய்வின்றி திறம்பட தொடர்வதற்காக அல்லும் பகலும் அயாராது உழைத்து, காதிர் முகைதீன் கல்வி நிறுவனங்களின் வளர்ச்சிக்காக பாடுபட்டுக்கொண்டு இருக்கின்ற நமது கல்லூரியின் தாளாளர் டாக்டர் S. முஹம்மது அஸ்லம் அவர்களிடம் கீழ்கண்ட மூன்று கேள்விகளை முன்வைத்து அணுகினோம். அவர்களின் பல வேலைகளுக்கிடயே நமக்காக நேரத்தை ஒதுக்கி விரிவான விளக்கத்தை தந்தார்கள்.

1. அதிரையில் மகளிர் கல்லூரி

2. முன்னாள் மாணவர் சங்கம் உருவாகிய நோக்கம் மற்றும் செயல்பாடுகள்

3. கல்லூரியின் வளர்ச்சி மற்றும் எதிர்கால திட்டங்கள்

பேட்டியின் போது தன் கல்வி நிறுவனங்களின் மீதுள்ள ஆர்வமும் பிடிப்பும் அவர்களிடம் தென்பட்டது. மேலும் உலகளாவிய சாதனையாளர் விருதுகள் பல பெற்று நமதூருக்கு பெருமையை தேடித்தந்து கொண்டுருப்பவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அவர்களின் பதில்.....

அதிரையில் மகளிர் கல்லூரி :முன்னாள் மாணவர் சங்கம் உருவாகிய நோக்கம் மற்றும் செயல்பாடுகள் :கல்லூரியின் வளர்ச்சி மற்றும் எதிர்கால திட்டங்கள் :

Monday, August 6, 2012

காணவில்லை !!!1. பெயர் : "அதிரைப்பட்டினம்" பேருந்து நிலையம்

2. வயது : மிகவும் பழமை வாய்ந்தது.

3. தடயம் : இதனைச்சுற்றி புதிதாக கடைகள் எழுப்பப்பட்டு பாதுகாப்பு செய்யப்பட்டு வந்தன.

4. சிறப்புகள் : சுமார் அறுபதாயிரம் மக்கள் வசிக்கக்கூடிய வரலாற்று சிறப்புமிக்க பகுதியில் அமைந்து இருந்தது.

5. தொகுதி : தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை

6. நான்கு எல்லைகள் : பட்டுக்கோட்டை, மதுக்கூர், கடற்கரையோரப் பகுதியான முத்துப்பேட்டை, மல்லிப்பட்டினம் போன்ற ஊர்களை ஒட்டி அமைந்து இருந்தன.

7. பாதிப்புகள் : அதிரை மற்றும் இதனைச்சுற்றியுள்ள பொதுமக்கள்.

8. சந்தேகப்படுவது : யாரென்று அப்பாவி பொதுமக்களுக்கு அறியத்தான் (?) முடியவில்லை

9. அறிகுறிகள் : இந்த மழை காலத்திலேருந்து அடுத்த மழை காலத்துக்குள்ளே கண்டுபிடிச்சிருவோம் !?

10. கருத்து : வரும்........! ஆனா வராது..............!! ( ஹி ஹி ஹி )

அங்கீகாரமில்லா மனைகளா !? கதி என்ன ?


ஏக்கர்  கணக்கில் விவசாய விளை நிலங்கள் மனைக்கட்டு நிலங்களாக மாற்றப்பட்டு வருகின்றன. இதற்காக பல்வேறு பெயர்களில்  அவற்றை அழைத்து விற்பனை செய்யப்படுகிறது. இவைகள் அரசின் அங்கீகாரம் பெற்றிருக்க வில்லை என்பது  பெரும்பாலோனருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை  !?

ஒவ்வொரு ஊரிலும் மனைக்கட்டு நிலங்களின் விலையை “சதுர அடி” என்று கணக்கீடு செய்து விற்பனை செய்யப்படுகின்றன. அழகிய வடிவமைப்புடன் நிலத்தின் வரைபடங்களை கையில் வைத்துக்கொண்டு வாடிக்கையாளர்களை தேடிச்செல்லும் இடைத் தரகர்களால்  கூறப்படும் ஆசை வார்த்தைகள், பொய்யான வாக்குறுதிகள், தொடர்ந்து தரும் அன்புத்தொல்லைகள் போன்றவற்றால் கூடுதல் விலையுடன் இவற்றை வாங்கும் பெரும்பாலானோர் இரண்டு சதவீத கமிசன் தொகையை அவர்களுக்கு வழங்க தவறியதில்லை. இரண்டு தரப்பினர்களுக்கிடையே தலா இரண்டு சதவீத கமிசன் தொகையைப் பெற்றுக்கொள்ளும் இவர்கள் ஒரு வருடத்தில் இரண்டு மடங்கு தொகையில் விற்றுத் தறுகிறேன் !? என்று சொல்வதுதான் வேடிக்கை !

மனைக்கட்டு நிலம் வாங்கும்போது பத்திர பதிவு அலுவலங்களில் அந்த ஆவணம் பதிவு செய்வது உண்டு. அப்போது அந்த நிலத்தின் வழிகாட்டி மதிப்பீட்டின்படி ( Guideline Values ) முத்திரைத்தாள் கட்டணத்தை பத்திரப்பதிவு அலுவலங்களில் அந்த நிலத்தை வாங்குபவர் செலுத்த வேண்டும். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழ் நாடு முழுவதும் நிலத்தின் வழிகாட்டி மதிப்பீடு பல மடங்குகளாக உயர்த்தப்பட்டன. இதன் அடிப்படையில் ஒவ்வொரு பகுதிகளிலும் உள்ள ஒவ்வொரு தெருவின் மதிப்பீடுகளும்  பல மடங்குகளாக உயர்ந்து இருக்கின்றன.

மனையின் விலை, தரகர்களின் கமிசன்  தொகை, கூடுதலான பத்திர பதிவு செலவு போன்றவற்றை செலுத்தி மனைக்கட்டு நிலம் வாங்கும் வாடிக்கையாளர்கள்  அந்நிலத்தில்“அரசின் அங்கீகாரம்”, “போதுமான சாலை வசதிகள்”, “பூங்கா” போன்றவைள் உள்ளனவா ? என்பதில் கவனம் செலுத்துவதில்லை.

கவனத்தில் கொள்ள வேண்டியவை :

1. நிலத்தின் பட்டா , சிட்டா அடங்கல், வில்லங்க சான்றிதழ், சொத்து ஆவணம் ( பத்திரம் ) போன்றவற்றில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். ( இவற்றைப் பற்றி விரிவாக கவனம் : நிலம் வாங்கும் முன் ! என்ற தலைப்பில் விழிப்புணர்வு கட்டுரை ஒன்றை பதிந்துருக்கிறேன். பார்க்கவும் )

2. சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பரிந்துரையுடன் நிலத்தின் லே-அவுட் ( Layout ) போட்டு அதற்கு அரசின் அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும்.

3. மனைப்பிரிவின் மொத்த இடத்தில் 10 சதவீத இடத்தை பூங்காவுக்காக ஒதுக்குவதோடு, அதில் அமையும் சாலையையும் அரசிடம் ஒப்படைக்க வேண்டும். இந்த விதிகளை கடைபிடித்தால்தான் மனைபிரிவுக்கு உரிய அங்கீகாரம் பெறமுடியும்.

4. "லே-அவுட்"டின் நீளத்தை பொறுத்து குறைந்தபட்சம் 23 அடி முதல் 40 அடி வரை ரோடுக்கு இடம் ஒதுக்க வேண்டும். கழிவுநீர் வடிகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துஇருக்க வேண்டும்.

5. "லே-அவுட்” அமைந்துள்ள கிராம ஊராட்சி மற்றும் பேரூராட்சி அமைப்புகள் சிரமமில்லாமல் அப்பகுதிக்கு குடிநீர் இணைப்பு, தெரு விளக்கு உள்ளிட்ட வசதிகளை செயல்படுத்த முடியும்.

6. “டிடிசிபி" அங்கீகாரம் இல்லாத லே-அவுட்'களில் மனைக்கட்டு நிலம் வாங்கினால், வீடு கட்ட பிளான் அப்ரூவல் கிடைக்காது.

7. அங்கீகாரம் இல்லாத மனைகளில் வீடு கட்டுவதால் மேற்கண்ட அடிப்படை வசதிகள் கிடைக்காது.

8. மேலும் மயானம் (சுடுகாடு ), ஏரி குளம் போன்ற நீர் நிலைகள் , மாநில நெடுஞ்சாலையிலிருந்து குறிப்பிட்ட இடைவெளி விட்டு "லே-அவுட்” அமைந்து இருக்கவேண்டும்.

சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! தொடரும்...

Sunday, August 5, 2012

“சேக்கனா நிஜாமின்” சரமாரியான கேள்விக்கு நமது மாவட்ட “MP” யின் பதில் !இன்று ( 05-08-2012 ) நமதூருக்கு வருகை புரிந்த நமது மாவட்ட  MP திரு. S.S. பழனி மாணிக்கம் அவர்களிடம் நமதூர் பொது நலன் சம்பந்தமாக முத்தான மூன்று கேள்விகள் கேட்கப்பட்டன.

"MP" யிடம் கேட்கப்பட்ட கேள்விகள் :

1. புதிய பேருந்து நிலையம் தற்போதைய நிலை என்ன ?

2. திருவாரூர்-பட்டுக்கோட்டை அகல ரயில் பாதை பணியின்  தற்போதைய  நிலவரம் என்ன  ?

3. நமதூர் அரசு மருத்துவமனை யின்  சேவையை 24 மணி நேரமாக உயர்த்தி கூடுதல் டாக்டர் கள் நியமிப்பது சம்பந்தமாக.

இனி நமது “MP” அவர்களின் பதில்....


வாகனம் : அதிரையில் அதிகாரிகளால் அதிரடி சோதனை !!!


இன்று ( 05-08-2012 )காலை நமதூர் ஈ.சி.ஆர் சாலையில் பட்டுக்கோட்டை வட்ட ஆர்.டி.ஓ அதிகாரிகள் கதிர்வேல், முருகன் ஆகியோர் மேற்பார்வையில் நடைபெற்ற வாகனச் சோதனையில்........

1. மொபைல் போனில் பேசியவாறு வாகனம் ஓட்டுகிறார்களா ?

2. ஆல்கஹால் அருந்திவிட்டு வாகனம் ஓட்டுகிறார்களா ?

3. பொதி மூட்டை போல், பள்ளி குழந்தைகளை வாகனங்களில் ஏற்றி, அதிவேகமாக செல்கின்றனரா ?

4. வாகனத்தில் கண்ணாடிக் கதவுகளில் கண்ணை உறுத்தும் வித விதமான “ஸ்ட்டிக்கர்” ஒட்டப்பட்டுள்ளதா ?

5. வாகன ஓட்டுனர் உரிமம், வாகனத்திற்கான இன்சூரன்ஸ், அரசால் வழங்கப்படும் வாகனம் உரிமம், புகை அளவீடு விவரம் போன்ற ஆவணங்கள் உரிமையாளரிடம் உள்ளனவா ?

6. வாகனத்தின் தரம் ( F.C. ) உரிய அதிகாரிகளிடம் முறையாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளதா ?

போன்ற சோதனைகளில் ஓட்டுனர்கள் பலர் சிக்கினர். இதில் அவர்களுக்கு “அபராதம் விதித்தல்” , “வாகனம் பறிமுதல்”, “எச்சரிக்கை” போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இது குறித்து நாம் சோதனை மேற்கொண்ட அதிகாரிகளிடம் பேசினோம் “ இவை சாதாரணமாக நடைபெறுகிற சோதனை என்றும், விபத்துகளில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் நோக்கில் இதுபோன்ற சோதனைகளை மேற்கொள்வது தொடரும் என்றும்” தெரிவித்தார்.

சோதனை மேற்கொண்ட அதிகாரிகளுக்கு நமது வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக்கொண்டு விடைபெற்றோம்.

வாகன ஓட்டுனர்களே !

சட்டத்தில் குறிப்பிடப்பட்ட சாலை விதிகள் மற்றும் வாகனப் பராமரிப்பு போன்றவற்றை முறையாக கடைபிடிப்பதால் விபத்துகள் குறைவதற்கு  இவை உதவும் மேலும் அதிகாரிகளால் மேற்கொள்ளப்படும் “அபராதம் விதித்தல்” , “வாகனம் பறிமுதல்”, “எச்சரிக்கை” போன்ற நடவடிக்கைகளையும் தவிர்த்துக்கொள்ளலாம்.

சேக்கனா M. நிஜாம்

Friday, August 3, 2012

[ X’clusive ] : பற்களில் “புழு”வா !? அதிர்ச்சி ரிப்போர்ட் !!!


“தலைவலியும் பல்வலியும் தனக்கு வந்தால்தான் தெரியும்” என்பது முதுமொழி. “பல் போனால் சொல் போச்சு” என்பது சொலவடை. பல் இல்லாவிட்டால் “பொக்கை வாய்” என கேலி பேசுவோரும் உண்டு. இந்த பல்லில் சிங்க பல், தங்க பல், கடாப் பல், அறிவு பல், நரிப்பல், தெத்திப் பல் போன்ற பெயர்களிலும் இவற்றை அழைப்பது உண்டு.

பல்லுக்கு இம்புட்டு பில்டப்பா !?  :)

1. நம்மில் பலருக்கு திடீரென்று தாங்க முடியாத பல் வலி ஏற்பட்டவுடன் உடனே ஒரு “பாரசிட்டமால்” போட்டால் சரியாகிவிடும் என எண்ணுகின்ற ஒரு வகையினரும்......

2. முறையான மருத்துவரிடம் சென்று அலோபதி சிகிச்சை மேற்கொள்வோரும்.........

3. இல்லை....இல்லை....நாட்டு வைத்தியம் பார்த்தல்தான் எனக்கு குணமாகும் !? என்று சொல்லி, அருகில் உள்ள ஊருக்குச் சென்று பற்களில் உள்ள பூச்சிகளை (புழு) நீக்கிவிட்டால் போதும் குணமாகி விடலாம் !? என எண்ணுகின்ற மற்றொரு வகையினரும் உள்ளனர்.

சரி விசயத்துக்கு வருவோம்......

பல் வலி என்றவுடன் நமதூரைச் சார்ந்த பெண்கள் சிலர் பல்லில் பூச்சி (புழு) எடுப்பதற்காக அருகில் உள்ள “ஒடையநாடு” என்ற ஊருக்கு சென்று அங்குள்ள நாட்டு வைத்தியர் !? ஒருவரை சந்தித்து பற்களில் இருக்கும் பூச்சியை (புழு) !? எடுத்துவருவதாகவும் இதனால் பல்வலி குணமாகி விடுகின்றது என்று ஒரு கருத்து பெண்கள் மத்தியில் நிலவி வருகின்றது.

இதையடுத்து நமது கவனத்துக்கு இச்செய்தி வந்தவுடன் நாம் விசாரணையில் அதிரடியாய் இறங்கினோம்.
அதிரைப்பட்டினம் இங்கிருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலை தூரத்தில் உள்ள அழகிய கிராமம் “ஒடையநாடு” இவ்வூரில் முஸ்லிம்கள், மாற்று மதத்தினர் என சரிசமமாக வாழ்ந்து வருகின்றனர். இங்குள்ளவரிடம் பல்லுக்கு பூச்சி எடுக்கும் டாக்டர் எங்கே ? என்றாலே அனைவரும் கைகாட்டுகின்றனர் அவரின் சிறிய கூல்டிரிங்க்ஸ் கடையை. நாமும் நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு அவரிடம் பேசினோம்.....

“ஆமாம்...பல் பூச்சி எடுப்பதற்காக பல ஊர்களிலிருந்து வருகின்றனர். ஒரு வகை வேரை’க்கொண்டு ( பெயர் என்ன ? என்பதை சொல்ல மறுத்துவிட்டார் ) வலி ஏற்படும் பற்களில் வைத்து தேய்த்தால் அதில் உள்ள புழுக்கள் !? அனைத்தும் வெளியே வந்துவிடும். பல்லை பிடுங்க வேண்டியதில்லை”.....என்று உரையாடிக்கொண்டு இருக்கும்போதே ஒரு அம்மா தனது 8 வயது சிறுவனை பல் வலி என்று பற்களில் பூச்சி எடுப்பதற்காக இவரிடம் அழைத்து வருகின்றார்.
உடனே எங்களை அமர வைத்துவிட்டு அருகில் உள்ள தோட்டத்திற்கு செல்வதாகச் சொல்லிவிட்டு சிறிது நேரத்தில் கையில் வேர் ஒன்றைப் பிடுங்கி கொண்டு வருகிறார். அவ்வேரை சிறுவனின் வாயில் விட்டு ஆட்டுகிறார்.....சில நிமிடங்களில் என்ன ஆச்சர்யம் ! புழு வந்து கீழே கொட்டுகிறது...! அதுவும் ஒன்றல்ல 10 புழுக்கள்….உடனே கையில் வைத்துள்ள இலையை பற்களில் வைத்து மெல்லச்சொல்லி அச்சிறுவனிடம் கொடுக்கிறார்.

ட்ரீட்மென்ட் ஓவர் !

இதற்காக ஒரு வருட கேரண்டி கொடுத்து மருத்துவ பீஸ்’ஸாக ரூபாய் 100 ஐ பெற்றுக்கொண்டார் அதாவது ஒரு பூச்சிக்கு(புழு) ரூபாய் 10 வீதம் வசூல் செய்கின்றார்.

இம்மருத்துவ முறையைப் பற்றி அவரிடம் விளக்கம் கேட்டோம்........தனது பெயரை “இளங்கோவன்” என அறிமுகம் செய்துகொண்டு தொடர்கிறார்.......


பற்களில் பூச்சி எடுப்பது குறித்து நமதூர் பிரபல பல் மருத்துவர் சகோ. பஜ்லூர் ரஹ்மான் BDS அவர்களை சந்தித்து விளக்கம் கோரினோம்….

ஆக மருத்துவர் சகோ. பஜ்லூர் ரஹ்மான் BDS அறிவுரையின் பேரில் பற்களில் பூச்சி(புழு) எடுப்பது என்பது மோசடியான ஓன்று என்பது நிரூபணம் ஆகின்றது. நமதூர் சகோதர, சகோதரிகள் இதுபோன்ற மோசடியான வைத்திய முறைகளை தவிர்த்துக்கொள்வது நமது உடலையும், பொருளாதாரத்தையும், நேரத்தையும் பாதுகாப்பதாக அமையும். ( இன்ஷா அல்லாஹ் !)
மேலும் பல் நலத்தை பேணுதல் மிகவும் முக்கியமான ஓன்று. பல நேரங்களில் இருதயம், சர்க்கரை, தோல் போன்ற நோய்கள் பல் நலனுடன் சம்பந்தப்படும் ஒன்றாகும். பல் வலி எடுத்தால் நமக்கு ஒரே தீர்வு பல்லை புடுங்கிறது மட்டும்தான் என்று நினைக்காதீங்க... இன்றைய மருத்துவ துறையில் பற்களுக்கு எண்ணற்ற நவீன ட்ரீட்மென்ட் வந்துள்ளன. அவற்றில் “ROOT CANAL TREATMENT “ம் ஓன்று என்பது குறிப்பிடத்தக்கது.

பல்லில் ஏற்படும் சொத்தை, கூச்சம், பற்குழி, சுத்தம் செய்தல் போன்ற பிரச்சினைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்தால் உங்களின் பற்கள் பாதுகாக்கப்படும்.

மேலும் கீழ்கண்ட மூன்று விஷயங்களை முக்கியமாக நாம் கடைபிடித்தால் நம் பற்களுக்கு எந்த தீங்கும் ஏற்படாது என்பது மருத்துவரின் ஆலோசனையாக உள்ளது.

அதாவது,

1. தினமும் இருமுறை பல் துலக்குவது.

2. சாப்பிட்ட பின் ஒவ்வொரு முறையும் தண்ணீரால் வாய்யை கொப்புளிப்பது.

3. ஆறு மாதத்திற்கு ஒரு முறை தகுதியுள்ள மருத்துவரை அணுகி பரிசோதனை செய்துகொள்வது.

நமது பல்லை பாதுகாக்க நாம் அடிக்கடி பல் மருத்துவரை சென்று பார்ப்பது இல்லை என்பது பொதுவான குற்றச்சாட்டும் உண்டு. தகுதியுள்ள பல் மருத்துவரை சந்தித்து அவர்களின் ஆலோசனை பெற்று தகுந்த சிகிச்சைகள் மேற்கொள்வது என்பதே சிறந்தது.

பல் இருந்தால் தான் இளிக்க முடியும்.... :)

பல் இருந்தால் தான் வார்த்தை ஜொலிக்க முடியும்.... :)

பல் இருந்தால் தான் “பக்கோடா” சாப்பிட முடியும் :)

மேலும் நமது மருத்துவரை அணுகி ஆலோசனைப் பெற வேண்டிய முகவரி :

Dr. M.H. பஜ்லுர் ரஹ்மான் B.D.S. M.C.I.P
"ஆயிஷா பல் மருத்துவமனை"
 28-G, ஆஸ்பத்திரி தெரு ரோடு, ரிஜிஸ்டர் ஆபீஸ் அருகில்
அதிரைப்பட்டினம்
அலைப்பேசி : 0091 9600714614

பார்வை நேரம் : 
காலை 9.00 மணி to மதியம் 01.00 மணி வரை
மாலை 08.30 மணி to 10.00 மணி வரை
ஞாயிறு காலை 09.00 மணி to மதியம் 2.00 மணி வரை


சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் தொடரும்....

தொழுகையை விட்ட என் சகோதரனே !புகழனைத்தும் வல்ல அல்லாஹ்வுக்கே !

அவனைப் பயந்தவர்களுக்கே இறுதி முடிவு நல்லதாக அமையட்டுமாக! ஸலவாத்தும் ஸலாமும் மனிதருள் மாணிக்கமான முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் வழியைப் பின்பற்றியோர் மீதும் உண்டாகட்டுமாக !

தொழுகையை விட்ட என் சகோதரனே! தொழுகையை உரிய நேரத்தில் நிறைவேற்றுவதில் அலட்சியமாக இருக்கும் என் நண்பனே! நீ உன் மனதில் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கின்றாய்? உன்னைப் படைத்து உணவளித்து இரட்சித்துக் கொண்டிருக்கும் உன் இறைவனுக்கு ஸுஜூது செய்யும் அவசியம் கூட இல்லாதளவுக்கு - அவனது அருளே தேவையில்லாத அளவுக்கு நீ உன் விடயத்தில் தன்னிறைவு கண்டுவிட்டாயோ! உனக்கு ஏற்படும் இன்னல்களில், துன்பங்களில் அவனது உதவியே தேவையில்லாதளவுக்கு நீ அவ்வளவு ஆற்றல் பெற்றுவிட்டாயோ? அல்லது உன்னை பிடித்திருக்கின்ற கர்வமும் ஆணவமும் படைத்தவனுக்கு சிரம் சாய்க்கத் தடையாக இருக்கின்றதோ ? நீ பெற்ற பதவியும் சொத்து செல்வங்களும் படைத்தவனை நினைத்துப் பார்க்க அவகாசம் தராதிருக்கின்றனவோ? அல்லது உன்னிடம் இருக்கின்ற ஷைத்தான் உன்னை ஆக்கிரமித்து இறைவனை மறக்கச் செய்துவிட்டானோ? உனது மனச் சாட்சியை சாகடித்துவிட்டு உன் உள்ளத்தில் குடியேறி உன்னை வழிகெடுத்து நரகில் தள்ளத் திட்டமிட்டிருக்கின்றானோ ?

நன்றாகத் தெரிந்துகொள் சகோதரனே! நீ இவ்வுலகில் எவ்வளவுதான் ஆடம்பரமாக வாழ்ந்தாலும் - எவர் உதவியும் உனக்குத் தேவையில்லாமல் இருந்தாலும் என்றோ ஒருநாள் நீ இந்த உலகை விட்டுப் பிரிந்து செல்வது மட்டும் உறுதி. அது உனக்குத் தெரியாதா? அவ்வேளை நீ சேகரித்த செல்வத்தில் எதை எடுத்துக் கொண்டு செல்ல இயலும் ? நீ பிறக்கும்போது இடுப்பில் ஒரு முழக் கயிறு கூட இல்லாமல் பிறந்தாயே ! நீ போகும்போது அதையேனும் உன்னால் எடுத்துக் கொண்டு செல்ல இயலுமா? முடியவே முடியாது. அப்படியானால் இவற்றையெல்லாம் அறிந்த பின்பும் எப்படி உன்னால் படைத்த இறைவனை மறந்து வாழ முடிகின்றது ? இவ்வுலகில் அவனை மறந்து வாழும் நீ நாளை மரணித்த பின்னர் அவனது சன்னிதானத்தில் எழுப்பப் படுவாயே! அவ்வேளை எந்த முகத்தோடு அவனை சந்திப்பாய் ? உன்னை படைத்து உணவளித்துக் காத்த எனக்கு நீ செய்த கைமாறு இதுதானா? என்று அவன் கேட்டால் நீ என்ன பதில் சொல்வாய் ? நீ என்னை படைக்கவில்லையென்று சொல்வாயா? நீ எனக்கு உணவளிக்க வில்லையென்று சொல்வாயா ? நீ என்னை காக்க வில்லையென்று சொல்வாயா ?

நீ அவனைச் சந்திக்கும் நாள் - அதுதான் நீ மரணிக்கும் நாள் - எப்போதென்று நீ அறிவாயா? இல்லையே! அது நாளையாகவும் இருக்கலாம். ஏன் ? இன்றாகக் கூட இருக்கலாம். அந்த நாள் வந்துவிட்டால் அதிலிருந்து தப்பித்துக் கொள்ள உன்னால் முடியுமா ? இல்லை, கொஞ்சம் தாமதப்படுத்தவாவது முடியுமா ? முடியவே முடியாது. அப்படியானால் நீ பிறந்து வாழ்ந்த இவ்வுலகை விட்டுச் செல்லும்போது உனக்கு வழித் துணையாக வருவது எது? துன்புறுத்தும் வேதனையிலிருந்து உன்னை காப்பாற்றுவது எது? உனது பணமா ? பட்டமா ? பதவியா ? சொத்து செல்வங்களா? எதுவுமேயில்லை. ஒரேயொன்றைத் தவிர - அதுதான் நீ செய்த நல்லமல்கள். நீ புரிந்த தொழுகை, நோன்பு இன்ன பிற வணக்கங்கள். அதைத்தான் நீ உலகத்தில் சேமிக்கவில்லையே ! நீ உண்டாய், உடுத்தாய், உறங்கினாய், உலகத்தை அனுபவித்தாய். உன்னை படைத்தவனை நினைக்கவில்லையே ! அவனுக்காக உன்சிரம் பணியவில்லையே! அவன் பள்ளி நோக்கி உன் கால்கள் செல்லவில்லையே! அவனைப் பயந்து உன் விழிகள் அழவில்லையே ! அவன் பாதையில் உன் பணத்தை செலவு செய்யவில்லையே! நீ உனக்காகவே உலகில் அழாதபோது, உனக்காகப் பிறர் அழுவார்கள் என்று நினைக்கின்றாயா ? உனக்கென நீ இறைவனிடம் பிரார்த்திக்காதபோது பிறர் உனக்காக பிரார்த்திப்பார்கள் என்று எண்ணுகின்றாயா ? அது ஒருபோதும் நடக்காது.. நடக்கவும் முடியாது...

போதும் நண்பனே ! போதும். விட்டுவிடு உன் பாவங்களை. இன்பம் துன்பத்தில் முடிகின்றது; யவ்வனம் விருத்தாபியத்தில் முடிகின்றது; அன்பு பிரிவில் முடிகின்றது; வாழ்வு மரணத்தில் முடிகின்றது. மரணத்தின் பின் உன் நிலை என்ன ? என்பதற்கு நீதான் விடை காண வேண்டும்.

தொழுகையை மறந்த என் தோழனே! தொழுகைதான் ஒரு மனிதன் முஸ்லிம் என்பதற்குரிய எளிய அடையாளம் என்பது உனக்குத் தெரியாதா? அது ஒருவனிடம் இல்லாவிட்டால் தீனே அவனிடம் இல்லையென்பதையும் நீ அறிய மாட்டாயா ?

நபியவர்கள் கூறினார்கள்...

"இஸ்லாத்தின் கயிறுகள் இறுதி காலத்தில் ஒவ்வொன்றாக அறுந்திட ஆரம்பிக்கும். ஒவ்வொரு கயிறும் அறும்போது மக்கள் அடுத்துள்ள கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொண்டிருப்பார்கள். அதன் இறுதிக் கயிறுதான் தொழுகையாகும். (அதுவும் அறுந்துவிட்டால் அவனிடத்தில் இஸ்லாமே இல்லாமலாகி விடும்) என்றார்கள். (இப்னு ஹிப்பான்)

தொழுகையை மறந்தவனே! தொழாதிருத்தல் குப்ரும், வழிகேடுமாகும் என உனக்குத் தெரியாதா? நபியவர்கள் "எங்களுக்கும் காபிர்களுக்கும் மத்தியிலுள்ள வேறுபாடே தொழுகைதான். எவன் அதை விட்டு விடுகின்றானோ, அவன் காபிராகி விட்டான்" என்று கூறியிருப்பதைக் கொஞ்சம் சிந்தித்துப் பார். உன்னை எல்லோரும் முஸ்லிம் என்கின்றார்கள்தானே! ஆனால் உண்மையில் அல்லாஹ்விடத்தில் நீ முஸ்லிம்தானா? தொழாதவன் காபிர் என நபியவர்கள் கூறுகின்றார்களே! அப்படியானால் நீயும் ???

"நபித் தோழர்கள் தொழுகையைத் தவிர வேறெந்த இபாதத்தையும் விடுவதை குப்ர் எனக் கணிக்கமாட்டார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஷகீக்).

இமாம் தஹபி அவர்கள் கூறுகின்றார்கள்...

"தொழுகையை அதன் உரிய நேரத்தை விட்டும் பிற்படுத்துபவன் பெரும்பாவம் செய்தவனாவான். யார் தொழுகையை விட்ட நிலையில் இறக்கின்றானோ, அவன் துரதிஷ்டவாதியும், பெரும் பாவியுமாவான்". என்கின்றார்கள்.

என் தோழனே ! தொழுகையில் அலட்சியமாயிருப்பதும், நேரம் கிடைக்கும்போது தொழுவது முனாஃபிக் - நயவஞ்சகர்களின் செயல் என்பதை நீ அறிவாயா?

அல்லாஹ் சொல்கின்றான்...

நிச்சயமாக நயவஞ்சகர்கள் அல்லாஹ்வுக்கு சதிசெய்ய எத்தனிக்கின்றனர். ஆனால் அவனோ அவர்களுக்கெல்லாம் பெரிய சதிகாரனாயிருக்கின்றான். அவர்கள் தொழுகைக்குச் செல்லும்போது சோம்பேறிகளாகச் செல்கின்றனர். அல்லாஹ்வை மிகச் சொற்பமாகவேயன்றி அவர்கள் நினைவு கூர்வதில்லை. (குர்ஆன் 4:142)

நயவஞ்சகர்களுக்கு இஷாத் தொழுகையையும் ஸூபஹூத் தொழுகையையும் விட மிகவும் சிரமமான தொழுகை வேறு ஏதுமில்லை. அவ்விரு தொழுகையிலுமுள்ள நன்மைகளை அவர்கள் அறிந்துவிட்டால் (நடக்க முடியாதவர்கள் கூட) தவழ்ந்து நக்கரைத்தவாறு அத்தொழுகைகளில் கலந்து கொள்வார்கள் என நபியவர்கள் சொல்லியிருப்பது உன் செவிகளில் விழ வில்லையா ?

பார் நண்பா! பார் ! அக்காலத்தில் நயவஞ்சகர்கள் கூட பள்ளிக்கு வராதிருந்ததில்லை. அவர்களோ தமது தொழுகையைப் பிறருக்குக் காட்டவேண்டுமென்பதற்காகப் பள்ளிக்கு வந்தார்கள். ஆனால் நீயோ நிரந்தரமாகப் பள்ளி வாயிலுக்கே முழுக்குப் போட்டு விட்டாயே!

கொஞ்சம் சிந்தித்துப் பார் நண்பா ! உனக்குப் பகுத்தறிவு உண்டல்லவா ? அதனாலேயே உனக்கு மனிதன் எனப் பெயர் வந்தது. ஆனால் பார்! உன்னைவிடக் கேவலமான ஐவறிவுள்ள மிருகங்கள், பறவைகள் கூட அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருக்கின்றனவே! அவனை மறந்து நொடிப் பொழுதுகூட அவை இருந்ததில்லையே !

அல்லாஹ் சொல்கின்றான்...

நிச்சயமாக வானங்களிலுள்ளவர்களும், பூமியிலுள்ளவர்களும், சூரியனும், நட்சத்திரங்களும், மலைகளும், மரங்களும், பிராணிகளும், மனிதர்களில் பெரும்பாலானவர்களும் நிச்சயமாக அல்லாஹ்வுக்கு ஸூஜூது செய்(து வணங்கு) கின்றன என்பதை நீர் பார்க்கவில்லையா? இன்னும் அநேகர் மீது வேதனை விதிக்கப் பட்டுவிட்டது. அன்றியும் எவனை அல்லாஹ் இழிவுபடுத்துகின்றானோ அவனை கண்ணியப் படுத்துபவன் எவனுமில்லை. நிச்ச்கயமாக அல்லாஹ் நாடியதைச் செய்கிறான். (குர்ஆன்22:18)

ஆனால் பகுத்தறிவுள்ள உன்னால் உன்னைப் படைத்த கடவுளை மறந்து எங்ஙனம் இருக்க முடிகின்றது? ஐயறிவுள்ள மிருகங்களுக்கே இப்படி நன்றியுணர்வு இருக்கின்றதே! உனக்கு அந்த நன்றி எங்கே ? உன் வீட்டு எச்சில் பாத்திரத்தை உண்ணும் நாய் கூட உனக்கு நன்றியுடன் வாலாட்டுகின்றதே! நீயோ உன்னைப் படைத்தவனான அல்லாஹ்வின் இடத்தில் இருந்து கொண்டு, அவனது உணவை உண்டு கொண்டு அவனை மறந்து வாழ்கின்றாயே! அவனுக்கு மாறு செய்கின்றாயே ! உனக்கு மனசாட்சியே இல்லையா? உன் உள்ளம் மரத்துப் போய்விட்டதா? மனிதா! ஐயறிவுள்ளா மிருகங்களும் ஏனைய ஜடங்களும் உன்னைவிட அல்லாஹ்விடம் மதிப்புப் பெறுவதும், அவற்றைவிடக் கேவலங் கெட்டவனாக நீ ஆகுவதும் பற்றி உனக்கு வெட்கமில்லையா? உனது தன்மானம் அதை அனுமதிக்கின்றதா ?

என்னருமைச் சகோதரனே! நிச்சயம் மரணம் வரும். நீ என்றோ ஒருநாள் இறந்து விடுவாய். தொழுகையைப் பாழ்படுத்திய நிலையிலேயே நீ இறக்க நேரிட்டால் உன்னைவிட நஷ்டத்துக்கும், கை சேதத்திற்குமுரியவன் வேறு யார்? கப்ரிலே உனக்கு எப்படி வரவேற்பிருக்கும் என நீ எப்போதாவது சிந்தித்ததுண்டா ? மறுமையில் எழுப்பப்பட்டதும் உன் கதி என்னவென்று கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தாயா ?

நபியவர்கள் கூறியதை கொஞ்சம் கேள்!!

"ஜூம்ஆத் தொழுகைக்குச் செல்லாமலிருப்போர் அதை விட்டும் அவசரமாக விலகிக் கொள்ளட்டும்! அன்றேல் அவர்களுடைய இதயங்களை அல்லாஹ் முத்திரையிட்டு விடட்டும். பின்னர் அவர்கள் பராமுகமான பாவிகளாகி விடட்டும். (ஆதாரம்: முஸ்லிம்)

தொழுகையை பாழ்படுத்திய என் சினேகிதா ! இதே நிலையில் நீ இவ்வுலகை விட்டுப் பிரிந்து செல்லும் நிலை நேர்ந்தால் நீ எந்த கூட்டத்தில் மறுமையில் எழுப்பப்படுவாய் என்பதை அறியாயோ? கேள் நண்பா! நபியவர்கள் சொல்லியிருப்பதைக் கேள்! "யார் ஐவேளைத் தொழுகையினை முறைப்படி நிறைவேற்றி வருகின்றாரோ, அவருக்கு அத்தொழுகை மறுமையில் பேரொளியாகவும், வழிகாட்டியாகவும், மாபெரும் வெற்றியாகவும் ஆகிவிடும். எவர் அதனைச் சரிவர நிறைவேற்றி வரவில்லையோ அவர்களுக்கு அது ஒளியாகவோ, வெற்றியாகவோ, வழிகாட்டியாகவோ ஆகிவிடாது. அவன் மறுமையில் பிர்அவ்ன், ஹாமான், உபய்யிப்னு கலப் போன்ற கொடியோர்களுடன் இருப்பான்." (ஆதாரம்: முஸ்லிம்)

அல்குர் ஆன் சொல்வதைக் கேள் !...

"யார் என்னை நினைவு கூர்வதை விட்டும் புறக்கணித்திருக்கின்றனரோ அவருக்கு (உலகில்) நெருக்கடி மிக்க வாழ்க்கையே அமையும். மறுமையில் அவனை நாம் குருடனாக எழுப்புவோம். அப்போதவன் என் றப்பே! நான் உலகில் கண்பார்வை உள்ளவனாகத்தானே இருந்தேன், என்னை ஏன் குருடனாக எழுப்பியிருக்கின்றாய்? என வினவுவான். அதற்கு அல்லாஹ் ஆம் அப்படித்தான், ஏனெனில் (உலகில்) எனது அத்தாட்சிகள் உன்னிடம் வந்தபோது அவற்றை மறந்து (குருடன் போல்) வாழ்ந்தாய். அதனால் இன்றைய தினம் நீயும் (என் அருளை விட்டும்) மறக்கப்பட்டு விட்டாய். இவ்வாறே நாம் உலகில் படைத்தவனின் அத்தாட்சிகளை நம்பாது காலத்தை விரயம் செய்தவனுக்குக் கூலி வழங்கவிருக்கின்றோம். இன்னும் மறுமையில் அவனுக்குள்ள வேதனை மிகக் கடுமையானதும், என்றென்றும் நிரந்தரமானதுமாகும். (குர்ஆன் - தாஹா:124)

ஆகவே நண்பா ! நீ இன்று, இப்போதே நல்லதொரு முடிவெடுக்க வேண்டும். நீ போகும் பாதையை மாற்ற வேண்டும். உன் வாழ்நாளில் பெரும் பகுதியை வீணாக்கி விட்டாய், மிகுதியுள்ளவற்றையாவது நீ உபயோகப் படுத்தக் கூடாதா? காலம் பொன்னானது. அதை இதுவரைக்கும் மண்ணாக்கி விட்டாய்! இதுவரை தூங்கியது போதும், இனியாவது நீ விழித்துக் கொண்டால் அது அல்லாஹ் நீ திருந்துவதற்காக உனக்களித்த இறுதி சந்தர்ப்பம். அரிய வாய்ப்பு. அதையும் வீணாக்கி விடாதே!

போதும் நண்பா ! போதும் ! இத்தோடு நிறுத்திக் கொள். நான் படைத்தவனுக்கு விசுவாசமாய் நடப்பேன் என்று மனதில் உறுதி கொள். பாவச் சுமைகளை அவன் முன்னிலையில் இறக்கி வை. ஆம் .. தவ்பாச் செய். அவனிடம் மன்றாடி உனது பாவங்களுக்காக மன்னிப்பு கோரிடு. அழு, அழு - நன்றாக அழு.. உன் இதயச் சுமை குறையும் வரைக்கும் அழுதிடு. இனிமேல் பாவஞ் செய்வதில்லை, தொழாதிருப்பதில்லை, ஐவேளை ஜமாஅத் தொழுகையைத் தவற விடுவதில்லை என உன்னுடன் நீயே உறுதிமொழி எடுத்துக் கொள்.

(அல்லாஹ்வை ) நம்பியோருக்கு அவர்களின் இதயங்கள் அவனை அஞ்சிப் பயந்து நினைவு கூர்ந்திட இன்னும் நேரம் வரவில்லையா? தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்ட எனது அடியார்களே!..நீங்கள் அல்லாஹ்வின் அருளை (மன்னிப்பை) விட்டும் நிராசையாகி விடவேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் (உங்கள்) அனைத்துப் பாவங்களையும் மன்னிப்பான். நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்போனும், கிருபையுள்ளாவனுமாவான். (குர்ஆன் - அல்ஹதீத்: 53)

ஒரு முஸ்லிம் தொழுகையை விட்டு விட்டால், அவனது விசயத்தில் என்னென்ன இஸ்லாமியச் சட்டங்கள் அமுல்படுத்தப்படும் என்பதை நீ அறிவாயா ? இதோ கேள் !

1.  தொழுகையை விட்டவன் காபிராக ஆகிவிடுகிறான்.

2.  அவன் மரணித்தால் அவனைத் தொழ வைக்கக் கூடாது.

3.  அவனுக்காக எவரும் துஆக் கேட்கக் கூடாது.

4. அவனை குளிப்பாட்டக் கூடாது. முஸ்லிம்களின் மையவாடியில் அடக்கம் செய்யவும் கூடாது.

5. அவனுடைய மகளுக்கு அவன் வலியாக இருந்து திருமணம் முடித்து வைக்கவும் கூடாது.

6.  அவன் இறந்தால் அவனது சொத்தில் உறவினருக்கோ, அவனது உறவினர் இறந்தால் அதில் அவனுக்கோ எவ்விதப் பங்குமில்லை.

7.  அவன் மக்கா ஹரத்தின் எல்லைக்குள் பிரவேசித்திட அனுமதியில்லை.

8.  அவன் அறுத்த பிராணிகளை யாரும் உண்ணக்கூடாது.

9.  அவனுக்கு முஸ்லிம் பெண்ணை மணமுடித்துக் கொடுக்கக் கூடாது. அப்படி முடித்திருந்தால் அந்த திருமணத்தை ரத்து செய்யவேண்டும்.

10.  அவன் தான் முஸ்லிம் பெண்ணை மணப்பது கூடாதெனத் தெரிந்து கொண்டே மணமுடித்திருப்பின் அவனுக்குப் பிறந்த பிள்ளாய்கள் கூட அவனது குழந்தைகளாகக் கணிக்கப்பட மாட்டாது.

பார்த்தாயா சினேகிதனே ?  நீ செய்து கொண்டிருந்த பாவம் எவ்வளவு மகா கெட்டது என்பதைப் பார்த்தாயா ? ஆனால் அதே பாவத்தை நீ தொடர்ந்து செய்ததால் அது பாவமென்றே தெரியாதளவுக்கு உன் உள்ளம் வலித்து விட்டதே பார்த்தாயா ? இன்றே நீ தவ்பாச் செய்யலாமல்லவா ? ஆம். அதை தாமதப்படுத்தாதே ! அல்லாஹ்விடம் தஞ்சமடைந்து விடு. அவன் உன்னை கைவிட்டால் வேறு உன்னைக் காப்பவர் யார் ? அவனிடம் கையேந்தியோர் என்றுமே கைசேதப் பட்டதில்லை. கடவுளை நம்பினார் கைவிடப் படார்.

அதேபோல் நீ செய்த ஏனைய பாவங்களுக்காகவும் சேர்த்தே தவ்பாச் செய்துவிடு. இனிமேல் அவற்றை விட்டு முழுமையாக விலகிவிடு. அவை பற்றிய எண்ணங்களைக் குழி தோண்டி புதைத்துவிடு. அவற்றின் பக்கம் இனிமேல் தலைவைத்துக் கூட உறங்காதே. அடிக்கடி அல்லாஹ்வின் வல்லமைகள் பற்றி - அவன் உனக்களித்துள்ள எண்ணிலடங்காத அருட்கொடைகளை எண்ணிப் பார்! அவனுக்கு வழிப்பட்டோருக்கு வழங்கவிருக்கும் இன்பங்களையும், மாறு செய்தோருக்குக் கொடுக்கவிருக்கும் தண்டனைகள் பற்றியும் கொஞ்சம் யோசி! அப்போது அல்லாஹ்வின் அச்சம் உனக்கு உண்டாகும். நல்ல மனிதர்களுடன் அதிகம் தொடர்பை ஏற்படுத்திக் கொள். உன் தீய நண்பர்களை விட்டு விடு. அவர்கள்தான் உன் அழிவுக்குக் காரணமாயிருந்தவர்கள். அவ்வாறே தீய பழக்கங்களிலிருந்து கொஞ்சங் கொஞ்சமாக விடுபட்டு விடு. பயன் தரும் நூல்களைப் படிப்பதை வழக்கத்தில் கொள். குறிப்பாக இஸ்லாமிய நூல்களை படி. அதனால் உன் ஈமான் அதிகரிக்கும். உன் பாவங்கள், தீய பழக்கங்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும். யார் மரணம் எப்போதென்று யாருக்கும் தெரியாது. எனவே நீ மரணிக்குமுன் உனக்குத் தேவையானவற்றை உன் மறுமை வாழ்வுக்குத் தேவையானவற்றை இப்போதே சேகரித்து வைத்துக்கொள் ! நாளை நீ மரணித்து விட்டால்.. கூட இருப்பவர்கள் ஐயோ பாவம் !! ஒரு நல்ல மனிதன் மரணித்து விட்டானே என நான்கு பேராவது அனுதாபப்படும் அளவுக்காவது நல்லவனாக வாழ். உலகில் உன்னுடன் வாழ்ந்தவர்கள்தான் நாளை உன்னைப்பற்றி இறைவனிடம் சாட்சி சொல்பவர்கள் என்பது நபிமொழி. நீ நல்ல முறையில் வாழ்ந்தால்தானே அவர்கள் நல்லபடியாக சாட்சி சொல்வார்கள். எனவே நீ குறைந்த பட்சம் ஒரு நல்ல முஸ்லிமாக வாழ்ந்து மரணித்தால்தான் நீ உலகில் பிறந்ததற்கும், வாழ்ந்ததற்கும் ஒரு அர்த்தம் இருக்கும். இல்லையேல் அனைத்துமே வீண் !!!

எனவே இன்றே நீ தவ்பாச் செய். நல்லவனாகிவிடு. இன்றிலிருந்து நீயொரு புதிய மனிதன்.

( எம் அனைவருக்கும் இறையருள் உண்டாகட்டும் ).

www.alagankulam.in
Wednesday, 14 December 2011 19:28

Thursday, August 2, 2012

கார் : நாங்க தானுங்க உசத்தி !!!


1. Bugatti Veyron 


Bugatti veyron
விலை :$ 2,400,000
வேகம் :2.5 நொடிகளில் 60(mph) மைல் தொடும் (1mph=1.609344 km)
அதிகபட்ச வேகம்:267 mph

 2. Aston Martin One-77 

Aston martin one 77
விலை :$ 1,850,000
வேகம் :3.4 நொடிகளில் 60(mph) மைல் தொடும் 
அதிகபட்ச வேகம்:220 mph

2.Pagani Zonda Clinque Roadster

Pagani Zonda Clinque Roadster

விலை :$ 1,850,000
வேகம் :3.4 நொடிகளில் 60(mph) மைல் தொடும் 
அதிகபட்ச வேகம்: 217 mph

3. Lamborghini Reventon

Lamborghini Reventon
விலை : $ 1,600,000. 
வேகம் :3.3 நொடிகளில் 60(mph) மைல் தொடும் 
அதிகபட்ச வேகம்: 211 mph

3. Koenigsegg Agera R

Koenigsegg Agera R

விலை :$ 1,600,000
வேகம் :2.8 நொடிகளில் 60(mph) மைல் தொடும் 
அதிகபட்ச வேகம்: 270 mph

4. Maybach Landaulet 


Maybach Landaulet
விலை : $ 1,380,000
வேகம் :5.2  நொடிகளில் 60(mph) மைல் தொடும் 
Maybach CEOக்கு  மட்டும்.

5. Zenvo ST1


 Zenvo ST1
விலை :$ 1,225,000
வேகம் :2.9 நொடிகளில் 60(mph) மைல் தொடும் 
அதிகபட்ச வேகம்:233 mph

6. McLaren F1


McLaren F1

விலை :$ 970,000
வேகம் :3.2 நொடிகளில் 60(mph) மைல் தொடும் 
அதிகபட்ச வேகம்: 240 mph

7. Ferrari Enzo 


Ferrari Enzo
விலை :$ 670,000
வேகம் :3.4 நொடிகளில் 60(mph) மைல் தொடும் 
அதிகபட்ச வேகம்:217 mph 

 8.Pagani Zonda C12 F 

Pagani Zonda C12 F
விலை : $ 667,321
வேகம் :3.5 நொடிகளில் 60(mph) மைல் தொடும் 
அதிகபட்ச வேகம்:215 mph

9. SSC Ultimate Aero  


SSC Ultimate Aero

விலை :$ 654,400
வேகம் :2.7 நொடிகளில் 60(mph) மைல் தொடும் 
அதிகபட்ச வேகம்:257 mph

 10. Ascari A10


 Ascari A10

விலை : $ 650,000
வேகம் :2.8 நொடிகளில் 60(mph) மைல் தொடும் 
அதிகபட்ச வேகம்: 215 mph

Thanks : www.automobiletamilan.com
Pro Blogger Tricks

Followers