.

Pages

Monday, March 26, 2012

அதிரையில் நிலத்தின் அரசு மதிப்பீடு உயர்வு !
நிலத்தை வாங்கும்போது பத்திரப்பதிவு அலுவலங்களில் அந்த ஆவணம் பதிவு செய்வது உண்டு. அப்போது அந்த நிலத்தின் வழிகாட்டி மதிப்பீட்டின்படி (GUIDELINE VALUES) முத்திரைத்தாள் கட்டணத்தை பத்திரப்பதிவு அலுவலங்களில் அந்த நிலத்தை வாங்குபவர் செலுத்த வேண்டும்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு முழுவதும் நிலத்தின் தற்போதைய மதிப்பீட்டுக்கு ஏற்ப வழிகாட்டும் மதிப்பீட்டை மாற்றி அமைக்கும் பணி நடைபெற்றது. இதற்காக பத்திரப்பதிவு அதிகாரிகள் அவர்களுக்கு உரிய பகுதிகளுக்கு சென்று வழிகாட்டும் மதிப்பீட்டை அறிந்து புதிய பட்டியல் தயாரித்து அரசிற்கு அளித்தனர்.

இதன் அடிப்படையில் நேற்றைய தினம் வெளியிட்ட தமிழக அரசின் பட்ஜெட்டில் “நிலத்தின் வழிகாட்டி மதிப்பு” வருகின்ற ஏப்ரல் 1– ந் தேதி முதல் திருத்தி அமைக்கப்பட்டு புதிய வழிகாட்டி மதிப்பீட்டை அமல்படுத்த முடிவு செய்துள்ளது. இதனால் அரசிற்கு கூடுதலாக ரூ 600 கோடி வருவாய் கிடைக்கும்.

அதிரைப்பட்டினத்தில் உள்ள ஒவ்வொரு தெருவின் மதிப்பீடுகளும் பல மடங்குகளாக உயர்த்தி நிலத்தின் ஒரு சதுர அடியின் விலை கீழ்க்கண்டவாறு நிர்ணயம் செய்துள்ளார்கள்தெருவின் பெயர்
வழிகாட்டிமதிப்பீடு
வழிகாட்டி மதிப்பீடு

பழையது )
புதியது )
ஆலடித் தெரு
120
250
பிலால் நகர்
40.00
100  &  150
ஆறுமுக கிட்டங்கி தெரு
70.00
150.00
ஆதம் நகர் ( M.S.M  NAGAR &  K.S.A  LANE)
40.00
100.00
செட்டித்தெரு
120.00
500.00
ஹாஸ்பிட்டல் ரோடு
120.00
500.00
காட்டுபள்ளிவாசல் தெரு
70.00
250.00
வெற்றிலைக்காரத் தெரு
80.00
200.00
சின்ன நெசவுக்காரத் தெரு
100.00
250.00
ஹாஜா நகர்
70.00
150.00
கடற்கரைத் தெரு
80.00
250.00
தரகர் தெரு
80.00
300.00
பாத்திமா நகர்
40.00
100.00
காலியார் தெரு
70.00
150.00
மேலத்தெரு
80.00
200.00
மேலத்தெரு (சவுக்கு கொல்லை &சானா வயல்)
70.00
250.00
பெரிய நெசவுக்காரத் தெரு
120.00
250.00
நடுத்தெரு
150.00
300.00
செக்கடி தெரு
100.00
250.00
சேது ரோடு
150.00
400.00
தட்டாரத் தெரு
120.00
300.00
வண்டிப்பேட்டை
90.00
200.00
புதுத் தெரு
130.00
300.00
புதுமனைத் தெரு
130.00
500.00
புதுக்குடி நெசவுத் தெரு
70.00
100.00
கீழத் தெரு
80.00
200.00
சால்ட் லேன்
70.00
200.00
செட்டி தோப்பு
150.00
500.00
ஹாஜியார் லேன்
90.00
200.00
கரையூர் தெரு
70.00
250.00
வள்ளியம்மை நகர்
25.00
100.00
மதுக்கூர் ரோடு
90.00
200.00
மரைக்காயர் லேன்
100.00
300.00
பழஞ்செட்டித்தெரு
120.00
500.00
பழஞ்செட்டித்தெரு கீழ் பக்கம்
70.00
200.00
பட்டுக்கோட்டை ரோடு
90.00
300.00
சாயக்காரத் தெரு
130.00
200.00


ஏற்கனவே நமதூரில் மனைகளின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. இதில் பத்திரப்பதிவுக்காக செய்யப்படுகிற செலவுகளும் உயர்ந்தால் பாதிக்கப்படுவது ஏழை எளியோர் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் தான். அவர்கள் நிலம் வாங்கி அதில் ஒரு வீடு கட்டி குடியேறும் திட்டம் என்பது வெறும் கனவாகவே அமைந்துவிடும் சூழல் ஏற்பட்டுவிடும்......................

குறிப்பு : ஒரே ஒரு ஆறுதலான செய்தி முத்திரைத் தீர்வையாக நாம் செலுத்தும் கட்டணத்திலிருந்து 1  சதவிதம் தமிழக அரசால் குறைக்கப்பட்டுள்ளது.


இறைவன் நாடினால் ! தொடரும்......

Saturday, March 24, 2012

உன்னைத்தான் கேக்கிறேன்....! “தில்லு” இருக்கா ? சொல்லேன் பாப்போம் !

1.       தங்களின் கட்சிக்காக புதிய உறுப்பினர்களைச் சேர்க்கும் உங்களுக்கு................
2.       கட்சியின் “தல” பிறந்த / நினைவு நாளுக்கு கட் அவுட், பேனர்கள் வைத்து கொண்டாடும் உங்களுக்கு................
3.       ஆடம்பர செலவு செய்து மேடை போட்டு கூட்டம் கூட்டும் உங்களுக்கு................
4.       தங்களின் கட்சிக்காக தெருத் தெருவா போஸ்டர் ஓட்டும் உங்களுக்கு................
5.       கட்சி ஆபிசில் கூட்டம் போட்டு வெட்டிப்பேச்சு பேசும் உங்களுக்கு............
6.       தெருத் தெருவாக் கட்சிக் கொடி ஏற்றி மிட்டாய் பொவுரும் உங்களுக்கு......................
7.       எங்கேயோ நடக்கும் மாநாட்டிற்காக வசூல் செய்து வேன்களில் அழைத்துச் செல்லும் உங்களுக்கு................
8.       சீட்டுக்காக நோட்டுக்கள் செலவு செய்யும் உங்களுக்கு................
9.       மதுபானக் கடைகளில் மாமுலாக ஊக்கம் பெரும் உங்களுக்கு.........................
10.   கட்சிப் பதவிகளுக்காக போட்டி போட்டுக்கொண்டு ஒருவருக்கொருவோர் குழி தோண்டும் உங்களுக்கு......................

நமதூர் மக்களின் அத்தியாவசிய பிரச்சனைகளாகிய....................
1.       காஸ் தட்டுப்பாடு
2.       “அதிரைப்பட்டினம்” புதிய பேருந்து நிலையம்
3.       அரசு மருத்துவ மனை 24 மணி நேர கூடுதல் டாக்டருடன் சேவை
4.       பாதாள சாக்கடைத் திட்டம்
5.       புதிய “தீ” அணைப்பு அலுவலகம்
6.       அறிவிக்கப்படாத மின்சாரத் துண்டிப்பு
7.       அகல ரயில் பாதைத் திட்டம்
8.       சமூக குற்றங்கள் ஒழிப்பு
9.       கல்வி, சுகாதார விழிப்புணர்வு
10.   வட்டி, லஞ்சம் ஒழிப்பு
11.   ரேஷன் கடை முறைகேடுகள் தடுப்பு
12.   முதியோர் நலன், வேலைவாய்ப்புகள்
13.   இலவச மருத்துவ முகாம்
14.   கோடைக் கால இலவசக் கல்விப் பயிற்சி

இது போன்ற உள்ளூர் பிரச்சனைகளைக் கையில் எடுத்து போராடி நமதூர் பொதுமக்கள் பயன்பெற ஏற்பாடுச் செய்யத்தான் முடியுமா ?
உன்னைத்தான் கேக்கிறேன்........! “தில்லு” இருக்கா ? சொல்லேன் பாப்போம் !

Thanks :  Abu Isra

Sunday, March 18, 2012

தண்ணீர் : சேமிப்பீர் !


தண்ணிர் சிக்கனம் தன்னலமற்ற சேவையாகும்

இன்று மார்ச் 22  “ உலக தண்ணீர் தினம் ” கடைபிடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. நான்கில் மூன்று பங்கு நீரைக்கொண்டுள்ள இவ்உலகப் பரப்பளவில் உயிர் வாழ்க்கைக்கு மிகவும் அவசியமானதாக உள்ள இத்தண்ணீரைக் இன்று நம்மில் அநாவசியமாக செலவழிப்பது வேதனையளிக்கக் கூடியதாகவே உள்ளது.

இன்றைய காலகட்டத்தில் நமதூர் மட்டுமல்ல பல ஊர்களிலும் ஏன் பல்வேறு நாடுகளிலும் கூட தண்ணீர் பற்றாக் குறையாகவே உள்ளது. எதிர்காலத்தில் இத்தண்ணீருக்காக உலக யுத்தங்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என்பது வல்லுனர்களின் கருத்து.

மழைநீர் சேமிப்பு மனிதர்களுக்கு பாதுகாப்பாகும்

அல்லாஹ் நமக்களித்த அருட்கொடை “மழை” இம்மழை நீரைச் சேமிப்பதன் மூலம், நிலத்தடி நீர்வளத்தை பெருக்க இயலும்.
இத்தண்ணீருக்காக, எங்கோயோ ஒரு சகோதரன் வறண்ட தொண்டையோடு, உலர்ந்த நாக்கோடு காத்திருக்கிறான் என்ற சிந்தனை நம்மிடம் வரட்டும்....................
இன்று நாம்................................. தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்தி நமது பங்களிப்பாக அதைச் சேமித்து நாளை நமது சந்ததியினர் பயன்பெறும் வகையில் வழிவகுத்துக் கொடுப்போம் ( இன்ஷா அல்லாஹ் ! )

இறைவன் நாடினால் ! தொடரும்......................
Pro Blogger Tricks

Followers