.

Pages

Monday, June 15, 2015

ஜுன் மாதம் !

வருக! வருக!
வள்ளல் மாதமே!
மருத்துவக்கல்லூரி
மணவிழாப் போல
கூட்டம்! ஒரே கூட்டம்!

பொறியியல் கல்லூரியில்
பொரி பொரித்துப்
பூரிக்கும் காட்சி
கூட்டம்!
நாட்டிலே படிப்பு
இதுமட்டும் தானா ?
மற்றப்படிப் பெல்லாம்
கருவாற்றுக் கடைபோல
கண்டு கொள்ளாமல்
கிடக்கிறது!

அதிக மதிப்பெண்
அப்படியே கல்லூரியில் சேர்ந்துவிடுவர்
வசதியுள்ள பெற்றோர்
வாரிவழங்கிப்
பெற்றுவிடுவர் "சீட் "

அதிக மதிப்பெண் பெற்ற
ஏழைகள்
சொத்துக்களை
விற்றுப் போண்டியாகிப்
படிப்பில் சேர்ப்பர்!

பொருளைப் புரட்ட
முடியாதவர்கள்
கண்பிதுங்கி,
கிடைக்கின்ற படிப்பில்
கவனம்!

எந்தந்தத் துறையில்
திறமை இருக்குமோ
அதைப்படிப் பதால்
நாடு முன்னேறும்
பணம் பெருக்கும்

படிப்பு மட்டும்
தேர்ந்தால்
நாடு தேயவடையும்!
பிறபடிப்பும் படியுங்கள்
பிறகு பாருங்கள்
வாழ்க்கையில்
இன்பத்தை!
'கவிஞர்' அதிரை தாஹா

Friday, June 12, 2015

விதை !

விதை புதைந்து
வெளியுலகில் விரிச்சமாக
வீரியமாய் காட்சி தரும்.
வீராப்பாய் விதை ஒன்றும்
விரிச்சத்திடம் வாதங்கள் செய்வதில்லை

என்னை மறந்து நீ
தென்றலிடம் உறவாடுகிறாய்
குயிலிடம் இசை பாடுகிறாய்
கூட்டமாய் இருக்குமிடம்
சோலை என்று கூறும்போது
விதைகள் என்றும் வெம்புவதில்லை.

விதைப்பவன்
ஒருவனென்றாள்
சுவைப்பவன்  மற்றவன்
அதுதான் இயற்கை

வருத்தங்கள்
விதைகளுக்கு புதைக்கும் போது
வருவதுண்டு புதைந்த பின்
வெடித்து அது வீரியமாய்
வெளி வரும் அது அன்று அது அரும்பு
அரும்பு அது அயராமல்
நீர் தேடி வேர் ஊரும்

ஊடுரும் வேருக்கு
விருச்சத்தின் பார்வைகள்
வேருக்கு கிடைப்பதில்லை
வேர் அதும் விருச்சத்தின் மேல்
கோபம் ஏதும் கொள்வதில்லை

மனிதருள் பலர் விருச்சம்
சிலர் வேர் அதிலும் சிலர் விதை
நீ எதுவாக இருக்கிறாய்
உணர்ந்து கொள்
உன்னை அறிந்தால் நீ
உலகத்தில் போராடலாம்.
பத்திரிகைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்

Thursday, June 11, 2015

[ 21 ] அவன் அடிமை: வெண்பா அந்தாதி

(77)
உணர்வுகள் உள்ளத்தில் உண்டாகித் தங்கக்
குணமாகும் பண்பே கொடையாம் - மணத்திடத்
தந்தவைத் தானெனத் தன்னைகூறும் சூத்திரமாய்
அந்தமா யோனின் அமைவு.

(78)
அமைதியில் உள்ளம் அசையாமல் ஓர்மைச்
சமைந்திடின் தூக்கம் தழுவும் - இமைகள்
விரிந்திடும் சாந்தம் விகசிக்கும் வாழ்வில்
சொரிந்திடும் இன்பத்தின் சொத்து

(79)
சொத்தென்றால் உள்ளமைதிச் சோதி நிலைத்திட
நித்தியனில் சுத்தமாகும் நிம்மதி - முத்தான
இப்பிறப்பில் எல்லாமே எட்டிடுமித் தத்துவமே
தப்பாமல் நிற்கும் தலம்.

(80)
தலமென்ற உள்ளத்தில் தங்கும் தலைவன்
அலங்கரிப்பான் நல்வாழ்வை ஆங்கே - இலகுவாக
இல்லாமை இல்லாமல் என்றும் வழங்கிடுவான்
நல்லிதனை உன்னிலே நாடு.

நபிதாஸ் (தொடரும்)

வெண்பா (77
பொருள்: உணர்வுகள் உள்ளத்தின்கண் உண்டாகித் தங்கிட அதுவே குணமாகும். அக்குணம் நற்பன்புடையதாய் இருக்குமானால் அதுக் கொடையாகும். அந்தக் குணங்கள் வாசமாக மணத்திட அக்குணம் வெளிப்பட்டோன் அதுத் தன்குணம் என்றுக் கூறிடும் சூத்திரமாக அந்த எல்லாம் வல்ல மகாப்பெரியோன் அமைவு இருக்கின்றது.

வெண்பா (78
பொருள்: உள்ளம் எச்சலனமும் இல்லாமல் ஒர்மையாக அதில் அமையயேற்பெற்றால் மெல்லத் தூக்கம் தழுவும். அந்நிலையில் உறங்கமும் இல்லாமல் இருக்கும் அமைதி மலரும் வழியறிந்தோர் வாழ்வில் அமைதியே வடிவாகிப் பிரகாசிப்பார். அந்நிலையில் ஆனந்தம் சொரிந்திடும்.

வெண்பா (79
பொருள்: ஒருவன் பெறவேண்டிய பாக்கியம் என்றச் சொத்து ஒன்றென்றால் மனஅமைதி என்றச் சோதித் தன்னில் நிலைத்திட நித்தியனில் இணை போன்ற அசுத்தங்கள் அழிந்து பரிசுத்தமாகும் அவ்வமைதியாகும். பெறர்க்கரிய முத்தான இப்பிறப்பில் எல்லாமே அடையப்பெறும் அமைதியின் தத்துவமே ஒருவன் அதுத் தப்பிவிடாமல் பற்றி நிற்கும் தலமாகும்.

வெண்பா (80
பொருள்: தலமென்ற உள்ளத்தில் இறைவன் தங்க ஆட்க்கொண்டுவிட்டால் நல்வாழ்வை அவ்வுள்ளத்தின்மூலம் வெளிப்படுத்தி அலங்கரிப்பான். இல்லாமையே இல்லையென்ற நிலையில் வேண்டும் தகுந்ததை வழங்கிடுவான். அதனை அடைய நீ நாடவேண்டும்.
Pro Blogger Tricks

Followers