.

Pages

Thursday, October 30, 2014

[ 2 ] எழுதலாம் வாங்க ! செய்தியும் அதன் பின்னணியும்

செய்தியும் அதன் பின்னணியும்...

ஒரு செய்தியாளன் தான் அறிந்த செய்தியை உலகிற்கு உணர்த்த நிகழ்வின் உண்மையை அறிய நிகழ்வின் பின்னணி அவசியம.

1970 களில் செய்தியாளர்கள் தனது செய்திகளை
பத்திரிக்கைகளுக்கு அனுப்பி வைக்க மிகவும் சிரமப்படுவர் கடிதம் மூலம் அனுப்பி வைத்தால் மூன்று நாள் கழித்தே செய்தியாக வரும். அவசியம் ஏற்பட்டால் மட்டுமே போன் மூலம் செய்தியை தெரிவிப்பர்.

புகைப்படம் பதியபட வேண்டும் என்றால் உள்ளூர் புகைப்பட கலைஞர்ர்களை அணுகி புகைப்படம் எடுக்க வேண்டும். ஸ்டூடியோ வைத்து இருப்பவர்கள் ஆதலால் இலகுவாக இசைய மாட்டார்கள். காரணம் அவர்களுக்கு புகைப்பட கருவிகள் எடுத்து வருவது மிககடினம். எனவே படத்துடன் செய்தி வந்தால், புகைப்பட உதவி 'ஸ்டூடியோ' பெயரையும் போட்டு அவர்களை மகிவிப்பர் .

புகைப்பட கலைஞர்கள் எடுத்த படம் விபத்து, கொலை போன்றதாக இருந்தால் போலிசுக்கு ஒரு காப்பி கொடுத்தாக வேண்டும். ஆனால் அதற்குண்டான தொகையை கொடுக்காமல் அழைகளிபார்கள். எனவே புகைப்படத்துடன் கூடிய செய்தி வருவது அன்றைய காலத்தில் அபூர்வம். அதே போன்று செய்தியாளர் எடிட்டருடன் நல்ல தொடர்பு வைத்து இருக்க வேண்டும். இல்லையெனில் எவ்வளவு முக்கிய செய்தியாக இருந்தாலும் ஒரு பத்தி செய்தியாக போட்டு விடுவர். தினபத்திரிகையில் ஒரு பக்கத்திற்கு எட்டு பத்திகள் ( அதாவது காலம் )

குறைந்தது மூன்று பத்திகள் அளவில் உள்ள செய்தியே வாசகரை கவரும் செய்தியாக கொள்ளலாம். செய்தியின் பின்னணி நன்றாக அறிந்து வெளியிடும் செய்தியாளரின் செய்தியை கூட பத்திரிகை செய்தியின் தலைப்பால் தடம் புரளுவதுண்டு. உலகிற்கு உணர்த்த நிகழ்வின் உண்மையை
அறிய நிகழ்வின் பின்னணி அவசியம்.

உதரணத்திற்கு ஒரு நிகழ்வை பார்ப்போம்...

ஓடும் பஸ்ஸில் ஏற முயன்ற வாலிபர் கீழே விழுந்து பலி ! 

இதன் பின்னணி தலைப்பை பார்த்தே பலியானவரின் தவறு தெரிய வரும்...

பஸ்ஸில ஏற முயன்ற பயணி தவறி விழுந்து பலி ! ஓட்டுனரின் அவசரத்தால் நிகழ்ந்த பரிதாபம் !! 

இந்த தலைப்பை பார்த்தால், ஓட்டுனர் மீது கோபம் வரும். செய்தியாளர் மனசாட்சியுடன் செய்தி பின்னணியை தெரியப்படுத்த வேண்டும்.

சென்ற வாரம் எஸ் பி பட்டினத்தில் நிகழ்ந்த சம்பவம் விசாரணைக்கு சென்றவர் போலிசாரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் கூட தினமலரில் ஒரு தலைப்பை பார்த்தால் மரணித்தவர் மீது கோபம் வரும். அதே தினத்தில் மற்றொரு நாளிதழ் தினத்தந்தியில் வந்துள்ள தலைப்பை பார்த்தால் மரணித்தவர் மீது பரிதாபம் வரும். எனவே செய்தியாளர் பணி மிக மகத்தானது அதேபோன்று பேட்டி எடுப்பது குறித்து அடுத்த பதிவில் விளக்கமாக காண்போம்.
தொடரும்...
'பத்திரிகைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்

Tuesday, October 28, 2014

சிகரெட் !

ஊதிவிடும் சிகரெட்
ஆயூளெனும்
கதிரவனை மறைக்கின்ற
கருமேகம்!
ஆரோக்கியத்திற்குக் கேடு
அழிவிற்கே தங்கவைக்கும்
வீடு!
நீட்டி யுதவி
அவன் உயிரைக்
கூட்டிப் போகும்
எமனாகாதே!
இதய இசைக்கருவியில்
"லொட், லொட்" ராகம்
சிகரட் கரம்!
உலக சுகாதார தாபனம்
ஒரே மகிழ்ச்சி
ஜனத் தொகைக் குறைப்பு
'புகைக்காதே!'
சட்டம் நிறைவேற்றப்பட்டது
வட்டப் புகையால்
சட்டம் மறைவு!
சிந்தனையாளர் கையில்
சிகரட்
வந்தனம் போட்டுக்
கூட்டிப்போனான்
எமண்!
சுருட்டும் மலைப்பாம்பு
வெண்சுருட்டு!
புற்று நோய் நண்பன்
இதயத்தில் பூகம்பம்
புகையால்!
இனித் தொடாதே - உன்
கையால்!
'கவிஞர்' அதிரை தாஹா


Sunday, October 26, 2014

உலகின் முதல் பத்து பணக்காரர்கள் ! [ படங்கள் இணைப்பு ]

உலகில் உள்ள பணக்காரர்களின் எண்ணிக்கையை வரிசைபடுத்தி ஃபோர்ப்ஸ் என்ற இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. இவை தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரும் வைத்திருக்கும் சொத்து மதிப்பின் அடிப்படையில் பட்டியல் நிர்ணயிக்கப்படுகின்றன. [ சுவீஸ் வங்கியில் பணமும், பினாமி பெயரிலும் சொத்துகளும் வைத்திருப்போரையும் கணக்கில் எடுத்துக்வாய்ங்கலான்னு கேட்டுறாதிங்க ப்ளீஸ்... அப்புறம் எண்ணிக்கை கூடிப்போய் போட்டி பலமாயிடும் ஆமா... ] 

அதன்படி நடப்பாண்டில் அதிக சொத்துகள் வைத்திருக்கும் உலக பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. [ லிஸ்ட்லே இந்தியரும் இல்லையான்னு நீங்க கேட்கிறது எங்க காதிலே நல்லா விழுது...ஒரு நிமிஷம் அவரும் இருக்கிறார் முப்பதாவது இடத்தில் :) ]

நிகர சொத்து மதிப்பு என்பது மொத்த சொத்து மதிப்பிற்கும், மொத்த கடனிற்கும் இடையில் உள்ள வித்தியாசமாகும். இந்த மொத்த சொத்து மதிப்பில் நிறுவனங்களில் கொண்டுள்ள பங்கு மூலதனம், மோட்டார் வாகனங்கள், நிலம், வீடு [ குடியிருக்கும் வீடு நீங்கலாக ] ஆகிய சொத்துகள் அடங்கும்.

பட்டியலில் முதல் பத்து இடங்களைப் பிடித்துள்ளவர்களின் விவரங்கள்

1. Carlos Slim
Net worth: $79.9 billion
Source of wealth: America Movil
Industry: Telecommunications
Citizenship: Mexico
Age: 74

2. Bill Gates
Net worth: $79.6 billion
Source of wealth: Microsoft
Industry: Technology
Citizenship: U.S.
Age: 58


3. Warren Buffett
Net worth: $67.1 billion
Source of wealth: Berkshire Hathaway
Industry: Finance
Citizenship: U.S.
Age: 84


4. Amancio Ortega
Net worth: $56.3 billion
Source of wealth: Inditex
Industry: Retail
Citizenship: Spain
Age: 78


5. Larry Ellison
Net worth: $47.6 billion
Source of wealth: Oracle
Industry: Technology
Citizenship: U.S.
Age: 70


6. Charles Koch
Net worth: $40.7 billion
Source of wealth: Koch Industries
Industry: Diversified
Citizenship: U.S.
Age: 78


7. David Koch
Net worth: $40.7 billion
Source of wealth: Koch Industries
Industry: Diversified
Citizenship: U.S.
Age: 74


8. Christy Walton
Net worth: $38.6 billion
Source of wealth: Wal-Mart Stores
Industry: Retail
Citizenship: U.S.
Age: 59


9. Jim Walton
Net worth: $37.4 billion
Source of wealth: Wal-Mart Stores
Industry: Retail
Citizenship: U.S.
Age: 66

10. Alice Walton
Net worth: $35.9 billion
Source of wealth: Wal-Mart Stores
Industry: Retail
Citizenship: U.S.
Age: 65

Source : forbes
தொகுப்பு : அதிரை நியூஸ்

Wednesday, October 22, 2014

தீபாவளி !

அசூரனை(தீயவனை) அழிப்பதுவே தீயக்குனத்தை ஒழிப்பதாகும் :
தீபாவளித் திருநாள்
தெருவெங்கும் அமர்க்களம்
சோபாக்களில் அமர்ந்து
சொந்தங்கள் குதூகலம்

அசூரனை வென்றதனால்
அசராமல் வெடிச்சத்தம்
அசூர மத்தாப்புக்கள்
ஆங்காங்கே புஸ்சத்தம்

அமைதியைக் குலைத்திடும்
அத்தனையும் தீமைகளே
இமையும் கண்ணாகி
எதிர்த்திடுவோம் தீயவனை

காயங்கள் வடுவாக்கும்
காலத்தே தடுத்திடுவோம்
தீயவனை அழிப்பதுவே
தீமைகளை ஒழிப்பதாகும்

பற்றிடுவோம் நல்மனதில்
பாசமுடன் உள்ளன்பை
ஒற்றுமைக்கே திருநாள்கள்
ஒவ்வொன்றும் பெருநாள்கள்

தித்திக்கும் பலகாரம்
தீபாவளித் தினத்தினிலே
அத்தனையும் அளித்திடுவார்
அஹமதியர் வீட்டினிலே

பக்ரீத் பெருநாளில்
பாஸ்மதிப் பிரியாணி
சிக்கன் வறுவலுடன்
சேர்பாரே சகமதத்தார்க்கே

அண்ணன்தம்பி உறவுபோல்
அமைதியான ஒற்றுமையில்நாம்
சின்னச்சின்னத் துவேசத்தால்
சிதைப்பதைத்தவிர்த்திடுவோம்

வெடித்திடுவோம் தீயஉணர்வை
விரட்டிடுவோம் துவேசத்தை
நடித்திடும் நயவஞ்சகத்தை
நல்லதாக மாற்றிடுவோம்.

தீபாவளி நரகாசூரனை
திருநாளில் அழிப்பதுப்போல்
தீதானத் தீக்குணத்தை
திரேகத்தில் அழித்திடுவோம்.

நபிதாஸ்

Friday, October 17, 2014

[ 4 ] அவன் அடிமை [ வெண்பா அந்தாதி ]

(9)
இடுக்கணுமேதாக்கி இதயமும் வாடும்
தடுக்கங்கள் சூழ்ந்திட்டே தாழ்த்த - மிடுக்குக்
குறைந்தாலும் மேன்மக்கள் கொள்கைத் தளரார்
இறையின்பம் இன்றி இரார்.

(10)
இருப்பதெல்லாம் ஏகனன்றி இல்லை அறிந்தும்
அருளின்றேல் ஆங்கே அசடே - இருள்நீங்க
ஒப்பற்றான் நேசர் ஒருவர் வழிகாட்ட
தப்பாதே தங்கத் தழுவு.

(11)
தழுவிட வேண்டும் தனியோன் விருப்பம்
நழுவிட வேண்டாமே நாட - இழுக்குகள்
நேர்ந்தும்இறைவன் நிலையுணரத் தன்னிலே
ஆர்ந்தே அவனை அறி.
.
(12)
அறியாமை ஆசை அறிவாக ஆகி
அறிந்திடுமே ஆற்றலாம் ஆதி - அறிவியல்
அன்றேதான் ஆரம்பம் ஆங்கே அசைவுகளாய்
அன்றியுமே அல்ல அகம்..
தொடரும்...
நபிதாஸ்

வெண்பா (9)
பொருள்: மனஅமைதி என்பதும் சுகம். அதனை சில சிதைக்கும் சூழல்கள் அமைதியின்மையை ஏற்படுத்த இதயம் வாடும். அவ்வாறான அல்லது அதற்கும் மேலான அமைதியைக் குலைக்கும் நிலைகள் ஏற்பட்டாலும் இணை என்றால் என்னவென்று அறிந்த மேன்மக்கள் அதற்கெல்லாம் அவர்கள் இடம்கொடாது என்றும் இறைவனை இணைவைக்காமல் வணங்கிய வண்ணம் அவனில் தனை இழந்து ருசிக்கும் இறையின்பம் கணப்பொழுதும் நீங்காது அதில் திளைப்பார்.

வெண்பா (10)
பொருள்: இறைவன் இன்றி எதுவும் இல்லை என்பதை இலகுவாகக் கூறிடுவார். ஆனால் அதன் உண்மைப் பொருளை விளங்கமாட்டார். இறைவனின் அருள்பெற்றவர்கள் அதன் பொருளை தெளிவாக விளங்கியாவர்கள். சொல்லும் வார்த்தைகளுக்கு தெளிவான விளக்கம் அறியாததும் அறியாமையே. அவ்வாறான அறிந்துக்கொள்ள இயலாமையை போக்க ஒப்பற்றவனாகிய இறைவனை தெளிவாக அறிந்து அவன் பொருத்தம் பெற்ற இறைநேசர்கள் போன்றவர்கள் ஒருவர் தெளிவுகளை வழிகாட்டினால் உடனே அதனை அடிபணிந்து ஏற்றுக்கொள்.

வெண்பா (11)
பொருள்: 'நான் மறைந்த கருவூலமாக இருந்தேன், என்னை அறியப்பட நாடினேன்,' 'அதற்காகப் படைப்புகளைப் படைத்தேன் என்ற இறைவனின் விருப்பம் உன்னிலும் நிறைவேற எத்தகையக் களங்கம் எதுவும் குழப்ப நேர்ந்தாலும் அதனை தவிர்த்து உருவமற்ற இறைவனில் இணையில்லாது மிகவும் ஆழமாக சிந்தித்தே அவனை அறிந்துக்கொள்.   

வெண்பா (12)
பொருள்: தான் தன்னை அறிந்திட என்றால், தன்னில் அறியாமையில் இருந்து தன்னை அறிந்திட என்பதாகும். அவ்வாறு அறிந்திடுதலே முதல் அசைவான ஆசையாகி தானே தன்னை தன்னில் அறிந்திடும் ஆதி என்ற இறைமை. இருக்கின்றதை அறிவது அறிவியல். எனவே என்று அறிய நாடியதோ அன்றே அறிவியல் தொடங்கிற்று. அவ்வாறான அகம் அனைத்திலுமே தன்னைத், தன்னைச் சூழவுள்ள அனைத்தையுமே அறிந்துகொண்ட இருக்கின்றது. இவ்வெண்பாவில் ஒரு சிறப்பு. இது முற்று மோனையில் அமைந்துள்ளது.

Monday, October 13, 2014

[ 1 ] எழுதலாம் வாங்க ! புதிய தொடர்

'எழுதலாம் வாங்க !'  என்ற தலைப்பில் புதிய தொடர் எழுத எண்ணி உள்ளேன். இது பத்திரிகையாளர் எழுதும் முறை, கதை, கட்டுரை எழுதும் முறை, பத்திரிகை நடத்தும் முறை ஆகியன குறித்து பகிர்ந்து கொள்ள ஆசை படுகிறேன்.
அதிரை சித்திக்

செய்தியாளர் ( பத்திரிக்கையாளர் ) :
1970-1980 களில் பத்திரிக்கையாளர் என்றால் ஊருக்கு ஒருவர் அல்லது இருவர் மட்டுமே இருப்பர். ஊர் நிகழ்வுகள் எதுவானாலும் இவர்கள் மூலமே செய்தியாக பத்திரிகைகளில் வளம் வரும் உள்ளூர் நிகழ்வுகள் பத்திரிகையில் வருமாயின் ஆச்சர்யமாய் பார்போம். குறைந்தது. ஐந்தாறு முறையாவது அந்த செய்தியை படித்து பாப்போம். சாதாரண மக்களுக்கு எப்படி செய்தி பதிவாகிறது என்றுகூட தெரியாது. அதனால் அந்த துறை மீது ஆர்வமும் கிடையாது. ஆனால் இன்றோ ஆட்சியாளர் கூட பயப்படும் அளவிற்கு ஊடகத்தின் சக்தி பலம்பொருந்தியதாக உள்ளது. எனவே பத்திரிக்கையாளருக்கு வேண்டிய குறைந்த பட்ச தகுதியை மட்டும் பார்போம்.

ஒரு விபத்து நடக்கிறது. அந்த வழியே நீங்கள் செல்கிறீர்கள் அப்போது நீங்கள் எப்படி நடந்து கொள்வீர்கள் ?

A. எதோ நடக்கிறது நமக்கென்ன என சென்று விடுவீர்களா ?
B. என்ன நடக்கிறது என்று ஆவலாய்  சென்று பார்பீர்களா ?
C. என்ன நடந்தது என்று பார்ப்பதோடு அங்கு நின்றுகொன்றிப்போரிடம்
நிகழ்வை பற்றி கேட்டுதெரிந்து கொள்வீர்களா ?

இதில் எந்த ரகம்...

செய்தியை அறிந்து கொள்ளும் ஆர்வமுள்ள 'C' யாக இருப்பீர்களாயின் அதுவே முதன்மையான தகுதி.

நீங்கள்  செய்தியை தெரிந்து கொள்ளும் ஆவல் உள்ளவர் என்பது முதல் தகுதி. அந்த நிகழ்வு நடந்த இடத்தை விட்டு அகன்று வேறு நபரிடம் விவரமாக செய்தியை கூறும் தன்மை. நிகழ்வை கண்டது போன்ற உணர்வு கேட்டவருக்கு வரவேண்டும் அப்படி உங்களால் முடியும் என்றால் முழு தகுதியும் உள்ளவராகிறீர்கள்.

அதே போன்று நீங்கள் நிகழ்வு நடந்து முடிந்த பின்னர் அங்கு செல்கிறீர்கள், பார்த்த சாட்சியை விசாரிக்கும் நீங்கள் கேட்கும் ஐந்தாறு கேள்விகளில் முழு விவரமும் வந்து விட வேண்டும் அந்த சாதுர்யம் தங்களுக்கு இருக்குமாயின் நீங்கள் செய்தியாளனுக்கு முழு தகுதியானவர் என்றே பொருள் கொள்ளலாம்!
தொடரும்...
'பத்திரிகைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்

Monday, October 6, 2014

குர்பான் உண்மையில்...

தியாகத் திருநாள் கொண்டாட்டம்
.....தெருவில் எங்கும் சந்தோசம்
தயாளம் மனதில் குடிகொண்டும்
.....தருவார் தானம் பலதந்தும்
நியாய நபிகள் இஸ்மாயில்
.....நேர்மை நிறைந்த இப்ராஹீம்
தியானம் கண்டே வென்றிடுவோம்
.....தினமும் வாழ்வில் பற்றிடுவோம்.

இறைவன் வகுத்த வழிதனையே
.....என்றும் பிசகா வாழ்வினையே
மறையில் பொறித்தான் வழிப்படவே
.....மதியோர் தன்னில் செயல்படவே
பிறையில் வேற்றுக் கண்டிட்டார்
.....பிரிந்தே இன்று நிற்கின்றார்
முறையில் பேதம் வந்ததேனோ ?
.....முன்னோர் வழிகள் விட்டதாலோ ! (தியாகத்)

அனைத்தும் மனதில் அவனுக்காய்
.....அழகாய் சொல்வார் வாய்ச்சொல்லாய்
நினைவில் செயலில் தனக்காக
.....நிகழ்த்தி பிரிந்தார் பிணக்காகி
முனைந்தே முதலோன் சுயநிலையே
.....முழுதும் இயங்கும் தனிநிலையாய்
புனையும் இணையில் புரிதலிலே
.....புகுத்தும் அறிவில் பிரிவினையே (தியாகத்)

தெளிவைத் தேடி நாடினாலே
.....தெரியும் குர்பான் உண்மையிலே
வெளியாய் உள்ளாய் உள்ளதெல்லாம்
.....வேறு என்றே இல்லையாமே
அளிக்கும் துவிதம் வேற்றுமையை
.....அழிக்கும் நிலையைப் பற்றுவாயே
ஒளிவைப் பெறுவாய் ஒருவனிலே
.....உயர்ந்தே வாழ்வாய் ஒற்றுமைலே. (தியாகத்)

நபிதாஸ்

யாப்பு இலக்கணம்: அரையடிக்கு மா மா காய் ஆசிரிய விருத்தம்.

Friday, October 3, 2014

ஏழை பிறந்த செய்தி !

பெற்றவளும் மகிழ்ந்திடுவாள்
பிறந்த நாள் செய்தி
தாய் சொல்லாத செய்தி
செய்தித்தாள் சொன்னது
ஆம்...

வறுமையில் வாழ்ந்த அவன்
பிறந்தது ஏன் என்பது போல வறட்சி
மிரட்சியாய் தெரிந்த உலகம்
ஏக்கம் இல்லா வாழ்க்கை
ஆசையற்ற மனசு
தன்நிலை உணர்ந்ததினால்

கடலாமை மணல் மீது முட்டையிட்டு
மணல் சூட்டின் இதமதிலே
ஆமை குஞ்சு மணல் மீது
சிறுநடை போட்டு கடலுக்கு செல்லுமது
கடல் தன்னை அடையுமுன்னே
சிறு நரியும் கவ்வி செல்லும்
ஆகாய வட்டமிடும் கழுகுஅதும்
கொத்தி செல்லும் இவை யாவும்
நிகழ்ந்த பின்னே மிஞ்சியது சிறு குழு

ஆமையதை அலையதுவும்
அன்போடு அழைத்து செல்லும்
ஆமைக்கு உணவாக கடல் பாசியும்
காத்திருக்கும்

அமையாது வாழ்க்கை என்று
ஆமை குஞ்சு மணல் இடையே
அமர்ந்து விட்டால் ஆழ்கடல் வாழ்வு கிடைத்திடுமா
வறுமையிலே பிறந்த அவன் வாய் மூடி
இருந்திருந்தால் அவன் வாழ்வும் முடிந்திருக்கும் .
சிறு நரி கூட்டமதும் வட்டமிடும் கழுகுகளும்
ஆமைக்கு காத்திக்கும் அதும் இயற்கை யாமே
ஆமைக்கு இறகு ஆழ்கடலில் மட்டுமப்பா
ஆள் கடல் வாழ்வு வேண்டுமென்றால்
சூல்சியதை தட்டி விட்டு
உழைப்பை வாழ்க்கையாக உறுதியாக பற்றி விடு

நீ பிறந்த செய்தியதை
செய்தி தாள் மூலம் வாழ்த்தாக பெற்றிடுவாய்
ஈன்ற மகன் பிறந்த செய்தி கேட்டு
பெற்றவளும் மகிழ்ந்திடுவாள்

'பத்திரிகைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்
Pro Blogger Tricks

Followers