.

Pages

Tuesday, May 1, 2012

மந்திரவாதி !ஒருவர் தனக்கோ அல்லது தன்னைச் சார்ந்தவருக்கோ அல்லது அவருக்கு எதிரியாகக் கருதப்படுகிற இன்னொருவருக்கோ................
1.   கை கால்களை முடக்கிக் காண்பிக்கிறேன் பார்.........இல்லை...இல்லை முறித்துக் காண்பிக்கிறேன் பார்.............

2.   என்னை சீண்டி விட்டான்.......அந்த “படுவா”வை சும்மா விட மாட்டேன் அவனுக்கு மர்ம நோயை உண்டாக்கி வாயிலிருந்து இரத்தம் இரத்தமாக கக்க வைக்கிறேன் பார்..........

3.   ஐயோ....என்னை சீக்கில் படுத்த படுக்கையாய் படுக்க வைத்துவிட்டார்களே ! நான் குணமாக வேண்டுமே.........

4.   அந்த கஷ்டத்தை ஏங்க கேக்கிறிய......என் மாப்பிள்ளை கடந்த அஞ்சு வருசமா என்னிடம் பேசாம இருக்கிறார். அவர் என்னிடம் பாசம் நேசமாக இருக்க வேண்டும். பணங்காசு அள்ளி அள்ளி அனுப்ப வேண்டும் அதற்கு ஏதாவது செய்து கொடுங்களேன்...........

5.   எனது மகன் படித்துவிட்டு வேலை வெட்டியில்லாமல் சும்மா ஊர் சுற்றிக்கொண்டு இருக்கிறான். அவன் வெளிநாடுச் செல்ல வேண்டும். அவனுக்கு சீக்கிரம் “விசா” கிடைத்து லட்சம் லட்சமாக அங்கே சம்பாரிக்க வேண்டும் அதற்கு ஏதாவது செய்து கொடுங்களேன்....

6.   எனது பிள்ளைக்கு வயது கடந்து விட்டது. நல்ல “வரன்” கிடைத்து கால நேரத்தோடு அவனுக்கு/அவளுக்கு திருமணம் நடத்தி வைக்க வேண்டும். அதற்கு ஏதாவது செய்து கொடுங்களேன்....

7.   எனது குழந்தைக்கு “காய்ச்சலுங்க” ராத்திரியான அழுகையை நிறுத்த மாட்டேன்ங்குதுங்க அதற்கு ஏதாவது செய்து கொடுங்களேன்....

8.   விலை மதிப்புள்ள அந்த நிலத்தை அவர்களிடமிருந்து சுலபமாக குறைந்த விலையில் எழுதி வாங்க வேண்டும். அதற்கு ஏதாவது செய்து கொடுங்களேன்....


என இதுபோன்றவற்றைச் சொல்லி, பலர் நாடிச்செல்வது மார்க்கத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடுகிற மந்திரவாதியையே....

மந்திரவாதியோ............
1.   நான் அனைத்தையும் வசப்படுத்தி வைத்துள்ளவன்.

2.   அவனைக் குணமாக்கி காண்பிக்கிறேன் பார்......இல்லை...இல்லை அவனுக்கு நோயை ஏற்படுத்தி காண்பிக்கிறேன் பார்......

3.   பைத்தியமாக்குவது / பைத்தியத்தை தெளியவைப்பது

4.   கணவன் மனைவியைப் பிரிப்பது / சேர்ப்பது

5.   திருமணம் நடைபெற / தள்ளிப்போட

6.   பிள்ளை இல்லாதவர்களுக்கு பிள்ளை வரம் கொடுப்பது / தடுப்பது

7.   வியாபாரம் செழிப்பாக வளர / முடக்க

8.   காணாமல்போன பொருளைக் கண்டுபிடித்துத் தருகிறேன் பார் எனச்சொல்லி பொருள் “அங்கே உள்ளது”.... “இங்கே உள்ளது”.....என்ற பொய்யைச் சொல்லி உறவினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் போன்றவர்களிடேயே சண்டையை வளர்த்து விடுவது

9.   பிள்ளைகளுக்குப் படிப்பை வரவழைக்கிறேன் பார்..... வேண்டும் என்றால் அவர்களை “பாஸ்” ஆக்கி காட்டுகிறேன் எனச் சொல்வது.

10.        உனது மகனுக்கு ஒரே மாதத்தில் வெளிநாடு விசா வரவழைத்துக் காண்பிக்கிறேன் பார்........நல்ல வேலை கிடைக்க வைக்கிறேன் பார்......

11.         உனக்கோ, உன் வீட்டிற்கோ பேய், பிசாசுகள் அண்ட விடாமல் தடுக்கிறேன் பார்........

12.         பயத்தை போக்கி காட்டுகிறேன் பார்................

என இதுபோன்றவற்றைச் சொல்லி நமது சமுதாய பொதுமக்களை ஏமாற்றுகிறார்கள் மந்திரவா(வியா)திகள்.
இன்னும் எத்தனை காலத்திற்கு நமது சமுதாயம் இணைவைப்பிலும் மூட நம்பிக்கையிலும் தங்களுடைய மூளையை அடகு வைத்துக் கொண்டிருக்கும். இந்த நம்பிக்கையின் மூலமாக எதை சாதித்துக் கொண்டார்கள் ? மேலும் இந்த தவறான நம்பிக்கையின் மூலமாக இந்த அறியாத மக்கள் பயனடைந்தார்களா ? அல்லது தங்களுடைய பொருளாதாரத்தை இழந்தார்களா இந்த அறியாமையைப் பயன்படுத்தி காசு பறிக்கும் கொள்ளைக் கூட்ட கும்பலை நாம் அடையாளம் காண வேண்டும்.

செய்வினை, சூனியம், தாயத்து என்று ஏமாற்றும் போலி மந்திரவாதிகளை சமுதாயத்திலிருந்து ஒதுக்க வேண்டும். இவர்களால் பயனடைந்தவர்களை விட தங்கள் பொருளாதாரத்தையும் நேரத்தையும் அறிவையும் இழந்தவர்கள் தான் அதிகம். எனவே நம் சமுதாய மக்கள் இவைகளின்பால் தங்கள் கவனத்தை செலுத்தாமல் அல்குர்-ஆனை ஓதுவதிலும் அதில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்களை ஆழ்ந்து சிந்திப்பதிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வழிகாட்டுதல்களில் இருந்து பெறப்படும் செய்திகளை அறிந்து அதன்படி நடப்பதிலும் நமது சமுதாயம் தங்கள் கவனத்தை செலுத்த வேண்டும்.

அல்லாஹ் அனைத்து முஸ்லிம்களையும் உண்மையான முஸ்லிம்களாக வாழ்ந்து மரணிக்க செய்வானாக !  ஆமின் !
சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! தொடரும்...

0 comments:

Post a Comment

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers