.

Pages

Friday, January 13, 2012

சிட்டுக் குருவியை காணவில்லை !

செல்போன் குறைந்த விலையில் கிடைப்பதால், செல்போன் இல்லாதவர்களே இல்லை என்பதுபோல் அனைத்து தரப்பினரும் பயன்படுத்தக் கூடிய சாதனமாக உள்ளது.

செல்போனுக்கு கிடைக்ககூடிய சிக்னல்கள் அனைத்தும் அருகில் அமைக்கப்பட்டிருக்கும் செல்போன் டவரிலிருந்தே வெளிப்படும். இந்த டவர்கள் அமைந்துள்ள இடத்திலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவுக்கு கதிர்வீச்சு அதிகமாக இருக்கும்.

இக்கதிர்வீச்சால் புற்று நோய், தலைவலி, தூக்கமின்மை, மயக்கம், கவனக்குறைவு, காதில் இரைச்சல், ஞாபகசக்தி குறைவு, அஜிரணக் கோளாறு, இதயத் துடிப்பு அதிகரிப்பு போன்றவை ஏற்படக்கூடும் என்று ஆய்வு அறிக்கைகள் கூறுகின்றன.

மேலும் சிட்டுக் குருவிகள், மைனா, தேனீக்கள் போன்ற இனங்களைப் பார்ப்பதே ரொம்ப அபூர்வமாகி அழிந்துகொண்டு வருகிறது.

தீர்வுதான் என்ன ?1. குறைந்த அளவு கதிரியக்கத்தை வெளிபடுத்தும் சிறிய வகை ஆன்டெனாக்களை, குறைந்த பட்சம் 30 மீட்டர் சுற்றளவிலான பாதுகாப்பு வளையத்துக்குள் அமைக்கலாம்

2. மக்கள் அதிகமாக வசிக்கும் குடியிருப்பு பகுதிகள், மஸ்ஜித்கள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், மருத்துவமனைகள் ஆகியவற்றின் அருகில் செல்போன் டவர்கள் அமைப்பதை தவிர்க்கலாம்.

3. செல்போன் டவர்கள் இல்லாமலேயே செயல்படக் கூடிய நவீன செல்போன் தொழில் நுட்பத்தை பயன்படுத்தலாம்.

4. பொதுமக்கள் தங்கள் வசிக்கக்கூடிய குடியிருப்பு பகுதியின் ஒரு பகுதியை செல்போன் டவர்கள் அமைக்கும் நிறுவனங்களுக்கு வாடகைக்கு விடுவதை தவிர்க்கலாம்.


இறைவன் நாடினால் ! தொடரும்.....................

2 comments:

  1. // 4. பொதுமக்கள் தங்கள் வசிக்கக்கூடிய குடியிருப்பு பகுதியின் ஒரு பகுதியை செல்போன் டவர்கள் அமைக்கும் நிறுவனங்களுக்கு வாடகைக்கு விடுவதை தவிர்க்கலாம்.//


    நம்ம ஊருலே இருக்கிற நபர்கள் இதை முக்கியமாக பின்பற்ற வேண்டும்.

    ReplyDelete
  2. வாழும் அனைத்து உயிர்களுக்கும் இம்மண்ணில் வாழ உரிமையுண்டு. ஏனோ நாம் மட்டுமே வாழப் பிறந்தவர்கள் மாதிரி இயற்கை சுழற்சியை அழித்து வருகிறோம். இப்படியே போனால் இந்தப் பூமி நாம் வாழக் கூட தகுதியில்லாமல் போகக் கூடும்

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers