kalinjabyr:SteelSeries | Titanium Auto Sales
The SteelSeries was the world'...
Sunday, April 1, 2012
அதிரை(க்) “கடல்” : தெரிந்ததும் – தெரியாததும் !
மலையும் மலை சார்ந்த பகுதியும் குறிஞ்சி !
காடும் காடு சார்ந்த பகுதியும் முல்லை !!
ஆறும் ஆறு பாயும் சமவெளிப் பகுதிகளும் மருதம் !!!
கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல் !!!!
மணலும் மணல் சார்ந்த பகுதிகளும் பாலை !!!!
என சங்ககால வாழ்க்கை வரலாறாக நம்மூரு தொடக்கப்பள்ளியில் நாம் படித்திருப்போம்.
கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல் பகுதியில் மீன்பிடித்தல், உப்பு உற்பத்தி, உலர்மீன் ( அதாங்க “கருவாடு” ) உற்பத்தி, இறால் வளர்ப்பு மற்றும் எண்ணற்ற தொழில்கள் அன்றாடம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
நடப்பு நிதியாண்டில், நமது நாட்டின் கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதி, 15 ஆயிரம் கோடி ரூபாயைத் தாண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மீன்பிடித்தல் :
“தந்தை மகனுக்கு தினமும் மீன் பிடித்து கொடுப்பதை விட மீன் பிடிக்க கற்றுக்கொடுத்தால் அவன் வாழ்க்கை பிரகாசமாகும்” என்பது புதுமொழி. கடல் ஓரத்தில் வசிக்கும் மக்களுக்கு அன்றாடத் தொழிலாக மீன் பிடிப்பு உள்ளது.
உப்பு :
தமிழகத்திலுள்ள உப்பு அதிகளவில் உற்பத்தி செய்யக்கூடிய ஊர்களில் நமதூரும் ஓன்று என்ற சிறப்பைப் பெறுகின்றது. “உப்பில்லா பண்டம் குப்பையிலே” என்றொரு பழமொழி உண்டு. அதே சமயத்தில் “அளவான உப்பே உடல்நலத்திற்கு நல்லது” என்று மருத்துவ வல்லுனர்களின் குறிப்புகளும் தெரியப்படுத்த தவறியதில்லை.
கடல் தினச்செய்தியாக :
நமது நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில் கடல் சார்ந்த தொழில்களை மேம்படுத்தி இதன்மூலம் அதிகளவில் வேலைவாய்ப்புகளை பெருக்கிட வேண்டும். மேலும் கடலின் இயற்கை வளங்கள் அழிவு மற்றும் மாசுபடுதல் போன்றவற்றிலிருந்து பாதுகாக்க வேண்டும் என்பது ஒரு தனி மனித மற்றும் சமூகக் கடமையாகும்.
இறைவன் நாடினால் ! தொடரும்......................
சேக்கனா M. நிஜாம்
Subscribe to:
Post Comments (Atom)
மீள் பதிவு செய்ய வேண்டிய ஆக்கம்
ReplyDelete