kalinjabyr:SteelSeries | Titanium Auto Sales
The SteelSeries was the world'...
Monday, May 14, 2012
தலைவர் யார் ? !
1. நானே பெரியவன்..... நானே சிறந்தவன்......என்னைவிட உயர்ந்து வர ஒருவன் பிறந்து வரணும் என்று தன்னைத் தானே எப்போதும் உயர்த்தி பேசுவது
2. விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இல்லாதது
3. எதிர்மறையாகச் சிந்திப்பது
4. பொய்யான வாக்குறுதிகளை கொடுப்பது.
5. தோல்வியைக் கண்டு முடங்கிவிடுவது
6. அடுத்தவர் வேலைகளில் குறுக்கீடு அல்லது குறைகள் சொல்வது
7. தன்னை அடுத்தவர் புகழக்கேட்டு மனம் மகிழ்வது.
8. சிறியப் பிரச்சனைகளை ஊதிப் பெரிதாக்குவது. அடுத்தவர்கள் மீது பழிபோடுவது
9. மலிவான விளம்பரங்களைத் தேடிக்கொள்வது
10. பதவி...! பதவி...!! பதவி...!!! என்ற நினைவில் வாழ்வது
போன்ற தீய எண்ணங்களைத் தூக்கி தூர வைத்துவிட்டு
நல்லப் பண்புகளாகிய.............
1. எளிமையாக வாழ்தல்
2. ஒழுக்கம், கட்டுப்பாடு, நல்ல நட்பு, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, பொறுமை, அன்பு செலுத்துதல், கடமையை நிறைவேற்றுதல்
3. வேகமாகச் செயல்படுதல்
4. எப்பொழுதும் நேர்மையாக செயல்படுதல்
5. தொடர்ந்து கற்றுக்கொண்டே இருத்தல்
6. மூத்தோர்களின் நல்ல அனுபவங்களைப் பெறுதல்
7. ஆக்கப்பூர்வமாகச் சிந்தித்துச் செயல்படுதல்
8. தீர்க்கமான முடிவு செய்தல்
9. வீண் விரயத்தைக் குறைத்தல்
10. தரத்தை மேம்படுத்துதல்
11. திட்டமிடுதல்
12. முன்னேற்றத்திற்கான ஆலோசனைகளை வழங்குதல்
13. எளியோருக்கு உதவுதல்
போன்றவற்றை வளர்த்துக்கொள்ளுங்கள். வாழ்வில் நிச்சயம் மேன்மை அடைவீர்கள். இதற்கு சிந்தனையைத் தூண்டும் ஒரு எடுத்துக்காட்டை தங்களுக்கு கூற விரும்பிகிறேன்.....
நூறு பேர் கூடியிருந்தக் கூட்டத்தில் ஒரு பேச்சாளார் ஒரு ஆயிரம் ரூபாய் நோட்டைக் காட்டி “யாருக்கு இது பிடிக்கும் ? ” எனக் கேட்டார். கூடியிருந்த அனைவரும் தனக்கு பிடிக்குமென கையைத் தூக்கினர். பேச்சாளாரோ “உங்களில் ஒருவருக்குத்தான் இந்த ஆயிரம் ரூபாயைத் தருவேன் ஆனால் அதற்கு முன்” எனச் சொல்லியவாறு அந்த ஆயிரம் ரூபாயைக் கசக்கி சுருட்டினார். பிறகு அதை சரி செய்து “இப்போதும் இதன் மீது உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா ?” என்றார். “ஆம்“ என்று அனைவரும் கையைத் தூக்கினர்.
மீண்டும் அவர் அந்த ரூபாய் நோட்டை தரையில் போட்டு காலால் நசுக்கி அந்த அழுக்கான நோட்டை காட்டி “இன்னும் இதன் மேல் உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா ?” என்றார் “ஆம் “ என்று அனைவரும் மீண்டும் கைகளை தூக்கினர்.
அவர் தொடர்ந்தார்.....கேவலம் ஒரு ஆயிரம் ரூபாய்த்தாள் பல முறை கசங்கியும், மிதிப்பட்டும், அழுக்கடைந்தும் அதன் மதிப்பை இழக்கவில்லை. ஆனால் மனிதர்களாகிய நாம் அவமானப்படும் போதும் , தோல்விகளை சந்திக்கும் போதும் மனமுடைந்து போய் நம்மை நாமே தாழ்த்தி கொள்கின்றோம். நம்முடைய மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. நீங்கள் தனித்துவமானவர். இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருத் தனித் தன்மையை “அல்லாஹ்” நமக்கு வழங்கியுள்ளான். அதன் மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. ஆகையால் நாம் ஒவ்வொருவரும் செய்யும் நல்ல செயல்களின் மூலம் சிறந்தவன், ஒழுக்கமானவன், தலைமை வகிக்க தகுதியானவன் போன்ற சிறப்பைப் பெறுகின்றோம்......
நீங்கள் ஒருவருக்கோ அல்லது நூறு பேருக்கோ சிறந்தவனாகவோ அல்லது தலைவனாகவோ இருந்தாலும் சரி அல்லது இல்லாவிட்டாலும் சரி தன்னம்பிக்கையை இழக்காமல் நல்லப் பண்புகளைத் தேர்ந்தெடுத்துக் கடைப்பிடியுங்கள். சமூகத்தில் நல்லவர்கள் எண்ணிக்கை கூடுதலாக வருவதற்கு நீங்கள் ஒரு காரணமாக இருப்பீர்கள் ( இன்ஷா அல்லாஹ் ! )
சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! தொடரும்.....................
Subscribe to:
Post Comments (Atom)
அருமையான கட்டுரை.வாழ்த்துகள்
ReplyDeleteஅனைவருக்கும் தான் தலைவராக வேண்டுமென்ற ஆவல்!
ReplyDeletePlease visit
http://nidurseasons.blogspot.in/2012/05/blog-post_25.html
// அருமையான கட்டுரை.வாழ்த்துகள் //
ReplyDeleteமூத்த சகோ. முஹம்மது அலி ஜின்னா அவர்களுக்கு நன்றி !
தலைவன் எப்படி இருக்க வேண்டும்
ReplyDeleteஎன்பதை கருத்துடன் அளவுகோல்
வைத்து அளந்த மாதிரி ஒரு பதிவு