.

Pages

Wednesday, August 29, 2012

'சந்திப்பு' : மனிதவள மேம்பாட்டுத் துறை நிபுணர் மூத்த சகோ. இப்ராகிம் அன்சாரி [காணொளி]




இணைய ஊடகத்துறையில் ஈடுபட்டுள்ள நமதூர் சகோதரர்களுக்கு நேரிலும், மின்னஞ்சல் மூலமாகவும் சில கேள்விகளை அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதையடுத்து, இதன் தொடர்ச்சியாக ஏராளமான மூத்த பதிவர்கள் மற்றும் இளம் பதிவர்கள் என அவரவர்களுக்குரிய தனித்தன்மையுடன் கருத்துகளைக் காணொளியில் பதிந்தும், மின்னஞ்சல் மூலமாக அனுப்பியும் வருகின்றனர். ( அல்ஹம்துலில்லாஹ் )

இதன் மூலம் ஒன்று மட்டும் மிகத்தெளிவாக நாம் அறிய முடிகின்றது. அவை ஊடக ஒற்றுமை, புரிந்துணர்வு, சமூக அக்கரை மற்றும் தன்னலமற்ற சேவைகள் மட்டுமே என்றால் மிகையாகாது. மேலும் இவர்களால் பதியப்படும் கருத்துகள் இளம் பதிவர்களுக்கு ஊடகத்துறையில் காலூன்றுவதற்கு உதவும். ( இன்ஷா அல்லாஹ் ) !

இந்த வாரம்...

1. ஊடகத்துறையைப் பற்றி...
2. ஊடகத்துறையில் நமது சமுதாயத்தினரின் பங்கு...
3. இளம் பதிவர்களுக்கு கூறும் அறிவுரைகள்...
4. நமதூர் பதிவர்களின் தனிச்சிறப்பு...

ஆகிய கேள்விகளை முன்வைத்து மனிதவள மேம்பாட்டுத் துறை நிபுணர் மூத்த சகோ. இப்ராகிம் அன்சாரி அவர்களைச் சந்தித்து அவர்களின் கருத்தைப் பெற்றோம்.

மூத்த சகோ. இப்ராகிம் அன்சாரி அவர்களைப்பற்றிய சிறு குறிப்பு :

‘பொருளாதார நிபுணர்’, ‘சமூக நீதியின் முரசு’ என இணையத்தோடு தொடர்புடைய நண்பர்களால் பாரட்டப்படுகிற மூத்த சகோதரர் இப்ராகிம் அன்சாரி அவர்கள் நமதூர் காதிர் முஹைதீன் கல்லூரி, வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரி, திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி போன்றவற்றில் பயின்றவர் ஆவார்.

கல்லூரி நாட்களில் நமது சமுதாயம் சார்ந்த பல கட்டுரைகளை துடிப்புடன் எழுதி அதற்கு பல பரிசுகளும் பெற்றுவர். குறிப்பாக கல்கத்தா பாரதி தமிழ் சங்கம் நடத்திய கட்டுரைப் போட்டியில் கலந்துகொண்டு “பாரதி இதயம்” என்ற தலைப்பிற்காக அகில இந்திய முதல் பரிசு பெற்றிருப்பது இவருக்கு மட்டுமல்ல நமதூருக்கே பெருமை.

பல்வேறு உலக நாடுகளில் கணக்காளராகவும், மனிதவள மேம்பாட்டுத் துறையிலும் பணிபுரிந்துள்ள இவர் அமீரகத்தில் இந்திய தூதரகம் சார்பாக நடத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை பற்றிய கருத்தரங்கில் தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக பங்கேற்று உரை நிகழ்த்தியது. மேலும் ORACLE மென்பொருள் நிறுவனம் சார்பாக மனிதவள மேம்பாட்டுத்துறையில் சிறப்பு பயிற்சி பெற்றதற்கான பாராட்டு கேடயம் பெற்றிருப்பது இவருக்கு கூடுதல் சிறப்பாகும்.

நமது சகோதர வலைதளங்களில் பொருளாதார, சமூக, அரசியல் போன்ற விழிப்புணர்வு ஆக்கங்கள் எழுதிவருவதோடு மட்டுமல்லாமல் இயற்கையாகவே சமுதாயப்பணி மற்றும் கல்விப்பணியில் ஆர்வமிக்கவர். குறிப்பாக இவர் எழுதி வரும் ‘மனு நீதி மனித குலத்துக்கு நீதியா ?‘ என்ற நெடுந்தொடர் அனைவரும் பயன்பெறும் நோக்கில் விரைவில் புத்தகமாக வெளியிடுவதற்குரிய முயற்சியில் இறங்கியுள்ளார்.


சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! பதிவர்களின் சந்திப்பு தொடரும்...

1 comments:

  1. சிறந்த பேச்சும் கேட்டேன்;
    ....சிதறா வண்ணம் மனத்தைத்
    திறந்த பேட்டி யாக
    ....திறவு கோலாய் விடைகள்
    சிறந்து வழங்கி இணையம்
    ... சீராய் வளரத் தந்தீர்
    பிறந்த ஊரின் பெருமை
    ...போற்றும் காக்கா வாழ்க !

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers