.

Pages

Tuesday, September 25, 2012

'சந்திப்பு' : ‘தொழில் அதிபர்’ சகோ. மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) அவர்கள் [காணொளி]



வணிகம் என்பது சமுகத்திற்கு மிக பயனளிக்கும் ஒரு சேவையாகும்  மனிதன் தனது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள  வேண்டி பொருளீட்டுதலை பெருக்கிக்கொண்டான். தொழிலில்  தனது அறிவுத்திறனை பயன்படுத்தி நேர்மையை கடைபிடித்தால் நீண்ட நாள் நீடிக்கலாம்.

‘சந்திப்பு’ தொடருக்காக...

1. தொழில்துறையைப் பற்றி....
2. தொழிலில் எற்பட்ட ஆர்வம்...
3. புதிதாக தொழில் முனைவோருக்கு கூறும் அறிவுரை....

ஆகிய கேள்விகளுடன் சகோ. மு.செ.மு. சபீர் அஹமது அவர்களைச் சந்தித்து அவர்களின் கருத்தைப் பெற்றோம்.

சகோ. மு.செ.மு. சபீர் அஹமது அவர்களைப் பற்றிய சிறுகுறிப்பு :
கடந்த இருபது ஆண்டுகளாக திருப்பூரில் தொழில் புரியும் இவர் நமதூர் காதிர் முஹைதீன் பள்ளி மற்றும் கல்லூரியில் கல்வி பயின்றவர். எந்தவொரு கருத்தையும்  நகைச்சுவை உணர்வோடு எடுத்துச்சொல்ல வேண்டும் என்று விரும்பும் இவர் பத்திரிக்கைதுறையில் கூடுதல் ஈடுபாடு கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! 'சந்திப்புகள்' தொடரும்...

8 comments:

  1. மிகவும் எளிமையாக ஆனால் இனிமையாக அத்துடன் அருமையான கருத்துக்களை சொல்லி இருக்கிறார். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. தொழிலில் மூலதனமாக 'வட்டி' என்ற கொடுரம் சிறிதளவில் கூட இடம்பெறக்கூடாது என்ற அருமையான கருத்தை வலியுறுத்தியுள்ளது இச்சகோதரரின் தனிச்சிறப்பு.

    வாழ்த்துகள் !

    இறைவன் நாடினால் ! தொடருங்கள் தொழில் முனைவோருக்கு முன்னுதாரணமாக...

    ReplyDelete
  3. உள்நாட்டில் தொழில் செய்ய ஊக்கம் தரும் நல்ல பேச்சு. வாழ்த்துக்கள் மச்சான்!

    100% ஹலாலான சம்பாத்தியம் என்ற திருப்தி சொந்த தொழில் ஒன்றில் மட்டுமே பெற முடியும் என்பதற்கு தெளிவான விளக்கம்.

    ReplyDelete
  4. தெளிவான சிந்தனையையும் தொழில் முனைவோருக்கு நல்ல ஊக்கமாகவும் அமைந்துள்ளது, வாழ்த்துக்கள் சகோ..

    ReplyDelete
  5. அருமையான கருத்துக்களை நமக்கு சொல்லி தந்து இருக்கிறார். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  6. நாம் என்ன தொழில் செய்தாலும்
    நம் உள்ளுக்குள் உள்ள உணர்வின்
    வெளிப்பாடு சமயம் வரும்போது
    வெளிப்படும் என்பது நல்ல கருத்து
    அந்த உணர்வைத்தான் "நீறு பூத்த நெருப்பு "
    என்பார்கள் .தொழிலும் சிறந்தது போல்
    எழுத்திலும் சிறக்க வாழ்த்துக்கள் ..!

    ReplyDelete
  7. எனது சிற்றுரையை பார்த்த கேட்ட நன்பர்கள் பெரியோர்கள் நேரிலும் மெயில் வழியிலும் கருத்தாகவும் என்னை உர்ச்சாகப்படுத்தி இருக்கிரீர்கள் அனைவர்களுக்கும் அல்லாஹ் ரஹ்மத்தை அருல்வானாக ஆமீன்

    ReplyDelete
    Replies
    1. congrats maithunarey!
      sorry for delayed coments, but u don't know how many times i viewed ?!

      i feel proud of u my dear!

      -RAFIA (MSM)
      Jeddah.

      Delete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers