பள்ளி படிப்பை முடித்து
கல்லூரிக்கு சென்றுவந்து
பட்டம் பெற்று வீடு வந்தேன்
வீட்டருகே அன்னையின்
அழுகை சத்தம்...! ஏன் ..?
உள்நாட்டில் வேலை செய்து
வருவாயை பார்த்த நான்
வெளிநாடு செல்வதற்கு
உதவி செய்த என் அன்னை
வீட்டிற்குள் அழும் சத்தம்...! ஏன் ..?
என் தந்தை கடும் நோய்
பல நாள் கடந்த பின்னர்
நலம் பெற்று வீடு திரும்பிய பின்
வீட்டிற்குள் என் அன்னை
அழும் சத்தம்...! ஏன் ..?
அரை குறையாய் இருந்த வீடு
அழகு படுத்தி வண்ணமேற்றி
கம்பீரமாய் காட்சி தந்த
வீட்டிற்குள் என் அன்னை
அழும் சத்தம்...! ஏன் .?
மங்கலமாய் மகள்
திருமணம் ஜாம் ஜாமென்று
நடந்து மற்றவர் மகிழ்வாய்
இருக்கையிலே மனம் இடிந்து
வீட்டிற்குள் அழும் சத்தம்...! ஏன் ..?
வருமானம் ஏதுமில்லா நிலையில்
உற்றார் உறவினர் உதவிடா நிலையில்
வட்டி எனும் அரக்கன் பிடியில்
வீட்டினை அடகு வைத்து
வீட்டையே பறி கொடுத்து
பரிதவிக்கும் அழும் குரல் தான்
அன்னையின் அழும் குரல்..!
அதிரை சித்திக்
'அழும் குரல்' தொடரும்...
'அழும் குரல்' தொடரும்...
'வட்டி' என்னும் குடும்பக் கொல்லியைப்பற்றி சிந்திக்கும் வகையில் எடுத்துரைத்த பத்திரிக்கைதுறை நிபுணருக்கு என் வாழ்த்துகள்
ReplyDeleteஇறைவன் நாடினால் ! தொடரட்டும்...
சமூகத்தில் நடந்த நிகழ்வு ஓன்று...
தன் கணவன் பைபாஸ் சர்ஜரிக்காக தன் வீட்டுப் பத்திரத்தை அடமானமாக வைத்து பணம் பெறுகிறாள் ஒரு பெண்மணி. ஒரு காசு, இரண்டு காசு, மூன்று காசு என்று சொல்லி வட்டியை குடும்ப தொழிலாகக் கொண்டவனிடம் வெற்றுப் பேப்பர்களில் அவன் காட்டிய இடத்தில் எல்லாம் கையெழுத்தை போட்டுக்கொடுக்கிறாள், அவனும் வீட்டை சர்வேயர் வைத்து அளவீடு செய்து உறுதி செய்துவிட்டு பணத்தைக் கொடுக்கிறான். இறுதியில் அவளால் வாங்கிய பணத்திற்கு வட்டியை முழுவதும் செலுத்த முடியாமல் தான் ஆசை ஆசையாய் கட்டிய வீட்டையும், நிலத்தையும் அவனிடமே இழக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டு நடு வீதிக்கு வரும் சூழல்.
மிக முக்கியமான சமூக சிந்தனை. ஒழிக்கப்படவேண்டிய ஆலகால விஷம்.
ReplyDeleteபொருளாதார ரீதியில் பார்த்தால் இந்தியா தான் வெளிநாடுகளில் வாங்கியுள்ள கடன்களுக்காக தனது வருமானத்தில் 26% த்தை வட்டியாக செலுத்துகிறது. அதாவது கால்வாசி வட்டியாகப் போகிறது. நாடு குடிதண்ணீருருக்கும், மின்சாரத்துக்கும் அழுகிறது. இதேபோல் தனி மனிதர்களும் வட்டியில் சிக்கி மன இம்சைக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்ளும் நிலைவரை சென்று விடுகிறார்கள்.
வட்டியை ஒழித்த பொருளாதாரம் வேண்டும் என்பது இன்று உலகில் ஒரு பாகத்தில் மிகத் தீவிரமாக வைக்கப்படும் கோரிக்கை. இஸ்லாம் முன்னிலைப் படுத்திய வட்டி இல்லாத பொருளாதாரம் உலகில் வரும் நாள் வெகு தொலைவில் இல்லை. இதற்காக து ஆச செய்வோம்.
இப்போது இத்தகைய விழிப்புணர்வை தருகின்ற தம்பி நிஜாம் போன்றவர்களை பாராட்டுவோம். முயற்சிகளுக்குத் தோள் கொடுத்து துணை நிற்போம்.
பதிவுக்கு முதலில் நன்றி.
ReplyDeleteநானும் சேர்ந்து அழுதேன்.
வாழ்க வளமுடன்.
அன்புடன்.
K.M.A. JAMAL MOHAMED.
Consumer & Human Rights.
HO Palayankottai TN.,
த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.
*******************************************
கவிதையை ..படித்து நானும் அழுதேன்
ReplyDeleteகவிதைக்கு தந்த பெரும் மதிப்புரையாக
கருது கிறேன் ..நன்றி ..ஜமால் காக்கா
மனித மேம்பாடு நிபுணர்
ReplyDeleteஅன்சாரி காக்காவின் விளக்கம்
வட்டியின் கொடுமை
நாட்டையே ஆட்டி படைக்கிறது
மனிதவள மேம்பாடு நிபுணர்
ReplyDeleteஅன்சாரி காக்காவின் விளக்கம்
வட்டியின் கொடுமை
நாட்டையே ஆட்டி படைக்கிறது
இன்று என்னிடம் ஒரு முறையீடு வந்தது. அதில் அவர் வீட்டுப் பத்திரத்தை அடமானமாக வைத்து பணம் வாங்கி துபை வந்தாராம்.எனக்கு திகீர் என்றது. உடனே தம்பி நிஜாமீன் விழிப்புணர்வை open செய்து அவருக்கு காட்டி பல அறிவுரை கூறி
ReplyDeleteஉடனே வீட்டுப் பத்திரத்தை திருப்புமாறு அனுப்பி வைத்தேன்.
பதிவு செய்த எல்லா பதிவுகளையும் அவர் பார்த்தார்.
'வட்டி' என்னும் குடும்பக் கொல்லியைப்பற்றி சிந்திக்கும் வகையில் எடுத்துரைத்த பத்திரிக்கைதுறை நிபுணருக்கு என் வாழ்த்துகள்.
ReplyDelete