kalinjabyr:SteelSeries | Titanium Auto Sales
The SteelSeries was the world'...
Monday, October 29, 2012
வரலாறு : நெசவுத்தெரு சங்கம் [ Since 1913 ]

கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் சரியாக 1900 வருடங்களில் அதிரைப்பட்டினத்திலிருந்து குறிப்பாக நெசவுத்தெரு வாசிகள் தொழில் மற்றும் சம்பாத்தியம் தேடி பர்மா நாட்டை நோக்கி படையெடுத்தனர் [அன்று அவர்கள் காட்டி கொடுத்தது இன்றும் தொடருகிறது ஆனால் நாடுகள் வெவ்வேறு], சொந்த தொழில் செய்தும், சம்பளத்துக்கு வேலை செய்தும் நல்ல சம்பாத்தியம் செய்தார்கள். நிறைய பணம் சம்பாதித்தார்கள். ஓரளவு பணம் சேர்ந்தவுடன் நாம் பிறந்து வளர்ந்த ஊருக்கு/தெருவுக்கு அதன் முன்னேற்றத்திற்காக ஏதாவது செய்யவேண்டும் என்ற நோக்கம் [அது இன்றும் தொடர்கிறது] அனைவரிடையே இருந்தது. இவர்களின் முயற்சியால் சேமிப்பு முலம் சில ஆயிரங்கள சேர்ந்தன. அந்த பணத்தை ஊருக்கு எடுத்து சென்று எதாவது நல்ல காரியங்களில் ஈடுபடுத்த முயற்சி செய்தார்கள். அதன் விளைவாக தெருவாசிகள ஒன்றுகூடி விவாதம் செய்தார்கள்.
அதன்படி 1910 ம் அம்பலகாரவீடு இபுறாகீம்ஷாகிப் அவர்கள் தலைமையில் கமிட்டி அமைக்கபட்டு ஊரில் உள்ள பெரியவர்களிடம் யோசனை கேட்கப்பட்டது. நடுதெருவை சேர்ந்த சேகுதம்மி ஹாஜியார் மறறும் அரபு மரைககாயர் வாப்பா ஆகியோர் தோப்பு-துரவு வாங்கி போடுங்கள் வரும் சந்ததியர்களுக்கு பயன்படும் என்று ஆலோசனை சொன்னார்கள். மற்றவர்கள தெரு முஹல்லாவுக்கு ஒரு சங்கம் கட்டுங்கள் அதுவே சமுதாயக்கூடமாகவும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் சொன்னார்கள்.
இரு வேறு கருத்து எழுந்ததால் தெருவிலும் இரன்டு பிரிவாக ஆகி சங்கமா, தோப்பா எனறு குழப்பத்தில் இருந்துகொண்டிருந்த்து. எனவே மேலும் ஆலோசனை பெற மேலத்தெரு அண்ணாவியார் அவர்களிடம் சென்றனர், அவர் தந்த ஆலோசனை படி சங்கம் கட்டினால் அது ஒரு சமுதாய கூடமாக அனைத்து மக்களும் பயன் படுத்த ஏதுவாக அமையும் என்ற ஆலோசனை ஏற்றுக்கொள்ளப்பட்டு அதுவே நெசவுத்தெரு வாழ் பர்மாவாசிகளுக்கு தெரிவிக்கப்பட்டு மஆதினுல் ஹஸனாத்தில இஸ்லாமிய சங்கம் என்ற பெயரையும் அங்கேயே தீர்மானித்தார்கள் .
சரியாக 10 ஆண்டில் [கட்டிடப்பொருட்கள் பர்மா மற்றும் கேரளாவிலிருந்து வந்து சேருவதுக்கு அதிக நாள்எடுத்துக்கொண்டதாம்]. 1926 ம் ஆண்டு சங்க கட்டிடம் கட்டிமுடிக்கப்பட்டு, இதன் திறப்பு விழாவுக்கு பர்மாவிலிருந்து எல்லாரும் ஊர் வந்தார்கள். அவர்களை ரயில்வே ஸ்டேஷன் சென்று பூமாலை போட்டு வரவேற்று அழைத்து வந்தார்கள். பிறகு திரும்பி போகும் போதும் மாலை போட்டு அனுப்பி வைத்தார்களாம். இந்த பழக்கம் கொஞ்ச நாள் வரை இருந்தது.
சஙகத்தின் சார்பாக எல்லா வருஷமும் மீலாதுநபி விழா சிறப்பாக கொண்டாடுவார்கள். அதன்படி ஒரு வருடம் மீலாது விழாவுக்கு அறிஞர் அண்ணா சிறப்பு பேச்சாளராக அழைப்பு விடுக்கப்பட்டது. அன்று இரவு விடிய விடிய மழை பெய்த காரணத்தால் நடு இரவு தாண்டி வந்து சேர்ந்தார். அதற்குப்பிறகு விழா ஆரம்பித்து சிறப்பாக முடிந்தது, மேலும் விழா முடிந்தவுடன்தான் அண்ணாவுடன் அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டு இரவு விருந்து நடந்தது. இந்த மீலாது விழா 1985 வரை அதே சிறப்புடன் நடந்தது.
சங்கத்தின் சிறப்பு
- கட்டிட அமைப்பு களிமண்ணால் கட்டபட்டது.
- சுவர்களுக்கு சுண்ணாம்பு மற்றும் முட்டை கலந்து பூச்சு பூசப்பட்டது.
- பாடர்கள் (சுவர் ஓரங்கள்) வர்ண கலர்களால் வண்ணம் செய்து பல பொன்மொழிகள் எழுதபட்டு இருக்கும்.
போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும்
உன் கடமையை செய்.
எழுதப்பட்டிருந்த பொன்மொழிகளில் மேலே உள்ளது ஒரு உதாரணம்
4. சங்க கட்டிடம் முழுவதும் தேக்கு மரங்கள் , ஓடுகள் கேரளாவிலிருந்து வந்தது..
5. தெருவெல்லாம் குடிசைகள், சஙகம் மட்டும் பெரிய கட்டிடம்.
அதிராம்பட்டினத்தில் முதன்முதலில் நெசவு தெருவில்தான் சஙகமும், ஜமாத்தும் உருவானது. எல்லா வருடமும் மவுளுது நடக்கும், அதன் கடைசி நாள் அன்று பெரிய அளவில் ஒமல் சோறு தப்ரூகாக வழங்கபடும். [இன்று சந்ததியினரிடையே விழிப்புணர்வு ஏற்பட்டு வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது]
6. சங்க கட்டிடத்தை பாதுகாப்பதற்காக காவலுக்கு ஆள் போடபட்டது. அவரை எல்லாரும் சங்கத்து அப்பா என்று அழைத்தார்கள்.
இன்றும்... சங்க கட்டிடத்தில் நடக்கும் சில முக்கிய விடயங்கள்....
- நோன்பில் காலை முதல் லுஹர் வரை பெண்களுக்கான பயான்
- இரவில் பெண்களுக்கான தராவீஹ் தொழுகை
- நோன்பு கஞ்சி காய்ச்சி ஊர் முழுதும் வினியோகம்
- வாரந்தோறும் ஜனாப் ஹாஜி அதிரை கவிஞர் மு.மு தாஹா அவர்களின் பெண்களுக்கான சிறப்பு பயான்
- நாள் தோறும் காலை/மாலை சிறுவர்களுக்கான குரான் மதரஸா
- நாள் தோறும் இரவில் பெண்களுக்கான சிறப்பு குரான் & ஹதீஸ் மதரஸா
- திருமண நிக்காஹ் வைபோகம்
- திருமண விருந்து சமையல் மற்றும் விருந்து சாப்பிடும் கூடம்
- தெரு ஜமாத் கூட்டம் நடக்கும் இடம்
- அரசாங்கம் சம்பந்தப்பட்ட அலுவல்கள் [ஓட்டு கணக்கெடுப்பு, தடுப்பூசி, போலியோ, சிகிச்சை முகாம், மற்றும் பல....]
சங்க தலைவர்கள் :
- இபுறாகிம்ஷா
- கு.மு. காஷிம்
- மு.மு.மீராஷாகிபு
- மு.செ. பெரியதம்பி
- மீ.ப. பக்கீர் முகமது
- மு.செ. சேகுதாவூது
- மு.சே. சேக்காதியார்
- மு.சே. சம்சுதீன்.
- அ.யி.செ. முகமது தம்பி
- அ.யி.செ உமர்
- மு.செ. அப்துல் சமது.
- கா.மு.கலுஙகு முகமது
- மு.மு. சம்சுதீன்
- ப.அ.அப்துல் கரீம்
- மு.சே. நூர் முகமது
- செ.மு.முஸ்தபா
- கா.மு.அகமது ஜலாலுதீன்
- ப.அ.அப்துல் ஸமது
- மு.மீ. தாஹா
- மு. சேகுதாவுது.
- அ.யி.செ. முகைதீன் அப்துல் காதர்.
- அ.யி.செ. அப்துல் கபூர்
- அ. முகமது முகைதீன்.
தகவல் உதவி :
ஜனாப். ஜெகபர் அலி
மற்றும் நெசவுத்தெருவாசிகள்...
Subscribe to:
Post Comments (Atom)
நெசவு தெரு மக்கள்
ReplyDeleteசொந்தங்களாய் மாமன் மச்சான் உறவு கூறி
வாழும் நன்மக்கள் வாழ்க வளமுடன்