.

Pages

Sunday, November 18, 2012

[ 13 ] ஏன் அழுதாய்…? 'அழும் குரல்' தொடர்கிறது...[ பணத்திடம் மனித மனம் பேசினால்... ]

பணமே நீ இருக்கும்
இடமெல்லாம் புத்துணர்ச்சி
உன்னை இலக்காய் வைத்தே படிப்பு
உழைப்பிற்கும் நீயே இலக்கு
மருத்துவனும் உன் வரவை 
இரவு பகலாய் வரவேற்கிறான்
நியாங்கள் பேசுவோர் வண்டி வண்டியாய்
பொய் சொல்கிறார் உன் வரவுக்காக
கட்டாந்தரையை கூட வளமாக்கப்படுகிறது
விவசாயி உன் இருப்பிற்காக
பேரலையை பெரிது காணாமல்
மீன் பிடித்து வர கடல் செல்லும்
மீனவன் மீளா பயணம் செல்வதும்
உன்னை நாடியே.. உன் மீது
இவ்வளவு பற்று கொண்ட
மனிதன் மடியில் இருந்து கொண்டு
ஏன் அழுகிறாய்...?

நல்லவற்கு நான் சேர்த்தல்
நல்ல பல காரியங்கள் கை கூடும்
ஆனால்..
கெட்டவர்கள் கூடாரத்தில் சிக்கியல்லவா
தவிக்கிறேன் நான்..
ஒன்றுமறியா சிறுபிள்ளையை கடத்தி கொலை
காரணம் நானாம் ..
உடன் பிறந்த அன்பு சகோதரனுக்கு
உலை வைப்பதும் நானாம்
அரசியல் சூழ்ச்சியென்று
ஆயிரம் ஆயிரம் மக்களை
கொல்ல காரணமும் நான் என்று
என் தலையில் இத்தனை
குற்றச்சாற்று ..அழாமல் என் செய்வேன் !
நான் கிரியா ஊக்கி மட்டுமே
நல்லவர்க்கும் பொல்லாற்கும்
இடையே நான் திண்டாடும் நிலை
பொல்லாரின் செயல் கூடி
அழு நிலைக்கு ஆளானேன்..!

அதிரை சித்திக்
'அழும் குரல்' தொடரும்...
[ பன்னிரெண்டாவது அழும் குரலை கேட்க ]

8 comments:

 1. நாணயத்திற்கு இருபக்கம் போல் கை நிறைய சம்பாதிக்கும் இளைஞர்களுக்கும் இரு பக்கங்கள் அவர்கள் கையில் இருக்கும் பணத்தால் ஒரு பக்கம் நன்மை விளைகிறது மறுபக்கம் தீமை விளைகிறது. அது இளைஞர்களுக்கே புரிந்து விட்டது.

  அதனால் இளம் வயதிலே பணம் நிறைய சம்பாதிப்பதால் அதிகம் விளைவது நன்மையா ? தீமையா ? எனப் பார்த்தால்...

  பணம் இன்றைய மனித வாழ்க்கையில் முக்கிய பங்காற்றுகிறது. பணம் எல்லோருக்கும் தேவைப்படுவதால் ஒவ்வொருவரும் சம்பாதிக்க வேண்டியது அவசியமாகிறது. இன்றைய இளைய தலைமுறையினரில் ஒரு பகுதியினர் நிறைய சம்பாதிக்கிறார்கள். அதிகம் சம்பாதிப்பது தப்பில்லை. அது அவர்களது திறமை, அதிர்ஷ்டத்தை பொறுத்த விஷயம்.

  பணம் நிறைய நல்லது செய்கிறது. பணம் இருந்தால்தான் நம்மால் அடுத்தவர்களுக்கு கொடுத்து நல்லது செய்யமுடியும். பணத்தால் விளையும் நன்மைகளை பட்டியல் போடத் தொடங்கினால் அது வெகு நீளமாகும். அதுபோல் பணத்தால் உருவாக்கும் தீமைகளும் இருக்கின்றன. ஆனால் நாம் இங்கு “ அதிகம் விளைவது.... “ என்ற வார்த்தையை சேர்த்திருக்கிறோம். அதனால் அதிகம் எது விளைகிறது ? என்று ஆராய வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.

  முன்பு ஒருவர் சம்பாதித்து ஒரு குடும்பமே நடந்தது. ஒரு வீட்டில் ஒரே ஒரு பாத்ரூம்தான் இருந்தது. ஒரே ஒரு டி.வி. தான் இருந்தது. ஆனால் அந்த வீட்டில் உள்ள மனிதர்கள் அனைவரும் ஒன்றாக இருந்தார்கள். ஒன்றாக சாப்பிட்டர்கள். நன்றாக இருந்தார்கள்.

  இன்று ஒரு வீட்டில் இரண்டு, மூன்று பேர் சம்பாதிக்கிறார்கள், வீட்டிற்கு இரண்டு, மூன்று பாத்ரூம்கள். இரண்டு, மூன்று டி.வி.க்கள். சவுகரியங்கள் என்று நினைத்து மனிதர்கள் தனித்தனியாக பிரிந்தார்கள். பின்பு அந்த வீட்டில் உள்ளவர்களிடம் தனித்தனியாக அதிக பணம் சேர்ந்ததே அந்த பிரிவுக்கு காரணம்.

  இளம் வயதிலே நிறைய சம்பாதிக்கும் இளைஞர்கள், அந்த பணத்தால் எதை எல்லாம் அனுபவிக்க முடியும் என்று கணக்கு போடுகிறார்கள். அவர்களுக்கு நேற்றை பற்றிக் கவலை இல்லை. நாளையை பற்றிய நினைப்பும் இல்லை. இன்றுதான் என் கையில் இருக்கிறது அதை முடிந்த அளவு சுவையாக அனுபவித்துவிட வேண்டும் என்று அலைபாய்கிறார்கள்.

  உணவில், வீடு உணவின் ஆரோக்கியத்தை மறந்து தினமும் சுவைக்கு பாஸ்ட் புட் சாப்பிடுகிறார்கள். அது அவர்கள் உடலை குண்டாக்கி, பாஸ்ட்டாக அவர்கள் வாழ்கையை முடிக்கப் பார்க்கிறது தேவையற்ற பொழுதுபோக்குகள் அவர்கள் உடலை கெடுக்கிறது. முறையற்ற வாழ்க்கை அவர்களிடம் குற்ற உணர்வை ஏற்படுத்தி, மன உளைச்சலை உருவாக்கிறது. அதனால் பலர் நாற்பது வயதுக்கு முன்பே நடை பிணம்போல் ஆகிவிடுகிறார்கள்.

  அதிகமாக சம்பாதிக்கும் இளைஞர்கள் “ நான் ஒரு மாதத்தில் சம்பாதிப்பதை என் தந்தை ஒரு வருடம் சம்பாதிக்கிறார் “ என்று கர்வத்துடன் பேசுகிறார்கள். அதனால் குடும்பத்தில் சுயமரியாதை இழப்பும், தவிப்பும், பிரிவும் உருவாகிறது. இது குடும்பத்தில் ஏற்படும் தீமை.

  சமூகத்தை கணக்கிட்டு பார்த்தல், அதிக பணம் படைத்தவர்கள் – பணம் இல்லாதவர்கள் என்ற இடைவெளி தற்போது அதிகமாகிறது. பணம் படைத்தவர்கள் மென்மேலும் பணம் சேர்த்து கொண்டாடுகிறார்கள். பணம் இல்லாதவர்கள் மென்மேலும் ஏழையாகி திண்டாடுகிறார்கள். பணம் படைத்தவர்களின் கொண்டாட்டங்களையும், சவுகரியங்களையும் பார்த்து பணமற்றவர்கள் ஏங்குகிறார்கள். இந்த ஏக்கங்கள் சமூக பிரச்சனைகளை உருவாக்கிறது.

  பணம் ஒரு தரப்பினரிடம் குவியும்போது அங்கே மனித தரம் குறைகிறது பணத்தால் விளையும் தீமைக்கு பல முகங்கள் இருக்கின்றன. அதனை நாம் தினமும் ஊடகங்கள் வாயிலாக காண்கிறோம்

  ReplyDelete
 2. பதிவுக்கு முதலில் நன்றி.

  சகோதரர் அதிரை சித்திக் அவர்களின் கவிதை மிகவும் அருமை.

  பணமே உன்னைத் தேடி தேடி கடல் கடந்து வந்தோம்.
  வந்தது முதல் இன்று வரை நீ போதும் என்று இல்லை.
  உன் மீது கொண்ட காதலால் அனேகம் பேர் கவிழ்ந்தனர்.
  உன்னை ஒரு சாரார் தனலட்சுமி என்றும்,
  வேறு சாரார் செல்வம் என்றும், நாணயம் என்றும் கூறுவர்.
  உன் பெயரை வைத்தே மனிதனையும் எடை போடுகின்றனர்.
  உன்னைப்பற்றி நிறைய சொன்னால் நீ கோபிக்க மாட்டியாமே?

  வாழ்த்துக்கள்.
  வாழ்க வளமுடன்.
  அன்புடன்.

  K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
  த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
  உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.
  /////////////////////////////////////////////////

  ReplyDelete
 3. அருமை
  பணம் பத்தும் செய்யுமாம் அந்த பணமே எல்லாமுமாய்...

  ReplyDelete
 4. விருப்பம் இருந்தால் படிக்கவும்... கேட்கவும்...


  ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே...
  காசு காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே...
  உள்ளே பகை வையடா தாண்டவக்கோனே...
  உள்ளே பகை வையடா தாண்டவக்கோனே-அதுக்கு உதட்டில் உறவாடடா தாண்டவக்கோனே...
  கட்டி அழும் போதும் தாண்டவக்கோனே...
  கட்டி அழும் போதும் தாண்டவக்கோனே-பிணத்தைக்...
  கட்டி அழும் போதும் தாண்டவக்கோனே...
  பணப்பெட்டி மேலே கண்வையடா தாண்டவகோனே.....!

  இந்தப்பாடலில் ஆரம்பித்து...


  கையில் கொஞ்சம் காசு இருந்தால்... நீதான் அதற்கு எஜமானன்...
  கழுத்து வரைக்கும் காசு இருந்தால்... அதுதான் உனக்கு எஜமானன்...
  வாழ்வின் அர்த்தம் புரிந்து விடு. வாழ்க்கையை வாரிக் குடித்து விடு....

  இந்தப்பாடல் வரை ஒரு இரு பகிர்வுகள் உண்டு...

  பாடல் வரிகளை கேட்க : பணம். பணம்.. பணம்...

  படிக்க : மாயா... மாயா... எல்லாம்... சாயா... சாயா...

  நன்றி...

  ReplyDelete
 5. பணம் அழும் காரணங்கள் கவிதையில் சிறப்பாகச் சொல்லப் பட்டிருக்கிறது.

  'கிரியா' ஊக்கியான பணத்தை மனிதன் தன் ஆசைகளுக்கு பயன் படுத்தும் கொடுமையை என்ன சொல்ல?

  சிறப்பான 'அழு குரல்'!

  ReplyDelete
 6. பணம் தான் மனித வாழ்வில் மிக முக்கியமாக உள்ளது பணம் இல்லாட்டி பொணம் என்பார்கள்.அருமையாக சொல்லப்பட்டுள்ளது.ஏன் அழுதாய். வாழ்த்துக்கள் அதிரை சித்திக் அவர்களுக்கு.

  ReplyDelete
 7. அன்பு சகோதரி ..ரஞ்சனி வருகை
  நல் வரவாகுக..இத்தளத்தில்
  நல கருத்துக்களை நுகரவும் ..பதியவும்
  வரவேற்கிறோம் ..
  சகோதரர் திண்டுக்கல் நாராயணன்
  அவர்களின் பாடல் தொகுப்பில்
  நல்ல கருது அடங்கியவை வரவேற்கிறேன்
  ஜமால் காக்கா ,தம்பி மாலிக் ,சகோ ஹபீப் .
  வருகைக்கு நன்றியும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 8. பணத்தை மையமாக வைத்துதான் இவ்வுலகம் ,வாழ்க்கை எல்லாமே...!பணம் இவ்வுலக வாழ்க்கையில் முக்கியமான அங்கம் அது இல்லாமல் வாழமுடியாது. அதே சமயம் அளவோடு இருந்தால் தேவைக்கு மட்டும் இருந்தால் போது மானதே. எந்த பயமும் இல்லை பிரச்சனையும் இல்லை.தேவைக்கு மிஞ்சி இருப்பதால் தான் நிம்மதி இல்லாமல் போகிறது. பிரச்சனையும் ஏற்படுகிறது.இது போல் அழ வேண்டி இருக்கிறது.

  ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers