kalinjabyr:SteelSeries | Titanium Auto Sales
The SteelSeries was the world'...
Sunday, November 25, 2012
[ 15 ] ஏன் அழுதாய்…? அழும் குரல் முற்றும்
தங்கமே..!
நீ இருக்கும் வீடு
செல்வமான வீடு
நீ அதிகம் இருப்பு இருக்கும் நாடு
செல்வமான நாடு
அழகுக்கு அழகு சேர்க்கும் உன் அணிகலன்
உன் வருகை..!
செல்வத்தின் வருகை
நல்ல மனதை
"தங்கமான மனது" என்பர்
அந்த அளவிற்கு உன் சிறப்பு
இன்னும் பல சிறப்பு இருந்தும்
என் அழுதாய் இன்று...?
இதோ தங்கத்தின் பதில்...
அங்கம் மின்னும் தங்கமான நான்
அங்கத்திற்கு பங்கம் சேர்க்கும்
நிலையாக மாறிப்போனேன் நான்
விலை உயர்வு காரணமாய்
காது கம்மல் அபகரிக்க
காதையே அறுத்து செல்லும் அவலம்
கையை அலங்கரித்த வலைவி
கையை வெட்டி செல்லும் அவலம்
அன்பின் வெளிப்பாடாய் இருந்த நான்
அபாயத்தின் அறி குறியாய்
ஆகிப் போனேனே...
அதை நினைத்து தான் அழுகிறேன்..!
Subscribe to:
Post Comments (Atom)
சமூகத்தின் அவலங்களை தோலுரித்துக்காட்டிய அன்புச்சகோதரர் அதிரை சித்திக் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியும் பாராட்டுகளும்
ReplyDeleteஇறைவன் நாடினால் மற்றுமொரு சிறப்பான விழிப்புணர்வு தொடரைத் தந்திட அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
முதலீடுகள் பலவிதம் அதில் தங்கத்தில் முதலீடு செய்வது என்பது ஒரு விதம் உடனடியாக பணமாக மாறக்கூடிய அதன் தன்மையினால் தங்கத்தை லிக்விட் அசெட் [ Liquid Asset ] என்று அழைக்கக் கூடியவர்களும் சமூகத்தில் இருக்கின்றார்கள்.
ReplyDeleteசரி விசயத்துக்கு வருவோம்...
தங்க முதலீட்டில் பல பெயர்களில் திட்டங்கள் வந்தபிறகும், பெண்களுக்கு நகைச் சீட்டின் மீது இருக்கும் மோகம் கொஞ்சமும் குறைந்தபாடில்லை. யாரும் எளிதாகப் புரிந்துகொண்டு ஈஸியாக பணத்தைக் கட்ட முடியும் என்பதால் இதுபோன்ற தங்க நகைச் சீட்டுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர்.
தங்க நகைச் சீட்டு கட்டாத ஒரு பெண்ணை தமிழ்நாட்டில் தேடிக் கண்டுபிடிப்பது என்பது கடினமான வேலை. மாதச் சம்பளம் 5,000 ரூபாயோ, 50,000 ரூபாயோ அக்கம்பக்கம் இருக்கும் நகைக் கடையில் நகைச் சீட்டு போட்டு தங்கம் வாங்க நினைக்காத பெண்களே இல்லை.
நகைகள் வியாபாரம் செய்யும் நிறுவனங்களும் தன் பங்கிற்கு தங்களிடம் வருகை புரியும் வாடிக்கையாளர்கள் தங்களிடம் நகைகள் வாங்குகின்றார்களோ இல்லையோ !? முதலில் அவர்கள் வைக்கும் வேண்டுகோள் இதுபோன்ற தங்க நகைச் சீட்டுகளில் இணைந்து மாத தவணையாக பணத்தை எங்களிடம் செலுத்துங்கள் என்று மூளைச்சலவை செய்வதே.
சகோதரிகள் கவனத்தில் கொள்ள வேண்டியவை :
ReplyDelete1. இது போன்ற தங்க நகைச் சேமிப்புத் திட்டத்தில் தாங்கள் இணைவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
2. "அதிக லாபம்" என ஆசை காட்டும் இடங்களில் எல்லாம் முதலீடு செய்யாதீர்கள்.
3. "உடனே முதலீடு செய்யுங்கள்...இன்றே கடைசி !" என்றெல்லாம் உங்களை அவசரப்படுத்தும் நிறுவனங்களின் அழைப்புகளை அலட்சியப்படுத்துங்கள்.
4. மற்றவர்கள் இணைகிறார்கள் என கண்மூடித்தனமாக நீங்களும் போய் மாட்டிக்கொள்ள வேண்டாம்.
5. கவர்ச்சிகரமான கிஃப்ட் பொருட்கள் கிடைக்கும் என்பதற்காகவெல்லாம் இதில் இணையாதிர்கள்.
6. பிரபல நடிகர், நடிகைகளைக் கொண்டு விளம்பரப்படுத்தும் இது போன்ற கவர்ச்சிகரமான திட்டங்களில் இணைவதை தவிர்த்து கொள்ளுங்கள்.
7. எங்கள் நிறுவனங்கள் சார்பாக திருமண மண்டபங்களில் நடைபெறும் "ஒரு செமினாருக்கு வாங்க", "சாப்பாடு ஃப்ரீ..." டிபன் ஃப்ரீ” என்றெல்லாம் அழைப்பு வந்தால் போகாதீர்கள்.
பதிவுக்கு முதலி்ல் நன்றி.
ReplyDeleteசேக்கனா M. நிஜாம்November 25, 2012 8:37 AM
சகோதரிகள் கவனத்தில் கொள்ள வேண்டியவை :
1. இது போன்ற தங்க நகைச் சேமிப்புத் திட்டத்தில் தாங்கள் இணைவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
2. "அதிக லாபம்" என ஆசை காட்டும் இடங்களில் எல்லாம் முதலீடு செய்யாதீர்கள்.
3. "உடனே முதலீடு செய்யுங்கள்...இன்றே கடைசி !" என்றெல்லாம் உங்களை அவசரப்படுத்தும் நிறுவனங்களின் அழைப்புகளை அலட்சியப்படுத்துங்கள்.
4. மற்றவர்கள் இணைகிறார்கள் என கண்மூடித்தனமாக நீங்களும் போய் மாட்டிக்கொள்ள வேண்டாம்.
5. கவர்ச்சிகரமான கிஃப்ட் பொருட்கள் கிடைக்கும் என்பதற்காகவெல்லாம் இதில் இணையாதிர்கள்.
6. பிரபல நடிகர், நடிகைகளைக் கொண்டு விளம்பரப்படுத்தும் இது போன்ற கவர்ச்சிகரமான திட்டங்களில் இணைவதை தவிர்த்து கொள்ளுங்கள்.
7. எங்கள் நிறுவனங்கள் சார்பாக திருமண மண்டபங்களில் நடைபெறும் "ஒரு செமினாருக்கு வாங்க", "சாப்பாடு ஃப்ரீ..." டிபன் ஃப்ரீ” என்றெல்லாம் அழைப்பு வந்தால் போகாதீர்கள்.
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்.
அன்புடன்.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.
நடக்கும் உண்மைகள் வரிகளில்...
ReplyDeleteமுதலீடுகள் பலவிதம் பற்றிய நண்பரின் விளக்கமும் அறிந்து கொள்ள வேண்டியவை...
இருவருக்கும் நன்றிகள் பல...
நிஜாம் காக்கா நாம் என்னதான் பெண்களுக்கு அறிஉறை சொன்னாலும் கேட்க மாட்டார்கள்.நாம் பெண்களுக்கு நகையை எப்படி கொடுத்தாலும் வாங்கதான் செய்வார்கள். சரி என்ன செய்வது அவர்கள் வாழ்க்கை அவர்கள் கையில். பதிவு அருமை. வாழ்த்துக்கள் சித்திக் அவர்களுக்கு.
ReplyDeleteசமூக அவலங்களை எண்ணி
ReplyDeleteஅலுது எழுத ஆயிரம் ஆயிரம் அவலம்
உண்டு ..தற்போதைக்கு 15 மட்டும் உதாரணம்
உலக பற்றற்ற கவி ஞானி சிரிப்பது போல்
ஏன் சிரித்தாய் இன்று .... என்ற தலைப்பில்
தொடர்வேன் ..வருகைக்கு நன்றிகள் பல
தங்கத்தின் அழுகையில் மனிதாபிமானம் நிறைந்துள்ளது.
ReplyDeleteபாரட்டுக்கள். வாழ்த்துகள். நல்லதொரு படைப்புக்கும் பகிர்வுக்கும் நன்றிகள்.
காதில் அனிந்த தங்க்கம் காதோடு போக கையில் அனிந்த தங்கம் கையோடுபோக பீரோலில் பூட்டி வைத்தால் பீரோலோடு போகிரது பேங் லாக்கரில் வைப்பதும் பாதுகாப்பு அல்ல என்பது சிலசம்பவங்களின் நிலைபாடு
ReplyDeleteஅனிந்த தங்க்கம் காதோடு போக கையில் அனிந்த தங்கம் கையோடுபோக பீரோலில் பூட்டி வைத்தால் பீரோலோடு போகிரது பேங் லாக்கரில் superb superb!
ReplyDelete