.

Pages

Thursday, November 1, 2012

[7] ஏன் அழுதாய்…? 'அழும் குரல்' தொடர்கிறது...

ஊரெங்கும் பெருவிழா
கல்விக்கு திரு விழா
கற்றவர்க்கு பாராட்டு..!
கற்பித்தவற்கு கௌரவிப்பு..!
கம்பீர மேடையில்..!
கலெக்டர் வீற்றிருக்க..!
கற்பித்த ஆசிரியர்
அவரருகே அமர்ந்திருக்க
உருக்கமான சூழலில்
உன்னதமாய் பல நிகழ்வு
உற்சாக சூழ்நிலையில்
உருக்கமாய் ஆசிரியர்
அமர்ந்து அவர் அழுதார்..ஏன்...?
தனிமையான சூழலில்
தன்மையாக [ கலெக்டர் ] மாணவர்
ஏன் ஐயா அழுகிறீர்கள்
என்று அவர் கேட்டார்
உன்னோடு உடன் படித்த பரதன்
பந்தல் கால் ஊன்றி
வேலை பார்ப்பதை நான்
பார்த்து விட்டு பதைபதைத்து விட்டேன்
நீ ஏன் பிள்ளை போல்
அவனும் என் பிள்ளை தான்
ஏன் சொல்லை கேளாது
வாழ்வைத்தான் வீணாக்கி..!
எவ் முன்னே பந்தல் வேய்ந்து
ஏன் மனதை காயம் செய்தான்
அவன் செய்த பிழையா...?
எனது பாராமுகமா
அதை எண்ணி நானும் தான்
அழுது விட்டேன் என் கண்ணே...!

அதிரை சித்திக்
'அழும் குரல்' தொடரும்...
[ ஆறாவது அழும் குரலை கேட்க ]

5 comments:

  1. ஆசிரியப்பணி என்பது மிக முக்கிய சமூகப் பணியாகும். இதில் விருப்பு வெறுப்புகளுக்கு இடமில்லை. ஒவ்வொரு மாணவர்களுமே தங்களுடைய குழந்தையைப் போல பாவித்து கல்வியைக் கற்பிப்பார்கள் ஆசிரியர்கள்.

    இக்கவிதையில் ஆசிரியரின் மேன்மை, கல்வி கற்காத மாணவனின் நிலை ஆகியன குறிபிடப்பட்டுள்ளன.

    வாழ்த்துகள்...

    ReplyDelete
  2. பதிவுக்கு முதலில் நன்றி.

    ..........................................
    சேக்கனா M. நிஜாம்November 1, 2012 7:19 AM

    ஆசிரியப்பணி என்பது மிக முக்கிய சமூகப் பணியாகும். இதில் விருப்பு வெறுப்புகளுக்கு இடமில்லை. ஒவ்வொரு மாணவர்களுமே தங்களுடைய குழந்தையைப் போல பாவித்து கல்வியைக் கற்பிப்பார்கள் ஆசிரியர்கள்.

    இக்கவிதையில் ஆசிரியரின் மேன்மை, கல்வி கற்காத மாணவனின் நிலை ஆகியன குறிபிடப்பட்டுள்ளன.
    ...........................................

    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED.
    Consumer & Human Rights.
    த.பெ.மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.
    ....................................

    ReplyDelete
  3. தன் மாணவன் தன் கண் முன்னே உயர்பதவி வகித்தால் சந்தோஷப்படும் முதல் மனிதனும் அவரே அதே சமயம் முதல் வருத்தப்படுபவரும் அவரே

    ஆசிரியர் மாணவ உறவை அழகா வர்ணிச்சிருக்கீங்க

    ReplyDelete
  4. இப்படிப்பட்ட ஆசிரியரை இன்று காண முடிந்தால் சந்தோசம் முன்பு ஆசிரியர்கள் செய்தது ஆசிரியப்பணி இன்று செய்வது ஆசிரியர் தொழில்

    ReplyDelete
  5. பதிவுக்கு முதலில் நன்றி.

    இக்கவிதையில் ஆசிரியரின் மேன்மை, கல்வி கற்காத மாணவனின் நிலை ஆகியன குறிபிடப்பட்டுள்ளன.

    வாழ்த்துகள்...

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers