வளமுள்ள உன் வேகம்
தவழ்ந்து வரும் உன் அழகு..!
தென்னகத்தின் உன் புகழ்..!
தென்னகத்தின் உன் புகழ்..!
தெரியாத ஆள் இல்லை..!
வந்து விழும் உன் வனப்பு
நாளும் நாளும் பார்க்கலாம்..!
குடகு மலையில் பிறந்து..!
கம்பீர நடையுடன் உன் வருகை
வாயார வாழ்த்தி வரவேற்கும்
விவசாயி நீ செல்லும் இடமெல்லாம் சிறப்பு
நின் புகழ் மூன்று மாநிலத்தில்
நிறைவாய் மனம் வீசுகிறது
பல இடங்களில் நீ நீர்வீழ்ச்சி
சில இடங்களில் உல்லாச சுற்றுலா தளம்
உன் வேகம் மின்சார சக்தியாய் மாறும்
உனக்கு இத்தனை வளம் இருந்தும்
ஏன் அழுதாய் காவேரி தாயே..?
காவிரி தாய் சொன்னாள்..!
ஒரு தாய்க்கு பல பிள்ளை
தமிழகம் தான் தலை பிள்ளை
தாய் ஊட்டும் பால் தன்னை
பாலூட்ட தடுத்து விட்டால்
யார் படுவார் வலி வருத்தம்
தாயிடம் ஊரும் பால்
பிள்ளைக்கு ஊட்டம்
தாய் பாலூட்டா விட்டால்
மார்விம்மும் வலி கொடுக்கும்
உடல் வருத்தம் ஒன்றேன்றால்
மனவருத்தம் பலவாகும்
ஓடிவரும் ஏன் வேகம்
தமிழகம் சென்றடையதான்
ஏன் வேகம் தடுத்து அணைகட்டி
சிறை பிடித்து என்னை
வதைக்கும் போது
அழாமல் ஏன் செய்வேன்..!
என் பிறப்பு குடகு என்றால்
என் வீடு தமிழகமே
தஞ்சைக்கு சென்று நானும்
நஞ்சைக்கு ஊட்ட வேண்டும்
நஞ்சை பிள்ளை வாடினால்
காவிரி தாயகிய நான்
அழாமல் ஏன் செய்வேன்..!
அதிரை சித்திக்
வாழ்த்துகள்...!
ReplyDeleteபத்திரிக்கைத்துறை நிபுணரின் கவிதை இன்றைய தமிழகப் பிரச்சனையை அலசி ஆராய்கின்றன.
நமது நாட்டில் உருவாகும் அனைத்து நதிகளையும் அனைவரும் பயன் பெரும் வகையில் ஒன்றாக இணைப்பதே தீர்வாக அமையும்...
சொல்லாமல் பல விசயங்களை சொல்லி விட்டீர்கள்... இப்படித் தான் நடக்க வேண்டும் என்கிற உண்மையும் புரிகிறது...
ReplyDeleteஅந்த காவிரி தாயின் வலி யாருக்கும் சரியாக புரியவில்லையே என்கிற வருத்தம் மேலோங்குகிறது...
தொடர்கிறேன்... நன்றி...
பதிவுக்கு முதலில் நன்றி.
ReplyDelete*************************************************************
திண்டுக்கல் தனபாலன்November 4, 2012 8:46 AM
சொல்லாமல் பல விசயங்களை சொல்லி விட்டீர்கள்... இப்படித் தான் நடக்க வேண்டும் என்கிற உண்மையும் புரிகிறது...
அந்த காவிரி தாயின் வலி யாருக்கும் சரியாக புரியவில்லையே என்கிற வருத்தம் மேலோங்குகிறது...
தொடர்கிறேன்... நன்றி...
************************
வாழ்க வளமுடன்.
அன்புடன்.
K.M.A. JAMAL MOHAMED.
Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.
*************************************************************
காவேரியை தாயாக்கி
ReplyDeleteதமிழகத்தை குழந்தையாக்கி
நீரை தாய் புகட்டும் பாலாக்கிக் காட்டிய
அருமை நான்பன் சித்தீக் நல் வாழ்த்துக்கள்
NICE...
ReplyDeleteமிக அருமை தம்பி சித்தீக் நல் வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துகள்...!
ReplyDeleteபத்திரிக்கைத்துறை நிபுணரின் கவிதை இன்றைய தமிழகப் பிரச்சனையை அலசி ஆராய்கின்றன.