.

Pages

Thursday, November 15, 2012

குடும்பக் கொல்லியை ஊரை விட்டுத் துரத்துவதற்காக ஒன்று திரண்ட பொதுமக்கள் [ காணொளி ] !!!

மதுக்கடைகள் - இவை ஓன்று, இரண்டாகி, மூன்று, நான்காகி, ஐந்து என பெருகிக்கொண்டே வருவது மிகவும் வேதனையளிக்கக் கூடியது மட்டுமல்ல ஊரிலுள்ள குடும்பங்களையே அழிவின் பாதையில் அழைத்துச் சென்றுவிடும்.

இப்படி குடும்பத்திற்கு சங்கு ஊதிடும் குடும்பக்கொல்லியாகிய மதுக்கடையொன்று கடந்து சில நாட்களுக்கு முன்பு ஏரிபுறக்கரை பஸ் நிறுத்துமிடத்தின் [ பெரிய ஏரி அருகில் ] அருகே திறக்கப்பட்டன.

இப்பகுதி அதிகளவில் வாகனங்கள் கடந்து செல்லக்கூடிய இரு வழிச்சாலைப்பகுதி E.C.R. என்பதும், பள்ளி மாணவ மாணவிகள் கல்வி பயில கடந்து செல்லுகின்ற பாதை என்பதும், மேலும் பஸ் நிறுத்துமிடம், பொதுமக்கள் அதிகாலை, மாலை நேரங்களில் "வாக்கிங்" "சைக்கிளிங்","ஜாக்கிங்" போன்ற பயிற்சிகளை மேற்கொள்கின்ற பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

இப்பகுதியில் அதிகமாக விபத்துக்கள் ஏற்படுவதைக் கருத்தில் கொண்டு நமது அரசு மருத்துவமனையின் இரவு நேர சேவை மற்றும் கூடுதல் மருத்துவர் நியமிக்க வேண்டி நமதூரைச் சார்ந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது அமைப்புகளின் கோரிக்கையாக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வேளையில் அப்பகுதியில் குடும்பத்தையே அழித்துவிடக்கூடிய சமூகக்கொல்லி, குடும்பக்கொல்லி, உயிர்க்கொல்லியாகிய "மதுக்கடை" 

இதையடுத்து இப்பகுதி பொதுமக்கள் ஓன்று திரண்டு குடும்பக்கொல்லியை ஊரை விட்டுத் துரத்த கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அதிரை மற்றும் ஏரிப்புறக்கரை கிராமத்தை சார்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் உணர்வை வெளிப்படுத்தி மதுக்கடையை அப்புறப்படுத்த அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

4 comments:

  1. ஊருக்கு ஊர் இது போல் நடக்க வேண்டும்...

    ReplyDelete
  2. எழுச்சியூட்டும் பதிவு
    அருமையாகப் பதிவு செய்துள்ளீர்கள்
    மிக்க நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. ஊருக்கு ஊர் இது போல் நடக்க வேண்டும்

    ReplyDelete
  4. இதை அரசாக்கமே நடத்துக்கிறது பிறகு குடி குடிய கெடுக்கும் என்று விளம்பரம் செய்கிறது.என்ன கொடுமை இது. மது மாது சூது இவை அனைத்தும் நம் நாட்டுக்கு கேடுதான்.

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers