.

Pages

Saturday, December 29, 2012

பொறா[ ஆ ]மை !!!
தாம் அடையாத ஒன்றை பிறர் அடையும்போது ஏற்படுகின்ற வெளிப்பாடு 'பொறாமை' என்னும் சிந்தனையாக ஒருவரின் மனதில் ஆழமாக உருவாகின்றது. தான் ஏதே பல நூற்றாண்டுகள் இத்துனியாவில் வாழப் போகின்றோம் என்ற எண்ணத்தில் புதுசா புதுசா இதுபோன்ற தீய சிந்தனையை ஒவ்வொருவரும் வளர்த்துக் கொள்கின்றனர். இது அவர்களை அழிவின் பாதைக்கு இழுத்துச் சென்றுவிடும் என்பது அவர்களுக்கு தெரியவில்லை போலும்...

இங்கு வசிக்கின்ற ஒருவர், எங்கேயோ வசிக்கும் ஒருவரைப் பார்த்து பொறாமைக் கொள்வதில்லை... மாறாக ஒருவர் மற்றவரோடு தொடர்பில் உள்ளவர், அருகில் வசிப்பவர், உறவினர்கள், தொழில் சார்ந்தவர்கள் போன்றவர்களாகவே இருப்பர்.

1. ஒருவர், பிறரிடம் உள்ள வளர்ச்சியைக் கண்டு பொறாமைக்கொள்பவரும்...

2. பிறர், எளிமையான ஒருவரிடம் உள்ள நிம்மதியான வாழ்வைக் கண்டு பொறாமைக்கொள்பவரும்...

3. நான் தான் 'நம்பர்  1' னாக இருக்க வேண்டும், பிறர் நம்பர் 1' னாக வர எனக்கு பிடிக்காது என மனக்கணக்கு போடுபவர்களும்...

4. தன்னால் முடியாத ஒன்றை அவன் சாதித்து விட்டான்... அவனை எப்படியாவது “வீழ்த்திக்” காட்டுகிறேன் பார் என சபதம் எடுப்பவர்களும்...

5. எனக்கு அந்த பொருள் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை அண்டை வீட்டுக்காரனுக்கு அறவே கிடைக்க கூடாது என்ற சிந்தனைக் கொண்டோரும்...

6. “ஆ” அவளிடம் பார்... அழகிய புடவைகள், நகைகள் இருக்கின்றன என பெருமூச்சு இடுபவர்களும்...

7. அவனுக்குப் பார்....சொகுசான வேலை, கைநிறைய சம்பளம் எனக்கு ஒன்றும் அமைய வில்லையே ! என்ற வெறுப்பை வெளிப்படுத்துபவர்களும்...

8. அவரின் மிகப்பெரிய வீட்டைப்பார்... அழகிய தோற்றம், அதில் விலை உயர்ந்த சாதனங்கள், புதிய மாடல் கார் போன்றவற்றை எண்ணி வேதனைப்படும் ஜெலஸ்களும்...

9. என் கண் காணப் பிறந்த அந்தப் பொடியனைப்பார்... தன் இளம் வயதில் என்னை வீட பெரிய ஆளாயிட்டான் என கர்வங்கொள்ளும் பெரிசுகளும்...

10. நான் தான் அந்த தலைமைப் பதவிக்கு தகுதியானவன். ஆதலால் இப்போட்டிக்கு பிறர் வரக்கூடாது என்ற பேராசையில் 'ஜிக் ஜாக்'காக செயல்படுவோரும்...

என சமூகத்தில் இருக்கத்தான் செய்கின்றனர்.

'பல்லு' இருக்கிறவன் தட்டில் வைக்கும் 'பக்கோடா'வை முழுவதும் சாப்பிடுகிறான் என்றால் அவனுக்கு மென்று தின்பதற்கு இலகுவாக 'ஈ' என்று இளித்துக்கொண்டு இருக்கும் அழகிய, வலிமையான பற்கள் இருக்கின்றன. அதுக்கு நாம் ஏன் பொறாமைக்கொள்ள வேண்டும் !?

'தான்' என்ற அகந்தை நம்மிடம் அறவே அறுபட்டு, வாழ்வில் மகிழ்ச்சியைப் பெருக்கிக்கொள்ள உங்களிடம் உள்ள 'பொறாமை' என்னும் உணர்வு சற்று விலகிக் காணப்படவேண்டும். இதற்கு உங்களை பொறாமைக் கொள்ளத் தூண்டுபவர்களின் நற்சிந்தனைகள், நற்செயல்கள், அவர்களின் வெற்றி, அவர்களின் ஒழுக்கம், அவர்களின் தானம், அவர்களின் தொழில் போன்றவற்றை மனதார குறிப்பாக போலித்தனம் இல்லாமல் பாராட்டி மகிழுங்கள். நீங்கள் கண்டிப்பாக அவரின் மனதில் நிலையாக இடம் பெறுவதோடு மட்டுமல்லாமல் அவரும் உங்களிடம் வசப்பட்டு விடுவார்.

சேக்கனா M. நிஜாம்
[ இது ஒரு மீள் பதிவு ]
இறைவன் நாடினால் ! தொடரும்...

5 comments:

 1. அவசியம் பதியப்பட வேண்டிய அருமையான பதிவு.

  பதிந்து வெளிச்சத்திற்கு கொண்டு வந்தமைக்கு நன்றி.

  இந்த பொறாமை வயத்தெரிச்சல் எல்லாம் தாழ்வு பணப்பான்மை உடையவர்கள் சோம்பேறிகள் எந்தபிழைப்பும் இல்லாமல் அடுத்தவர்களையே எதிர்பார்த்து வாழ்பவர்களிடத்தில் தான் அதிகம் உள்ளது. அவர்களுக்கு உதவி செய்பவர்களையும் பின்புறத்தில் குறை சொல்லிக்கொண்டு தான் இருப்பான்.

  அதை நாம் பெரிதாக எடுத்துக்கொள்ள கூடாது. அப்படி அவர்களின் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுத்தோமேயானால் பிரச்சனைகள் தான் வளரும்.நமக்கும் மனக்கஷ்டமாக இருக்கும். அவர்கள் இன்னும் பேச வாய்ப்பாகிவிடும். நமது முன்னேற்றத்திற்கு ஹலாலான முறையில் நடந்து கொள்ள வேண்டியது தான். நம்மைப் படைத்தவன் நம் மனதை அறிவான்.
  ஆதலால் நாம் கவலைப்பட வேண்டியதில்லை.

  ReplyDelete
 2. பதிவுக்கு நன்றி.

  மிகவும் அருமையான ஆக்கம், இன்று இதுதான் உலகமுழுக்க தலைவிரித்தாடுகிறது. நானும் ஒருகாலத்தில் மற்றவர்களை பார்த்து பொறாமை பட்டவன்தான் பின்புதான் விளங்கிக் கொண்டேன் இதுனால் நமக்கு கேடு என்றும் பிறகு இறைநம்பிக்கை மட்டும்தான் கை கொடுக்கும் ஆயுதம் என்று என்னுல் வளத்ததுக்கொண்டேன்.

  இந்த ஆக்கத்தை படிக்கும் வாசகர்களே, சிந்தியுங்கள்.

  வாழ்த்துக்கள்
  வாழ்க வளமுடன்.
  அன்புடன்.

  K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
  த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
  உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

  ReplyDelete
 3. பொறாமையால் வயித்தெரிச்சல் மட்டும் படுவதில்லை அதற்க்கு தீனிபோட குற்றங்களையும் செய்வார்கள்.
  //4. தன்னால் முடியாத ஒன்றை அவன் சாதித்து விட்டான்... அவனை எப்படியாவது “வீழ்த்திக்” காட்டுகிறேன் பார் என சபதம் எடுப்பவர்களும்...//
  வென்று காட்டுகிறேன் என ஒருபோதும் சபதம் எடுக்க மாட்டார்கள்.
  முடிந்தவரை அடுத்தவர் பொறாமையை தூண்டாமல் இருப்பது அவரவர்களுக்கு நல்லது. தேவையற்ற ஆடம்பரம் தற்புகழ்ச்சி பொறாமைக்காரர்களால் துண்பம் விளைவிக்கவழி வகுத்துவிடும்.

  ReplyDelete
 4. அருமையான பதிவு வாழ்த்துக்கள் நிஜாம் காக்கா அவர்கள். பொறாமை அது ஒரு புற்று நோய் அது யாரிடம் அதிகம் இருப்பது என்றால் சில பெண்கள் இடம் தான் அதிகம் இருக்கின்றது.

  ReplyDelete
 5. அஸ்ஸலாமு அலைக்கும்.

  தலைப்பும் அருமை, ஆக்கமும் அருமை, இந்த காலத்திற்கேற்ற படைப்பு. நன்றி.

  ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers