.

Pages

Thursday, January 17, 2013

கேட்காதே...! கேட்காதே...!! பிச்சைக்காசு கேட்காதே !!!

வாலைக்குமர்களை சந்தை பொருளாக்கி
வரதட்சனை விலை பேசும் [ வலிமைமிகு] வாலிபர்களே !
வாழ்க்கைப் பாதையில் திசைமாறிய பறவைகளாய்
வழுக்கி விழுந்த ஓசைக்குயில்கள் எத்தனை எத்தனை ?
ஒழுக்கம் பேணும முதிர்க்கண்ணிகளாய் காசினியில்
ஓசையில்லாமல் ஓலைக்குடிசைகளில் முடங்கி,
ஏக்கப் பெருமூச்சுவிடும் ஈந்திலைகள் எத்தனையோ ?
பூப்படைந்த பருவச்சிட்டுகள் மூப்பெய்தி,
பருவம் தொலைத்து, கருகிய மொட்டுகளாய் 
உதிர்வதும் ஒப்பாமோ ?

உப்பரிகை வாழ்க்கை வாழ, மாடமாளிகை கூட கோபுரம்
உயர்ரக வாகனம், பங்களா இத்யாதி கேட்பதும் சரிதானே ?

ஏழைக்குமர்கள் வடிக்கும் சென்னீர் விடும்
ஏக்கப்பெருமூச்சு, ஏகமாய் வீட்டையும் நாட்டையும்,
இடிக்கும் கோடைகால இடிமின்னல் !
இலங்கும் கொதிகலனாய் கொதித்தெழ,
கூறுகெட்ட மோளைகளாய் கோழைகள் போல்,
குவலயத்தில் கைக்கூலி பெற்று 
வாழ நினைப்பதுவும் முறைதானா ?

வரதட்சனை சாவுகளின் விழுக்காடுகள் முப்பத்திஒன்பதாம்
வரதட்சணை வான்கொடுமை இருநூற்றி இருபத்தி ஐந்து
விழுக்காடுகளாம் ! வாழா வெட்டிகளாய் வறுமையில்
வாழ்விழந்த வனிதையர்கள் இந்த நாட்டில்...!
வெட்கமன்றோ !!

கஞ்சி குடிப்பதற்கிலார் கண்ணீர்க் கலசங்கள்
காற்றிலாட, சேற்றில் முளைத்த
செந்தாமரைக் கண்ணிகள் [ சோறின்றி ] செத்துமடியாமல்
செகத்தினில் காளையரே ! கைக்கொடுப்பீர்
வரதட்சனை தரித்திர பணம் வேண்டாம்
வாஞ்சையுடன் வனிதையர் வாழ்வில் சரித்திரம் படைப்பீர்
வாழ்வில் வளம் சேர்ப்பீர் ! 

வாங்கமாட்டோம், வரதட்சனை ! 
வாலிபர்களே சபதம் செய்வீர் !

கொடுக்க மாட்டோம் வரதட்சனை !
கோதையர்களே ! கொள்கைவழி சூளுரைப்பீர்

வாழ்வில் நலம் பெறுவீர் !!! வாழ்த்துவோம்
வாழ்வில் நலம் பெறுவீர் !!! வாழ்த்துகள்.

"புதுமைக்கவி" 
அதிரை அப்துல் ரஜாக்

13 comments:

  1. சமூகக்கொல்லிக்கு எதிரான நல்லதொரு ஆக்கம் !

    ஒவ்வொரு ஊர்களிலும் துண்டு பிரசுரமாக அடித்து இவற்றை வெளியிடலாம்.

    மிக்க நன்றி புதுமைக்கவி அவர்கட்கு,

    தொடர வாழ்த்துகள்...

    ReplyDelete
  2. புதுமைக்கவிஞ்சரின் புதுமைச்சிந்தனை.

    வாழ்த்துக்கள்.

    நாட்டில் இன்றைய காலகட்டத்தில் கன்னியர்களின் எண்ணிக்கையை விட முதிர்க்கன்னியர்களின் எண்ணிக்கையே அதிகமாகி கொண்டிருக்கிறது. காரணம் வரதட்சணை என்னும் கொடிய நோய் பரவிக்கிடப்பதே..! அதனை வேரோடு அறுக்க ஒவ்வொரு இளைஞ்சனும் சபதம் எடுத்தாலே முடியும்.

    இன்றைய கால இளைஞ்சர்களால் முடியும் என்ற நம்பிக்கையை ஒரு சில இளைஞ்சர்கள் செய்து காட்டிக்கொண்டு தான் இருக்கிறார்கள். அது முழுமை பெற வேண்டும்.

    ReplyDelete
  3. வரதட்சணையை கேட்டு பெறுவதில் அதிகம் ஆர்வம் காட்டுவது பெண்கள்.

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கு மிக்க நன்றி தமிழன் அவர்களே,

      இருபாலாரும் வரதட்சணையில் ஆர்வம் காட்டுவதில் நாங்கள் சளைத்தவர்கள் அல்லர் என்பது போல் இருக்கின்றார்கள் !

      மாற்றம் தேவை !

      Delete
  4. முதிர்கன்னிகளுக்கும் வரதட்சனைக்கும் என்ன சம்மந்தம்?
    எத்தனை முதிர்கன்னிகள் இருக்கிறார்களோ அத்தனை முதிர் பிரம்மச்சாரிகள் இருக்கவேண்டும் அல்லவா? தெறிந்தவர்கள் பதில் கூறவும்.அரசு உத்தியோகத்தில் இருக்கும் மாப்பிள்ளை தேவை கை நிறைய சம்பாதிக்கும் மாப்பிள்ளை தேவை என்று கூறும் பெற்றோர்களை ஏன் யாரும் கண்டிப்பதில்லை.

    ReplyDelete
    Replies
    1. நண்பர் புரட்சி தமிழன் கூறிய கருத்தும் கவனத்தில் கொள்ள வேண்டியவை...

      மாற்றம் அனைத்து [ ஆண், பெண் ] தரப்பிலிருந்தும் இருக்க வேண்டும்.

      சமூக நலன் பெற விழிப்புணர்வு அவசியம். அவை நம் அனைவரிடமிருந்து தொடரட்டும்...

      Delete
  5. பதிவுக்கு நன்றி.
    துபாய்.

    கேட்காதே!, கேட்காதே!!,. பிச்சைக்காசு கேட்காதே.
    என்ன அருமையான தலைப்பு.
    கவிதையின் வரிகளில் தவழும் கொடுமைகள் ஆயிரம் ஆயிரம்.

    பெண்களே, இன்றைய நிலையில் உங்களுக்கு குரள்கொடுக்க உலகமுழுக்க அநேக கூட்டங்கள் இருக்கின்றது, அதேநேரத்தில் சிலபெண்கள் அதை ஆண்களுக்கு விரோதமாக MIS USE செய்கிறாங்க.

    வரதட்சணை, அது ஒரு ஒவ்வாத தட்சணை,
    அதுசரி வரதட்சணையைப் பற்றி நாளுக்கு நாள் பல ஊடகங்களில் பல மாதிரியான கட்டுரைகளும் கவிதைகளும் கருத்துக்களும் வந்த வண்ணம் இருக்கின்றனவே.

    வரதட்சணை எப்படி உண்டாயிற்று?
    அது உண்டாக யார் காரணம்?
    மாப்பிள்ளை வீடா? அல்லது, பெண் வீடா?

    முதலில் அதை கண்டுபிடித்தால் ஒழிய இதை ஒழிக்க முடியாது. நிச்சயமாக இதை 100சரவிகிதம் ஒழிக்கமுடியும், வேரு எங்கே உண்டாயிற்று? அந்த வேரை அறுத்துவிட்டால் போதும் வரதட்சணை என்ற மரம் தானாகவே சாய்ந்துவிடும்.

    என் அன்பின் பெண்களே நீங்கள்தான் இதை ஆராயவேண்டியவர்க்ள்.

    ஆண்களாகிய நாங்கள் உங்களுக்கு முழு ஒத்துழைப்பு தரமுடியும் என்று இதன்மூலம் வாக்கு கொடுக்கின்றோம்.

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.
    XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

    ReplyDelete

  6. ///முதிர்கன்னிகளுக்கும் வரதட்சனைக்கும் என்ன சம்மந்தம்?
    எத்தனை முதிர்கன்னிகள் இருக்கிறார்களோ அத்தனை முதிர் பிரம்மச்சாரிகள் இருக்கவேண்டும் அல்லவா? தெறிந்தவர்கள் பதில் கூறவும்.அரசு உத்தியோகத்தில் இருக்கும் மாப்பிள்ளை தேவை கை நிறைய சம்பாதிக்கும் மாப்பிள்ளை தேவை என்று கூறும் பெற்றோர்களை ஏன் யாரும் கண்டிப்பதில்லை///



    புரட்சி தமிழன்அவர்களே தாங்களின் கேள்வி நியாயமானதே....
    இருந்தாலும்....

    மற்ற வெவ்வேறு காரணங்களினால் முதிர்கன்னியாய் இருந்தாலும் முதிர்கன்னிகளாய் ஆக்கப்படுவது அதிகம் வரதட்சணையால் தான் என்பதை கவிஞ்சர் சொல்லி இருக்கிறார் போலும்...!

    ReplyDelete
  7. வரதட்சணை வாங்குவது என்பது கண்டிக்கத்தக்க விஷயம். புகுந்த வீட்டிற்கு வருவதற்காக ஒரு பெண் தட்சணை தருவது கூடாது. மாறாக மாப்பிள்ளை வீட்டார் விரும்பினால் தட்சணை கொடுத்து தங்கள் வீட்டு வரும் பெண்ணை அழைத்து வரலாம்.

    ஒரு வீட்டிற்கு வரும் மருமகள் அந்த வீட்டின் ஒரு விஷேசமாகவே கருதப்படுகிறாள். எனவே மருமகளை வரதட்சணை கேட்டு சிரமப்படுத்தி அழைத்து வரக் கூடாது. வரதட்சணை பெறுவதால் புகுந்த வீட்டு உறவுகள் மீது மணமகளுக்கு வெறுப்பு ஏற்படும் என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

    சங்க கால நூல்களில் வரதட்சணை என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை. அகநானூறு, புறநானூறு, கலிப்பா, பரிபாடல் ஆகிய நூல்களில் ஆடவரின் வீரத்தைப் பார்த்தே பெண் மாலையிட்டாள் என்று கூறுகின்றன.

    ஒரு பெண், ஆடவரை மணக்க பணம்/நகை/தங்கக் காசுகளை வரதட்சணையாக அளிக்க வேண்டும் என்று எந்த சங்ககால நூலிலும் கூறப்படவில்லை. ஆடவரும் அதை விரும்பவில்லை. ஜாதி பார்த்து திருமணம் செய்து கொள்வதும் அப்போது பெரியளவில் நடைபெறவில்லை.

    கடந்த 30 முதல் 40 ஆண்டு காலத்திலேயே வரதட்சணை பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது. விரைவில் பெண் எடுப்பதற்கு வரதட்சணை கேட்கும் காலம் மாறி, வரதட்சணை கொடுக்கும் காலம் வரும்.

    ReplyDelete
  8. மதிப்பிற்குரிய அய்யா, அடியேனின் கீழ்க்கண்ட பதிவில் உள்ள எண்ண ஓட்டத்திற்கு தக்க பதிலடி தந்து அடக்கி ஒடுக்குங்கள்.


    வரதட்சனை தடுப்பு சட்டத்தில் நீதி உள்ளதா ?


    http://arasuganabathy.blogspot.in/2012_06_01_archive.html

    தக்க பதில் கிடைத்தால் தங்களுக்கு நன்றி தெரிவித்து நான் எனது கருத்தை மாற்றிக்கொள்ள காத்திருக்கிறேன்.

    நன்றி!

    ReplyDelete
  9. அருமையான தலைப்பு வாழ்த்துக்கள் புதுமைக்கவி
    அப்துல் ரஜாக் காக்கா அவர்களுக்கு. இப்போது சில இளைஞகர்கள் வரதட்சணை வாங்குவது குறைந்துள்ளது இன்ஷா அல்லாஹ் இனி வரும்காலங்களில் வரதட்சணை என்ற புற்றுநோய் ஒழிந்துவிடும்.சிலர் இயக்ககளில் இருந்துகொண்டு வரதட்சணை என்ற பிச்சை கேட்கத்தான் செய்கிறார்கள். அவர்களுக்கு இந்த ஆக்கம் ஒரு(செருப்படி)மன்னிக்கவும்

    ReplyDelete
  10. வரதட்சனையும் லஞ்சமும் கொடுக்கிறவர்கள் இருக்கும்வரை வாங்குகிறவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் ( வரதட்சனை மறுப்பவன் குறைபாடுள்ள மாப்பிள்ளை லஞ்சம் வாங்காதவன் பிழைக்கதெறியாதவன் இதுதானே இன்றைய நமது மக்களின் கருத்தாக உள்ளது.)

    பெண்கேட்டுவருபவர்கள் வரதட்சனை கேட்டார்கள் என்று கொண்டுவந்த பூ பழதட்டுகளை நடுத்தெருவில் வீசி விரட்டியவர்கள் யாராவது இருக்கிறார்களா? அப்படி செய்து பாருங்கள் ஒருவனும் வாய் திறந்து வரதட்சனை கேட்கமாட்டான்.பிரேக் இன்ஸ்பெக்ட்டர் வேலைசெய்யும் மாப்பிள்ளைக்கு பெண்கொடுக்க எவ்வளவு போட்டியும் சண்டையும் நிலவுகிறது தெறியுமா?

    தன் மகள் வசதியாக வாழவேண்டும் என்று நினைப்பவர்கள் வரதட்சனை கொடுக்கிறார்கள் தன் வேலையை குறுக்கு வழியில் விரைவாக முடிக்கவும் அடுத்தவர் வாய்ப்பை தட்டிபறிக்க நினைப்பவர்களும் லஞ்சம் கொடுக்கிறார்கள்.

    வீதியில் விழுந்துகிடக்கும் ஒரு பொருள் தனது இல்லை என்று எடுக்காமல் இருக்கும் குணம் உடையவன் மட்டுமே வருவதை வேண்டாம் என்று சொல்லுவான்.

    திருமணத்தை பதிவு செய்யும்போது நிலம் வாங்குவது போல மாப்பிள்ளைக்கு கொடுக்கும் வரதட்சனை தொகையினையும் எழுதி இந்த விலைக்கு இந்த மாப்பிள்ளையை வாங்கியுள்ளேன் என்று பதிவு செய்துகொள்ளுங்கள் தன்னை விற்ப்பவன் அடிமையாகட்டும்.

    ReplyDelete
  11. // திருமணத்தை பதிவு செய்யும்போது நிலம் வாங்குவது போல மாப்பிள்ளைக்கு கொடுக்கும் வரதட்சனை தொகையினையும் எழுதி இந்த விலைக்கு இந்த மாப்பிள்ளையை வாங்கியுள்ளேன் என்று பதிவு செய்துகொள்ளுங்கள் தன்னை விற்ப்பவன் அடிமையாகட்டும்.//

    ஹா... ஹா...

    படிக்கும் போதே சிரிப்பு வந்துவிட்டது

    ஒரு சில இடத்தில் நிச்சயதார்த்தம் எனச் சொல்லி இவற்றையும் மறைமுகமாக முக்கியஸ்தர்கள் முன்னிலையில் எழுதி ஒப்பந்தம் செய்துகொள்வது பெரும் வேடிக்கையாக காணப்படுகின்றன. அன்றைய தினம் கிடைக்ககூடிய கார இனிப்புக்களுக்கும், சுவையான தேனிர் காஃபி களுக்காக கலந்துகொள்வோர் ஏராளம் ! கண்டிப்பாக இவர்கள் திருந்த வேண்டும் அல்லது திருத்தப்பட வேண்டும்.

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers