.

Pages

Wednesday, March 6, 2013

[ 1 ] தொழில் புரிவோம் வாருங்கள் !

இளைஞர்களை முதல் தலைமறை தொழில் முனைவோராக மாற்ற உதவும் நோக்குடன் 'தொழில் புரிவோம் வாருங்கள் !'  - என்ற தலைப்பில் வாரந்தோறும் வியாழக்கிழமை அன்று வெளியாக இருக்கின்ற தொடர் பதிவுகளில் புதிதாக தொழில் தொடங்க முனைவோருக்கு தொழில் சம்பந்தமாக ஏராளமான அனுபவங்களுடன் கூடிய தகவல்கள் இடம் பெற இருப்பதால் இவற்றை தொடர்ச்சியாகப் வாசித்துப் பயனடைமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

மு. செ. மு. சபீர் அஹமது - திருப்பூர்

உத்தியோகம் புருசலட்ஷணம் சுய தொழில் ஓர் அங்கிகாரம், மரியாதை, சுதந்திரம், அபிவிருத்தி இப்படி அடுக்கிக் கொண்டு போகலாம் முக்கியமான ஒன்று சுய தொழில் ஓர் சுகமான சுமை. சுமையை பற்றி ஆராய்வோம் தொழிற்கல்வி இன்றைய காலத்தில் நிறைய உருவாகி இருக்கிறது ஏதோ ஒரு தொழிற் படிப்பில் கோல்டு மெடலிஸ்ட். தான் படித்த படிப்பை வைத்துக்கொண்டு நேரடியாக தொழில் [ சுயமாய் ] செய்ய வருவாரேயானால் அவரைபற்றி The habit of success என்ற நூலின் ஆசிரியர் ஹென்றிடொய் கூறுவதைப் பார்ப்போம்.

சிங்கப்பூரில் ஒரு பிஸியான ரோடு. தலைக்கு ஹெல்மேட், கை மணிக்கட்டுக்கான கார்டு கால் மூட்டுக்கான் கார்டு போன்றவற்றை அணிந்து கொண்டு பாதுகாப்பாக சைக்கிள் ஓட்டுகிறான் ஒரு இளைஞன். அட, எவ்வளவு பொறுப்பானவன் என்று நினைத்தால், அடுத்த சிக்னலில் அதே இளைஞன் சிக்னல் சிவப்பில் இருக்கும்போதே குறுக்கே பறந்துவரும் இரண்டு வாகனங்களுக்கு இடையே சைக்கிளை ஓட்டிச் செல்கிறான். என்ன ஒரு முட்டாள்தனம் ? வெளி உலகிற்கு தலை முதல் கால் வரை போட்டிருக்கும் பாதுகாப்பு கவசங்கள் அவனை நல்லதொரு பாதுகாப்பு விரும்பியாகக் காட்டினாலும், இரண்டு கார்களுக்கு நடுவே கிடைத்த கேப்பில் புகுந்து செல்வது ஹைரிஸ்க் விஷயமில்லையா ? அவனது தோற்றத்திற்கும் செயல்பாட்டுக்கும் எத்தனை வேறுபாடு ?
    
இதேபோலத்தான் நாமும். புத்திசாலித்தனத்தையும் பரிட்சை மார்க்கையும் ஒப்பிட்டுக்கொள்கிறோம். பரிட்சையில் மார்க் எடுத்தவர்கள் எல்லாம் புத்திசாலித்தனமான முடிவுகளை எடுக்கும் திறன் கொண்டவர்கள் என்று நினைக்கிறோம். பரிட்சை மார்க் என்பது சைக்கிளில் சென்ற இளைஞனிடம் தலை முதல் கால் வரை இருந்த கவசம் போன்றது. ஆனால், சிக்னல் சிவப்பு விளக்கு [ Red Signal ] இருக்கும்போது குறுக்கே செல்கிற ஹைரிஸ்க் நடவடிக்கை புத்திசாலித்தனமற்றது ! என்று விவரிக்கின்றார் ஆசிரியர் ஹென்றிடொய்.

ஓர் நிறுவனத்தில் ஒரே துறையில் 10 வருட காலம் காலம் வேலை செய்தவர் தான் முழு தகுதியானவர் என முடிவெடுத்து சுய தொழில் செய்ய முற்படுவதுவும் மேலே சொன்ன கோல்டு மெடலிஸ்ட் மாணவனின் சூழலில் 80 சதவீதம் பொருந்தக்கூடியவர்தான். இதன் விளக்கத்தை அடுத்த வாரம் விளக்கமாகப் பார்ப்போம்.

காட்டு வழியே பயணம் மேற்கொண்டவரை வழியில் சிங்கம், புலி, கரடி, போன்ற மிருகங்கள் இருக்கும் என்று அனுபவசாலி சொல்லி விடுவாறாயானால் பயமுறுத்துவதற்காக என்று நினைத்தால் அது நம் தவறு அந்த சொல்லை நாம் எச்சரிக்கையாக எடுத்துக்கொள்தல் வேண்டும்.
தொழில் புரிவது தொடரும்...
மு.செ.மு.சபீர் அஹமது

12 comments:

 1. உதாரணம் சொன்ன விதம் அருமை...

  ReplyDelete
 2. இளைஞர்களுக்கு பயன்தரும் தொடராக அமைய என் வாழ்த்துகள்...!

  வணிகம் என்பது சமுகத்திற்கு மிக பயனளிக்கும் ஒரு சேவையாகும் மனிதன் தனது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள வேண்டி பொருளீட்டுதலை பெருக்கிக்கொண்டான். தொழிலில் தனது அறிவுத்திறனை பயன்படுத்தி நேர்மையை கடைபிடித்தால் நீண்ட நாள் நீடிக்கலாம்.

  ReplyDelete
 3. சகோ. மு.செ.மு. சபீர் அஹமது அவர்களைப் பற்றிய சிறுகுறிப்பு :

  கடந்த இருபது ஆண்டுகளாக திருப்பூரில் சொந்தமாக தொழில் புரியும் இவர் நமதூர் காதிர் முகைதீன் பள்ளி மற்றும் கல்லூரியில் கல்வி பயின்றவர். எந்தவொரு கருத்தையும் நகைச்சுவை உணர்வோடு எடுத்துச்சொல்ல வேண்டும் என விரும்பும் இவர் பத்திரிக்கைதுறையில் கூடுதல் ஈடுபாடு கொண்டுள்ளளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  ReplyDelete
 4. பதிவுக்கு நன்றி.

  தொழில் புரிவோம் வாருங்கள்.
  இந்த தலைப்பில் சிறு தொடர் கட்டுரை, ஆரம்பத்திலேயே சிங்கம் கரடி புலி உதாரணம் அருமையான வேகத்தடை.

  தொடர பாராட்டுக்கள்.

  வாழ்த்துக்கள்
  வாழ்க வளமுடன்.
  அன்புடன்.

  K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
  த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
  உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

  ReplyDelete
 5. 1. உற்பத்தி (Production),2. சந்தைப்படுத்துதல் (Marketting),3. வணிகம் அல்லது வியாபாரம் (Trading) இவற்றோடு மனித நேயமும் நம்மிடமிருந்தால் தொழிலில் வெற்றி பெறலாம்.

  ReplyDelete
 6. அவசியமான தலைப்பெடுத்து அருமையான உதாரணத்துடன் தாங்களின் கட்டுரையை தொடங்கி இருக்கிறீர்கள்.

  வாழ்த்துக்கள்.

  முதல் உதாரணமே முத்தான உதாரணம்.

  தாங்களின் இவ்வாக்கம் தொடர்ந்து பதிந்து தொழிலின் பா இரகசியங்களை அள்ளித்தருவீர்கள் என்று நினைக்கிறேன்.

  (ஏனென்றால் எனக்கும் உள்நாட்டிலேயே தொழில்புரியவே ஆசை)

  ReplyDelete
 7. எனது நண்பன் சபீர்

  எந்த ஒரு செயலையும் நேர்த்தியாக செய்ய முயற்சிப்பார்

  அந்த வகையில் இந்த தொடருக்காக பல புத்தகங்களை

  படித்து ஆதாரமாகவும் தனது அனுபவங்களை ஆக்கத்தின்

  மூலமாகவும் தர இருக்கிறார் இது புத்தகமாக விழிப்புணர்வு

  பதிப்பகத்தில் வெளி வர வேண்டும் ..

  வாழ்த்துக்கள் நண்பா ...!

  ReplyDelete
 8. எழிலாய் நெறிகள் எமக்கும் விளக்க
  தொழிலைப் படிப்போம் துணிந்து.

  ReplyDelete
 9. உதாரணம்.அருமை இந்த புகைப்படமும் அருமை. ...வாழ்த்துக்கள்

  ReplyDelete
 10. கருத்திட்ட அனைவருக்கும் பாராட்டுக்கள் தொடர்ந்து படியுங்கள் நிறைய வஷயங்கள் இருக்கின்றது

  ReplyDelete
 11. சிறப்பாக சொன்னீர்கள். தொடருங்கள்.

  ReplyDelete
 12. பிரயோஜனமுள்ள நல்ல தொடர்.
  தொடர வாழ்த்துக்கள்.

  ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers