நாளொரு மேனி
பொழுதொரு வண்ணமாய்
தினம் ஒரு கருவிகள்
கண்டு பிடிப்பு
அதிலொன்று தான்
அலை பேசி எனும்
சிறு பிறவி
அது பிறந்த நாள்
முதலா விபத்திற்கு
பஞ்சமில்லை
பாசமிகு தாயை விட்டு
ஓடி போகும் பாதகிக்கு
பக்க பலமா இருந்து வரும்
அலை பேசியே
ஏன் பிறந்தாய் இவ்வுலகில்
உலக ஆசை விட்டு எரிந்து
இறை வணக்கம் புரியும் போதும்
இன்னிசையாய் சிணுங்கி நீயும்
உலகின் ஆசை நினைக்க
வைக்கும் உன் தொல்லை
தினம் தினம் பெரும் தொல்லை
மன சாட்சி கொஞ்சமில்லா
மனிதனிடம் சேர்ந்து கொண்டு
பொய் கூற துணை நிற்கும் நீ
ஏன் பிறந்தாய்
இவ்வுலகில்
கையடக்க மாய் இருந்து
கை காரியம் செய்யும்
செல்போனே ஏன் பிறந்தாய் ?
ஏன் பிறந்தாய் தொடரும்...
அதிரை சித்திக்
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteசெல்போனே உன்னை யார் கண்டுபிடித்தது?
கண்டுபிடித்தவன் போய்விட்டான், ஆனால்
நீ மட்டும் தங்கிவிட்டாயே!!??
தங்குனதுதான் தங்கினாய், இப்படியா தங்குவது?
எங்களையும் நிம்மதியையும் ப்ரித்துவிட்டாயே!!
எங்களைவிட்டு நீ எப்போ போவாய்?
தயவு செய்து நீ போய்விடு.
சகோ., சித்திக் அவர்களின் வித்தியாசமான நல்ல சிந்தனை. தொடர பாராட்டுக்கள்.
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்.
அன்புடன்.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
நன்றி ..ஜமால் காக்கா ..
Deleteஅலைபேசியை முன் வைத்து அருமையான ஒரு விழிப்புணர்வு கவிதை தந்துள்ளார்.நமது அன்பு நண்பர் அதிரை சித்திக்.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
இன்றைய கால சூழலில் நாளுக்கு நாள் உலகம் நவீனமாய் மாறிக்கொண்டு இருக்கின்றன. அனைத்து நவீன அறிமுகமும் அவசியமுமாகி விட்டன. ஆகவே நல்லவைகளை தேர்ந்தெடுத்து தீயவைகளை களைவோம். நிம்மதியுடன் வாழ்வோம்.
செல் போன் அவசியம் தான் ..
Deleteஅவசியமானோற்குமட்டும் ..அடுத்த ஆக்கத்தில் காண்போம்
செல் ஃபோனெ
ReplyDelete“செல்” ஃபோனே
விரக்தியில் சொன்னாலும், தவிர்க்க முடியாத ஆறாம் விரலாய் ஆனதை என் கவிதையிலும் குறிப்பிட்டுள்ளேன். “கைபேசி பேசினால்” என்னும் தலைப்பில்.
காலத்திற்கேற்றக் கவிதை வனைந்த தமிழூற்றுக்கு நன்றி.
கவியன்பன் காக்காவின் உயரிய சிந்தனையை வரவேற்கிறேன்
Deleteநல்லதொரு விழிப்புணர்வு !
ReplyDeleteசெல்போன் குறைந்த விலையில் கிடைப்பதால், செல்போன் இல்லாதவர்களே இல்லை என்பதுபோல் அனைத்து தரப்பினரும் பயன்படுத்தக் கூடிய சாதனமாக உள்ளது.
செல்போனுக்கு கிடைக்ககூடிய சிக்னல்கள் அனைத்தும் அருகில் அமைக்கப்பட்டிருக்கும் செல்போன் டவரிலிருந்தே வெளிப்படும். இந்த டவர்கள் அமைந்துள்ள இடத்திலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவுக்கு கதிர்வீச்சு அதிகமாக இருக்கும்.
இக்கதிர்வீச்சால் புற்று நோய், தலைவலி, தூக்கமின்மை, மயக்கம், கவனக்குறைவு, காதில் இரைச்சல், ஞாபகசக்தி குறைவு, அஜிரணக் கோளாறு, இதயத் துடிப்பு அதிகரிப்பு போன்றவை ஏற்படக்கூடும் என்று ஆய்வு அறிக்கைகள் கூறுகின்றன.
மேலும் சிட்டுக் குருவிகள், மைனா, தேனீக்கள் போன்ற இனங்களைப் பார்ப்பதே ரொம்ப அபூர்வமாகி அழிந்துகொண்டு வருகிறது.
தீர்வுதான் என்ன ?
1. குறைந்த அளவு கதிரியக்கத்தை வெளிபடுத்தும் சிறிய வகை ஆன்டெனாக்களை, குறைந்த பட்சம் 30 மீட்டர் சுற்றளவிலான பாதுகாப்பு வளையத்துக்குள் அமைக்கலாம்
2. மக்கள் அதிகமாக வசிக்கும் குடியிருப்பு பகுதிகள், வழிப்பாட்டுத்தளங்கள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், மருத்துவமனைகள் ஆகியவற்றின் அருகில் செல்போன் டவர்கள் அமைப்பதை தவிர்க்கலாம்.
3. செல்போன் டவர்கள் இல்லாமலேயே செயல்படக் கூடிய நவீன செல்போன் தொழில் நுட்பத்தை பயன்படுத்தலாம்.
4. பொதுமக்கள் தங்கள் வசிக்கக்கூடிய குடியிருப்பு பகுதியின் ஒரு பகுதியை செல்போன் டவர்கள் அமைக்கும் நிறுவனங்களுக்கு வாடகைக்கு விடுவதை தவிர்க்கலாம்.
தம்பி நிஜாமின் ஆலோசனையை வரவேற்கிறேன்
Deleteஅருமை நண்பரின் ஆதங்க கவிதை வரிகள்
ReplyDeleteஅருமையிலும் அருமை!!!!!!!!!!!!!!
கால ஓட்டங்களின் கண்டுபிடிப்பில்
எத்தனையோ கருவிகளுண்டு
அத்தனையும் உபயோகிப்போரின் பங்களிப்பில் உள்ளது
அதன் சிறப்பும் எதிர்ப்பும்
நன்றி அன்பு நண்பரே
Deleteநல்லாவே கேட்டிங்க. எத்தனை எத்தனை அழிவுகள் அதன் மூலம் செல்ல சிட்டுக் குருவிகளை காணமல் போக செய்ததே.. நன்றாக சாடினீர்கள்.
ReplyDeleteநன்றி ..சகோதரி
Deleteஆக என்ன ஒரு வரிகள் இந்த செல்போன் தொல்லைகள் வந்ததால் நமக்கும் பெரும் தொல்லை ஆகி விட்டது கம்பெனியில்.எங்கே இருக்கே எப்போ வருவே என்றல்லாம் அவசரபடுத்துகிறார்கள். அருமையான வரிகள் வாழ்த்துக்கள் அதிரை சித்திக் அவர்களே.
ReplyDeleteஅன்பு தம்பி ..ஹபீபின் பின்னூட்டம்
Deleteஎனது ஆக்கத்திற்கு ஊக்கம் தருகிறது
சசிக்கலா அவர்களுக்கு எனது ஓர் ஐயம் செல்ல சிட்டுக்குருவி காணாமல் போகச்செய்தது செல்போன் டவர் ரெடிஏசன்கள் என உங்களைப்போல் பலர் சொல்ல கேள்விப்பட்டு இருக்கின்றேன் எனது சந்தேகம் என்னவெனில் சிட்டுக்குருவியைவிட உருவத்தில் சிறிய கொசு ஏன் சாகவில்லை அந்த ரேடிஏசன்களால்
ReplyDeleteசெல்போனால் பாதிப்பது சிட்டுக்குருவி மட்டுமல்ல வீட்டுக்குருவிகளும்தான்
ReplyDeleteநல்ல பதிவு நன்றி
நன்றி ...தமிழனின் சிந்தனை தரமானது
Deleteசெல்லிடைப் பேசியை மின்சக்தி ஊட்ட இணைப்பில் இருக்கும் போதில், அழைப்புக்கு மறுமொழி பேசிடச் செவியில் வைத்தவர்கள் கேட்கும் திறனற்றவராகி விட்டனர் என்பதும்; கரங்களில் மின்சாரம் பாய்ந்து விரல்கள் பழுதாகி விட்டன என்பதும் தினசரிச் செய்திகள் வழியாக நமக்கு அச்சமூட்டி எச்சரிக்கைச் செய்கின்றன.
ReplyDeleteபின்னூட்டம் மூலம் தனது கண்ணோட்டங்களை தந்த அன்பு
ReplyDeleteஉள்ளங்களுக்கு நன்றி
முகநூலில் சற்றுமுன் கிடைத்த செய்தி:
ReplyDeleteசற்றுமுன் செய்திகள்
37,000ரூபாய்க்கு புதிய மாடல் செல்ஃபோன் வாங்கித் தராததால் மாணவி தற்கொலை.
கோவை ஆர்.எஸ்.புரம், டி.கே.வீதி, பட்டுநூல்கார வீதியைச் சேர்ந்தவர் நகைப் பணியாளர் கே.முருகன் (46). இவரது ஒரே மகள் நாகநந்தினி (19). பீளமேடு, கொடிசியா அருகில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். படித்து வந்தார்.
இந்நிலையில், தனது கல்லூரியில் சக மாணவ, மாணவியர் வைத்திருப்பதுபோல ரூ.37,000 மதிப்புள்ள புதிய மாடல் செல்ஃபோன் வாங்கித் தருமாறு நாகநந்தினி தனது தந்தையிடம் கேட்டுள்ளார்.
பணம் கிடைக்கும்போது வாங்கித் தருவதாகக் கூறி முருகன் காலம் கடத்தினாராம். இதனால், மனமுடைந்த நாகநந்தினி புதன்கிழமை காலையில் வீட்டில் தூக்குப் போட்டுக் கொண்டார்.
உயிருக்குப் போராடிய அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு ரேஸ்கோர்ஸ் அருகேயுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நாகநந்தினி உயிரிழந்தார். ஆர்.எஸ்.புரம் போலீஸார் விசாரிக்கின்றனர்.