வெளி நாடுகளில் உழைக்கும் சிலரின் குடும்பத்தில் நிகழும் நிகழ்வுகள் பற்றிய உளவியல் பார்வையே இந்த வார ஆக்கம்…
குடும்ப தலைவி ஒரு ஆசிரியையாய்... கணவன் இல்லா தருணத்தில் கண்டிக்கும் காவலனாய்... பணம் காசுகளை கையாள்வதில் பொருளாதார நிபுணராய் இருத்தல் வேண்டும். எதற்கு இதனை குறிப்பிடுகிறேன் என்றால் நான் கூற போகும் கருத்திற்கு தேவை என்பதற்காகவே...
பிள்ளைகளிடம் காட்டும் பாசம் என்பது நாம் மகிழ்வதற்காகவே ..அது கால சூழலுக்குத்தகுந்த மாதிரி மாற வேண்டும். உதாரணத்திற்கு ஒன்றும் அறியா மழலையை கொஞ்சும் போது எந்த மொழியிலும் இல்லா வார்த்தை கொண்டு கொஞ்சுவோம். அக்குழந்தை எல்லா வார்த்தைக்கும் சிரிக்கும் மீண்டும் மீண்டும் அதே வார்த்தை கொண்டு கொஞ்சி மகிழ்வோம். ஆனால் நடை பழகி தனது தேவையை கேட்கும் வயதில் நாம் அப்படி கொஞ்சுவதில்லை மாறாக ஏதாவது தவறு செய்ய முற்பட்டால் நாம் கடிந்து கொள்வோம். கடிந்து கொள்வது மருந்தை போன்றது ஆனால் கோபம் என்பதே காட்டாமல் வளர்ந்த குழந்தை வாழ்வில் வகையாய் மாட்டிகொண்டதை பற்றியே விளக்க விரும்புகிறேன்.
கணவன் வெளிநாட்டில் நல்ல வருவாய் ஈட்டி தனது மனைவி மக்கள் நன்றாக இருக்க மாதா மாதம் பணம் அனுப்பி வைக்கிறார். மனைவி பிள்ளைகளுக்கு சுவையாய் சமைத்து உணவூட்டி மகிழ்கிறாள். தான் பெற்ற பிள்ளைகளுக்கு எந்த குறையும் வைக்க வில்லை. காலை உணவிற்கும் பகல் உணவிற்கும் இடையே சிறு சிற்றூண்டி, பகல் உணவிற்கும் இரவு சாப்பாட்டிற்கு இடையே சிறு பண்டம், பிள்ளை மகிழ்ந்து விளையாட விளையாட்டு சாதனங்கள்... பிள்ளைக்கு வீடே சொர்க்கம் பிள்ளை மனது சிறு வீட்டிற்குள் ஒன்றி போனது.
நினைத்த காரியம் உடனே நிறைவேறியதால் உள்ளம் வெறும் வெற்றிடமாய் அமைந்து போனது !
இதே நிலையில் ஐந்தாம் வகுப்பு வரை வளர்ந்த பிள்ளை ஆறாம் வகுப்பு படிக்க செல்ல அங்கு ஆசிரியர் பாடங்கள் விசயமாக கடிந்து கொள்ள பிள்ளை அழுத வண்ணமாக வீடு வருகிறான். அன்று பிறந்த பாலகனைப் போல கருதும் தாயவள் பதைபதைத்துப் போகிறாள். பிள்ளை ஆசிரியர் கடிந்ததை கூற... தம்பி நீ பள்ளிக்கு செல்ல வேண்டாம் என்கிறாள். இதை என்ன வென்று சொல்வது ? இப்படியே வளர்ந்த மகன் இருபத்து மூன்று வயதாகியும் பேசா மடந்தையாய் வீட்டில் முடங்கி கிடக்கிறான் தாயவளோ முதுமையை எட்டி விட்டாள்... வறுமையின் கோர பிடியில் குடும்பம் தள்ளாடும் நிலை.
கண்டிப்பு என்பது நல்ல மருந்து அவற்றை அளவாய்க்கொடுத்து விடுங்கள் பிள்ளைக்கு எதையும் தாங்கும் இதயம் படைத்த பிள்ளையாய் திகழும்... வலுவிழந்த இதயம்... பிறரிடம் எதிர் கொள்ள முடியா நிலை ஏற்படும். உறுதியான உள்ளம் படைத்த மனிதனாய் வளர தாயின் அணுகு முறை மிக மிக அவசியம் உள்ளம் கேட்கும் MORE... MORE... என்று பிள்ளைகளுக்கு நல்ல வார்த்தைகளால் புரிய வைத்து ஆசையை தணிக்க வேண்டும்.
கடுமையான கண்டிப்பும் உள்ளம் தடுமாறும் ! எப்படி என்பதை அடுத்த வாரம் காண்போம்...
இன்னும் வளரும்...
'பத்திரிக்கைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்
மிதமான கண்டிப்பு... அதுவும் இந்தக்கால குழந்தைகளிடம் அவசியம் வேண்டும்...
ReplyDeletemore தொடர வாழ்த்துக்கள்...
நன்றி..தனபாலன் அவர்களே ...!
Deleteநண்பரே உங்களின் இந்த ஆக்கம் எனக்கு தெரிந்த குடும்பத்தில் நிகழ்ந்த ஒன்று வசதியாய் வாழ்ந்து பிள்ளைகளை அதிக அன்புகாட்டி கணவர் அனுப்பும் பணத்தை சேகரிக்காமல் பிள்ளைகள் சம்பாதித்து தருவார்கள் என்ற நம்பிக்கையில் இன்று மிகவும் கஷ்டப்படுகிறார் காரணம் பிள்ளைபருவத்தில் அதிக அன்பை மட்டுமே கட்டி பள்ளிக்கூடம் சரியாக அனுப்பாததின் காரணத்தால் இன்று சிரமப்படுகிறார்
ReplyDeleteஅன்பு நண்பரின் கூற்று மிக சரியானதே...!
Deleteநானும் சில குடும்பங்களில் கண்டிருக்கின்றேன்
இன்றைய சூழலில் தேவையான அருமையான பதிவு
ReplyDeleteஅருமையாகத் துவங்கியிருக்கிறீர்கள்
தொடர வாழ்த்துக்கள்
மிக்க நன்றி சகோ ரமணி அவர்களே
Deleteபதிவுக்கு நன்றி.
ReplyDeleteஇன்று பெரும்பாலான குடும்பங்களில் இப்படித்தான் பொத்தி பொத்தி நல்லா பொத்தி வளர்த்து மோசமான நிலையில் போனவர்கள் ஏராளம்.
இக்கால சூழலில் இல்லத்தரசனும் இல்லத்தரசியும் பிள்ளைகளோடு இருந்து சொந்த நாட்டிலேயே பொருள் ஈட்டுவது நல்லது.
மொத்தத்தில் காலம் மாறாமல் அப்படித்தான் இருக்கு, ஆனால் வாழக்கூடிய மக்கள்தான் தன் நிலையில் இருந்து மாறி மோசமாகிக் கொண்டே வருகின்றனர்.
இதற்க்கு யார் பதில் சொல்வது?
காலமா?
மக்களா?
சிந்தித்து பாருங்கள்.
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்.
அன்புடன்.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
கருத்திற்கும் ...வருகைக்கும் நன்றி
Deleteதொடரை ஆவலுடன் எதிர்பார்க்கும் பல நூற்று வாசகர்களின் நானும் ஒருவன்.
ReplyDeleteவழக்கம் போல் அருமை ! சைக்காலஜிக்களாக திங் பண்ணி எழுதிருக்கிறீர்கள்
தாய்மார்களிடேயே நிச்சயம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்.
தொடர வாழ்த்துகள்...
நன்றி ,,தம்பி நிஜாம்
Deleteதங்களின் ஆதரவு உள்ளத்திற்கு ஊட்டம்
குழந்தை வளர்ப்பில் அதிக கவனம் தேவை. மிகை மிஞ்சிய பாசமும், மிகையான கண்டிப்பும் கூடாது.
ReplyDeleteஒவ்வொரு காலகட்டத்திலும் அணுகு முறையில் வித்தியாசம் வேண்டும் என்பதை அழகிய முறையில் எடுத்து சொல்லி அசத்திவிட்டார் அன்பின் சகோதரர் அதிரை சித்திக்
வாழ்த்துக்கள். தொடருங்கள்.
நன்றி ..அதிரை மெய்சா அவர்களே ..!
Deleteதங்களின் கருத்திற்கும் வருகைக்கும் நன்றி
ஊரில் நடப்பதை அப்படியே - உள்ளதை உள்ளபடியே உங்களின் ஆக்கத்தில் எழுதி விட்டீர்கள். தாய்மார்களின் ஆதரவு இவ்வாக்கத்திற்கு உண்டு.
ReplyDeleteநன்றி கவியன்பரே ..
Deleteதங்களின் கருத்திற்கும் வருகைக்கும் நன்றி
குழந்தைகளின் மீது பெற்றோர்கள் மிகுந்த கவனத்துடன் கையாள்வது நன்று
ReplyDeleteநன்றே ..சொன்னீர்
Deleteசகோ ..தமிழன் அவர்களே
குடும்ப பெண்களுக்கு தேவையான ஆக்கம் அதன் சிறப்பும்.அருமை
ReplyDeleteநன்றி ..தம்பி ,
Deleteஹபீப் அவர்களே ..