.

Pages

Wednesday, April 3, 2013

[ 5 ] தொழில் புரிவோம் வாருங்கள் !

ஆசை மனிதனின் இயல்பு ஓர் நிறுவனத்தில் தொழில்புரியும் தொழிலாளி தம் மேலாளர் நிலை கண்டு அதுபோல் ஆக ஆசை, மேலாளருக்கோ தன் முதலாளியின் நிலை கண்டு ஆசை, முதலாளிக்கு மற்ற உயர் நிறுவனத்தின் உரிமையாளரின் மேல் நாட்டம், இப்படித்தான் உலக நிலை.

போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து நம் தமிழ் பொன்மொழி இது குடும்ப வாழ்க்கைக்கு ஒத்து வரலாம் வியாபாரத்திற்கு பொருந்தாது போதுமென்ற குணம் பொருளாதாரத்தை மேம்படுத்தாது தொழிலின் வளர்ச்சிக்கு தேடலும் போட்டியும் அவசியமே !

ஆசையுள்ள மனிதனின் தேடல், தம் நிலைக்கு ஏற்றாற்போல் இருக்க வேண்டும். அழுக்கு தீர குளித்தவனும் இல்லை ஆசை தீர வாழ்க்கையை ஒட்டியவனும் இல்லை.
  
சிலருக்கு தம் தந்தை, பாட்டனாரின் தொழில் தொன்று தொட்டு தம்மீது வந்து சேரும் அப்படி கிடைத்த தொழிலை தன் தந்தையின்    அனுபவத்தோடு இன்றைய சூழலுக்கு ஏற்ப மாற்றிக்கொண்டு போட்டி போடவேண்டும்.
ஒருவர் தொழில் தொடங்கவேண்டுமானால் மாவட்ட வணிகவரி மையத்தில் மனு செய்யவேண்டும் [ GOVERMENT OF TAMILNADU COMMERCIAL TAXES DEPARTMENT ] 11 இலக்கம் கொண்ட Tin Number தருவார்கள் இது இந்தியா முழுவதும் தொழில் செய்ய பொருந்தக்கூடியதாக இருக்கும்.

மனு செய்யும் முறை பற்றி பார்ப்போம் :
1. நம் புகைப்படம்
2.ரேசன் கார்டு ஜெராக்ஸ்
3. PAN கார்டு ஜெராக்ஸ் [ Proprietor ]
4. சொத்து சம்மந்தப்பட்ட டாக்குமெண்டுஸ் ஜெராக்ஸ்
5. வாடகை ஒப்பந்த பத்திரம் ஜெராக்ஸ்
6. Form F  Form A பூர்த்தி செய்யவேண்டும்
7. Rs. 500/- ரூபாய்க்கு DD எடுக்கவேண்டும்
8. ஏற்கனவே TIN NO உள்ளவர்களின் பரிந்துரை  கடிதம் 2 வேண்டும்.

இவற்றை சமர்பித்தால் ஒரு வாரத்தில் நம் முகவரி தேடி நமக்கு டின் நம்பர் சர்டிபிகேட் வந்துவிடும் அதன் பிறகுதான் Bank A/C திறக்க முடியும் எல்லாம் முடிந்தவுடன் வியாபாரத்தை துவங்கலாம்.

சகோ. சேக்கனா நிஜாம் அவர்களின் ஆசையை நிறைவேற்றி விட்டேன் என்ற மன நிறைவோடு மற்றும் ஒரு விஷயம்...
  
வாசகர்களாகிய  உங்களுக்கு ஒரு போட்டி வைக்கலாம் என்று இருக்கிறேன் !
இரண்டு திருடர்கள் ஒருவன் 25 முறை திருடி இருக்கின்றான் ஒரு முறையாவது போலிஸிடமோ அல்லது பொது மக்களிடமோ மாட்டியது கிடையாது !  2 ஆம் திருடன் 100 முறை திருடியுள்ளான் 50 முறை எதிலும் மாட்டவில்லை 25 முறை பொது மக்களிடமும் 25 முறை போலீசிடமும் அகப்பட்டு தர்ம அடிகளும் கேஸ்களும் போடப்பட்டுள்ளது.

இப்பொழுது உங்களிடம் ஒரு கேள்வி தங்களுக்கு திருடலாம் என ஆசைவந்து !? நீங்கள் அந்த திருடர்களிடம் அனுபவங்களையும், ஆலோசனைகளையும் கேட்கலாம் என்று விரும்புகின்றிர்கள் இரு திருடர்களின் வீடும் அடுத்தடுத்தே இருக்கின்றது யாராவது ஒரு திருடன் வீட்டுக்கு சென்று ஆலோசனை பெறலாம் என்றால் மற்றொரு திருடன் வீட்டுக்குள்ளே அனுமதிக்கமாட்டான்

ஆகையால் யாராவது ஒரு திருடனைத்தான் தேர்ந்தேடுக்க முடியும் தாங்கள் ஏதாவது ஒரு திருடனை தேர்ந்தெடுத்து ஆலோசனை பெறுங்கள் ஏன் அவரை தேர்ந்தேடுத்தீர்கள் என்பதை விளக்கமாக கருத்துப்பகுதியில் விளக்குங்கள்  தங்களின் மேலான விளக்கம் தேர்ந்தெடுக்கப்பட்டு எனது 6 வது தொடரில் தங்களின் கருத்தும் இடம்பெறும்.

ருசிகர தகவல் காத்திருக்கின்றது விளக்கமாக கருத்திடுங்கள்.
காத்திருங்கள் வியாழன் வரை...
மு.செ.மு.சபீர் அஹமது

17 comments:

 1. மிக்க நன்றி தொழில் அதிபருக்கு எனது வேண்டுகோளை கனிவுடன் நிறைவேற்றியதற்கு....

  தொழில் துவங்க நினைக்கும் இளைஞர்கள் அனைவரும் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்

  தான் கற்ற / கற்றுக்கொண்ட துறை சார்ந்த விசயங்களை பிறர் நலன் கருதி எடுத்துவைப்பது மிகச்சிறந்த சேவை

  உங்களின் தன்னலமற்ற இந்த சேவை தொடர வாழ்த்துகள்...

  ReplyDelete
 2. திருடன் சம்பந்தப்பட்ட எனது விளக்கம் இறுதியில் இருக்கும் :) எப்பூடி

  ReplyDelete
 3. TIN விளக்கங்களுக்கு நன்றி... பலருக்கும் உதவும்...

  TIN எடுக்கலாமலே பல தொழில்கள் நிறுவனங்கள் இன்னும் தொடர்கின்றன என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்...

  ஆக தொழில் செய்பவர்கள் எல்லாம் திருடர்கள் என்று மறைமாக சொல்லி விட்டீர்களோ... (ஹிஹி... அப்படி எடுத்துக் கொள்ளவில்லை)

  அனுபவம் எங்கு அதிகம் உள்ளதோ, அங்கு அதிகம் தெரிந்து கொள்ளலாம்... முக்கியம் : நல்ல வழிகளை மட்டும்

  போதுமா...?

  ReplyDelete
  Replies
  1. மறைமாக - மறைமுகமாக

   தவறு ஆகி விட்டது... சிறு தவறு என்றாலும் உடனே மாற்றி விட வேண்டும் அல்லவா...? இல்லை என்றால் பணம் நிறைய சம்பாதிக்கலாம்... மனதில் சந்தோசம்...? ஆமாம்... இதை ஏன் சொல்கிறேன்...?

   புரிதலுக்கும், தகவல் தந்த அண்ணனுக்கும் நன்றி...

   Delete
 4. வணிகவியல் ஆசிரியராக மாறி விட்டீர்கள்; உங்களிடம் இன்னும் கற்றுக் கொள்ள ஆர்வமுடன் இருக்கிறேன்.

  ReplyDelete
 5. நூறு முறை திருடி பொது மக்களிடமும் போலீசிடமும்

  மாட்டிகொண்ட திருடனிடம் ஆலோசனை கேட்பதே சிறந்தது

  தொழிலின் முழு சூச்சமும் அறியலாம் .

  ஆசை பற்றிய தகவல் அருமை நண்பா

  ReplyDelete
 6. அய்யா ஒரு உண்மை தெரிஞ்சாகனும்

  தொழில் புரிவதற்கும், திருடன் கதைக்கும் என்ன அய்யா சம்பந்தம் ? புரியவில்லை கொஞ்சம் விளக்கம் தாருங்கள்

  ReplyDelete
 7. முறையாக தொழில் செய்ய வேண்டுமெனில் அதற்க்கானஅனுமதிக்கு தேவையான விபரம் விளக்கமாக எழுதியிருந்தது அருமை.

  ReplyDelete
 8. புதுத்தொழில் செய்ய இருப்பவர்களுக்கு நல்ல வழி காட்டி! வாழ்த்துக்கள்.
  இங்கே கள்ளன் வெளையாட்டுக்கு நான் வரலே!

  ReplyDelete
 9. வந்தோர் அனைவருக்கும் வரவேற்புகளும் வாழ்த்துக்களும் தமிழன் அவர்களின் கேள்விக்கு பதில்
  தொழில் சம்மந்தமான கட்டுரையில் திருடன் கதைக்கு சம்மந்தம் இல்லைதான் ஒரு போட்டி என்று சொல்லி விட்டேன் அதில் சுவாரஸ்ய தகவல் இருக்கின்றது என்றும் சொல்லி விட்டேன் ஒரு உதாரனத்திற்குதான் திருடர்கள் அகப்பட்டார்கள் ஆனால் அனைவரும் உஷார் பேர்வழிகலாய் இருக்கின்றீர்கள் யாருமே போட்டியில் கலந்துகொள்ள முற்படவில்லை உங்களுக்கு தொழில் ஆர்வம் இல்லை என கருதலாமா அல்லது திருட்டுப்பட்டம் கட்டிவிடுவார்கள் என்ற அச்சமா நண்பன் சித்திக் என்னை முழுவதும் அறிந்தவன் ஆதலால் எந்த கேள்வியும் கேட்காமல் போட்டிக்கு தயாராகி விட்டன ஒருவர் மட்டும் கலந்தால் அது போட்டியல்ல

  ReplyDelete
 10. பதிவுக்கு நன்றி.

  அருமையான தகவல்கள்.

  தகவல்களை தரமாக தங்கமாக பார்த்தால் தொழில் சிறக்கும், தகவல்களை தள்ளாட்டத்தோடு பார்த்தால் தொழில் சிறக்காது.

  விதைப்பவனுக்கு நம்பிக்கை வரவேண்டும், அதுவும் சொந்த நம்பிக்கை வரவேண்டும், சொந்த நம்பிக்கையோடு விதைத்து பாருங்கள். எதிர்பார்த்ததைவிட அமோகமாக இருக்கும்.

  வாழ்த்துக்கள்
  வாழ்க வளமுடன்.
  அன்புடன்.

  K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
  த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
  உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

  ReplyDelete
 11. ஆக அருமையான முறையில் தொழில் செய்ய முதல் படி எப்படி என்பதை அருமையாக விலக்கி உள்ளீர்கள்.

  நூறு முறை திருடியவனிடம் ஆலோசனை கேட்பதை நன்று ஏன் என்றால் அவன்தான் 50 முறை எதிலும் மாட்டவில்லை.அதிகம் அனுபவம் அவனிடம் தான் இருக்கும்.

  ReplyDelete
 12. அனுபவம் புதுமை தொழில் முறை ஆக்கம்.வாழ்த்துக்கள்

  ReplyDelete
 13. நூறு முறை திருடியவனிடம் ஆலோசனை கேட்பதை நன்று ஏன் என்றால் அதிகம் அனுபவம் அவனிடம் தான் இருக்கும்.

  ReplyDelete
 14. சகோ.சேகன்னா நிஜாம் உங்களின் உள்ளங்கவர் திருடன் யார்?

  ReplyDelete
 15. ஏதாவது ஒரு திருடர்களின் ஆலோசனைகளை பெறுவதை வீட அந்த திருடர்களை புத்திசாலியான தாத்தாவிடம் அனுப்பிவைத்து திருந்த வைப்போம் !

  ஒரு திருடன் தன் தொழிலின் மூலம் ஏராளமான சொத்து சேர்த்திருந்தான். அவன் கட்டளைக்கு அடிபணிய சில திருடர்கள் இருந்தனர்.ஆனாலும் அவனிடம் நிறைவில்லை.

  ஒரு [ தாத்தா ] பெரியவரிடம் தன்னைப் பற்றிய விபரங்களைக் கூறி, தன் மனக்குறையை நீக்க ஒரு வழி காட்டுமாறு வேண்டினான்.

  பெரியவர் அவனை ஒரு மலை அடிவாரத்திற்குக் கூட்டிச் சென்றார். அங்கே கிடந்த மூன்று பெரிய கற்களைத் தூக்கிக் கொண்டு அவர் பின்னே வரச்சொன்னார்.

  அவர் மலை ஏறத் தொடங்கி விட்டார். திருடனால் மூன்று கல்லையும் தூக்கிக் கொண்டு நடக்க முடியவில்லை. அவன் அதை பெரியவரிடம் கூற அவரும் ஒரு கல்லைக் கீழே போட்டு விட்டு இரண்டை மட்டும் தூக்கி வரச் சொன்னார்.

  சிறிது தூரம் சென்றவுடன் இரண்டு கல்லுடன் நடப்பதும் சிரமமாக இருப்பதாகக் கூறினான்.

  பெரியவர், இன்னொரு கல்லைக் கீழே போட்டு விட்டு ஒரு கல்லை மட்டும் எடுத்து வரச் சொன்னார்.

  மீண்டும் சிறிது தூரம் நடந்தார்கள். ஒரு கல்லைத் தூக்கிக் கொண்டும் அவனால் மலை மீது ஏற முடியவில்லை.

  அதைக் கண்ட பெரியவர் அந்த ஒரு கல்லையும் கீழே விட்டுவிட்டு வரச் சொல்ல அவனும் எளிதாக அவருடன் மலை ஏறினான்.

  இருவரும் வேகமாக மலை உச்சியை அடைந்தனர்.

  பெரியவர் சொன்னார், ''நேர்மை வழியிலிருந்து பிறழ்ந்து விட்டால் மனசாட்சி மிகவும் கனமாகிவிடும். கனமான கற்களைத் தூக்கி கொண்டு உன்னால் மலை ஏற முடியவில்லை. அது போல மனசாட்சியைக் கனமாக வைத்துக் கொண்டு உன்னால் நிம்மதியாகவும் நிறைவாகவும் வாழ முடியாது.''

  இந்த வார்த்தையை கேட்டவுடன் திருடனுக்கு சுள்ளென்று குத்தியது மனது. அவனும் திருந்தினான் [ திருத்தப்பட்டான் ] திருட்டு தொழிலிளிருந்து...

  ReplyDelete
 16. திருடர்களிடம் ஆலோசனை பெரச்சொன்னால் திருடர்களுக்கே அட்வைசா ஒவ்வொருவர்களின் சிந்தனையும் ஒவ்வொன்றாய் இருப்பது மனிதனின் இயல்புதானே

  ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers