சென்ற வாரம் திருடன் கதையோடு நிறைவுற்றது. முதலாம் திருடனிடம் ஆலோசனைக் கேட்க யாரும் இல்லை. இரண்டாம் திருடனிடம் ஆலோசனை கேட்டு நண்பன் சித்திக், தம்பி ஹபிப், பெயர் சொல்ல விரும்பாத நண்பர் ஒருவர் ஆக மூவர் ஆலோசனைக் கேட்பதாயும். கருத்தே சொல்லாமல் கருத்திட்டோரும், திருடனுக்கே ஆலோசனை சொன்ன சகோ. சேக்கனா நிஜாம் அவர்களும் அடக்கம்.
முதலாம் திருடனிடம் ஆலோசனை கேட்டு இருந்தால், அவர்களின் மனோ நிலை எப்படி என்பதை பார்போம்.
1. குறுகிய காலத்தில் நிறைய சம்பாதிக்க ஆசைப்பட்டவர்கள் ஆவர்.
1. குறுகிய காலத்தில் நிறைய சம்பாதிக்க ஆசைப்பட்டவர்கள் ஆவர்.
2. ஒரே கல்லில் இரண்டென்ன மூன்று, நான்கு மாங்காய் விழ ஆசைப்பட்டவர்கள்.
3. இலாபம் ஒன்றே குறிக்கோளாய் இருப்பவர்கள்.
இரண்டாம் திருடனின் ஆலோசனைப் பெற்றவர்களை பார்ப்போம்
1. எந்த காரியத்தை எடுத்தாலும் அலசி ஆராய முற்பட்டவர்கள் நீங்கள்.
2. நீங்கள் துவங்கிய காரியம் கை கூடும் முன்பே யாராகிலும் பயமுறுத்தினால் அப்படியே விட்டு விடுவீர்கள்.
3. சுய தொழில் என்பது கடினம் என்ற கருத்து உங்கள் ஆழ் மனதில் நிலைத்திருக்கிறது.
4. நம்மால் இதை செய்யமுடியுமா என்ற பயம் உங்களிடம் இருக்கிறது.
கருத்து சொல்ல விரும்பாதவர்கள் பற்றி
1.ரஸ்கை ரிஸ்காய் நினைப்பவர்கள்
2. இவர்கள் ரிஸ்கை ரஸ்காய் நினைக்கவா போகிறார்கள் !?
3. உஷார் பேர்வழிகள்
திருடனுக்கே அறிவுரை சொன்னவர் பற்றி
1. இவரின் மனநிலை பற்றி நான் சொல்ல நான் மனோ தத்துவ கல்வி பயின்று இருக்கவேண்டும்.
இனி தொழிலில் விளம்பரத்தின் பங்கை காணுவோம்....
இனி தொழிலில் விளம்பரத்தின் பங்கை காணுவோம்....
விளம்பரம் :
விளம்பரம் வியாபாரத்தின் ஓர் அங்கம் ஆனால் இன்று 75 சதவிகிதம் விளம்பரமே ஆட்கொண்டு விட்டது. ஆடை இல்லா மனிதன் அரை மனிதன் என்பது போல் விளம்பரமில்லா விற்பனை பொருளும் அறை பொருள்தான் பத்திரிக்கைத் துறை பிரபலமாகாதக் காலத்தில் பொருள்களின் தரம்தான். அதன் விளம்பரமே வாங்கி பயன்படுத்தியவர்கள் பிறரிடம் எடுத்து சொல்ல அது பிரபலமாகி வியாபாரத்தை பெருக்கியது இன்றோ TV விளம்பரங்களும் பத்திரிகை விளம்பரங்களும் தான் வியாபாரப் பொருளை சீர்தூக்கி பிடிக்கின்றது.
உற்பத்தியாகும் பொருள் தரம் கூட்டுவதை விட விளம்பரப்படுத்தி விற்பனை செய்யப்படுகிறது. விளம்பரப்படுத்த உண்டாகும் செலவு பொருளின் மீது சுமத்தப்பட்டு நம்மீது திணிக்கப்படுகிறது.
நான் உஜாலாவுக்கு மாறிட்டேன், சண்டேனா ரெண்டு, புள்ளி ராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா ? மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றது. விளம்பரத்தின் தாக்கம்தான். பள்ளிக்கூட விளம்பரம், மருத்துவமனைகளின் விளம்பரம், என்று விளம்பர உலகமாய் மாறிப்போனது.
ஓர் விளம்பரம் [ உதாரணத்திற்கு பற்பசை விளம்பரம் ] எங்களது பேஸ்டை பயன் படுத்துவதினால் உண்டாகும் நன்மைகள் 5 தினை எழுதி அனுப்பினால் நல்ல கருத்துக்கு தக்க சன்மானமும் பத்திரிகையில் உங்களது கருத்தும் இடம்பெறும் என்று விளம்பரப்படுத்தி மக்களிடமிருந்து இலவச விளம்பரங்களை பெற்று விளம்பரப்படுத்திக்கொள்வர். கருத்து சொன்னதில் ஒருவர் நான் அந்த பேஸ்டை உபயோகித்தால் அன்று முழுவதும் சிறப்பாய் உணர்வேன் எல்லா காரியங்களும் கை கூடும் என்று வாய்க்கு வந்ததை எழுதி அந்த கம்பனிக்கு புகழாரம் சூட்டுவார். அது ஒரு வகை விளம்பர யுக்தி...
ஓர் விளம்பரம் [ உதாரணத்திற்கு பற்பசை விளம்பரம் ] எங்களது பேஸ்டை பயன் படுத்துவதினால் உண்டாகும் நன்மைகள் 5 தினை எழுதி அனுப்பினால் நல்ல கருத்துக்கு தக்க சன்மானமும் பத்திரிகையில் உங்களது கருத்தும் இடம்பெறும் என்று விளம்பரப்படுத்தி மக்களிடமிருந்து இலவச விளம்பரங்களை பெற்று விளம்பரப்படுத்திக்கொள்வர். கருத்து சொன்னதில் ஒருவர் நான் அந்த பேஸ்டை உபயோகித்தால் அன்று முழுவதும் சிறப்பாய் உணர்வேன் எல்லா காரியங்களும் கை கூடும் என்று வாய்க்கு வந்ததை எழுதி அந்த கம்பனிக்கு புகழாரம் சூட்டுவார். அது ஒரு வகை விளம்பர யுக்தி...
யாரும் இன்று மனிதனுக்கு கேடு விளைவிக்காத பொருள் வேண்டும் என்றோ சமுதாய சீர்கேடுகள் ஆகக்கூடாது என்றோ கவனிப்பது இல்லை நாம் சம்பாதித்தால் போதும் மற்றவர்களை பற்றி கவலைப்பட நான் ஒன்றும் மகான் அல்ல நான் ஒரு வியாபாரி என்று சொல்லிக்கொள்கின்றனர்!
வியாபாரி என்பவன் எமாற்றுக்காரனா ? வியாபாரியும், மாகாணும் மனிதன் தானே வியாபாரிகளே உங்களை நீங்களே ஏன் தூற்றி கொள்கின்றீர்கள். சமுதாய நலன் உடைய வியாபாரியாக இருங்களேன்.
உங்களை பாதித்த, அல்லது மனதில் பதிந்த விளம்பரங்கள் பற்றி கருத்துடுங்கள் மீண்டும் சந்திப்போம் வரும் வாரம்…
காத்திருங்கள் வியாழன் வரை...
மு.செ.மு.சபீர் அஹமது
மற்றவர்களைப் பற்றி கவலைப்படாதவர்கள் - ஒரு தொழிலை தான் நம்ப வேண்டும்... அந்த தொழில் வீழ்ச்சியடைந்தால் சிரமம் தான்... வேறு தொழில் செய்வது கனவு தான்... அவர்களால் ஒரு நிலைக்கு மேல் அவர்களால் வெற்றி பெற முடியாது...
ReplyDeleteசமூக நலன் உள்ள வியாபாரியாக இருப்பதில் தான் உண்மையான சந்தோசமே...
திண்டுக்கல் தனபாலன் அவர்களே ச.வி.ப.பொறுத்தவரை உங்கள் பெயர் தினபாலன் தினமும் வந்து ஆஜராகி கருத்து இடுவதிலும் தவறாது பங்கிடும் நல்ல பழக்கம் எல்லோருக்கும் இந்த பண்பு அமைவதில்லை வாழ்த்துக்கள்
Deleteதிருடன் - கருத்து கூறுதல் தொடர்பான விளக்கம் அருமை - நம்மை சித்திக்கவைக்கும்
ReplyDeleteவிளம்பரம் - தொழிலுக்கு முக்கியம் என்றாலும் இப்படி விதவிதமா உருவாக்க ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ !? :)
பதிவு வாரத்திற்கு வாரம் சிறப்பா அமைந்து வருகின்றன.
தொடர வாழ்த்துகள்...
உங்களுடைய ஆதரவில் மேலும் சிறப்பான பதிவுகள் வந்திடவும் veuvers களின் ஆதரவிலும் சிறப்பாகிட வாழ்த்துங்கள்
Deleteகுழந்தை ஏன் அழுறது
ReplyDeleteஉட்வாஸ் கொடுக்க சொல்
நீ குழந்தையா இருக்கச்சே
நானும் அதைத்தான்
கொடுத்தேன்
யாபகம் வருதா
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteநல்ல சுவாரஸ்யமாக போய்க் கொண்டிருக்கு, பாராட்டுக்கள்.
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்.
அன்புடன்.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.
// குழந்தை ஏன் அழுறது
ReplyDeleteஉட்வாஸ் கொடுக்க சொல்
நீ குழந்தையா இருக்கச்சே
நானும் அதைத்தான்
கொடுத்தேன்
யாபகம் வருதா //
ஹா..ஹா... ஹா...
ஏன் ஞாபகம் இல்லை பட்டி தொட்டியெல்லாம் பேமஸ்ஸான விளம்பரம்
நல்ல பொருள் ஒன்றுக்கு விளம்பர தேவையில்லை. தரமான பொருளாக இருந்தால் மாத்திரமே சந்தையின் விற்பனை இலகுவாக அமையும் என்பது எனது கருத்து
ReplyDeleteமனோ தத்துவ ரீதியான ஆய்வு
ReplyDeleteஉண்மையிலேயே தொழில் செய்ய தயக்கம் தான் எனக்கு
நண்பரே எனது ஆய்வை ஆமோதித்த தமக்கு ஜசக்கல்லாஹைர்
DeleteI WANT SOME மோர் (ஆவின் விளம்பரம்)
ReplyDeleteSAY QUNK, DONT SAY INK (பவுண்டன் பேனாவின் இங்க் மை விளம்பரம்)
இவைகள் எனக்கு மிகவும் விருப்பமானவைகள்; என் வணிகவியல் மூன்றாமாண்டுத் தேர்வில் Advertisement பாடத்தில் இவற்றைக் குறிப்பிட்டு எழுதியதால் நல்ல மதிப்பெண் எடுத்தேன்; அன்று நடந்தது; இன்று நினைவில் மீள்பதிவாக்கிய உங்கட்கு மிக்க நன்றி, தொழிலதிபரே!
I WANT SOME MORE YOUR EXPRENCE கவியன்பர்
DeleteI am ready; are you ready?
Deleteபொதுவாக இப்போது உள்ள காலகட்டத்தில் விளம்பரம் இல்லாமல் தொழில் செய்வது முடியாத காரியமே.!
ReplyDeleteஒரு பொருளின் தரத்தை விட மக்கள் அதன் விளம்பரத்தின் தாக்கத்தை வைத்தே விலை கொடுத்து வாங்குகிறார்கள். உபயோகத்திற்கு பின் அது தரக்குறைவாக இருந்தால் அதை யாரும் நாடுவதில்லை.அப்படி எத்தனையோ பொருள்கள் காணமல் மறைந்து போய்விட்டன.
பொருள் என்பது தரமான உணவைப்போல விளம்பரம் என்பது உணவுடன் பரிமாறப்படும் பிற கூட்டு ஐட்டங்கள் போல.. உணவின் சுவையை மெருகூட்டி கொடுப்பது பிற கூட்டு ஐட்டங்களே.(side dish)
அதே சமயம் உணவும் தரமான சுவையாய் இருந்து பிற ஐட்டங்களும் (side dish)ருசியாக இருந்தால் சொல்லவாவேண்டும்.
உங்களின் தயாரிப்பு ஓகோ என்று பெயர் வாங்கி புகழ் பெற்று விடும்.
உங்களின் இந்த கருத்தை தமிழனின் கேள்விக்கு பதிலாக்குகிறேன்
Deleteஇன்று பெரும்பாலான விளம்பரங்கள் இன்று நுகர்வோரை ஏமாற்றுவதாகவோ அல்லது வஞ்சிப்பதாகவே உள்ளன. பெரிய எழுத்தில் நுகர்வோரை கவரும் வாசகம் எழுதி விட்டு பக்கத்திலே ச்சின்ன *ஸ்டாரை போட்டு அதில் ஏகப்பட்ட விதிமுறைகள் இருக்கும். ஆனால் அதை பார்க்காமலே பொருளை வாங்கி விட்டு நொந்தவர்களும் உண்டு, வாங்க முடியாமல் ஏமாந்தவர்களும் உண்டு. விளம்பரத்தில் உண்மை அருகி இட்டுக்கட்டப்பட்டவையே அதிகம் காணப்படுகிறது.
ReplyDeleteஜஹபரின் இந்த வாதம் சரியானதே * ஒரு starஐ போட்டு ஏமாற்றும் விளம்பரங்கள் ஏராளம்
ReplyDeleteவிளம்பரகள் இல்லதா தொழில் இல்லை விளம்பரம் செய்வது பெரிசு இல்லை அந்த பொருள் தரமாக இருக்க வேண்டும்,
ReplyDelete///சமுதாய நலன் உடைய வியாபாரியாக இருங்களேன்////
ReplyDeleteசலாம் சபீர் காக்கா ,
நிச்சயமாக சமுதாய நலன் பேணி செய்யும் வியாபாரங்கள் ,ஒருகாலமும் தோற்காது
என்பதில் உறுதி .வெற்றி பெற தாமதமாகலாம் இறுதியில் வெற்றி உறுதி .
புதிய வரவான அப்துல் ரஹ்மான் தம்பிக்கு வரவேற்புகளும் வாழ்த்துக்களும்
ReplyDelete