.

Pages

Friday, April 19, 2013

ஊருக்குத்தான் உபதேசம் !? நமக்கில்லே டோய் !

மதுவால் ஏற்படும் தீமைகள் எனும் தலைப்பில். மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தலைமையில் மெரீனா கடற்கரை சாலையில் பேரணி துவங்கி வைத்தார் 
                                                                                                                                          - தினத்தந்தி
மான்புமிகுவின் கொடியசைப்பில்
மாபெரும் பேரணி,,,, 
வித விதமாய் பதாகையோடு 
மாணவர் வரிசையாய் !

பதாகைகள் சொன்தென்ன 
மது நாட்டுக்கும் 
வீட்டுக்கும் கேடு
கள்ளச்சாராயம் 
துறப்போம்
நம் கண்ணை காப்போம் 

கட்டிளம் காளையரை
சருகாக்கும் கள்ள சாராயம்.
கள்ள சாராய சந்தோஷம்
கல்யாண வீட்டையும்
காலன் வீடாக்கும்.

பாவிகளா ? பிள்ளையையும்
கிள்ளிவிட்டு
தொட்டிலையும்
ஆட்டுவீரோ

பதாகைகளின்
வாசகம் கண்டால்
சாத்தான் வேதம்
ஒதுவதுபோல்  உள்ளதே!

தந்தையின் கையில்
6 ஆம் விரலாய்
வெண் சுருட்டு
தனையனிடம்
கூரினான்
புகை நமக்கு
பகையென்று!

அஃதே உள்ளது உங்கள்
கூற்று !?

மதுக்கடை
மூடினால்
கள்ள சாராயம்
பெருக்கெடுக்கும்
என்கிறீரே !?

சட்டங்கள் இயற்றும்
சட்டமன்றம் எதற்கு
சட்டம் ஒழுங்கை
காப்பாற்ற
காவல் துறை எதற்கு

கடமை
கண்ணியம்
கட்டுப்பாடு
சொன்னவரின்
பெயர் தாங்கிகளே !?

மது ஒழிக்க
கடமையை செய்
கள்ள சாராயத்திற்கு
கட்டுப்பாடு விதி
கண்ணியமான
சமுதாயம்
பிறக்கும் !

தடையிலா
மின்சாரம் வேண்டும்
கடை [ மது ] இல்லா
தமிழகம் வேண்டும்

ஊருக்கு உபதேசம்
வீட்டிற்க்குள்
அத்துனையும்
அட்டகாசம் !

ஊருக்குத்தான் உபதேசம் !? நமக்கில்லே டோய் !

மு.செ.மு.சபீர் அஹமது

12 comments:

  1. ஹா... ஹா... ஹா...

    தலைப்பைப் பார்க்கவும் சிரிசிட்டோம்ல :)

    நேற்றைய பத்திரிக்கைச் செய்தியை படித்தவுடன் உடன் ஆக்கம் எழுதுவது என்பது தனிக்கலை. அவை உங்களிடம் நன்றாக அமைந்துள்ளது

    தொடர வாழ்த்துகள்...

    ReplyDelete
  2. ஊரில் நடக்கும் அவலங்களை ஆற அமர சொல்வதைவிட உடனுக்குடன் சூடாக சொவதில் ஒரு த்ரில் இருக்கு. அவ்வகையில் ச.வி.ப. வின் சூடான செய்திகளுக்கு நிகர் நாமாகவே இருப்போம்

    ஒரு தகவல் 22 ஆயிரம் கோடி ஆண்டு வருமானமாக நம் தமிழக அரசிற்கு கிடைக்கின்றது பிறகு எப்படி மதுவிலக்கை அமல் படுத்துவர்?

    ReplyDelete
  3. 1. பொழுதுபோக்காக [ ஜாலிக்காக ] எற்படும் பழக்கத்தை இன்று வரை விட முடியவில்லையே என வருத்தப்படுவோரும்...

    2. இன்று மனசு சரியில்லை [ ! ? ] எனச் சொல்லி சொல்லியே தினமும் குடிப்பவர்களும்...

    3. விஷேசத் தினங்களில் தங்களின் மகிழ்ச்சியை [ ! ? ] வெளிப்படுத்த நண்பர்களோடுச் சென்றுக் குடிப்பவர்களும்...

    4. ஊரின் கடைக்கோடியில் மதுக்கடை இருந்தாலும் அதை வாங்குவதற்காக ஒளிந்து நெளிந்து கொண்டு செல்பவர்களும்...

    5. இப்பழக்கத்தை கண்டிப்பாகக் கைவிட வேண்டும் என முயற்சி செய்து தோற்றுப் போனவர்களும்...

    6. இன்று மட்டும்தான் குடிப்பேன் ( ! ) நாளை குடிக்கவே மாட்டேன் ( ? ) என உறுதிமொழி ( ? ) எடுப்பவர்களும்...

    7. இதைத் தவிர்க்க மற்றொன்றை பயன்படுத்தி அதையும் கூடுதலாக சேர்த்துக்கொண்டு அடிமையாகிக் கொண்டவர்களும்...

    8. கடின வேலையை காரணம் காட்டி தங்கள் உடல் வலியை போக்குவதற்காக (?) போதையைப் பயன்படுத்துகிறவர்களும்...

    9. குடித்துவிட்டு வாகனத்தை தாறுமாறாக ஓட்டிச்சென்று விபத்துகளை ஏற்படுத்துபவர்களும்...

    10. மப்பு அதிகமாகி நடுவீதியில் படுத்துப் புரண்டு குடும்ப மானத்தையே குழிதோண்டிப் புதைப்பவர்களும்...

    11. குடிப்பதற்காக பொண்டாட்டியின் நகையைத் திருடும் '420' களும்...

    12. போதை அதிகமாகி தன் நிலை மறந்து தான் பெற்ற மகளையே “.....“

    என சமூகத்தில் இருக்கத்தான் செய்கின்றனர்.

    ReplyDelete
  4. 'பூரண மதுவிலக்கு சட்டத்தை' இயற்றி உடனடியாக அமுலுக்கு கொண்டு வருவதற்குரிய முயற்சியில் அரசியல் கட்சியினர் ஈடுபட வேண்டும்.

    முன்வருவார்களா !?

    ReplyDelete
  5. பாமர மக்கள் மட்டுமல்லாது மதுவின் கேடு அறிந்தும் மதுக்குடிப்பவர்களே அதிகமாக உள்ளனர்.மது அடிமையர்கள் நம்நாட்டில் அதிகமானோர் இருப்பதன் காரணமாகவே மதுவுக்கு எதிராக நடக்கும் அத்தனை போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் தோல்வியாகி விடுகின்றன.

    அப்படியானால் தீர்வு மதுக்குடிப்பவர்கள் மனம் திருந்த அதற்க்கு என்ன செய்வது என்று மாற்று வழி யோசிக்க செய்ய வேண்டும்.

    ReplyDelete
  6. ஹா... ஹா... நல்லாவே சொன்னீங்க...

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  7. நாளை ...

    முதல் குடிக்க மாட்டேன்

    சத்தியமடி தங்கம்

    ராத்திரிக்கு தூங்க வேண்டும்

    ஊத்திக்கிறேன் கொஞ்சம்

    இது பழைய பாட்டு

    நண்பரின் பாட்டு

    கொஞ்சம் புதுசு

    ReplyDelete
  8. மூளைக்கு ஒரு வேலை !

    Pack of my box with five dozen jugs of liquar என்ற ஆங்கில சொற்றொடருக்கு யாரும் அர்த்தம் சொல்ல வேண்டாம். ஆனால் இதற்குள் ஆச்சரியமான ஒரு !? விஷயம் இருக்கு ! அது என்னவென்று தெரிந்தவர்கள் கூறுங்கள் பார்ப்போம்.

    ReplyDelete
    Replies
    1. this sentace has all 26 letter

      Delete
  9. எந்த தண்ணி வண்டி கண்டு பிடித்தது இப்படி ஒரு வார்த்தையை

    ReplyDelete
    Replies
    1. ஹா... ஹா... ஹா... ராவா இருந்து திங் பண்ணிருப்பானோ !?

      Anonymous கூறியிருப்பது போல் 26 ஆங்கில எழுத்துகள் முழுவதும் அடங்கிய ஒரு சொற்றொடர்

      Delete
  10. அருமையான பதிவு.

    சரியாக சொன்னீர்கள சபீர் அஹமது காக்கா அவர்களே ஊருக்குத்தான் உபதேசம் செய்கிறார்கள் சிலர் அவர்களுக்கு இல்லை.தான் சொல்லும் உபதேசம் நல்லதுதான் ஆனால் அந்த வழிமுறைகள் தாம் நடக்கின்ற்றமா என பார்க்க வேண்டும்.

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers