.

Pages

Friday, April 5, 2013

கல்வி

திருமறை கூறும்
....திடமான கட்டளை
.திருநபி கூறும்
...""தொலைவான ஒட்டகம்""

அகிலத்தின் காட்சிகளை
.....அறிவிக்கும் முன்னோடி
அகிலத்தைக் காண்பதற்கு
...அணிகின்ற கண்ணாடி

சிந்தைப் பூட்டைச்
..சிறப்பாய்த் திறந்திட
விந்தை மிக்க
..விரைவுத் திறவுகோல்

சுரந்து வழியும்
...சுனைவழியின் தொடராம்
பரந்து விரியும்
....பகுத்தறிவின் சுடராம்

மிதக்கும் ஒளியாம்
..மின்னல் கீற்றாம்
செதுக்கும் உளியாம்
..சொர்க்கக் காற்றாம்

மூளையின் உணவாகும்
...முழுமையான கல்வி
மூளையே உணவாகும்
....முழுமையான கல்விக்கு!

உள்ளக் கிணற்றின்
...ஊற்றுக் குழியாம்
அள்ளக் குறையா
...ஆற்றுச் சுழியாம்

உலகம் சுற்றுவதும்
...உலகத்தைச் சுற்றி
பலனைக் கற்றுதரும்
...  பலமான கல்வி

மண்ணில் கைவைத்து
....மனிதன் கற்றது
விண்ணில் கால்வைத்து
..வியப்பைப்  பெற்றது

எல்லையும் வயதும்
...இதற்கு மட்டும்
இல்லையே மனிதா
...இறப்பில் முற்றும்

மரணம் முடிக்கும்;
....மடைமை ஒழிக்கும்;
இரந்தும் படித்தால்
...இயலாமை அழிக்கும்

செல்வமும் வீரமும்
....செழித்து வளர
கல்வியின் வீரியம்
....கடவுள் வரமாம்

சென்ற இடமெலாம்
.....செழித்திடும் வெற்றியாம்
வென்று பெறுபவர்
......வியத்தகு கல்வியால்

"கவியன்பன்"
அபுல் கலாம் 
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

27 comments:

  1. செல்வமும் வீரமும் "செழித்து" வளர...

    கல்வியின் சிறப்பு வரிகளுக்கு பாராட்டுக்கள்...

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. அன்பு நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்கள் இக்கவிதைக்கு என் வலைத்தளத்தில் ஓர் அருமையான பின்னூட்டமிட்டிருந்தீர்கள்; அதனை வெளியிடவில்லை; அத்தருணம் அக்கவிதையை என் வலைத்தளத்திலிருந்தும் கட்டாயமாக எடுக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் வேறொரு தளத்தில் இக்கவிதையை வெளியிடும் குழுவினரின் வேண்டுகோள் என்பதால் அத்தருணம் என் இக்கவிதையும் உங்களின் பின்னூட்டமும் அகற்றப்பட்டன. இப்பொழுது இத்தளத்தில் அப்படிப்பட்ட “நிபந்தனைகள்” எல்லாம் இல்லாத ஒரு சுதந்திரத் தளம் என்பதால் மீண்டும் என் தளத்தில் இக்கவிதைய மீள்பதிவு செய்கிறேன்; உங்களின் கருத்துரைகளை இதுகாறும் அகற்றியதே கிடையாது; காரணம், தொடர் வருகையாளராகவும்- முதல் வருகையாளராகவும் என் சொந்த வலைத்தளமான “கலாமின் கவிதைகள்” பக்கம் நீங்கள் இருக்கின்றீர்கள்; ஆயினும், அன்று இக்கட்டான சூழ்நிலையில் உங்களின் பின்னூட்டமும் என் முழு ஆக்கமும் நீக்கப்பட்டதை எண்ணி இன்னமும் வருந்துவதுடன் இனிமேல் இப்படி நிபந்தனை போடும் எத்தளத்திற்கும் நான் என் கவிதைதளை அனுப்புவதில்லை என்ற முடிவுக்கும் வந்து விட்டேன்; இத்தளம் ஒரு சுதந்திரத்தளம் என்பதும் எல்லார்க்கும் வாய்ப்பளிக்கும் இனியவர் எனக்கு எந்த “நிபந்தனையும் “ தராதவர் நிஜாம் என்னும் நிஜம் உடையவர் என்பதால் இக்கவிதையை மீள்பதிவு செய்தேன்; நீங்களும் மீண்டும் இத்தளத்திலும் முதல் வருகையும் வாழ்த்தும் வழங்கி எனக்கும் என் கவிதைக்கும் மதிப்பளித்து விட்டீர்கள் என்பதை எண்ணி அன்று நான் பட்ட வருத்தம் நீங்கி இன்று மட்டிலா மகிழ்வுடன் என் உளம்நிறைவான நன்றியறிதலைக் கூறுகிறேன், அய்யா!

      இதோ மீண்டும் என் சொந்தத் தளத்திலும் பதிவு செய்கிறேன் அய்யா! நீங்கள் அங்கும் வருகை தர விழைகிறேன்; அழைக்கிறேன் அன்புடன் அய்யா!

      Delete
  2. கற்றது கையளவு
    கல்லாதது கடலளவு

    விட்டது பாதியிலே
    விடைகிடைத்தது
    கலாமின் கவியினிலே

    சுட்டது உள்மனது
    சூனியமானது
    கல்வியிலா வாழ்வு

    பெற்றது
    மடமைப்பெயர்

    பாரிட்டது
    கல்லாதவனில்
    பொல்லாதவன் நன்று.

    ReplyDelete
    Replies
    1. பழமொழியும், மறுமொழியும் உங்களின் பழகுமொழிப் பாடலில் கண்டேன்; சுவைத்துப் பருகிக் கொண்டேன் கவிஞர் மெய்சா அவர்களே! மிக்க நன்றி!

      Delete
  3. சிறந்த கல்வியாளரிடமிருந்து அருமையான் கவிதை

    வாழ்த்துகள் கவிக்குறள்

    தமிழகப் பாடப்புத்தகத்தில் இடம்பெற தகுதியுள்ள சிறப்பு மிக்க கவிதை !

    கல்வி கற்போம் - கற்பிப்போம்

    ReplyDelete
    Replies
    1. \\அன்புச் சகோதரர் நிஜாம் தன் இரு வலைத்தளஞ்களிலும் என் கவிதைகளை மீள் பதிவாக இருந்தாலும் பதிந்து என் கவிதைகள் நிறையப் பேர்களிடம் செல்ல வழியை ஏற்படுத்தி என்னை மதிப்பளித்தார். அதனால் அவரின் தளத்திற்கு மட்டும் (அதிரையின் வலைத்தளங்களில்) வாரம் தவறாமல் பதிகிறேன்.\\

      அன்பின் விழிப்புணர்வு வித்தகர் - நிஜம் நிறைந்த நிஜாம் அவர்கட்கு, அஸ்ஸலாமு அலைக்கும்!

      மேற்காணும் செய்தி அண்மையில் எனக்கும் ஒர் அன்பர்க்கும் இடையில் உண்டான உரையாடலில் உங்களைப் பற்றி உயர்வாய்க் கூறிய உண்மை வரிகள்; அவ்வுரையாடல் முழுவதும் இரகசியமானதாக இருந்தாலும், இவ்வரிகளை மட்டும் ஈண்டுப் பதிவதில் (வெளிப்படையாக்குவதில்) அடியேன் உளம்நிறைவை அடைகிறேன்; காரணம், இக்கவிதை ஏற்கனவே வேறொரு தளத்தில் பதியப்பட்டிருந்தாலும் மீள்பதிவாகவே உங்களின் இத்தளத்தில் பதியப்படுவதை நீங்கள் விரும்பி ஏற்று எனக்கு “நிபந்தனைகள்” ஏதும் விதிக்காமல் “சுதந்திரமாக” உலா வர வைத்த உங்களின் கொள்கை என்னைப் போன்ற புதியவர்கட்குப் பெரிய வரமாகும்; ஆக்கங்கள் வளர்க்கும் உரமாகும்; அன்பைத் தேடும் அன்பர்கட்கு நிழல் தரும் மரமாகும்! இதனை வெளிப்படுத்துவதில் நான் யார்க்கும் அஞ்ச வேண்டியதில்லை என்பதால் பொதுத் தளத்தில் வெளிப்படுத்தி விட்டேன்; உண்மையை உரக்கச் சொல்லுகிறேன்! உங்களின் வாழ்த்துரைக்கும் உளம்நிறைவான நன்றிகள். அல்லாஹ் நாடினால் என் வாழ்நாளில் உங்கள் கனவும் நனவாகலாம்; அன்று பள்ளிப்பாடத்தில் என் பாக்களும் வைக்கலாம்; அதற்காகவே கடினமாய் உழைப்பேன், இந்த அபுல்கலாம்!

      Delete
  4. மண்ணில் கைவைத்து
    ....மனிதன் கற்றது
    விண்ணில் கால்வைத்து
    ..வியப்பைப் பெற்றது.

    உண்மை வரிகள்.

    ReplyDelete
    Replies
    1. ஆம். எனக்கும் மனநிறைவைத் தந்த வரிகள்; காரணம் இதற்குள் கவிதை என்னும் பூவின் மூவிதழ்களை மூடி வைத்துள்ளேன்; அதனாற்றான் இத்தனை நறுமணமாய் உங்களை ஈர்த்து விட்டது; அஃதே போல் கீழ்க்காணும் வரிகள்

      //மூளையின் உணவாகும்
      ...முழுமையான கல்வி
      மூளையே உணவாகும்
      ....முழுமையான கல்விக்கு!\\

      இதனை ஓர் அரிய தத்துவஞானியின் அற்புத வரிகளைப் படித்த நேரம் இக்கவிதைக்குள் அத்தாக்கம் இவ்வரிகளிலும் நுழைந்து விட்டது! இதன் தாக்கத்தால் இஃதே போன்று வாழ்வின் எல்லாத் தேடல்களையும் மையமாக வைத்து “தேடல்” என்னும் தலைப்பில் என் பாடலுக்கான வரிகள் என் சிந்தைக் கருவறைக்குள் கருவாகி ஒட்டிக் கொண்டு வளர்கின்றன; தக்க தருணத்தில் அக்கவிதைக் குழந்தை “தேடல் “ என்னும் பெயர் சூட்டப்பட்டு இத்தளம் என்னும் தொட்டிலில் போடுவேன்;அப்பொழுதும் உங்களின் பாராட்டுகள் கிடைக்கும்; படிப்பாளிதான் படைப்பாளியாக முடியும் என்பதில் என் வாழ்வில் நான் கண்ட உறுதியான நம்பிக்கை; அதனாற்றான், உட்லுக்கு உரமூட்டும் உடற்பயிற்சி செய்யும் நேரத்தில் கூட (பள்ளிப்பருவத்தில்) “நூலகமே என் உலகம்” என்று வாழ்ந்தேன்; இற்றைப் பொழுதில் அதன் பலனைத் தமிழுலகம் என்னையும் ஒரு கவிஞர் என்று அங்கீகாரம் செய்ய அப்படிப்பே எனக்குப் பெருந்துணையாக இருக்கின்றது என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்; எல்லாப் புகழும் இறைவனுக்கே; எழுத்தறிவித்த ஆசான்கட்கு என் தாழ்மையான நன்றிகள்!

      Delete
  5. Thank you uncle

    Excellent poem

    Nowadays education is one of the most important subjects. It is an essential basis of good life. A man becomes a human being in the real sense when he is transformed from primarily an animal being into a human being.

    ReplyDelete
    Replies
    1. Assalaamu alaikkum niece Parveen Ayesha.

      Excellent words of appreciation!

      Jazaakkumullaah khairan- Thanks for your regular attendance with nice reply with good English to prove your talent which I always expect from our community students. Really I am so proud of you and In Sha Allaah (with your kind permission) I shall show your all replies to my family members while I shall be In Sha Allah on vacation to India. Because, now-a-days, even engineering students who are chatting with me in Face Book are not writing good English. I found more grammatical mistakes in their dialogues. As a tuition teacher for Basic English Grammar, I rectify their errors immediately during chatting itself. Now I am so proud of you. Hence I request your kind pr emission to show your all replies to my family members. Because, your name includes my Sister (Ayesha) and my niece (Parveen) and generally speaking as you are sister In Islam and particularly you are one of our community girls in Adirai, I want to enhance your talent to whole community so as to know the power of learning as you mentioned in your reply.

      Two points from your this reply, I got :
      1) As our muslim girls are not interested in Higher studies, you proved to be a graduate.
      2) As our muslim girls are not writing or speaking in English (even boys /graduates) you have delivered your talent.

      May Allah Bless You!
      (Always my Dua will be for you)

      Your Uncle
      ABU AL KALAM

      Delete
  6. மண்ணில் கைவைத்து
    ....மனிதன் கற்றது
    விண்ணில் கால்வைத்து
    ..வியப்பைப் பெற்றது.

    உண்மை வரிகள்

    அதிரையின் ஊற்று
    தளம் வழியே
    பெருகி வழிகிறது

    ReplyDelete
    Replies
    1. தொழிலதிபரின் எழிலான வரிகள் எனக்கு ஊக்கமருந்து: உளம்நிறயும் இனியவிருந்து!
      இன்ஷா அல்லாஹ் இத்தளம் மட்டுமன்று; தமிழுலகம் என்னையும் ஒரு கவிஞர் என்று அங்கீகாரம் செய்து ஆறுதல் பரிசளித்துள்ளதும் ஓர் ஆறுதல்; காண்க


      http://kalaamkathir.blogspot.ae/2013/04/blog-post.html?

      என்ற இணைப்பைக் கண்டால் அறியலாம்.

      காரணம், அதிரையின் ஒரு தளத்தில் சில ஆண்டுகட்கு முன்னால் என்னையும் என்கவிதையையும் பின்னூட்டத்தில் தரம்தாழ்ந்து மட்டுறுத்தலின்றி “மட்டரகமாக” பின்னியிருந்தனர்; அன்று எனக்கு “தூக்கம் தொலைந்த இரவுகளாகி” அதனால் இன்று என் உடல்நிலையிலும் பாதிப்புக்குள்ளாகி விட்டேன்; இருப்பினும், என்னைத் தூற்றியவர்கள் முன்னால் , என் கடின உழைப்புக்கு அல்லாஹ் இப்படிப்பட்ட அங்கீகாரத்தைத் தமிழுலகின் தமிழ்ப்புலவர்கள்/ கவிஞர்கள் எல்லாம் போட்டிப் போட்ட அப்போட்டியின் வழியாக ஓர் அங்கீகரமாக (என் குருவுக்கும் எனக்கும் சேர்த்தே ஆறுதல் பரிசு!) என்பதே என் மன ஆறுதல். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!

      என்றும் உங்களின் ஆசிகளைத் தேக்கி;
      குன்றாப் புகழென்னும் உச்சியை நோக்கி!

      Delete
  7. படிப்பது சுகமானதா? சுமையானதா? என்ற ஒரு கேள்வி கேட்டால் சுமையாக இருக்கிறது என்றுதான் பலரும் சொல்வீர்கள்.

    ஆனால் படிப்பதைச் சுகமாக மாற்றிக் கொள்ளலாம் என்பதற்கு ஒரு குட்டிக் கதைச் சொல்கிறேன்…
    ஓர் அழகான ஊர். அந்த ஊரில் உள்ள ஓர் இளைஞன் நல்ல கனமாக வளர்ந்த ஒரு பசுமாட்டை எந்தச் சிரமமுமின்றித் தன் தோல் மேல் போட்டுக் கொண்டு தூக்கிக் கொண்டு ஊரைச் சுற்றி வந்தான். ஊரே அவனை வியப்புடன் பார்த்தது. நல்ல பலசாலி என்றது.
    எப்படி உன்னால் இவ்வளவு பெரிய மாட்டைத் தூக்கிச் சுமக்க முடிகிறது என்று பலரும் கேட்டனர்.
    ரொம்பவும் சுலபம் என்றான் அவன்.
    எப்படி?
    ‘இந்தப் பசுக் கன்றுக்குட்டியாக இருந்த நாளிலிருந்து தினம் தினம் தூக்கிச் சுமந்துக் கொஞ்சுவேன். அதனோடு விளையாடுவேன். அதுவே பழகிவிட்டது. இப்படித் தினம் தூக்கிப் பழகியதால் அதன் கனம் எனக்குப் பெரியதாகத் தெரியவில்லை, என்றான்.
    பாடம் படிப்பதும் இப்படித்தான். அன்றாடப் பாடங்களை அன்றாடம் படித்து விட்டால் எவ்வளவு கனம் கூடினாலும் அது சுமையாகத் தெரியாது. சுகமாகத் தெரியும்.
    அத்துடன் ஈடுபாடும் சாதிக்க வேண்டும் என்ற தாகமும் இருக்க வேண்டும். ஈடுபாடு என்பது தனித்துத் திகழ்வது அல்ல. எல்லாவற்றின் மீதும் அக்கறை கொள்பவர்களுக்குத்தான் உழைப்பில் ஈடுபாடுப் பிறக்கும். இஃது ஏதோ படிப்பதற்காக உங்களுக்குச் சொல்லப்பட்ட கதை அல்ல. படித்த பின்னும் உங்களுக்கு உதவும் பாடம்....

    குறிப்பு: முகநூலில் எனக்கு வந்த செய்தி

    ReplyDelete
  8. கற்க கசடறக் கற்பவை கற்றபின்
    நிற்க வதற்குத் தக

    எண் என்ப ஏனை எழுத்து என்ப இவ்விரண்டும்
    கண் என்ப வாழும் உயிர்க்கு.

    கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டு
    புண்ணுடையர் கல்லா தவர்

    ஒருமைக்கட் டான்கற்ற கல்வி யொருவற்
    கெழுமையு மேமாப் புடைத்து

    கேடில் விழுச்செல்வங் கல்வி யொருவற்கு
    மாடல்ல மற்றை யவை

    இவை அய்யனின் குறள்

    சுரந்து வழியும்
    ...சுனைவழியின் தொடராம்
    பரந்து விரியும்
    ....பகுத்தறிவின் சுடராம்

    உலகம் சுற்றுவதும்
    ...உலகத்தைச் சுற்றி
    பலனைக் கற்றுதரும்
    ... பலமான கல்வி

    செல்வமும் வீரமும்
    ....செழித்து வளர
    கல்வியின் வீரியம்
    ....கடவுள் வரமாம்

    சென்ற இடமெலாம்
    .....செழித்திடும் வெற்றியாம்
    வென்று பெறுபவர்
    ......வியத்தகு கல்வியால்

    இவை அய்யாவின் வரிகள்

    மிக நன்று வாழ்க தமிழ் வளர்க தமிழ் பற்று

    ReplyDelete
    Replies
    1. தமிழன் அய்யாவின் தரமான வாழ்த்துரைக்கு என் தாழ்மையான வாழ்த்தும் நன்றிகளும் உரித்தாகுக!

      அய்யனையும் அய்யாவையும் ஒன்று சேர்க்க வேண்டா.

      ஆயினும், அய்யன் வழியில் அடியேனும் “குறள் வெண்பா” இயற்றியுள்ளேன்; காண்க

      http://kalaamkathir.blogspot.ae/2010/12/blog-post_19.html

      என்ற சுட்டியில் காணலாம். அக்குறளைப் படித்து விட்டுதான் இத்தளத்தின் நிர்வாகி “விழிப்புணர்வு வித்தகர்” நிஜாம் அவர்கள் அன்றுமுதல் என்னை “கவிக்குறள்” என்று அன்பொழுக அழைக்கின்றார்கள்; அடியேனும் அவரின் அன்பு அடைமொழியை மறுப்பதுமில்லை; காரணம், அடியேன் பட்டங்களைத் தேடிச் செல்பவன் அல்லன்; ஆயினும் தேடி வரும் பட்டங்கள் எல்லாம் இறைவன் எமக்குத் தரும் மதிப்பை இனிய அன்பர்களின் இருதயம் வழியாக வெளிப்படுத்துவதாக எண்ணிக் கொண்டு அவர்களின் மனம் நோகாமலிருக்கவே ஏற்கிறேன். ஆயினும், நீங்கள் அய்யன் வள்ளுவருடன் அடியேனை இணைக்க வேண்டா.

      என்றும் நன்றியுடன்

      Delete
  9. சீன தேசம் சென்றேனும் ..

    சீரிய கல்வியை தேடு ..

    என்ற மாநபியின் சொல்லிற்கேற்ப ..

    கல்வியின் சிறப்பை தேன் தமிழில்

    உங்கள் தேன்கவியில்தந்தமைக்கு நன்றி ..

    பாட நூலில் பதிய தக்க கவி ..

    ReplyDelete
    Replies
    1. ஆம். அதிரையின் தமிழூற்றே! அதே “ஹதீஸில்” “கல்வி என்பது காணாமற் போன ஓர் ஒட்டகம்; அதனைத் தேடிப் பிடியுங்கள்” என்ற கருத்துப்பட இருப்பதும் அறிந்துதான் அக்கருத்தையும் திருமறையின் “இக்ர அ” என்னும் வரியில் “ஓதுவீராகா” என்ற வசனமே முதல் வசனமாகியிருப்பதும் “கல்விக்கு” அல்லாஹ்வும் அவனது தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களும் எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளனர் என்பதையே இக்கவிதையின் துவக்கமாகவே பதிவு செய்தேன்.

      உங்களின் உளப்பூர்வமான வாழ்த்துரைக்கு என் உளம்கனிந்த நன்றிகள்!

      Delete
  10. பதிவுக்கு நன்றி.

    கல்வி.

    கல்வியா, செல்வமா, வீரமா.
    கல்வியே முதன்மையாக நின்றது.

    அன்று கல்வி கற்காவிட்டாலும் ஏதாவது ஒரு சாதாரண வேளையில் போய் சேர்ந்து விடலாம். ஆனால் இன்று அப்படி இல்லை.

    குளியலறை, கழிவறை போன்றவற்றை தூய்மைப் படுத்தவும் கல்வி தேவை படுகிறது.

    ஆகவே, கல்வி முதன்மையானது.

    அருமையான கவிதை.

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  11. அன்பு மச்சானின் அருமைப் பின்னூட்டத்திற்கு என் அகம் மகிழ்வான நன்றிகள்.

    ReplyDelete
  12. மிதக்கும் ஒளியாம்
    ..மின்னல் கீற்றாம்
    செதுக்கும் உளியாம்
    ..சொர்க்கக் காற்றாம்

    நல்ல சந்தம்





    மூளையின் உணவாகும்
    ...முழுமையான கல்வி
    மூளையே உணவாகும்
    ....முழுமையான கல்விக்கு!

    நல்ல கருத்து

    பாராட்டுக்கள் கவிநண்பா

    ReplyDelete
    Replies
    1. கவியிடமிருந்து நல்ல பாராட்டுகள் - வாழ்த்துகள் கவிக்குறள்

      Delete
    2. என் இனிய நண்பர் அன்புடன் புகாரி அவர்கள் இறையருளால் உடல்நலம் தேறியதும் உடன் என் கவிதைக்கு நான் எதிர்பார்த்தக் கருத்துரையை இட்டதற்கு என் உளம்நிறைவான நன்றிகள். ஆம்.

      //மூளையின் உணவாகும்
      ...முழுமையான கல்வி
      மூளையே உணவாகும்
      ....முழுமையான கல்விக்கு!\\

      இவ்வரிகள் ஓர் அற்புதமான ஞானியின் சிந்தனை ஒளிக்கீற்றில் நான் படித்த வேறொரு வரிகளின் தாக்கம் அதனை ஈண்டுச் சரியாக உணர்ந்து அதனையே நல்ல கருத்தாக கோடிட்டுக் காட்டி விட்டீர்கள்; மேலும், சந்தங்களின் ஓசைக்குச் சொந்தமான

      //மிதக்கும் ஒளியாம்
      ..மின்னல் கீற்றாம்
      செதுக்கும் உளியாம்
      ..சொர்க்கக் காற்றாம்\\

      இவ்வரிகளையும் சரியாக உணர்ந்துச் சொல்லி விட்டீர்கள்.

      அப்படியானால், உங்களிடம் ஒரு வினா: இக்கவிதை எழுதிய எனக்கும் பதிப்பிக்கப்பட்ட இடங்களில் எல்லாம் அனைவர்க்கும் மிகவும் விருப்பமாக அமையப் பெற்றதில் நான் இக்கவிதை என்னும் மலருக்குள் “மூவிதழ்களை” உள்ளடக்கியே வைத்துள்ளதே காரணமாகும் என்பதை யான் அறிவேன்; இச்சூத்திரமும்- சூட்சமும் தான் இன்ஷா அல்லாஹ் இனிவரும் என் கவிதைகளில் ஒளிந்திருக்கும்; அதனாலே அவைகள் ஒளிரும்; மிளிரும். ஆக, அம்மூவிதழ்கள் யாவை? நீங்கள் சரியாகக் கண்டுபிடித்து விடுவீர்கள் என்பதும் எனக்குத் தெரியும்; காரணம்; அடியேன் ஒரு கற்றுக் குட்டி, நீங்களோ உச்சத்தில் இருக்கும் கவியரசர்; இருப்பினும் எனக்குள் ஓர் அவா; அதனாற்றான் இவ்வினா!

      இவ்வினாவினை வேறொரு தளத்திலும் கேட்கவே பிடிவாதமாக அத்தளத்தில் பதியச் செய்தேன்;பாராட்டுகள் பலமாக இருந்தாலும் நான் விரும்பிய அவ்விடையைக் காணோம்!

      Delete
    3. என் இனிய நண்பர் அன்புடன் புகாரி அவர்கள் இறையருளால் உடல்நலம் தேறியதும் உடன் என் கவிதைக்கு நான் எதிர்பார்த்தக் கருத்துரையை இட்டதற்கு என் உளம்நிறைவான நன்றிகள். ஆம்.

      //மூளையின் உணவாகும்
      ...முழுமையான கல்வி
      மூளையே உணவாகும்
      ....முழுமையான கல்விக்கு!\\

      இவ்வரிகள் ஓர் அற்புதமான ஞானியின் சிந்தனை ஒளிக்கீற்றில் நான் படித்த வேறொரு வரிகளின் தாக்கம் அதனை ஈண்டுச் சரியாக உணர்ந்து அதனையே நல்ல கருத்தாக கோடிட்டுக் காட்டி விட்டீர்கள்; மேலும், சந்தங்களின் ஓசைக்குச் சொந்தமான

      //மிதக்கும் ஒளியாம்
      ..மின்னல் கீற்றாம்
      செதுக்கும் உளியாம்
      ..சொர்க்கக் காற்றாம்\\

      இவ்வரிகளையும் சரியாக உணர்ந்துச் சொல்லி விட்டீர்கள்.

      அப்படியானால், உங்களிடம் ஒரு வினா: இக்கவிதை எழுதிய எனக்கும் பதிப்பிக்கப்பட்ட இடங்களில் எல்லாம் அனைவர்க்கும் மிகவும் விருப்பமாக அமையப் பெற்றதில் நான் இக்கவிதை என்னும் மலருக்குள் “மூவிதழ்களை” உள்ளடக்கியே வைத்துள்ளதே காரணமாகும் என்பதை யான் அறிவேன்; இச்சூத்திரமும்- சூட்சமும் தான் இன்ஷா அல்லாஹ் இனிவரும் என் கவிதைகளில் ஒளிந்திருக்கும்; அதனாலே அவைகள் ஒளிரும்; மிளிரும். ஆக, அம்மூவிதழ்கள் யாவை? நீங்கள் சரியாகக் கண்டுபிடித்து விடுவீர்கள் என்பதும் எனக்குத் தெரியும்; காரணம்; அடியேன் ஒரு கற்றுக் குட்டி, நீங்களோ உச்சத்தில் இருக்கும் கவியரசர்; இருப்பினும் எனக்குள் ஓர் அவா; அதனாற்றான் இவ்வினா!

      இவ்வினாவினை வேறொரு தளத்திலும் கேட்கவே பிடிவாதமாக அத்தளத்தில் பதியச் செய்தேன்;பாராட்டுகள் பலமாக இருந்தாலும் நான் விரும்பிய அவ்விடையைக் காணோம்!

      Delete
  13. அன்பின் விழிப்புணர்வு வித்தகர் நிஜாம்,

    கனடா கவிஞர் அன்புடன் புகாரி அவர்களை “கவி” என்று மட்டும் அழைக்காமல் அவர்க்குப் பொருத்தமான ஓர் அடைமொழியில் அழையுங்கள். உதாரணமாக “கவியரசர் கனடா கவிஞர்” என்றழைக்கலாம்!

    ReplyDelete
  14. கல்வின் சிறப்பு கவிதையின் பிறப்பு கவிதை வரிகளின் படைப்பு அருமை காக்கா.

    ReplyDelete
  15. அன்புமிக்க நேசர் ஹபீப் அவர்களின் வாழ்த்துரைக்கு என் உளம்கனிந்த நன்றிகள்.

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers