தாளாய் நினைப்பது தாளா அதுவெகு
நாளாய் உழைத்ததை நானிங்குச் சேமித்தேன்;
தூளாய் நினைத்துத் தொலைக்கவும் வேண்டாமே
கேளாய் மகனேநீ கேள்
படிப்படியாய் ஏறு படிப்பினில் தேறு
பிடிப்புடன் பற்றிப் பிடித்து பலமாய்த்
துடிப்புடன் போராடு துன்பம் களைந்து
படியுமே வெற்றியும் பார்
எதிர்காலம் உன்கையில் எப்படி யாகும்?
புதிர்களாய்ச் சிந்தை புலம்பி அழுமே
கதிர்களாய் உன்னையும் காப்பாற்றி வந்தும்
பதர்களாய் ஆகாமல் பார்
அன்பாய்ப் பணிந்தால் அனைவரும் நாடுவர்
வம்பை விதைத்தால் வசைகளைப் பாடுவர்
அம்மாவின் சொல்லை அனுதினம் கேட்டுநட
சும்மாவே சுற்றல் சுகம் ?
"கவியன்பன்"
அபுல் கலாம்
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com
குறிப்பு : இந்தக் கவிதை கடந்த [ 02-05-2013 ] அன்று இலண்டன் தமிழ் வானொலியின் கவிதை நேரம் நிகழ்ச்சியில் ஒலிப்பரப்புச் செய்யப்பட்டது. அதன் காணொளி இதோ...
அருமை...
ReplyDeleteஅன்னையர் தின அன்பு வாழ்த்துக்கள்...
நன்றி
Deleteஅம்ம்மா'ன்னா சும்மாவா !?
ReplyDeleteஅருமை !
தொடர வாழ்த்துக்கள் கவிக்குறள்...
பதிவிலிட்டமைக்கும், வாழ்த்துரைக்கும் நன்றி.
Deleteஅருமையான வரிகள் அருமையான பதிவுகள் வாழ்த்துக்கள் அபுல் கலாம் காக்கா அவர்களே.
ReplyDeleteஅம்மா? அவள் சொல்லி தந்தை அறிந்தோம் அவள் சொல்லி உறவு அறிந்தோம் அவள் சொல்லி உலகம் அறிந்தோம்.அவளின்றி இந்த உலகத்தில் வாழ நமக்கு துணை இல்லை
அன்பின் நேசர் ஹபீப் அவர்களின் வாழ்த்துரைக்கு நன்றி.
Deleteபதிவுக்கு நன்றி.
ReplyDeleteமச்சானின் கேள் மகனே கேள் என்ற தலைப்பில் இந்த கவிதை சுருங்கி இருந்தாலும் விளக்கம் பெருகி இருக்கின்றது.
மகனே, தாய் தந்தை பார்த்துவைக்கும் girl மகனே கேள்.
வாழ்த்துக்கள் மச்சான்.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
மச்சானுக்கு நன்றி.
Deleteஉங்கள் நன்றியை ஏற்றுக் கொண்டேன்.
Deleteகேள் மகனே கேள் ..
ReplyDeleteநல்ல கவி ..எனக்கு தொடராய் எழுத ஆசை
மிக்க நன்றி அதிரைத் தமிழூற்று அன்பு நண்பர் சித்திக் அவர்களே! யான் எழுதும் போதில் உங்களின் கட்டுரைத்தொடர்களின் பாதிப்பும் என்னைத் தொற்றிக் கொண்டதும் உண்மை; அஃதே போல்,இப்படிப்பட்டக் குழுந்தை மனோதத்துவம் என்பது உங்கட்குக் கைவந்த கலை என்பதும் யான் அறிவேன்; என் கவிதையின் தாக்கத்தால் உங்கட்குத் தொடர் எழுதும் ஊக்கத்தைத் தந்துவிட்டது என்பதே என் கவிதைக்குக் கிடைத்த மாபெரும் அங்கீகாரம் என்று கருதியவனாய் மீண்டும் உங்களின் உளமார்ந்து வழங்கிய வாழ்த்துரையில் மகிழ்கிறேன்; என் உளம்நிறைவான நன்றியை ஏற்பீராக!
Deleteஎழுத்தின் மூலம் உறவாய் திகழும் என் அன்பு காக்கா
Deleteதங்களின் எழுத்தில் ..கவியில் எவ்வளவு உயிரோட்டம்
தாங்கள் தரும் பதில் பின்னூட்டம் மனதிற்கு மிக இனிமை
சேர்க்கிறது ..தங்களின் எழுத்து தோழமை தொடரட்டும்
நன்றி
வாரா வாரம் ச.வி.ப.ல் தொடர்வதுபோல் தாங்களும் சகோ.மெய்சா அவர்களும் லண்டன் வானொலியில் இடம் பெறுவது அதிரையர்கலாகிய எங்களுக்கு பெருமையாக இருக்கின்றது
ReplyDeleteமிக்க நன்றி தொழிலதிபர் சபீர் அவர்களே! இன்னும் அதிரையர்கள் எங்களைப் பின் தொடர வேண்டும் என்பதற்காகவே எங்களைப் பற்றியக் குறிப்புகளுடன் எங்களைப் பற்றிய செய்திகளை நம் அன்புச் சகோதரர் விழிப்புணர்வு வித்தகர் நிஜாம் அவர்கள் சிரத்தையுடன் ச.வி.ப் ல் தொடர்ந்து வெளியிடுகின்றார்கள்; புரிந்துணர்வில் குறையுடையோர் “தற்பெருமை” என்று பின்னூட்டங்களில் தூற்றினாலும், அதிரையர்களின் பெயர் அகிலமெலாம் பரவச் செய்தல் என்னும் உளத்தூய்மையான இலக்கினை மட்டும் நோக்கிச் செல்லும் பணிகளில் தோற்பதில்லை.
Deleteமகனின் எதிர்காலம் குறித்த
ReplyDeleteமகத்தான ஏக்க வரிகள்
மனதை தொட்ட
மற்றுமொரு படைப்பு
கவியன்பரின் வார்த்தைகள்
கனீர்குரலில்
சகோதரி சைபாவின்
வாசிப்பு அருமை
வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி கவிஞர் மெய்சா அவர்களே! ஆம். உண்மையில் மகனைப் பற்றிய கவலையில் தான் எழுதினேன்; அல்லாஹ் உதவியால் உங்களனைவரின் துஆவினால் அவனும் +2 தேர்வில் வெற்றியடைந்து விட்டான்; அல்ஹம்துலில்லாஹ்!
ReplyDeleteநம்மிருவரின் தமிழைத் தன்னுடைய தேன்குரலால் வான்வழியே ஒலிக்கச் செய்யும் நம் அன்புச் சகோதரி திருமதி ஷைஃபா மலிக் அவர்கட்கு என்றும் நன்றிக் கடன்பட்டுள்ளோம்.