ஒவ்வொரு வாரமும் மக்களுக்கு நல்லதொரு பயனுள்ள ஆக்கம் கொடுக்க வேண்டும் என்ற விருப்பத்தோடு இறைவன் எனக்கு கொடுத்த ஞானத்தின் மூலமாக முயற்ச்சித்து எழுதி வருகின்றேன். அதே நேரத்தில் நான் அப்படியொரு பெரிய எழுத்தாளன் கிடையாது. எனக்கு தெரிந்தவற்றை எளிமையான தமிழில் எழுதுகின்றேன், என்னுடைய ஆக்கத்தில் இலக்கண பிழைகள் ஏதும் இருந்தால் தயவு செய்து பொறுத்துக் கொள்ளுங்கள்.
விழிப்புணர்வு என்று எடுத்துக் கொண்டால் அதற்கு எல்லைகள் கிடையாது, விழிப்புணர்வு விஷயங்கள் வரிசையில் இந்த வாரம் ஒரு வித்தியாசமான கோணத்தில் சிந்திக்கப்பட்டு கிடைத்த விடையை உங்களிடம் பகிர்ந்து கொள்ளலாம் என்ற எண்ணத்தோடு இதை பகிர்கின்றேன்.
ஒவ்வொரு காலக் கட்டத்திலும் மனிதனின் வாழ்க்கை முறைகள் ஒவ்வொரு விதமாக இருந்து வந்திருக்கின்றது, அன்று தொடங்கி இன்று வரை ஒரு பட்டியல் போட்டு பார்த்தால் நமக்கே வியப்பாக இருக்கும், நவீனம் இல்லாத காலத்தில் எப்படி வாழ்ந்தான், இந்தக் காலத்தில் எப்படி வாழ்ந்து வருகின்றான். இதைப் போய் ஆராய்ந்து பார்க்க வெளியில் போய் தேட வேண்டியது இல்லை, உங்களுக்கு அருகாமையில் இருக்கும் ஐம்பது மற்றும் இதுபத்தைந்து வயதை கடந்தவர்களிடம் கேட்டுப்பாருங்கள், அவர்கள் வாழ்ந்து வளர்ந்து வந்ததை அப்படியே பிட்டு பிட்டு வைப்பார்கள்.
மனிதனுக்கு கல்வி மிகவும் அவசியம், அதே நேரத்தில் மிகவும் முக்கியமானது அடிப்படை கல்வி, அடிப்படை கல்வி என்று சொல்லும்போது அடிப்படை சுய தேவைகளை எப்படி பூர்த்தி செய்வது, இதுவும் ஒருவகையில் கல்விதான், அதைத்தான் நான் இந்த இடத்தில் சொல்ல வருகின்றேன்.
அடிப்படை சுய தேவைகள் என்றால், தனக்கு உண்டான தேவைகளை பூர்த்தி செய்ய அடுத்தவர்களை எதிர்ப்பார்க்காமல் தானே பூர்த்தி செய்து கொள்ளுதல். அதாவது பல் துலக்குதல், முகம் கழுவுதல், கை கால்கள் கழுவுதல், ஆடைகளை கழுவுதல், குளித்தல், ஆடைகளை அணிதல், உணவுகள் உட்க்கொள்ளுதல், அவசரமாக இருந்தால் சமைக்கவும் தெரியனும் இவைகள் அனைத்தும் ஒரு மனிதனுடைய சுய தேவைகளாகும்.
குழந்தை பிறந்து இரண்டு அல்லது மூன்று வயதை அடையும் வரை அதன் சுய தேவைகளை தாயின் உதவியோடு பூர்த்தியாகி விடுகின்றது. பின்பு அந்தக் குழந்தை படிப்படியாக கற்றுக் கொள்ள வேண்டும், அல்லது தாய்மார்கள் குழந்தையின் வயதுக்கேற்ப கற்றுக் கொடுக்க வேண்டும். இதுதான் கடந்த காலங்களில் நடந்து வந்தது.
இன்று எப்படி இருக்கின்றது பெற்றோர்களே, பெரும்பாலான இடங்களில் ஐந்தோ அல்லது பத்தோ அல்லது பதினைந்தோ இந்த வயதை அடைந்தவர்கள் கூட தன் சுய தேவைகளை சுயமாக முடித்துக்கொள்ள முடியாமல் அடுத்தவர்களுடைய உதவியை நாடி இருக்கின்றனர், பல் துலக்க தெரியவில்லை, கை கால்கள் கழுவ தெரியவில்லை, துணி துவைக்க தெரியவில்லை, ஒழுங்காக உணவு உட்கொள்ள தெரியவில்லை, அடிப்படை சுய தேவைகளை பூர்த்த்தி செய்ய தெரியவில்லை. இதற்கெல்லாம் யார் காரணம் ? பெற்றோர்களே நீங்கள்தான் காரணம், பெற்றோர்களைக் கேட்டால் நேரம் இல்லையாம். இது எப்படி இருக்கு.
பெற்றோர்களே, நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு சிறு வயது முதல் அடிப்படை கல்வியாகிய இந்த சுய தேவைகளை பூர்த்தி செய்யும் முறையை அந்த குழந்தையின் வயதுக்கேற்ப கற்றுக் கொடுக்க வேண்டியது உங்கள் பொறுப்பு. அதேபோல் நீரின் சிக்கனத்தையும் கற்றுக்கொடுக்க வேண்டும்.
சிந்தித்து பாருங்கள் பெற்றோர்களே, உங்கள் குழந்தையின் எதிர்காலம் உங்கள் கையில் இருக்குது.
'மனித உரிமை ஆர்வலர்'
K.M.A. ஜமால் முஹம்மது.
Consumer & Human Rights.
S/o. K.M. Mohamed Aliyar (Late)
பெற்றோர்கள் அனைவரும் அவசியம் அறிய வேண்டியவை... முக்கியமாக நீரின் சிக்கனத்தையும்...
ReplyDeleteவாழ்த்துக்கள்... நன்றி...
உங்கள் கருத்துக்கு நன்றி.
Deleteஇன்றைய பெற்றோர்கள் அறிவதற்கு முன் இதையாவது படிப்பார்களா?
மிக சரியாக சொன்னீர்கள் காக்கா...!
ReplyDeleteமிக சரியாக சொன்னீர்கள் காக்கா...!
ReplyDeleteஅமெரிக்காவில் ....
ReplyDeleteசிறு குழந்தைகளுக்கு எல்லா விசயங்களையும்
கற்று கொடுத்து விடுகிறார்கள் .கடைகளுக்கு சென்று
பொருள் வாங்கும்போது .பிள்ளைக்கு மிட்டாய் வேண்டும் என்று கேட்டால் பிள்ளை கையில் காசை
கொடுத்து வாங்கி கொள்ள சொல்வார்கள் .கூடுதலான விலையுள்ள மிட்டாய்
எடுத்து வந்து ஆசையை கவுண்டரில் காசாளரிடம்
வந்து கொடுக்கும் தாயவள் உன்னிடம் உள்ள காசுக்கு இந்த பொருள் வாங்க இயலாது என கூறி
திரும்ப வைக்க சொல்வாள் ..பொருள் வாங்கிய பின்னர் தாயவள் .பிள்ளையின் முகத்தை பார்ப்பாள்
நன்றி அம்மா .என கூறும் ..சில சமயம் பொருள்
மீது உள்ள ஆவலில் உடனே சாப்பிட முற்படும் ..
அப்போது தாய் கூறுவாள் .என்ன சொல்லணும் ..
thank..you மா .என கூறும் ..
செல்லம் எனும் பெயரில் சோம்பேறிகளாக ஆக்கி விட கூடாது ...நல்ல பதிவு ஜமால் காக்கா
உங்கள் கருத்துக்கு நன்றி.
Deleteநான் இலண்டன் தேசத்தில் இருந்தபோதும் அங்குள்ள பெற்றோர்களும் இப்படித்தான்.
அனைத்துப்பெற்றோர்களும் அறிய வேண்டிய பதிவு.
ReplyDeleteசுருங்கச்சொன்னாலும் நயம்பட நச்சென்று சொல்லியிருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
Deleteபொதுவாக பரவலாக பல இடங்களில் பார்த்துவிட்டு இதை எழுதினேன்.
பிள்ளைகளுக்கும், பிள்ளைகளை பெற்றவர்களுக்கும் அருமையான அறிவுரை !
ReplyDeleteதொடரட்டும்....
உங்கள் கருத்துக்கு நன்றி.
Deleteஎங்கு பார்த்தாலும் கல்யாணம், அங்கும் இங்கும் நடந்தது அசந்து விட்டது.
உங்களுக்கு சொல்லவே தேவை இல்லை, கடுமையான வேளையிலும் ஒரு சீரான பாதை போடுவது என்பது அவ்வளவு எளிது கிடையாது.
பாதை என்று சொன்னது நம் வட்டாரங்களுக்கு தெரியாமல் இருக்காது.
சரியாக சொன்னீர்கள் அருமையான படைப்பு அருமையான ஆக்கம் சிறு ஆக்கமாக இருந்தாலும் சிறப்பாக இருக்கின்றது
ReplyDeleteதொடர வாழ்த்துக்கள்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
Deleteஇதை எல்லோரும் உணரவேண்டும்.
இற்றைப் பொழுதினில் இளைஞர்களிடம் இருக்கும் சோம்பலைப் பற்றித் தெளிவாகக் கூறிவிட்டீர்கள் மச்சான்! அருமையான விழிப்புணர்வு கட்டுரை; வாழ்த்துகள்!
ReplyDeleteஉங்கள் கருத்துக்கு நன்றி மச்சான்.
Deleteநிச்சயமாக இதை ஒரு பெரிய விஷயமாக எடுத்து நமதூர் குத்பாவில் நோடீஸ் வடிவில் விநியோகம் செய்யலாம் என்று நினைக்கின்றேன். இது பொதுவான விஷயம்தானே.