kalinjabyr:SteelSeries | Titanium Auto Sales
The SteelSeries was the world'...
Saturday, June 15, 2013
[ 14 ] உள்ளம் கேட்குமே !? MORE…[ உறவை நாடும் உள்ளம் ! ]
ஒருவரின் மனநிலை சீராக இருக்க தனது உள்ளத்தில் உதிக்கும் எண்ணங்களை பிறரிடம் பரிமாறி கொள்ள வேண்டும். அதற்கு உறவில் நல்ல நெருக்கம் வேண்டும். பிறர் மீது நாம் காட்டும் அன்பு, அவர்கள் நலம் மீது நாம் காட்டும் அக்கறை அடிப்படையில் உறவில் நெருக்கம் ஏற்படும். அப்படி சில உறவுகள் நண்பர்களாகவோ அல்லது உறவின் அடிப்படையாகவோ இருக்கலாம்.
தனக்கு ஏற்படும் கஷ்டங்களை உள்ளத்தில் பூட்டி வைத்து கஷ்டப்படும்
நிலையால் மனநோயாளியாக நேரிடும் எனவே தனது மன குமுறலை உடனே பிறரிடம் கொட்டி தீர்த்து விட வேண்டும். உள்ளத்தின் உள்ள சுமைகள் நீங்கி அமைதிபெரும். தனது கஷ்டங்கள் கூறினால் தமது கெளரவம் குறைந்து விடும் வெட்க கேடான விஷயம் என்றெல்லாம் தனக்குள் புதைத்து கொள்ளும் நிலை வேண்டாம்.
ஒருவருக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்றால், அவரிடம் பேசாது இருத்தலே போதும் எனவே ஒருவர் உறவை முறித்தல் முடிந்தவரை தவிர்த்து கொல்லுதல் நலம்.
சிறுவயதில் ஒரு நற்போதனை செவியுற்றேன். அதனை வாசக அன்பு நெஞ்சங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
முகம்மது நபிகள் கூறிய போதனை நீங்கள் ஏதோ ஒரு காரணமாக சண்டையிட்டு நண்பர்களிடம் பேசாது இருந்தால் மூன்று நாட்களுக்குள் கசப்பை மறந்து பேசி கொள்ளுங்கள் என்றார்கள். என்ற போதனைதான் அது உள்ளத்திற்கு உகந்த மருந்து என்பதை மறந்து விடாதீர்கள்.
சிறுபிள்ளைகள் வாட்டமாக காணப்பட்டால் ஏன் ? என கேளுங்கள். நேசிக்க படும் நண்பர்கள். பேசாது இருப்பது காரணமாக இருக்கலாம் அது பெரிய மன சோர்வை தரக்கூடும் அதுபோன்ற சமயங்களில் உள்ளம் ஊட்டம் பெற பிள்ளைக்கு நாம் நல்ல நண்பனாக அச்சிறு உள்ளம் ஏற்கும் அளவிற்கு நாமும் சிறுவனாய் மாறி அவனுடன் உரையாடி அவன் கஷ்ட்டங்களை உள்ளத்திலிருந்து நீக்க வேண்டும். வீட்டில் ஏன் இப்படி சோம்பலாய் உள்ளாய் ? என கடிந்து கொள்ளாதீர்கள். உள்ளம் ஒரு கண்ணாடி உடைத்து விடாதீர்கள் கண்ணாடியாய் இருந்து அவர்களை நேர்த்தி செய்யுங்கள்.
உள்ளம் உறவை நாடும். நட்பு உள்ளத்திற்கு மிகவும் இன்றி அமையாதது என்பதற்கு நம் சிறுவயது நடவடிக்கைகளில் கூட காண இயலும் நண்பர்களில் சிலர் ஏதோ காரணத்தால் பேசாது பிரிந்து தனது வெறுப்பை காண்பிப்பர் சில் வாரமோ மாதமோ பிரிவு நீடிக்கும் ஆனால் சந்தர்ப்பம் தினமும் சந்திக்கும் சூழல் மனதில் உள்ள கசப்பு நீங்கி பிற நண்பர்களால் ஒன்று சேர்க்க பட்டு ஒற்றுமையாக்கிவிடுவர்
சண்டையிட்ட நண்பர் ஒற்றுமையான சில தினங்கள் மனதில் ஏற்படும் புத்துணர்வு, சந்தோசம் அதிகமாக இருக்கும். வாழ்வில் நட்பின் பங்கு அனைவருக்கும் இன்றியமையாதது.
ஒரு அறிஞர் கூறிய கருத்தை இங்கு பதிய விரும்புகிறேன். உன்னுடைய நண்பனையும், நீ படிக்கும் புத்தகத்தை பற்றி கூறு உன்னை பற்றி நான் கூறுகிறேன் ! எனவே நல்ல நண்பனை தேர்ந்தெடுங்கள் வாழ்கை நபிக்கை பெரும் !
"நபிகளாரின் வாழ்கையில் நட்பின் பங்கு இன்றியமையாத ஒன்றாக இருந்தது" நேர விரயத்திற்கோ, கேளிக்கைகோ பயன்படுத்தி 'நட்பு' என்ற அழகிய உறவை கொச்சைப்படுத்தி விடாதீர்கள்"
நல்ல உறவுகளாய் அமைந்தால் அது ஆரோக்கியமே !
இத்தொடரின் முடிவுக்கு நெருங்கி விட்டோம் !
அடுத்த வாரம் சந்திப்போம் நட்புடன்...

இன்னும் வளரும்...
'பத்திரிக்கைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்
Subscribe to:
Post Comments (Atom)
/// உள்ளம் ஒரு கண்ணாடி உடைத்து விடாதீர்கள் கண்ணாடியாய் இருந்து அவர்களை நேர்த்தி செய்யுங்கள்... ///
ReplyDeleteஅருமை...
புரியாமல் பிரிந்து போன நண்பனாக இருந்தாலும், இல்லை நாமாக இருந்தாலும்... மீண்டும் புரிந்து நட்பு கொள்ளும் போது அந்த மகிழ்ச்சியே தனி...
தொடர வாழ்த்துக்கள்... நன்றி...
நட்புகள் பலவிதம் ...
Deleteசிறு வயதிலிருந்தே நட்பு ...
கல்லூரி நட்பு ....
தான் சார்ந்திருக்கும் தொழிலால் ஏற்படும் நட்பு ...
ஒத்த கருத்தால் ஏற்கப்படும் நட்பு ...
எ ந்த ஒரு காரமும் இல்லாமல் எனக்கு பிடிக்கும் அவனை
என்று கூறும் இனம் புரியா நட்பு .
இப்படி எந்த காரணங்களாலும் நட்பு எனும் செடி வளரலாம்
அது விருச்சமாக மாறுவதும் நமது அணுகு முறையில் தான்
உள்ளது ..நட்பை வளர்ப்போம் ..
எனக்கு நண்பர்களே இல்லிங்க என ஒருவராலும் கூறிவிட முடியாது.
ReplyDeleteவாழ்வில் உன்னதமான உறவு நட்பு !
எக்காலத்திற்கும் ஏற்றதொரு படைப்பு
தொடர வாழ்த்துக்கள்...
சரியாக சொன்னீர்கள் தம்பி நிஜாம் ..
Deleteஎழுத்தென்னும் நட்பு பாலம் அமைத்து
தமிழ் பால் ஊற்றி வளர்த்து வரும் தங்களின் நட்பு
பாராட்டத்தக்கது
நட்பை என்றென்றும் பேணிக்காத்தல் நலம்
ReplyDeleteஆம் சபதம் ஏற்போம் ....
Deleteநட்பைப்பற்றி ''உள்ளம் கேட்டுதே'' எனும் உங்களின் இக்கட்டுரை மூலம் இந்நேரத்தில் நினைவூட்டியதற்கு மிக்க நன்றி.
ReplyDeleteநட்பு என்பது எதற்கும் ஈடிணையில்லா ஓர் புனிதமான உறவு. வெள்ளை மனதில் பூத்த மல்லிகைப்பூ. அப்படி இருந்தது ஒரு காலம். ஆனால் இன்றோ போலி நட்புக்கள் ஆடம்பர நட்புக்கள் பெருகி இதய பூர்வமான நட்பு அரிதிலும் அரிதாகி அழிந்து கொண்டு இருப்பது தான் வேதனையளிக்கிறது.
நட்பு ...தெளிந்த நீரோடை ..
Deleteகருத்து பேதம் என்ற கல் எறிந்து
களங்கப்படுத்த வேண்டாம் என்போம்
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteநட்பு வட்டாரங்களை பற்றி சொல்லனுமாக இருந்தால் அவ்வளவு ஈசியாக சொல்லிவிட முடியாது, பல பேர் நினைக்கலாம், நட்பு என்றால் தெருவில் விளையாடினது, ஆரம்ப பள்ளி நட்பு, உயர்நிலை பள்ளி நட்பு, கல்லூரி நட்பு, இன்னும் ரூம் நட்பு, பிராயானத்தில் நட்பு இப்படி பல நட்புகள் இருந்தாலும் எல்லா நட்புகளும் மதிக்கத்தக்கது, எனக்கு மறக்க முடியாத நட்பு என்றால் என்னுடைய பதின் வயதில் சக்கை போடு போட்ட இலங்கை வானொலிமூலம் கிடைத்த நட்புகள் அனைத்தையும் இன்றும் தொடர்புடன் இருப்பதுதான்.
எல்லோருக்கும் வயதாகி விட்டது, பேரக் குழந்தைகளெல்லாம் உண்டு, இருந்தாலும் நாங்கள் சந்திக்கும்போது எங்கள் வயது அந்த பதின் பருவத்துக்கு போய்விடுகின்றது. இதுதான் உண்மையான நட்பு.
முது வயதில் உண்டாகின்ற நட்பு அவ்வளவு இறுக்கமாக இருக்காது காரணம், பல சலமுள்ள சிந்தனைகளுக்கு மத்தியில் உண்டாகின்ற நட்பு.
பதின் வயதில் உண்டாகின்ற நட்பு நூற்றுக்கு நூறு இறுக்கமாக இருக்கும் காரணம், சலனமற்ற ஒரே சிந்தனை.
எது எப்படி இருந்தாலும் நட்பு வட்டாரங்கள் வாழ்க.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
நல்ல விளக்கமான பின்னூட்டம் ..
ReplyDeleteநட்பு பற்றிய சிந்தனை ...
அனுபவமிக்க விளக்கம் ..நன்றி வாழ்த்துகள்
சேகரப் புதையலே நட்பு
ReplyDeleteசோதனை விடைகளே நட்பு
சாகர விடியலே நட்பு
சாதனைத் தூண்டுதல் நட்பு
தாகமேத் தீர்த்திடும் நட்பு
தாயினைப் போலவே நட்பு
வேகமாய்ச் செயல்படும் நட்பு
வேரிலே உறுதியாம் நட்பு
கவியால் கருத்திட்ட
Deleteகவியன்பருக்கு நன்றி
நட்பென்பது நட்புக்கு இலக்கணமாய் இருக்கவேண்டும் ரயில் சிநேகம் போல் இல்லாது இணைபிரியா உள்லமாய் இறக்கவேண்டும் நட்பால் ஏமாற்றப்படவர்களும் இருக்கிறார்கள் நட்பால் உயர்ந்தவர்களும் இருக்கிறார்கள்.
ReplyDeleteஎதிர்பார்ப்பு இல்லாததுதான் நட்பு நட்பு அமைவதும் இறைவன் கொடுத்தவரம் எனலாம்
நட்பின் விளக்கம் தந்த நண்பனுக்கு வாழ்த்துக்கள்
நட்பின் இலக்கணமே ..
Deleteநல்கருத்திட்டமைக்கு நன்றி
பண்டை கால இலக்கியத்தில்
ReplyDeleteகுசேலன் நட்பு பணக்காரனுக்கும்
ஏழைக்கும் உள்ள நட்பை குறிக்கும் இலக்கியம்
உள்ளத்தின் நீஙகா அன்பு கொண்ட நட்பு அது
கருத்து வேறுபாடு ,இன்னும் எத்தனையோ பாகு பாடு
காண பட்டாலும் அன்பு கொண்ட நண்பனின் பிரிவு
மனதை மிக சஞ்சல படுத்தும் ..உண்மையான நட்பை
உயிருள்ளவரை மறக்க முடியாது மறுக்க முடியாது