kalinjabyr:SteelSeries | Titanium Auto Sales
The SteelSeries was the world'...
Saturday, June 22, 2013
[ 15 ] உள்ளம் கேட்குமே !? MORE…[ முற்றும் ! ]
நல்ல உள்ளம் விதைப்போம்..!
உள்ளம் விதைக்கப்படும் பொருளா !? உள்ளம் என்றால் என்ற கேள்வி கேட்டு துவங்கிய நான் முடிவுரைக்குள் நுழையும் நான் மீண்டும் கேட்கிறேன்...
உள்ளம் என்றால் என்ன ? தனபாலன் அவர்கள் கூறிய அரூபமா !? அரூபம் என்ற சொல்லிற்கு பொருள் அறியா நான் எனது அறிவிற்கு உள்பட்ட சொல்லில் விளக்குகிறேன்.
உள்ளம் உயிருள்ளவரை செயல் படுவதால் அதனை ஆன்மா என்றே சொல்வேன் ! அந்த ஆன்மா உருவாக்கப்படும் நிகழ்வு ஆணும் பெண்ணும் கொள்ளும் தாம்பாதிய உறவுகள் மூலமே ! இரு ஆன்மாக்கள் இணைத்து புதிய ஒரு ஆன்மாவை உருவாக்கும் நிகழ்வாய் அமைகிறது.
மனநிலையில் பக்குவபட்ட குடும்ப தலைவன் மன அமைதியான குடும்ப தலைவி இவர்களின் இணைவு மூலம் கிடைக்கும் சிறு அரும்பு உயிர் பெற்ற அதே சமயம் உள்ளமும் உதித்தெழு கிறது . கருவுற்ற தாய் அவளது உணவு பழக்க வழக்கத்தை மாற்றி கொள்கிறாள் ஏன் என்றால் தன் கருவில் வளரும் சிசுவிற்கு அதன் வளர்ச்சிக்கு குந்தகம் விளைய கூடாது என்பதற்காக அவளின் கவனம் ஊனமில்லா நல்ல உடல் வாகினை பெற வேண்டும் என்ற நோக்கதிற்காக ஆனால் உடலோடு உள்ளமும் வளர்க்கிறது என்ற உண்மையை அறியாதோர் தனது செயல் பாடுகளை கவனம் செலுத்துவதில்லை.
பண்டை காலம் முதல் இன்று வரை கர்ப்பிணிகள் மனம் சந்தோசமாக இருக்க ஆசை பட்டதெல்லாம் வாங்கி கொடுத்து சந்தோச பட வைக்கும் சூச்சமம் என்ன வென்றால் உள்ளம் சந்தோஷத்தில் திளைத்திருக்க வேண்டும் என்பதற்காக தான். கர்ப்பிணியாகப்பட்டவள் தனது உள்ளத்தை சந்தோசமாக வைத்துக்கொண்டால் மட்டும் போறாது. நல்ல குணங்களோடு பத்து மாதம் தவம் இருக்க வேண்டும் .
* பொறுமை
* தயாள குணம் [ தர்மம் ]
* பணிவிடை
* நல்ல விடயங்களை கேட்பது .
* நல்ல புத்தகங்களை படிப்பது
* ஆன்மீகத்தில் ஈடுபடுதல் போன்றவைகளால் கர்ப்பிணி தனது உள்ளத்தை சீர் படுத்திகொண்டால் வளரும் சிசுவின் உள்ளமும் சீராய் ஆரோக்கியமாய் வளரும்.
* கோபம்
* பொறாமை
* புறம்
* களவு
* கசடு
* பயம்
* சுயநலம் [ ஒருதலை பட்ச உணர்வு ]
இன்னும் பிற கெட்ட குணங்கள் தவிர்த்து. கருவை சுமப்பவள் உள்ளத்தில் உருவேற்றினால் நிச்சயம் நல்ல உள்ளம் படைத்த குழந்தை உருவாகும்.
உள்ளம் என்றால் ஆன்மா என்றேன். உயிருள்ள வரை ஆன்மா உறங்காது. உயிர் பிரிந்த பின்னர் ஆன்மாவின் நிலை !? பல மத தர்மங்கள் பலவிதமாக கூறு கின்றன. இந்து தர்மம் கர்ம பலன் அனுபவித்தே ஆக வேண்டும் என்கிறது . தான் செய்த தீமைகள் மறு ஜென்மத்தில் தண்டனையாக பிறந்து கஷ்டப்படுவார்கள் என்கிறது.
இஸ்லாம் கூறுவது... ஒரு ஆன்மாவுக்கு ஒரே வாய்ப்பு தான் மனித பிறப்பில் பிறந்து அதில் அவன் நல்ல விதமாக வாழ்ந்து பிறருக்கு இடையூறு தராவண்ணம் பிறருக்கு நால்லுதவி பிரிந்து இறைவன் ஒருவன் என நம்புவது. முகமது நபி இறைத்தூதர் என நம்புவது தொழுகை, நோன்பு நோற்று, ஜக்காத் எனும் வருட வருமானத்தில் இரண்டரை சதவிகிதம் தர்மம்செய்து, செல்வம் இருந்து உடலில் வலிமை இருந்து பயணத்திற்கு தகுந்த வாகனம் இருந்தால் புனித பயணம் மேற்கொள்ள வேண்டும். அப்படி பட்ட ஆன்மா ஈடேற்றம் பெரும்.
உடல் அழிந்தாலும் உள்ளம் அழியாது. இந்து தர்மத்தில் ஆன்மா சாந்தி அடைய இறையை பிரார்த்திக்கிறேன் என்பார்கள். ஆகவே நல்லுள்ளம் படைத்த அன்பு நெஞ்சங்களே நம் ஆன்மாவிற்கு நல்லது செய்ய உயிர் உள்ள போதே பிற ஆன்மாவை மகிழ்விப்போம்.
* இஸ்லாமிய கோட்பாடுபடி எந்த ஒரு ஆன்மாவும் தான் செய்த நன்மை தீமை களுக்கு தண்டனை பெற்றே தீர வேண்டும். ஒரு போதும் பிறர் மீது திணிக்க பட மாட்டாது என்கிறது.
மரணத்திற்கு பிறகு அழிய வாழ்க்கை உண்டு. நல்ல நிலையில் சுக போகமாய் வாழ்வதும், கஷ்ட்டங்களை அனுவிப்பதும், உள்ளத்தில் உதிக்கும் எண்ணமும், தன் நடை முறையை வைத்துதான் .
உள்ளத்தை நன்மை செய்ய தூண்டுவோம் ! உள்ளம் கேட்கும் MORE ..MORE என நல்ல விசயங்களை நான் இது வரை விதைத்தது நல்ல விஷயம் தானே !
என் அன்பு நெஞ்சங்கள் நன்மை பல பெற்று வளமாய் வாழ என் உள்ளம் கேட்குது MORE MORE என்று விடை பெறுகிறேன் நன்றி !

[ முற்றும் ]
'பத்திரிக்கைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்
Subscribe to:
Post Comments (Atom)
நிறைவான... மகிழ்ச்சியான உள்ளம் கேட்குமே.... (உண்மையில் உள்ளம் கேட்கிறது... More More and
ReplyDeleteMore... வாழ்த்துக்கள்)
மிக்க நன்றி ...அன்பு நண்பரே
Deleteமுதலில் தவறாக என்ன வேண்டாம்... (என் மீது கோபம் இருக்கலாம்...) நான் எழுதுவது ஞாயிறு அதிகாலை இரண்டு மணி நேரத்தில்... பல தவறுகள் கண்டிப்பாக உண்டு... திருத்துவது என் குழந்தைகள் + துணைவி உட்பட... ISO - வில் அதைப் பற்றிய விளக்கமும் உண்டு... பகிர்கிறேன் விரைவில்...
ReplyDelete(Translate செய்யும் போது இப்படித் தான் எனக்கும் வரும்... பதிவு எழுதுவதை விட திருத்த நேரம் ஆகும்... என் பழைய பதிவுகளை படிக்கும் போது, என் பொண்ணு இன்னும் நிறைய சொல்லுவார்கள்... "குறித்து வை... நேரம் கிடைக்கும் போது மாற்றி விடுகிறேன்" என்பேன்...)
எனது அன்பு சகோதரருக்கு :
தாம்பாதிய - தாம்பத்திய
பக்குவபட்ட - பக்குவப்பட்ட
விளைய கூடாது - விளையக் கூடாது
சந்தோச பட - சந்தோசப் பட
சூச்சமம் - சூச்சுமம்
நால்லுதவி - நல்லுதவி
அப்படி பட்ட - அப்படிப் பட்ட
ஈடேற்றம் பெரும். - ஈடேற்றம் பெறும்.
திணிக்க பட மாட்டாது - திணிக்கப் பட மாட்டாது
கஷ்ட்டங்களை - கஷ்டங்களை
முக்கியம் : /// மரணத்திற்கு பிறகு அழிய வாழ்க்கை உண்டு...//
மரணத்திற்கு பிறகு அரிய வாழ்க்கை உண்டு.
இது சரியா என்பதை தெரிவிக்கவும்... நன்றி...
மறுபடியும் சொல்கிறேன்... நீங்கள் எனது நண்பர்...
மிக சரியாக சொன்னீர்கள் ..
Deleteநேரமின்மை ஒரு காரணம்
தேன் தமிழை அதன் பொருள் மாறும் அளவிற்கு எழுத்துப்
பிழைக்கு காரணம் தட்டச்சு ஞானம் குறைவே ..
தமிழூற்று மாத இதழில் கட்டுரை எழுதும் போது கூட
நான் ஒரு முறை எழுதுவதோடு சரி அது அச்சுக்கு சென்று
பிறகு அது பிழை திருத்தம் செய்ய ஒரு ஊழியர் இருப்பார்
திருத்தம் செய்த பின்னர் எனது பார்வைக்கு வரும் .
தமிலூற்றுக்கு எழுத்து பிழை திருத்தம் செய்தவர் தினத்தந்தி
நாளிதழில் வேலை செய்து ஓய்வுபெற்றவர்..எனவே தங்களின் சுட்டி காட்டலை ஏற்கிறேன் .
அரிய வாழ்க்கை என்ற சொல்லும் ஏற்க படக்கூடிய ஒன்றுதான் ..நான் எழுதியது அழியா வாழ்க்கை என்பதை
அப்படி எழுத்து ஆகி உள்ளது ..
தமிழ் பற்று மிக்க சகோ தனபாலன் நீங்கள் என்றும்
இனிய நண்பர் ..நன்றி
Thanks for your valuable articles and we are waiting for your another new episodes...
ReplyDelete- From courtalam
மிக்க நன்றி
Deleteஒத்துழைப்பிற்கு நன்றி
மீண்டும் சந்திப்போம்
உங்கள் இவ்வாக்கம் அசாதாரணமானதும், பலரும் எடுக்க அஞ்சும் ஓர் ஆழமான ஆய்வாகும். இப்பொழுது எனக்கு நேரமின்மைக் காரணியமாக எனக்குத் தெரிந்த (இது விடயமான) ஆன்மீகப் பேருண்மைகளை இப்பொழுது மறுமொழியில் இட இயலாமைக்கு வருந்துகிறேன்; இன்ஷா அல்லாஹ் திங்கட் கிழமைக்குப் பின்னர் இடுகிறேன்.
ReplyDeleteஆய்வுக்குப் பாராட்டுகள்!
நன்றி ..கவியன்பரே
Deleteதங்களின் வரவை மீண்டும் எதிர்பார்கிறேன்
நல்ல முயற்சி நீண்ட விளக்கம் இத்தொடர் முற்றுப்பெருவது ஏக்கமாக உள்ளது அடுத்த தொடரின் தலைப்பென்ன மீண்டும் தொடர வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி நண்பரே ..
Deleteவளைகுடா ..வாழ்க்கை என்ற தலைப்பு
சுவாரஸ்யத்தை எதிர்பார்க்கலாமா
Deleteஆம் .நிச்சயாக
Deleteஉள்ளம் கேட்குமே என்றொரு கருத்துமிக்க விழிப்புணர்வு ஆக்கம். முற்றும் என்று முற்றுப்புள்ளி வைத்து திகைப்படைய வைத்து விட்டீர்கள். ஆரம்பம் என்று ஒன்று இருந்தால் முடிவு என்று ஒன்று இருக்கத்தானே செய்யும் என்ற ஆறுதலில் மனதை தேற்றிக்கொண்டவனாய் தாங்களின் அடுத்த ஆக்கமாய் தலைப்பிட்டிருக்கும் ''வளைகுடா வாழ்க்கை'' ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். நன்றியுடன் வாழ்த்துக்கள் பல.!
ReplyDeleteநன்றி கவிஞரே ...
Deleteதங்களின் எதிர்பார்ப்பு நன்றாய் அமைய இறைவன் அருளட்டும்
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteஉள்ளம் கேட்குமே என்று 15 வது படியில் வந்து நிறைவு பெறுவது ஏக்கத்தை ஏற்படுத்துகிறது.
இத்தனை வாரங்கள் போனது தெரியவில்லை, இந்த தளத்தை எத்தனை தடவைகள் திரந்து பார்த்திருப்போம்? கணக்கு கூட போட்டுப் பார்க்க நேரம் இல்லை, அவ்வளவு சுவாரஸ்யமான ஆக்கங்கள் பல என்னை சுற்றி சுற்றி வந்தன.
அடுத்த ஆக்கம் என்ன என்று கேட்கலாம் என்று நினைக்கும்போது சகோ மு.சே.மு.சபீர் அஹ்மது அவர்கள் கேட்டுவிட்டார்கள் நீங்களும் பதில் தந்து விட்டீர்கள்.
வளைகுடா ... வாழ்க்கை.
நல்ல தலைப்பு. இப்போ நிலவுகின்ற சூழ்நிலைகளை வைத்து படைக்கப்போகும் ஆக்கங்களா, ரொம்ப சந்தோஷம , எழுதுங்கள்.
பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
நன்றி K.M.A.J. அவர்களே
Deleteவளைகுடா வாழ்க்கை பற்றி நன்றாய் அலசுவோம்
வளைகுடா விசா கூட ஒருசமயம் வராமல் போகும், ஆனால் வளைகுடாப் பற்றய கட்டுரை நிச்சயம் வரும்.
Deleteவிசாவுக்கு பொறுத்து விடலாம்.
Deleteஉங்கள் கட்டுரைக்கு பொறுக்க முடியாது.
நீங்கள் வளைகுடா கட்டுரை என்று சொன்னதும், கப்பலுக்கு போன மச்சான். ஞாபகம் வந்தது.
Deleteஅன்பரே! எழுதியும் அறிய துடிக்கும் அன்பரே! உங்கள் பசி அறிகின்றேன்.
ReplyDeleteஎன்னால் அறிந்தவைகளை எழுதுகிறேன்.
உள்ளத்தை விதைக்கமுடியாது!
உள்ளதுதான் உள்ளம்.
அறிஞர் தனபாலன் அரூபம் என்று கூறியதும் உண்மையே.
உருவம் உங்களுக்கு தெரியும். கண்ணுக்கு தெரிவது, கைகளில் படுவது.
அரூபரூபம். ஐம்புலன்களில் ஒன்று உணரும். காற்று, சப்தம், உஷ்ணம், வாசனை போன்றவைகள்
அரூபம்............இரவு மணி தற்போது 11.40 எனவே தொடரும் நாளை.....
அரூபம். உருவத்திற்கு நேர் மாற்றமானது. அதனால் இலைஎன்பதில்லை. இருக்கும் ஒன்று. உருவம் தோன்றா நிலை. உருவம், அரூபரூபம் அதற்கு முந்தின நிலை. அதில் உண்டாகாதது எதவுமில்லை. அதனால் அனைத்தும் சூட்சுமமாக உண்டாவதற்கு முந்தின நிலை. இன்னதென்று சொல்லமுடியாத ஒன்று. அதுவே அனைத்துமாக உண்டாகியுள்ளது. பெரும்பாலும் மனித மனத்தை குறிக்கின்றனர். ஆனாலும் அதைவிட்டு நீங்காத அதற்கு அப்பாற்பட்ட ஒன்று. ஒரு மனிதனில் உள்ளம் இருக்கின்றது என்பது அறிந்தது. அதனை பார்க்கமுடியுமா? என்றால் அவனின் தோற்றமே அதில் உண்டானது. வார்த்தைகளால் பல நிலைகளாக உள்ளத்தைக் குறிக்கின்றனர் ஆன்மா, ஆத்மா, மனம், எண்ணம். பல உள்ளம் இல்லை. ஒரே உள்ளம் பலவாகி உள்ளது. உள்ளத்தின் ஆற்றலை உள்ளமே அறியும். எல்லாம் எல்லாம்வல்லவனின் வல்லமையே!
ReplyDeleteதொடரும்......
உடல் அழிந்தாலும் உள்ளம் அழியாது...//
ReplyDeleteஉடலுக்கு அடிப்படை உள்ளம். உடல் அழிந்தால் உள்ளம் அழியாது. நனறாகச் சொன்னீர்கள். அதனால் உடல்தான் மண்ணோடு மக்கிப்போகும். ஆனால் உள்ளம் அப்படியல்ல. அது மனிதனாக இருந்து அறிந்த அறிவிற்கு ஏற்ப இருந்தான் வரும். நல்லுள்ளம் அதுதன் அறிவிர்கேற்ப இருந்துவரும் என்பதில் மாற்றுக்கருத்தும் இல்லை.
எந்த சக்தியும் அழிந்து இல்லாமல் போகாது நிலைதான் மாறி நிற்கும் என்பது விஞ்ஞானியின் கருத்து.அதுவும் அதைத்தான் சொல்கிறது.
இங்கு எழுதப்பட்டது தாங்கள் யாவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதில்லை. மாற்றுக் கருத்து இருப்பின் தெளிவை நாடுவது தாகிப்போர்கு இயல்பு.
நன்றி! தருணம் ஏற்பட்டதிற்கு.
ஞானம்..மிகுந்த பின்னூட்டம்
Deleteவாழ்த்துக்கள் கவி அருவி :நபி தாஸ் அவர்களே
முற்றும் என முடித்தார் ஆசிரியர் ஆனால் கவிஞ்சரோ தொடர்வார் போல் இருக்கின்றது எப்படியோ நிறைய விஷயங்கள் தெளிவாகிறது
ReplyDelete// நீண்ட விளக்கம் இத்தொடர் முற்றுப்பெருவது ஏக்கமாக உள்ளது.//
ReplyDelete//முற்றும் என முடித்தார் ஆசிரியர் ஆனால் கவிஞரோ தொடர்வார் போல் இருக்கின்றது.//
இது அறிஞர் மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) அவர்களின் எண்ணத்தில் மிதந்தவைகள்.
அறிஞரே!
உங்கள் உள்ளம் களத்திற்கு வந்துவிட்டது அறுவடை செய்தவைகளை இன்னும் கொஞ்சம் தந்திடலாம் எனக்கருதி இதையையும் எழுதுகிறேன்.
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது
வல்லவன் வகுத்ததடா....... என்று
பாடினான் நாம் வாழும் காலத்தில் கவிஞன்.
“என் உடம்புதான் உறங்குமேயன்றி
என் உள்ளம் உறங்காது”, என்றார்கள்
உலக பல்கலைகழகம் பெருமானார்(ஸல்) அவர்கள்.
புனிதர்கள் உள்ளம் உறங்காது.
உடம்பு இருக்கும்வரை உறக்கம் உண்டு.
உடம்பு இறந்தபின் உடம்புக்கு விழிப்பும் இல்லை,
உறக்கமும் இல்லை.
உடம்பு அழிந்தாலும் உள்ளம் இருக்கும்.
புனிதர்கள் உள்ளம் உறங்காது.
கேட்பது, சொல்வது, பார்ப்பது, நுகர்வது, உணர்வது
இவைகள் அறிவின் பல வழிகள்.
கை பேசுவதை கண் கேட்கும்.
உறுப்புகள் வழியாக மனம் அறிந்துக்கொள்ளும்.
அறிவு மனதிற்கு.
உள்ளம்தான் மனம்.
உள்ளத்தின் ஆற்றல் அதை நம் அறிவால் அளக்கமுடியாது.
உறுப்புகளை உண்டாக்கியதே உள்ளம்.
அது உறுப்புகள் இல்லாமலும் பிறரின் எண்ணங்களை அறிந்துகொள்ளும்.
“நீ நினைக்க நானும் அதேதான் நினைத்தேன்”, என்று பலரும் அவர்கள் தங்கள் வாழ்வில் அனுபவித்தது இல்லையா?
அடுத்தவர் அறிவால் ஒரு எல்லைவரைதான் பயணிக்கமுடியும்.
சொந்த அறிவால் சிந்திப்பவர்கள் புரிந்துகொள்ளாமல் இருக்கமுடியாது.
புனிதர்கள் உள்ளம் உறங்காது.
விழித்திருக்கும் உள்ளம், அது என்றும் தான் சம்பந்தப்பட்ட, தன்னை நோக்கிவரும் அறிவுகளை உறுப்புகள் இல்லாமலும், உறப்புகள் இருந்து செயலற்றிருப்பினும் புரிந்துகொள்ளாதா? உள்ளம் மகா சக்தி வாந்தது.
அதனையே போரில் இறந்தமனிதர்களிடம் அண்ணல் அவர்கள் பேசினார்கள்.
அவர்கள் உங்களைவிட மிகவும் தெளிவாக புரிந்துகொள்வார்கள் என்று அண்ணல் அவர்கள் சொல்லிருந்தும் இன்னும் ஏன்? அறியாமைகள் ஆட்சிபுரியவேண்டும்! ஆட்சிபுரியவிடவேண்டும்!
சாதாரன இறந்தவர்கள் கேட்கும் பொழுது மறைந்த புனிதர்கள் கேட்கயியலாது என்பது இலக்கணத் தவராக்கிவிடாதா?!
கருத்துக்களை உள்வாங்கும் மானிடர்கள் மிகவும் குறைவு. அறிஞர்களும் ஏனோதனே என்றிருப்பதும் வழிகாட்டுதல் என்ற நிலையில் வழுக்கிவிடும் அபாயம் அல்லவா?!
உள்ளதே உள்ளம். உணர்ந்துவிட்டால் ஆற்றல் அதிகம். அமைதியும் நிலவும்.
இது அறிவுகாலம் என்கின்றனர். அறிவென்பது விஞ்ஞான அறிவுகளைத்தான் இவர்கள் அறிவென்று குறிக்கின்றனர்.
மனிதன் நிம்மதியாக வாழத்தேவையான அறிவுகள்தான் உண்மையான அறிவு.
அதற்கு மெய்ஞானம் என்கின்றனர்.
மெய் அதாவது உண்மை, ஞானம் அதாவது அறிவு, மெய்ஞானம் அதாவது உண்மையான அறிவு.
1400+ ஆண்டுகளுக்கு முன்னரே உண்மையான அறிவுகாலம் உண்டாகிவிட்டது. இப்பொழுது அல்ல.
கெட்டமனதுடையவர்களை விஞ்ஞானம் இலகுவாக கெடுத்துவிட்டது. இப்பொழுது மனிதர்களை பார்ப்பது அரிதாகிவிட்டது.
விஞ்ஞான இயந்திரங்களைத்தான் அதிகம் பார்க்கமுடிகிறது.
இதயத்தை கழற்றி வைத்துவிட்டு வாழ்வதால் பெரியோர் மரியாதை, சொல் கேலிப்பொருளாக மாறிவிட்டது.
நான்கு வார்த்தை பேசதெரிந்தால் சிலர் சொல்வதெல்லாம் அறிவாகிவிடாது அல்லவா!
மனிதான் தன்னிடம் உள்ள மனதினை அதாவது உள்ளத்தை செம்மைபடுதினால் உலகம் அமைதியுடன் இருக்கும். நோக்கம் அதுதானே!
உள்ளத்தில் தான் உள்ளதை எழுதமுடியும்! எழுதிவிட்டேன். இன்னுமும், அறியவும் ஆசை.
நன்றி!
கவி அருவி ...நபி தாஸ் அவர்களின் ..
Deleteதேட்டம் அறிந்து மிக்க சந்தோசம்
உள்ளம் கேட்குமே more பாகம் இரண்டு எழுதும்
எண்ணமும் உண்டு ..வளைகுடா வாழ்க்கை தொடர்
முடிந்த பின்னர் இன்ஷாஅல்லாஹ் தொடர்வேன்
து ஆ செய்யுங்கள்
கவிதைக் கருத்தும் சிறப்பு அதற்கு வந்த கருத்துரைகள் அருமை . நண்பர் திண்டுக்கல் தனபாலனின் பணிவான வேண்டுகோளுடன் உள்ள கருத்தரை அருமை ,அதற்கு பதில் கொடுத்த விளக்கமும் பணிவு .கற்றதனின் மாண்பு காண முடிகின்றது
ReplyDelete