.

Pages

Wednesday, June 12, 2013

வீட்டுக்கோர் மரம் ஏன் வளர்க்க வேண்டும் !?

மரம் : மனிதனின் சுவாசம்
மரம் : பறவைகளின் சரணாலயம்
மரம் : வழிப்போக்கரின் கூடாரம்.
மரம் : பழங்கள் தரும்
பலன்கள் தரும்
நிழல் தரும்
மழை தரும்
மனிதன் காடுவரை செல்ல
கூடவே வரும்

காசு காசு
என அலைவோரை
சாகும்போது
எதை கொண்டு போவாய் ?
என கேட்போர்க்கு
சந்தன மரம்
பதில் சொல்லும் !
அவன் கட்டையோடு
அதுவும் உடன் கட்டை ஏரி ?

மரம் ஓர் தியாகி ?
தன்னை வெட்ட வந்த,
கோடாரிக்கு
கைபிடியாய் !
தன்னையே கொடுத்ததே

பூமிப்பந்தில்
தெரியும் நீல நிறம்
மீன்கள் வாழுமிடம்
மரங்கள் உள்ள
பசுமை நிறம்
மனிதன் வாழுமிடம் !

மனிதனுக்கு
கிடைத்த அடையாளம்
அவனால் வெட்டப்படுகிறது !

வெட்டப்பட்ட
மரம்
,,,வெட்டியவனுக்கே
உணவிற்கு
,,,விறகாய் !
உறங்க
,,,கட்டிலாய் !
தன்னையே
அற்பணிக்கும்
அற்ப மனிதனுக்காக

பச்சை தமிழனின்
நிறம் கருமை
பசுமையை பறை சாற்றும்
மரங்களின் நிறமும்
கருமை

மரக்கலம் கொண்டு
வணிகம் செய்தவர்
மரைக்காயர்

மனிதனின்
கடைசி பயணத்தில்
மரம்,
,,,பாடையாய்,
சவப்பெட்டியாய்,
விறகாய்
அவனோடு
மடிந்து போகிறது !?

வீடு வரை மனைவி
காடுவரை பிள்ளை
கடைசிவரை மரம் ?

அவன்
வெட்டிவைத்த
கிணறும் !
நட்டுவைத்த
மரமும்!
அவன் மரணத்திற்கு பின்னும்
அவனுக்கு நன்மை சேர்க்கும்
இது நாயகத்தின் கூற்று

வீட்டுக்கோர் மரம்,
,,,வளர்ப்போம்
நன்மைகள்,
,,,பல பெறுவோம் !
மு.செ.மு.சபீர் அஹமது

22 comments:

  1. /// தன்னையே அற்பணிக்கும் அற்ப மனிதனுக்காக... ///

    சிறப்பு...

    பாராட்டுக்கள்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. மரத்தின் அற்பணிப்பை தங்கள் ரசித்துள்லிர்கள் வாழிய தமிழ்

      Delete
  2. மனிதராக பிறந்த நமக்கு சில அடிப்படைக் கடமைகள் உள்ளன. உடலை ஆரோக்கியமாக வைத்தல், உள்ளத்தை தெளிவாக உற்சாகமாக வைத்தல், தொழிலை நியாய-தர்ம அடிப்படையில் சமுதாயத்திற்கு பாதிப்பில்லாமல் செய்தல், நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் செய்ய வேண்டிய கடமைகள்- இவ்வாறாக பல்வேறு கடமைகளை நாம் சரியாக செய்ய வேண்டியுள்ளது.

    மேற்கண்டவை போக, தம்மை உருவாக்கிய இந்த சமுதாயத்திற்கு செய்ய வேண்டிய சில கடமைகள் உள்ளன. பொதுவாக சான்றோர்கள் தாங்கள் வாழுகிற காலத்தில் வருங்கால மக்கள் நலமாக இருக்க பல வகையில் சிந்திக்கிறார்கள். செயல்படுகிறார்கள். அவர்கள் சமுதாயத்தின் மேல் அக்கறையும் அன்பும் கொண்டு தங்களுக்கு என்ன கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் கவலைப்படாது நல்லது பல செய்கின்றனர். அவ்வாறு தொலைநோக்குப் பார்வையுடன் எத்தனையோ பெரியவர்கள் செய்த செயல்களின் விளைவை நாம் அனுபவிக்கிறோம்.

    அந்த வகையில் மரக்கன்றுகளை நட்டு அவற்றிற்கு தண்ணீர் ஏற்பாடு செய்து மரங்களாக உருவாக்குவது என்பது நம்முடைய முக்கிய கடமையாகும்.

    ReplyDelete
  3. மரம் வளர்ப்போம் ! மனிதநேயம் காப்போம் !!

    அழகிய விழிப்புணர்வு !

    தொழிலதிபர் பன்முக எழுத்தாளராக வளர்ந்துவருகிறார்.

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தொழிலதிபர் பன்முக எழுத்தாளராக வளர்ந்துவருகிறார்///
      உங்களின் ஒத்துழைப்புதான் காரணம் சகோ.நிஜாம் அவர்களே

      Delete
  4. மரம் தான் மரம் தான்
    மனிதனும் மறந்தான், அதனை!

    கீழ்க்காணும் அறிவிப்பின்படி, உங்களின் மேற்காணும் வசன கவிதையை அனுப்பி வைத்தால் உங்களின் வசனகவிதை இப்போட்டியில் வெல்லும்:


    தமிழ்ப் புலமை, திறமையை வெளிபடுத்த சந்தர்ப்பம்,வாழிய உலக நல நற்பணிமன்றம் பழனியில் நடத்தும் தமிழ்
    கவிதை போட்டி
    தலைப்பு
    சுற்றுச் சூழல் சீர்கேடும்- தீர்வுகளும்

    கவிதை நூல்வடிவில் ஆக்கம் பெற நிபந்தனையின்றி தன்களுக்குசம்மதம் என இணைப்புகடிதம் , கவிதை ஆ-4 அளவு பேப்பரில் இர்ண்டு பக்கங்களுக்கு மிகாமல் 30-06- 2013 ம் தேதிக்குள் அனுப்பவேண்டிய முகவரி
    இல ஞானசேகரன் , தலைவர்,
    வாழிய உலகநல நற்பணி கன்றம்,
    7- மங்கலம் தெரு,
    பழ்னி
    அலைபேசி: 94422 41622

    தேர்ந்தெடுக்கபடும் கவிதைக்கு முதல் பரிசு25 ஆயிரம் ரூபாய் ரொக்க பரிசு

    ReplyDelete
    Replies
    1. இன்ஷா அல்லாஹ் கவிபோட்டிக்கு முயற்ச்சிக்கிறேன் இப்போட்டியில் வெல்லும் என தாங்கள் கூரிஇருப்பது என்னை மிகவுன் சந்தோஷப்பட வைத்துள்ளது .இன்னும் கொஞ்சம் கவிதையை நீட்டி [சேர்த்து]அனுப்பி வைக்கின்றேன் அடித்த வாரமும் மீதமுள்ளதையே part 2 வாக வெளியிடுவோம் உங்கள் ஆதரவுக்கு ஜசக்கல்லாஹ் ஹைரன்

      Delete
    2. சிலவற்றை அலுப்பூட்டும் பாடங்கள் என்பர் சிலர்; உண்மையில் அது, பாடங்களின் மீதான பிழையில்லை. சொல்லப்படும் விதம் ஈர்ப்புடையதாக இல்லாதபோதும் படிப்பவரின் ஆர்வங்கள் மாறுபடும்போதும் அவரின் உடலும் மனமும் ஒத்துழைக்காத போதுமே அலுப்பு உண்டாகிறது. உங்களின் இக்கவிதை அலுப்பூட்டவில்லை; அதனாற்றான் மூன்று கவிஞர்களையும் ஈர்த்தது. இன்னும் நீங்கள் இலண்டன் வானொலிக்கும் அனுப்புங்கள் இந்த மின்மடல் முகவரியில்;

      firstaudio@hotmail.co.uk

      இன்னும் உங்களின் கவிப்புலமை மின்னும் வண்ணம், தமியேனின் “கவியும் கவிஞனும்” என்னும் பாடம் முகநூலின் ”கவிதை சங்கமம்” குழுவில் நடத்துகிறேன்; நீங்கள் இணைந்து கொண்டுத் தமியேன் வழங்கும் குறிப்புகளை உள்வாங்கிக் கொண்டால் மிக விரைவில் அதிரையின் பெயரை அகிலமெலாம் உரக்கச் சொல்லும் ஓர் அற்புத கவிஞராக ஒரு தொழிலதிபர் உருவாகலாம்,இன்ஷா அல்லாஹ்!

      Delete
  5. மரத்தின் பயன்களை கவிதை மொழியில் புரியும்படியும் சிந்திக்கும்படியும் விளக்கம் தந்து அசர வைத்து விட்டீர்கள். அருமை.

    காடுகளை அழித்ததின் காரணமாகத்தான் பருவமழை பொய்த்துப்போனதும், இயக்கைச்சீற்றங்களும் மாசுக்காற்றை சுவாசிக்கும் அவல நிலையம் ஏற்ப்பட்டுள்ளது. இதனை நாம் கண்கூடக்காண்கின்றோம். ஆகவே மரங்களை வளர்ப்போம் மகிழ்வுடன் வாழ்வோம்

    ReplyDelete
    Replies
    1. நம் அரசாங்கத்தில் வனத்துறை என்ற தனி அமைச்சரே இருக்கின்றார் அனாலும் வானம்தான் அழிந்துகொண்டு வருகிறது .இதில் குறிப்பாக பொது மக்களாகிய நமக்கும் அதிக அக்கறை இருக்க வேண்டும் .பாராட்டியமைக்கு மகிழ்கிறேன்.

      Delete
  6. மரங்களின் தியாகம்

    மனிதனுக்கு உணர்த்தும் படைப்பு .

    தென்னையை பெற்றால் இளநீரு ..

    பிள்ளையை பெற்றால் கண்ணீரு ...

    என்ற பாடலின் கரு நண்பன் சபீரின் ஆக்கம் நினைவூட்டுகிறது .

    வாழ்த்துக்கள் நன்றி

    ReplyDelete
    Replies
    1. நண்பரே தாம் நினைத்தது முற்றிலும் உண்மை
      தென்னையை பெற்றால் இளநீரு ..

      பிள்ளையை பெற்றால் கண்ணீரு /// இதுதான் என்கரு

      Delete
  7. மரம் ஓர் தியாகி ?
    தன்னை வெட்ட வந்த,
    கோடாரிக்கு
    கைபிடியாய் !
    தன்னையே கொடுத்ததே

    பூமிப்பந்தில்
    தெரியும் நீல நிறம்
    மீன்கள் வாழுமிடம்
    மரங்கள் உள்ள
    பசுமை நிறம்
    மனிதன் வாழுமிடம் !

    மனிதனுக்கு
    கிடைத்த அடையாளம்
    அவனால் வெட்டப்படுகிறது !


    அடடா.... அழகிய எண்ணங்களைக் கொண்ட கவிதையாய் இருக்கிறதே.... மகிழ்ச்சி வாசித்ததில்

    ReplyDelete
    Replies
    1. அன்புடன் புகாரி அவர்கள் அதிகமாக கருத்துப்பகுதிக்கு வருவது இல்லை என்கவி தங்களை அதிகம் பாதித்துள்ளது என நினைக்கின்றேன் எல்லாப்புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே

      Delete
  8. பதிவுக்கு நன்றி.

    வீட்டு ஒரு மரம்?

    அருமையான சிந்தனைக்கு நல்ல மருந்து.

    நாம் இருவர் நமக்கு ஒருவர் என்று இருந்தாலும், நாம் எல்லோரும் அவரவர் பங்குக்கு ஒரு மரத்தையாவது நட வேண்டும், உறுதிமொழி எடுப்போம்.

    மரத்திலானான நன்மைகளை கவிதையாக்கி பின்னி இருப்பது மிகவும் நன்று. உங்கள் வரிகள் தொடர்ந்து வரட்டும்.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  9. இந்தக் கவிதையைப் படிக்கும் யாரும் இனி தாங்கள் பிள்ளைகளைக் கூட " ஏண்டா மரம் மாதிரி நிக்கிறே" என்று கேட்க முடியாது.

    மரத்தின் பயன்களைப் பட்டியலிட்டு இருக்கிறீர்கள். பல "மற" மண்டைகளில் உரைக்க வேண்டும்.

    வீட்டுமனைகளுக்காக தென்னந்தோப்புகளை வெட்டும் மனிதர்கள் சிந்திக்க வேண்டும்.

    பாராட்டுக்கள் தம்பி சபீர்.

    ReplyDelete
  10. https://www.facebook.com/photo.php?fbid=663203337027048&set=gm.388801161230429&type=1&relevant_count=1&ref=nf


    பட்டுக்கோட்டை ராஜாராணி ஜுவல்லரி ந. பிரகாஷ் மாப்ளை அவர்களின் கல்யாணத்திற்கு இலவசமாக கொடுக்க இருக்கும் 1000 மரக்கன்றுகள்.
    மணமக்கள் வாழ்க வாழ்க பல்லாண்டு என அந்த மரக் கன்றுகளின் சார்பாக வாழ்த்துகின்றோம்...

    ReplyDelete
  11. இ அன்சாரி காக்கா போன்றோரின் வாழ்த்துக்கள் என்னை மிகவும் சந்தோசப்பட வைத்துள்ளது ஜசக்கல்லாஹ்ஹைர் தொடர்ந்து ஆதரவும் தவறு இருந்தால் சுட்டிக்காட்டியும் வழி நடத்துங்கள்

    மைத்துனர் ஜகபர்சாதிக்கின் கருத்து உரமாய் ஏற்கிறேன்

    ReplyDelete
  12. மனிதனுக்கு
    கிடைத்த அடையாளம்
    அவனால் வெட்டப்படுகிறது! ஓவ்வருவரிகளும் மரம் போல் செதுக்கி. இருக்கிறீர்கள்.சபீர் அஹமது காக்கா அவர்களே வாழ்த்துக்கள்.

    விழிப்புணர்வு கவிதை அருமையான வரிகள் மரங்கள் மனிதனால் வைக்கபடுக்கிறது பிறகு அவர்கள் தேவைக்கு வெட்டபடுக்கிறது.

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers