kalinjabyr:SteelSeries | Titanium Auto Sales
The SteelSeries was the world'...
Monday, July 15, 2013
இணையற்றானின் இணையற்ற கூலி !
இணையற் றானின்
இணையற் றகூலி !
நன்நோன் பிற்கு
தன்னை தருதல் !
நின்னை உயர்த்த
நோன்பு நோற்க
தன்னை தருதல்
என்ன! சொல்லது !
ஊனும் இல்லை
உறக்க முமில்லை
தேவை அற்றான்
இறைவன் தனக்கு.
ஊனும் உண்டு
உறக்கமு முண்டு
தேவை உள்ளான்
மனிதன் தனக்கு.
நன்னுயர் கூலியென
தன்னைத ருகிறான்
தன்குணம் தாங்கிடும்
மண்இனத் தார்க்கு !
சுவர்கம் பெறபலர்
அவனைய டையசிலர்
வணக்கம் புரிகிறர்
இணங்கி நடக்கிறர்.
.
சுவர்கம் பெறுதல்
சுகமதில் இருத்தல்
அவனை அடைதல்
அனைத்தும் அடைதல் !
நன்றுயி னிபழகு
என்றும துஇலகு
நல்ல நோன்பது
நாயன் சொன்னது.
என்னப ரிசுஇது !
எங்கனு முண்டா !
ஏகனின் கூலி
நிகரே இல்லை !
உலகமுன் மாதரி
கூலிய டைந்த
புவிதனில் முதல்வர்
நபிகள் கோமான் !
போதனை அன்றி
தானே வாழ்ந்தும்
வாழ அழைத்தார்
சாதனை தந்தார் !
உணவை மறந்து
உறக்கம் இழந்து
அவனது நிலையில்
தன்னது நினைவு !
நோன்பு நோற்று
அவனை பெற்று
நல்அது வேதம்
நாயகம் தந்தார் !
இவனின் வாழ்வில்
இலக்குகள் உண்டு
அவைதனில் முதலாம்
அவனைய டைதலே !
இவனது நோம்பிலும்
அவனது பொருத்தம்
அவன்கூ லியாய்
இவன்பெற வேண்டும் !
உன்னது நோன்பில்
தன்னைத ருகிறான்
இன்னும் உண்டா ?
நன்னிது போலும் !
கருஅது விட்டு
ஊனது விட்டு
உறக்கம் துறந்து
நோற்றார் நோன்பு.
குதர்கம் கண்டு
தருக்கம் பூண்டு
நெருக்கம் அகன்று
நிற்கிறார் இன்று.
சுவர்கம் படைப்பு
அவனோ நிலைப்பு
நோன்பை நோற்றிடு
ஏகனை பெற்றிடு !
நன்நோன் பிற்கு
நாயனை பெறுதல் ! -இது
இணையற் றானின்
இணையற் றகூலி !
நபிதாஸ்
இணையற் றகூலி !
நன்நோன் பிற்கு
தன்னை தருதல் !
நின்னை உயர்த்த
நோன்பு நோற்க
தன்னை தருதல்
என்ன! சொல்லது !
ஊனும் இல்லை
உறக்க முமில்லை
தேவை அற்றான்
இறைவன் தனக்கு.
ஊனும் உண்டு
உறக்கமு முண்டு
தேவை உள்ளான்
மனிதன் தனக்கு.
நன்னுயர் கூலியென
தன்னைத ருகிறான்
தன்குணம் தாங்கிடும்
மண்இனத் தார்க்கு !
சுவர்கம் பெறபலர்
அவனைய டையசிலர்
வணக்கம் புரிகிறர்
இணங்கி நடக்கிறர்.
.
சுவர்கம் பெறுதல்
சுகமதில் இருத்தல்
அவனை அடைதல்
அனைத்தும் அடைதல் !
நன்றுயி னிபழகு
என்றும துஇலகு
நல்ல நோன்பது
நாயன் சொன்னது.
என்னப ரிசுஇது !
எங்கனு முண்டா !
ஏகனின் கூலி
நிகரே இல்லை !
உலகமுன் மாதரி
கூலிய டைந்த
புவிதனில் முதல்வர்
நபிகள் கோமான் !
போதனை அன்றி
தானே வாழ்ந்தும்
வாழ அழைத்தார்
சாதனை தந்தார் !
உணவை மறந்து
உறக்கம் இழந்து
அவனது நிலையில்
தன்னது நினைவு !
நோன்பு நோற்று
அவனை பெற்று
நல்அது வேதம்
நாயகம் தந்தார் !
இவனின் வாழ்வில்
இலக்குகள் உண்டு
அவைதனில் முதலாம்
அவனைய டைதலே !
இவனது நோம்பிலும்
அவனது பொருத்தம்
அவன்கூ லியாய்
இவன்பெற வேண்டும் !
உன்னது நோன்பில்
தன்னைத ருகிறான்
இன்னும் உண்டா ?
நன்னிது போலும் !
கருஅது விட்டு
ஊனது விட்டு
உறக்கம் துறந்து
நோற்றார் நோன்பு.
குதர்கம் கண்டு
தருக்கம் பூண்டு
நெருக்கம் அகன்று
நிற்கிறார் இன்று.
சுவர்கம் படைப்பு
அவனோ நிலைப்பு
நோன்பை நோற்றிடு
ஏகனை பெற்றிடு !
நன்நோன் பிற்கு
நாயனை பெறுதல் ! -இது
இணையற் றானின்
இணையற் றகூலி !
நபிதாஸ்
Subscribe to:
Post Comments (Atom)
சிந்திக்கத் தூண்டுகின்ற வரிகள்
ReplyDeleteஅருமை
தொடர வாழ்த்துக்கள்...
அன்புடையீர்,
Deleteதங்களை சிந்திக்கத் தூண்டுகின்ற வரிகள் அதன் நோக்கமான அவனின் கூலியை தங்கள் அடையா காரணமாக இருந்தால் மிக்க சந்தோசம்.
நன்றி !
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteஇனிய ரமலான் முபாரக்.
அருமையான கவிதை.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
தங்கள் ரமலான் வாழ்த்துக்கு நன்றி !
Deleteகவிதை இரசனைக்கும் நன்றி !
இப்புனித மிக்க ரமலானின் புகழ் பாடும் கவிதை வாழ்த்துக்கள்.
ReplyDeleteRAMALAAN KAREEM
ஒன்றினது புகழ் என்பது அதனைப்பற்றிய உண்மை விளக்கம் ஆகும். அந்த உண்மையயை எடுத்துக்கூறினால் புகழ்கிறோம் என்போம்.
Deleteரமலானின் உண்மை நோக்கம் அவனின் திருபொருத்தத்தை அடைதல். இக்கருத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட கவிதை. அதனை அது ரமலானின் புகழ் பாடும் கவிதை என்று வாழ்த்துக்கூறியமைக்கு நன்றி!
ஞானியாரின் தத்தவ முத்துக்கள்!
ReplyDeleteஞானதாகம் மிகுந்த கவிங்கருக்கு நன்றி !
Deleteஎழுதிய கருத்துக்கள், அவைகள் எல்லையற்றவனின் கருத்துக்கள். அதனை எழுதி ஞாபகம்தான் செய்தேனே அன்றி வேறில்லை.
பசித்து, தனித்து, விழித்து சிந்திக்க வருடம் தோறும் ரமலான் வருகிறது. சிந்திக்க என்றால் அவனைப் பற்றி சிந்திக்க, அவனை அறிந்துக்கொள்ள வேண்டும். அதற்குத்தான் அல்லாஹ்வே நோன்புக்கு நானே கூலி என்றான். சிந்திப்பவர்களுக்கு இது விருந்து.
கவிங்கர்கள் எல்லாம் சிந்திப்பவர்கள் தானே !
நன்றி ! நலமுடன் வாழ்க !
ஞான தாகம் தீர்க்க முடியாமல்
ReplyDeleteஞான தீபம் காண முடியாமல்
குற்றாலம் போய்க் குளித்து விட்டீர்களா?
என் கண்ணில் படாமல் ஒளிந்து விட்டீர்களா?
கைக்கு எட்டிய கனி
வாய்க்கு எட்டுமா இனி?
சிந்திக்கத் தெரிந்தவர்களும் மட்டுமல்ல
சந்திக்கத் துணிந்தவர்களும் தான் கவிஞர்கள்!
இன்ஷா அல்லாஹ் அடுத்த விடுப்பில் உங்கள் முகம் காண வேண்டும்; அதற்காகவே தமியேன் உயிர் வாழ வேண்டும். அகமியம் பேசும் முகம் அதைக் காண வேண்டும்; ஆரத்தழுவி ஆலிங்கனம் செய்ய வேண்டும்.
நபி(ஸல்)யின் மீது காதல் கொண்டவரும் (நபிதாஸ்)
நபி(ஸல்)யைக் கனவில் கண்டவனும் (தமியேன்)
நபி(ஸல்)யின் மீதுள்ள “இஷ்க்” என்னும் காதலைப் புரிந்து கொள்ளவும், அந்நபி(ஸல்)யைப் படைத்தவனைப் பற்றிய “இர்ஃபான்” என்னும் ஹகீகத்தின் ஞானத்தைப் பகிர்ந்து கொள்ளவும் வாய்க்குமா ஓர் அரிய வாய்ப்பு?
அவனின்றி எதுவும் அசையாது. வெவ்வேறு எண்ணங்களை இருவர்மனத்தில் உண்டாக்குவதும் அவனே. எதோ நாம் அறியாமல் இருக்கலாம். இன்ஷா அல்லாஹ் அவன் நாட்டப்படியே எல்லாம் நடக்கும், நடந்தே தீரும்.
Deleteசமூக வலைத்தடத்தில் இதுபோன்று எழுத காரணம் நாம் அறிந்ததை மற்றவருக்கம் தெரியபடுத்தவேண்டும் என்ற நோக்கிற்கே அன்றி வேறில்லை.
நாயகம்(ஸல்) அவர்கள் மீது கொண்ட தீரக் காதல். அதனால் நபிதாஸ் என்ற புனைப்பெயர். நான் யார் என்பதைக்காட்டிலும் எழுதும் கருத்துக்கள் சரியான மனிதர்களை அடையவேண்டும் என்பதே. என் தோற்றம் உங்கள் தோற்றம்தான். யான் பெற்ற இன்பங்களை எதிவைப்பதுதான் தர்மம்.
நிச்சியம் தங்கள் தாகங்கள் தீர்க்கப்படும் அல்லாஹ் நாடினால் தகுதியானவர்களைக்கொண்டு. நீங்கள் தகுதியானவர் என்பதற்கு உங்கள் கனவே சாட்சி.
வார்த்தைகள் துவாக்கள். விபரமானவர்கள் பெரியவார்த்தைகளை இலகுவாக தமது சம்பந்தமாக எழுதக்கூடாது. நீங்கள் பல்லாண்டு வாழவேண்டும். நித்தியனை அறிபவர்கள், தெளிவடைந்தவர்கள் நித்தியன் அருகாமை அடைந்தவர்கள். தெளிவிக்கேர்ப்ப அவர்களில் நித்தியன் குணம் வெளிப்படும். அவ்வாறிருக்க நீண்ட ஆயுள் தேவைக்கேற்ப வேண்டுவதே இறைவன் நாட்டம். நன்கு அறிவீர்கள் என்று நம்புகிறேன்.
அவ்வப்பொழுது எழுதும் கருத்துக்கள் உங்கள் தேடுதல் நோக்கிற்கு ஓரளவு தேவை நிறைவேற்றும் என்று நம்புகிறேன்.
என் எழுத்துக்களில் நீங்கள் தேடுவது இல்லாமல் என்றும் இருக்காது.
நிச்சியம் ஞான அருவியில் குளிப்போம் அல்லாஹ் நாட்டத்தில்.
நீங்கள் குற்றாள அருவியில் குளித்து விட்டு சுகம் பெற்றுத் திரும்பியவுடன், எம்மை ஞான அருவியில் குளிப்”பாட்டில்” ஆழ்த்தி விட்டீர்கள்! உங்கள் குளி(ர்)ப்”பாட்டால்” எங்களின் அகவிருள் நீங்கியது; ஆன்ம ஞானம் ஓங்கியது!
Delete//சுவர்கம் பெறுதல்
ReplyDeleteசுகமதில் இருத்தல்
அவனை அடைதல்
அனைத்தும் அடைதல் !\\
நோன்பின் ஹகீகத்தை மாண்புடன் விளக்கிய அகமியம்!
கடைந்து நுணுக்கங்களை தருபவர் கவிஞர், அறிஞர். அதைத்தான் நீங்கள் எடுத்து தருகிறீர்கள்.
Deleteகருத்துக்கு நன்றி !
ஷரீஅத் என்னும் சட்டங்கட்குட்பட்ட வழிபாடுகளை மட்டும் செய்து வரும் எங்கட்கு, தரீகத் என்னும் பாதையில் , மஃரிஃபத் என்னும் ஞானப்பாட்டையில் ஹகீகத் என்னும் “நுணுக்கங்களை”, அகமியங்களை அ|றிவிக்கும் ஞானியார் நீங்கள், உங்களிடம் உள்ள ஆழ்ந்த தேடுதலில் கிட்டிய அறிவு முத்துக்களை நாங்கள் எடுத்துக் கொள்கின்|றோமே தவிர, நாங்கள் கடைந்து நுணுக்கங்களைத் தருபவர் அல்லர்!
Deleteஞான குருவை இவ்விடத்தில் அமர்த்திய அன்புத் தம்பி விழிப்புணர்வு வித்தகர்- சமூகச் சேவகர் சேக்கனா நிஜாம் அவர்கட்கு உளம்நிறைவான நன்றிகளும் துஆக்களும், ஜஸாக்கல்லாஹ் கைரா, தம்பி நிஜாம்!
நோன்பின் தத்துவங்கள் நற்றமிழில் நபிதாசரின் மொழியில்
ReplyDeleteஉங்கள் எழுத்து ஆளுமையில் கருத்துக்கள் சிறப்பு பெறுகிறது.
Deleteஉண்மையிலும் உண்மை; முக்காலும் உண்மை; உண்மையாளரின் வாய்மொழியும் வாய்மை. ஆம். நபி(ஸல்)அவர்களின் பால் காதல் கொண்ட நபி தாஸ் அவர்களே! முதுமையில் இருந்தாலும் புதுமையாய் எழுத்துக்களையும் கருத்துக்களையும் வடிப்பதில் வல்லவர்; நல்லவர் எம்மவர் அன்பின் இப்ராஹிம் அன்சாரி காக்கா அவர்கள் என்பதை உணர்ந்து பாராட்டியிருக்கின்றீர்கள்.
Deleteஓர் உண்மையை ஈண்டு ஒப்புக் கொள்கிறேன். துவக்கத்தில் இவர்கள் அதிரை நிருபர் வலைத்தளத்தில் பொருளாதாரம் பற்றிய ஆக்கங்கள் எழுதி வந்த பொழுதுதான் இவர்களின் எழுத்தின் மீது தீராத காதல் கொண்டேன்; அவர்களின் எழுத்தின் இளமையைக் கண்டு, இவர்களை வாழ்த்திப் பின்னூட்டத்தில் “ அன்புத் தம்பி” என்று எழுதி விட்டேன்!
பின்னர் அவ்வலைத்தள நிர்வாகி அவர்கள் எனக்குத் திருத்தம் கூறி “இவர்கள் எம் பேராசிரியர் அப்துல்காதிர் அவர்களின் உற்ற நண்பர்; அவர்களின் வயதை ஒத்தவர்கள்” என்பதாக அறியத் தந்தார்கள். அன்று முதல் அவர்களை நான் “காக்கா” என்னும் அதிரையில் மூத்தோரை அழைக்கும் வழக்குச் சொல்லால் வாய்மணக்க அழைக்கிறேன்; நான் அவர்கட்கு வழங்கிய “பொருளாதார வல்லுநர்” என்னும் பட்டத்தை விட , அமெரிக்காவிலிருந்து சகோ.இக்பால் பின் முஹம்மத் ஸாலிஹ் அவர்கள் வழங்கிய “டாக்டர்” என்னும் ஆய்வுக்குரிய முனைவர் பட்டத்துடன் நாங்கள் அழைப்போம் “டாக்டர் இ.அ.காக்கா” என்று!