.

Pages

Tuesday, July 9, 2013

பேஸ்மென்ட் வீக் !? பாடி வெய்ட் !? - சரி செய்வது எப்படி ? :)

அந்த நாள் முதல் இந்த நாள் வரை உடம் பருமன் சிலரை மன வேதனை அடையச் செய்கின்றது. சிலருக்கு எவ்வளவு வயதானாலும் பார்ப்பதற்கு இளம் வயதுக்காரர் போல் இருப்பார், இன்னும் சிலர் சிறுவயதிலேயே வயதானவர் போல் இருப்பார், இன்னும் சிலர் எப்பொழுது பார்த்தாலும் உடல் பருமனாக இருப்பார். இவர்களில் உடல் பருமனாக இருப்பவருக்குதான் வேதனைகள் அதிகம்.

உடல் பருமன் எவ்வாறு உண்டாகிறது ?
அதிக உழைப்பின்மை, உடற்பயிற்சியின்மை.

இன்று மிக்ஸி, கிரைண்டர், வாஷிங் மெஷின், கார், மோட்டார் பைக் போன்ற உபகரணங்களால் உடல் உழைப்பு என்பது அறவே இல்லாமல் போய்விட்டது. அடுத்தத் தெருவுக்கு செல்வதென்றால் கூட வாகனம் பயன்படுத்தும் நிலையில் நம் மக்கள் உள்ளனர்.

உடலில் தைராய்டு சுரப்பி குறைவாக சுரந்தால் உடல் பருமன் அதிகரிக்கிறது.

அளவுக்கு அதிகமாக கொழுப்புப் பொருட்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதும், மேலும் எண்ணெயில் பொரித்த உணவுகளை உண்பதும் தான் உடல் எடைக்கு முக்கியக் காரணம்.

சிலருக்கு பரம்பரையாக உடல் பருமன் நோயின் தாக்கம் வந்துக் கொண்டிருக்கும்.

நவீன உணவுப் பழக்கங்கள், மருந்து, மாத்திரைகள் அதிகம் உபயோகிப்பதாலும் உடல் எடை அதிகரிக்கிறது.

ஒருவரின் உடல் எடை அதிகரிக்கிறது என்பதை அறிய சில அறிகுறிகள் மூலம் தெரிந்துக் கொள்ளலாம்.

அடிக்கடி உடல் சோர்வு, களைப்பு உண்டாகும்.

 உடம்பில் அதிக வியர்வை காணுதல்.

நடப்பதில், மாடிப்படி ஏறி இறங்குதல், சில வேலைகள் செய்யும் போது உடல் வலி ஏற்படுதல்.

அடிக்கடி மயக்கம், படபடப்பு, மூச்சிரைப்புக் காணுதல் போன்றவை இருந்தால் உடல் எடை தானாக அதிகரிக்கிறது என்பதை அறியலாம்.

உடல் பருமனால் ஏற்படும் நோய்கள்:
இரத்த அழுத்த நோய்

இருதய படபடப்பு

கல்லீரல் பாதிப்பு

பித்தக் குறையாடு

நீரிழிவு நோய்

மூட்டு வலி

சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படும்.

பெண்களுக்கு மாதவிலக்குப் பிரச்சினைகள், மார்பகப் புற்றுநோய், மற்றும் இடுப்பு, கை, கால், மூட்டுவலி உண்டாகும்.

மனச்சிதைவு ஏற்படுவதாலும் சிலரின் உடல் எடை அதிகரிப்பதாக மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.

உடல் பருமனை குறைக்க சில டிப்ஸ்:
உடல் எடையை உடனே குறைக்க முடியாது. உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி மூலம்தான் படிப்டியாகக் குறைக்க முடியும்.

அலுவலகத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்கள், தினமும் காலை அல்லது மாலை நேரத்தில் நடைபயிற்சி செய்வது நல்லது.

பெண்கள் வீட்டு வேலைகளை செய்து வந்தால் உடல் பருமன் குறையும்.

எண்ணெயில் பொரித்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். நொறுக்குத் தீனி, இனிப்பு வகைகள் தவிர்ப்பது நல்லது.

மாவுச் சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டாம்.

பச்சை காய்கறிகளை சாலட் செய்து சாப்பிட வேண்டும்.

மது பானங்கள் சாப்பிடக் கூடாது.

குளிரூட்டப்பட்ட பானங்களைத் தவிர்ப்பது நல்லது.

பதப்படுத்தப்பட்ட பதனிடப்பட்ட உணவுகளை சாப்பிடக்கூடாது.

மலச்சிக்கல், அஜீரணக் கோளாறு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

சத்து மாத்திரைகளைத் தவிர்த்து உணவின் மூலம் அந்த சத்துக்கள் கிடைக்கச் செய்யுமாறு சாப்பிட வேண்டும்.

வாரம் ஒருமுறை ஒருவேளை உண்ணா நோன்பு இருப்பது நல்லது.

யோகா பயிற்சி சிறந்த பலனைத் தரும்.

உணவில் அதிகளவு கீரை வகைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

உடல் பருமன் குறைய மருத்துவம்:
சில மூலிகைகள் உடலில் உள்ள கொழுப்புப் பொருட்களை கலோரியாக மாற்றி உடல் பருமனைக் குறைக்கும். அதில் அருகம்புல் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. அருகம்புல் இரத்தத்தை சுத்தம் செய்வதில் மிகவும் சிறந்த மூலிகை.

அருகம்புல்லை நன்கு நிழலில் உலர்த்தி வைத்துக் கொள்ள வேண்டும். அதாவது,

உலர்ந்த அருகம்புல் - 1\2 கிலோ

கொத்தமல்லி விதை - 1\4 கிலோ

சீரகம் - 25 கிராம்

இவற்றை எடுத்து நன்றாக இடித்து பொடியாக்கி சலித்து வைத்துக் கொண்டு தினமும் அரை லிட்டர் தண்ணீ­ரில் 5 கிராம் வீதம் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து பாதியாக சுண்டக் காய்ச்சி காலை மாலை சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும்.

அரைக்கீரையுடன் மிளகு, சீரகம், பூண்டு, பெருங்காயம், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து சூப் செய்து வாரத்திற்கு நான்கு முறை சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க எத்தனையோ வழிகள் உண்டு, நேரம் உண்டு, ஆனால் மனசு இல்லை.

'மனித உரிமை ஆர்வலர்'
K.M.A. ஜமால் முஹம்மது.
Consumer & Human Rights.
S/o. K.M. Mohamed Aliyar (Late)

12 comments:

  1. ஹா... ஹா... தலைப்பே வாசித்ததும் சிரிப்பு வந்துடிச்சி :)

    பின்பற்றக்கூடியவர்களுக்கு பயன்தரக்கூடிய மருத்துவ குறிப்புகள் !

    ReplyDelete
  2. பயனுள்ள மருத்துவக்குறிப்பு பகிர்ந்தமைக்கு நன்றியுடன் வாழ்த்துக்கள்.

    ''RAMADHAN MUBARAK''

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கு நன்றி.

      "RAMADHAN MUBARAK"

      Delete
  3. 'சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையமுடியும்', என்பது பழமொழி.

    அவன் தந்த உடல் மிக முக்கியம். அதனை ஒவ்வொருவரும் கவனமுடன் பாதுகாக்கவேண்டும். உடம்பைப் பொறுத்து உள்ளம் சீரடையும்.

    சுவர்க்கவாதிகளுக்கு இறைவன் தரும் உணவு பழங்கள். நவீன உணவு பழக்கத்தில் சிக்குண்ட மனிதன் ஒரு வேலை உணவாக பழங்களை மட்டும் உண்ணுதல் சிறப்பு.

    நோன்பு ஆரம்பமாகும் இத்தருணத்தில் இக்கட்டுரை எழுதியது சிறப்பு. வாழ்த்துக்கள் !

    'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்று நம் முன்னோர்கள் வழிகாட்டியுள்ளனரே.

    ReplyDelete
  4. இயற்கை மருத்துவம் கூறி

    கட்டுரரையை முடித்த விதம் அருமை ...

    ReplyDelete
  5. ஆரோக்கியமாய் வாழ்தல் அத்தனை கடினம் இல்லை, ஆனால் பலருக்கும் அக்கறை இல்லை, பின்னர் மருத்துவமனைக்கு அலைகின்றனர். நல்ல உணவு, நல்ல உறக்கம், தியானம், உடற் பயிற்சி, சிரிப்பு, நற் குணங்கள் போன்றவையை கைக் கொண்டாலே நிம்மதியாய் வாழலாம்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கும் முதல் தடவையாக அன்பான வருகைக்கும் நன்றி நிரஞ்சன் தம்பி அவர்களே.

      Delete
  6. இந்த ரமலானில் கடைபிடிக்கும் பயி\ற்சிகளான:

    நோன்பு, தியானம், தராவீஹ் என்னும் நீண்ட நேர தொழுகை (உடற்பயிற்சியாகவும், உளப்பயிற்சியாகவும் அமையும்) , நல்லெண்ணம், ஈகை போன்ற இப்பயிற்சிகளை அப்படியே வாழ்நாளில் கொண்டு வந்தால் ஆரோக்கியம், சௌக்யம், பாக்யம் எல்லாம் என்றும் கிட்டும்; அதனால் நோய்கள் நம்மை விட்டும் போகட்டும்!

    ஆரோக்யம், பாதுகாப்பு மற்றும் சுற்றுச் சூழல் (HEALTH, SAFETY AND ENVIRONMENT) என்னும் அவசியமான அறிவில் இந்திய மக்கள் மிகவும் குறையுடையோராய் இருப்பதை அயல்நாட்டில் இருக்கும் எங்களால் அவதானிக்க முடியும்! மச்சான் ஜமால் அவர்களும் அயல்நாடுகளில் பணிபுரிந்தவர்களாதலால், இந்த விடயங்களில் அதிக கவனத்துடன் - அக்கறையுடன் எழுதுகின்றார்கள்; செயல்படுத்துகின்றார்கள். இறைவனின் ஆசியும் அருளும் மச்சான் ஜமால் அவர்கட்குக் கிடைக்கட்டுமாக!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கு நன்றி மச்சான்.

      Delete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers