.

Pages

Saturday, August 31, 2013

[ 9 ] அதிரை சித்திக்கின் 'வளைகுடா வாழ்க்கை' [ மனைவி ஒரு மந்திரி ]

வளைகுடா நாட்டில் உழைக்கும் எண்ணற்ற நம் சொந்தங்களில் எத்தனை பேர் ஓய்வாக இருக்க பணம் சேர்த்துள்ளார்கள் ? எத்தனை பேர் முதுமை அடைந்த நிலையில் வாழ்வை நிம்மதியாக கழிக்கிறார்கள் என்று எண்ணி பார்ப்போமேயானால் மிக சொற்ப நபர்களே ராஜாவை போல வாழ்கிறார்கள். மற்றவர்கள் நிலை மிக பரிதாபமாகவே இருக்கிறது. இதற்கு காரணம் உழைத்த பணத்தை சரியாக முதலீடு செய்யாததே கரணம்.

1985 களில் மனைகள் வாங்கி குவித்தவர்கள் இன்று கோடீஸ்வரர்களாக வளம் வருகிறார்கள். இதற்கு முக்கிய காரணகர்த்தா ஊரில் இருக்கும் மனைவியே...!?

நான் கண்ட சில நிகழ்வுகளை இங்கு பதிய விரும்புகிறேன்...
சென்ற வாரத்தில் கூறியது போல, குளிர் சாதன பெட்டி வாங்கும் நிலை சாதாரண குடிமகனிடம் இல்லை ஆனால் கடும் வறுமை நிலையில் இருந்த ஒருவன் வறுமையை போக்க அரபுநாடு சென்று சற்று நிலைமை சீரான நிலையில் ஆடம்பர நிலைக்கு ஆசை படுகின்ற போது அவன் வாழ்வில் பின்னடைவு ஏற்படுகிறது.

தனது கணவன் வளைகுடா நாட்டில் வேலை பார்க்கிறான் என்பதை பறைசாற்றும் விதமாக சிலர்  பெண்கள் ஆடம்பரமாக செலவு செய்வதையும் காண முடிகிறது. அன்றாட உணவு பழக்கத்தில் கூட மாற்றம் செய்து பணத்தை விரயம் செய்து ஒவ்வொரு மாதமும் கணவனிடமிருந்து பண வரவை எதிர்பார்த்து காத்திருப்பர்.

இது போன்றவர்களில் முற்றிலும் மாற்றமான சில பெண் மணிகள் பற்றியே கூற விரும்புகிறேன்...

கணவன் வெளிநாடு சென்று சம்பாதிக்கிறான் என்பதால் தனது உணவு பழக்கத்தில் எந்த மாற்றமும் செய்யாமல் எளிமையான உணவு, ஆடம்பரம் இல்லா உடை கணவனிடமிருந்து வரும் பணத்தை அப்படியே சேகரித்து நான்கைந்து மாதத்தில் முதிரும் பெரும் தொகையை அப்படியே சிறு நிலம் வாங்கி, தனது முதலீடு வாழ்க்கையை ஆரம்பித்தாள் அந்த பெண்மணி கணவன் மூன்று ஆண்டுகள் கழித்து ஊர் வரும்போது கணவன் அன்பாய் வாங்கி வந்த பொருட்களை சேகரித்து நல்ல விலைக்கு விற்று கணவன் கை செலவிற்கு கொடுத்தாள். அன்பாய் வாங்கி கொடுத்த தங்க நகையை மட்டும் அணிந்து காட்டி மகிழ்வித்தாள்..

காலங்கள் சென்றன... இப்படியே பதினைந்து வருடங்கள் கடந்தன... கணவன் விடுப்பில் ஊர் வந்தார். அப்போது அவர் மனைவி கூறினார்.    

இனி நீங்கள் வெளிநாடு செல்ல வேண்டாம் !

ஏன் ? என்றார் கணவன்

நீங்கள் இதுவரை அனுப்பிய பணம் என் முதலீட்டால் பெருகி பல லட்சங்களாய் உள்ளது.

ஒவ்வொரு மனையும் பத்து லட்சம் போகும். நீங்கள் அனுமதித்தால் அனைத்தையும் விற்று மாத வருமானம் தரும் வாடகை கட்டிடங்கள் வாங்கி நம் வாழ்வாதாரத்தை பெருக்கி கொள்ளலாம் என்றார்.

பல வருடங்கள் உழைத்து களைத்த கணவனுக்கு மனைவி கூறிய வார்த்தை அக்கால மன்னர்களுக்கு மந்திரிகள் கூறிய ஆலோசனை போலபட்டது.

நீ கூறும் யோசனை மிக சரி என்றார்.

ஊரில் நலமாய் வாழ்கிறார். அவர் மனைவி மந்திரிதான்.

* நான் கூறிய கால கட்டம் :

ஒரு குளிர் சாதன பெட்டி பதினைந்தாயிரம்...

ஒருவீட்டு  மனை  இருபத்தி ஐந்தாயிரம்...

அடுத்த வாரம் நகைச்சுவை நிகழ்வை காண்போம்
[ வளைகுடாப்பயணம் தொடரும்... ]
'பத்திரிக்கைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்

25 comments:

 1. கடந்த சில நாட்களாகவே இணையத் தொடர்பு கிட்டாததால் சில பதிவுகளுக்கு கருத்திட முடியவில்லை.

  கணவனின் வெற்றிக்கு பின்னால் மனைவியும் பங்கும் உண்டு :)

  நல்லதொரு படிப்பினை தரும் ஆக்கம்

  தொடர வாழ்த்துக்கள்...
  ReplyDelete
  Replies
  1. மீண்டும் இணைப்புக் கிட்டியதாக அறிகின்றோம் இப்பின்னூட்டப் பதிவின் மூலம், எனவே, அன்புத்தம்பி, நிஜாம் அவர்கள் உடனடியாக நீங்கள் என்னிடம் அலைபேசியில் வாக்களித்தபடி, பதிவர்கட்கான அந்தச் சுற்றறிக்கையை இன்றே வெளியிட வேண்டுகின்றேன்; பற்றி எரியும் தீயை அணைக்கும் வண்ணம் உங்களின் அறிவிப்பு அமையட்டும்; விவாதங்கள் அணையட்டும்!

   Delete
  2. தொழில் நுட்ப கோளாறு கூட ...

   ஊடக கருத்து திணிப்பு உட்புக ஏதுவாகஅமைந்து விடுகிறது

   Delete
 2. / அடுத்த வாரம் நகைச்சுவை நிகழ்வை காண்போம் //

  பலநூறு வாசகர்களைப்போல் நானும் படிக்க ஆவலாக உள்ளேன்.

  ReplyDelete
  Replies
  1. வளைகுடா வாழ்வின் வயது நாற்பதாகும் ..

   இன்னும் பல நிகழ்வுகள் உள்ளது ..தொடர்வோம்

   Delete
 3. கலக்கலான உண்மை சம்பவம் இது போன்ற கட்டுரைகள் நம் வலை தளத்திற்கு பொருத்தம் மார்க்க விஷயங்கள் கருத்து மோதல்கள். முழுமையா தெரியாத விஷயங்களை மல்லுக்கட்டுவது இது வெல்லாம் தவிர்க்க வேண்டும்
  இதுபோல் உள்ள வலைதளங்கள் மனமகிழ் மன்றம்போல்தான் இருக்க வேண்டும் மத,மார்க்க விஷயங்கள் தயவுசெய்து தவிர்க்கவும்

  ReplyDelete
  Replies
  1. மதம் சார்பான எழுத்துக்கள் எழுதுவதில்லை என்ற

   கொள்கையை கொண்டவன்

   Delete
 4. 5 இலட்சத்திற்கு விற்பனை செய்த மனையின் பணத்தில் அமெரிக்க நாடு சென்று இரண்டு வருடகாலம் பணிசெய்து ஏதோ ஒரு காரணத்தால் ஊர் வந்தவனின் மொத்த சம்பாத்தியம் செலவுபோக ஒன்பது இலட்சம் அன்றைய அவன் விற்ற மனையின் மதிப்பு 10 இலட்சம் ஹ ஹா ஹா

  ReplyDelete
  Replies
  1. வாழ்வின் வெற்றிக்கு தியாகம் முக்கியம்

   Delete
 5. எல்லாக் குடும்பங்களிலும்;சிக்கனமாய் இருந்து சீராய் வாழ்வர்களும் உளர்; ஆடம்பரமாய்ச் செலவழித்துச் சீரழிந்தவர்களும் உளர். மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்; மற்றும், பெண்கள் திருமணம் ஆகும் முன்பாக, இப்படிப்பட்ட குடும்ப நிர்வாகத்தை- பொருளாதாரத்தில் சிக்கனமாகச் செலவழித்துச் சீராய்க் குடும்பம் நடத்துவதை- தாய்மார்கள் தான் திருமணமாகப் போகும் தன் பெண் பிள்ளைகட்குச் சொல்லியும் முன்மாதிரியாக நடந்தும் காட்ட வேண்டும்; இளமையில் தன் தாயைப் பார்த்துப் பழகும் அப்பெண் பிள்ளை இன்ஷா அல்லாஹ் திருமணம் ஆனதும், தாயைப் போலவே சிக்கனமாக வாழும் என்பதே உண்மை.

  ReplyDelete
  Replies
  1. சரியாக கூறினீர்கள் கவியன்பரே ...

   தாயை போல பிள்ளை நூலை போல சேலை

   Delete
 6. இந்தவாரம் தாங்களின் ஆக்கம் சேமிப்பின் பலன்களை உணர்த்தியிருந்தது. அருமை. சிறுதுளியே பெருவெள்ளம் நாம் அயல் நாட்டில் சம்பாதிக்கும் போது செலவு போக சிறுசேமிப்பாய் கொஞ்சம் சேமித்து வந்தாலே பிறகு நமது தேவைக்கு பெரும் உதவியாக இருக்கும். மனிதனுக்கு இப்போதைய கால சூழலில் எவ்வளவு சம்பாதித்தாலும் தேவைகளை பூர்த்தி செய்ய முடியவில்லை. ஆகவே கொஞ்சமாவது சேமிப்பு அவசியமாகிறது.

  ReplyDelete
  Replies
  1. சரியாக கூறினீர்கள் ...அன்பு கவி அதிரை மெய்சா அவர்களே

   Delete
 7. சித்தீக் காக்கா
  நல்ல படிப்பினை தரும் ஆக்கம்
  -------------------------------

  நன்றி;
  மிகுந்த சர்ச்சைக்குரிய, பாவங்களுக்கு வழி அமைத்து கொடுத்து தவறான, மார்க்க விரோத பதிவொன்றை இந்த தளத்திலிருந்து நீக்கியமைக்கு மிக்க நன்றி
  ஜஸாக்கல்லாஹ் ஹைர்.

  ReplyDelete
  Replies
  1. வலைதள நிர்வாகிகளுக்கு:

   சர்ச்சைக்குரிய, வழிகேடு மற்றும் குஃப்ரான பதிவை நீக்கியமைக்கு நன்றி. அல்லாஹ் உங்களுக்கு நற்கூலிகளை தருவானாக. இது போன்ற கழிசடை பதிவுகள் எதிர்காலத்தில் வெளிவராதவாறு மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படவும்.

   வஸ்ஸலாம்.

   Delete
  2. Dear Brothers,
   Asslaamu alaikkum,

   As we know Mr.Shaikkana Nijam fulfilled his promise well and removed the controversial article. Hencve, it is happier to everyone and I may continue to post my poems in the same site.

   Thanks you lot Mr. NIjam. Jazakkumullah khairan wa aafiya.

   In Future , Please don't allow RELIGIOUS matters in this site.


   Yorus Brother In Islam,
   KALAM

   Delete
  3. பின்னூட்டங்களில் எழுதும் வாசக அன்பர்கள் நாகரீகமான

   வாத்தைகளை உபயோகித்தல் நலம் ..பதிவர் அவசியம்

   கவனிக்கவும் ..முடிந்த நிகவுகளை புதிப்பது போல

   பின்னூட்டம் இடுவதும் நல்லதல்ல

   Delete
 8. மந்திரிகள் உள்ள வீடெல்லாம் தப்பித்து. ராஜாக்கள் உள்ள வீடெல்லாம் இன்னும் அரபு நாட்டையே நம்ப வேண்டியே நிற்கின்றது.

  என்றும் நன்மை தரும் படிப்பினை ஆக்கம்.

  நன்றி,அதிரை சித்திக் அவர்களே !

  ReplyDelete
  Replies
  1. நன்றி நபிதாஸ் அவர்களே ...

   நல்ல ஆலோசனை எங்கு கிடைத்தாலும் ஏற்றுக்கொள்ள

   வேண்டும்..மனைவியின் ஆலோசனையில் ..நிச்சயம்

   நன்மை பெயக்கும்

   Delete
 9. Dear Brothers,
  Asslaamu alaikkum,

  As we know Mr.Shaikkana Nijam fulfilled his promise well and removed the controversial article. Hencve, it is happier to everyone and I may continue to post my poems in the same site.

  Thanks you lot Mr. NIjam. Jazakkumullah khairan wa aafiya.

  In Future , Please don't allow RELIGIOUS matters in this site..


  Yorus Brother In Islam,
  KALAM

  ReplyDelete
 10. அன்புள்ள கலாம் காக்கா,
  அலைக்கு முஸ்ஸலாம்
  //RELIGIOUS matters in this site//
  மார்க்கத்தில் உள்ளுக்குள் குழப்பத்தை உருவாக்கும் ஆக்கத்தை தவிர்த்து ஆதாரப்பூர்வமான தாஃவா (ஆக்கங்களை) இஸ்லாத்தின் நற்செயல்களையும் அவ்வப்போது பதியலாமே!

  ReplyDelete
 11. அன்புள்ள கலாம் காக்கா,
  அலைக்கு முஸ்ஸலாம்
  //RELIGIOUS matters in this site//
  மார்க்கத்தில் உள்ளுக்குள் குழப்பத்தை உருவாக்கும் ஆக்கத்தை தவிர்த்து ஆதாரப்பூர்வமான தாஃவா (ஆக்கங்களை) இஸ்லாத்தின் நற்செயல்களையும் அவ்வப்போது பதியலாமே!

  ReplyDelete
 12. பதிவுக்கு நன்றி.

  நல்ல படிப்பினை.

  இப்படிக்கு.

  K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
  த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
  உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

  ReplyDelete
 13. //""துணையோடு மட்டும் தொடர்கின்ற வாழ்வுக்கு

  இணையாக வேறுமருந் தில்லை - மனைவியெனும்

  மானிடத்து மட்டும் மையல் வளர்த்திந்த

  மானுடத்தை வாழ்விப்போம் வா!''//

  இவ்வெண்பாவை வனைந்தவர் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள்.

  இவ்வாக்கத்தின் பின்னூட்டத்திற்குப் பொருந்தும் என்று கருதியிட்டேன்; ஆயினும், இவ்வெண்பாவில் ஈறிடங்களில் தளைதட்டல் இருக்கின்றன; ஆனாலும், பொருட்சுவையோ மிகவும் அருமை!

  ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers