.

Pages

Tuesday, August 20, 2013

பொருளாதாரம் நமக்கு கைகூடுமா !?

பொருளாதாரம் என்பது வெறும் பொருளோடு மட்டும் அல்ல,  ஒரு மனிதனின் அந்தஸ்தோடும் ஒப்பிடப்படுகிறது ! சொந்தங்கள் ஓரங்கட்டப்பட்டு செல்வந்தர் சிறப்பிக்கப்படுவர்கள் கல்யாண வைபோகத்தில். ஏன் ஒரு நாடே பொருளாதாரத்தின் அடிப்படையில் தான் முன்னேறிய நாடாக கருதப்படுகிறது பொருள் இல்லாதோருக்கு இவ்வுலகமில்லை எனும் வார்த்தை ஒரு மூதறிஞரின் பண்டைய வார்த்தை.

காசேதான் கடவுளடா எனும் பிதற்றல் பண ஆசை பிடித்தோரின் தார்மீக வார்த்தை.  

ஒரு மனிதனுக்கு அத்யாவசிய தேவை பொருளா ?அல்லது தாரமா ? என்றால் இரண்டுமே என்போம். பொருள் நம் வாழ்வு சிறக்க! தாரம் நம் சந்ததிகள் செழிக்க. பெற்றோரை பிரிந்து,மனைவி மக்களை பிரிந்து உற்ற நண்பர்களை பிரிந்து பொருள் ஈட்ட வேண்டும் என்ற நோக்கிற்காக எவ்வளவு சிரமங்களை சுமக்க வேண்டி இருக்கிறது?! என்ன செய்ய பொருளாதாரத்தை கொண்டுதான் அஸ்திவாரமே அமைந்திருக்கிறது ! மேலும் பார்ப்போம்...
 
உண்டியல் இல்லா வழிபாட்டுத்தளங்கள் உண்டா ? பொருளாளர் இல்லா கட்சிகள் உண்டா ? நிதியமைச்சர் இல்ல நாடுகள் உண்டா ? ஒரு பள்ளிவாசலின் முத்தவல்லி, ஒரு கோயிலின் அறங்காவலர், பூசாரியோ, மௌலானாவோ இருக்க மாட்டார் மாறாக பணம் கொழுத்த ஓர் ஆசாமிதான் அந்த பொறுப்பில் இருப்பார். அந்த மதத்தைப்பற்றி படித்தவர்கள் மணியாட்டவும், தொழுகை நடத்தவும் மட்டுமே பயன் படுத்தப்படுவார் வருமானம் இல்லா வணக்கஸ்தலம் படும்பாடு ஏராளம்.
 
இஸ்லாத்தின் 5 கடமைகளில் கடைசி 2 கடமை பொருளாதாரம் சம்மந்தப்பட்டது. ஒரு வரைமுறை கணக்குப்படி பணம் உள்ளோர்க்கு ஜகாத் எனும் சட்டம் அமலாகும். அதுபோல் பணபலமும், உடல் பலமும் உள்ளோர்க்கு ஹஜ் புனித பயணம் கடமையாகிறது பணம் காசுகள் சேர்க்க ஆசைப்பட்டார் இவ்விரண்டு கடமைகளும் நிறைவேற்றலாம் என்ற ஆசையோடு சம்பாதிக்கும் பொழுது வருமானமும் பர்கத் உண்டாகிறது.

தன்னிகறில்லாத்தலைவர், இஸ்லாமியர்களால் ரஸூல் என போற்ற படுபவரான, முஹம்மது [ ஸல் ] அவர்கள் ஏழ்மையை தான் விரும்பினார்கள் செல்வத்தை வெறுத்தார்கள் ஒரு முறை இறைவன் புறத்தில் இருந்து செல்வம் தரப்படவா என கேட்க்கும் பொழுது அவர்கள் மறுத்தார்கள் மாறாக எனது நாளைய உணவு தேவைக்காக இன்று உன்னிடம் கை ஏந்துவதையே விரும்புகிறேன் என்று பதில் அளித்தார்கள். அரசு கஜானாவில் இருந்து சம்பளமாகக்கூட பொருளோ, பணமோ எடுத்துக்கொள்ளவில்லை எனது வாரிசுகளும் எடுப்பது ஹராம் என்றார்கள் [ இன்றைய அரசியல் வாதிகள் கவனிக்க வேண்டிய விஷயமாகும் ]    தனக்கு கிடைக்கும் பரிசுப்பொருள்களை வீட்டுக்கு கொண்டு வந்ததில்லை வழியிலேயே ஏழைகளுக்கு பங்களித்து விடுவார்கள் உணவில்லாமல் எத்தனையோ நாட்கள் கடந்திருக்கின்றது அவர்கள் வாழ்வில்.

பொருளாதாரத்தை ஒருவர் எப்படி நேசிக்கிறாரோ, எப்படி சிந்திக்கிறாரோ, அப்பொருளாதாரம் அவர் என்னப்படியே அவர்கட்கு கைகூடும்.

மு.செ.மு.சபீர் அஹமது

15 comments:

 1. யாவர்க்கும் எண்ணம் போல் வாழ்வு...!

  ReplyDelete
 2. அருமையான விளக்கம் அனைவருக்கும் புரியும்படி எடுத்துச்சொன்ன விதம் அருமை !

  // பொருளாதாரத்தை ஒருவர் எப்படி நேசிக்கிறாரோ, எப்படி சிந்திக்கிறாரோ, அப்பொருளாதாரம் அவர் என்னப்படியே அவர்கட்கு கைகூடும்.//

  சரியாகச்சொன்னீர்கள்

  நல்ல எண்ணம் வாழ்வில் நன்மை பயக்கும்

  ReplyDelete
 3. யாவர்க்கும் எண்ணம் போல் வாழ்வு

  ReplyDelete
  Replies
  1. என்னம்போல் வாழ்வு கிடைத்த வாழ்க்கையை சிறப்பாக நினைப்பதும் நலமே

   Delete
 4. ஆசைப்படுதல் தன்ன்ம்பிக்கையின் ஆதாரம் என்று உளவியலார் கூறுகின்றனர். நீங்கள் இறுதியாகச் சொன்ன வரிகள் தான் உளவியலார் கூறும் மற்றுமொரு உண்மை; “உங்களின் ஆழ்மனத்தினில் என்ன நினைக்கின்றீர்களோ; அதுவாகவே நீங்கள் ஆகிவிட்டால், அம்மனமே உங்களை ஆட்டுவிக்கும்” இதனையே நபிகளார் முஹம்மத்(ஸல்) அவர்களும் “ ஒவ்வொரு செயலும் எண்ணத்தைப் பொருத்து உள்ளது” என்றார்கள் என்றுச் சொல்லப்படுகின்றது.

  என்னிடம் இல்லை இல்லை என்று சொல்லிக் கொண்டே இருந்தால் “இல்லாமை” விரைவாய் அவன் இல்லம் தேடி வரும்!

  அதிக பேராசையும் ஆபத்து; அதிகக் கஞ்சத்தனமும் ஆபத்து.

  ஆக, இதுபோன்ற சிக்கலான மற்றும் எல்லாப் பிரச்சினைகட்கும் தீர்வு இஸ்லாம் என்னும் தூய மார்க்கம் என்பதற்கு அல்-குர்- ஆனில் நம்மைப் பற்றிச் சொல்லும் பொழுது “நடுநிலைச் சமுதாயம்” என்றே அல்லாஹ் தன் திருமறையில் விளிக்கின்றான்; இதன் மூலமும் நாம் படிப்பினையைப் பெறலாம்;

  ஆம், எல்லா விடயங்களிலும் “நடுநிலையாக” இருந்தால் வெற்றி மேல் வெற்றிதான் ஈருலகிலும், இன்ஷா அல்லாஹ்!

  துறவறமும் கூடாது; அதிகமான போகம் உடையவனாகவும் இருக்கக் கூடாது. இப்படி எல்லா விடயங்களிலும் “நடுநிலை பேணுவோம்”

  ReplyDelete
 5. ஆசைப்படுதல் தன்னம்பிக்கையின் ஆதாரம் தான் உண்மையை சொன்னிர்கள் அடுத்தவன் சொத்துக்கு ஆசைப்படாமல் தன் உழைப்பின் மீது நம்பிக்கை வைத்து பொருள் மீது ஆசைப்படுதல் நலம். கிடைப்பதை நலம் என நினைப்பதும் நலம்

  ReplyDelete
 6. நான் சொல்லவில்லை; உளவியலார் கருத்தென்பதைச் சுட்டிக் காட்டினேன். அது முற்றிலும் - முக்காலும் உண்மையிலும் உணமை என்பதை நாம் ஒவ்வொரு விடயத்தின் ஆதாரம் அல்லது மூலம் என்னவென்று ஆய்ந்தால் இந்தப் பேருண்மைப் புலப்படும்.

  காட்டு: பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற “ஆசை” மனத்தினில் முதலில் வர வேண்டும்; அதுவே கரு; பின்னர் , ஆழ்மனத்தினில் பணத்தைப் பற்றியும் அதனைச் சம்பாதிப்பதற்கான வழிகளைக் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும்; இப்படி அந்த “ஆசை’ என்னும் விதைக்கு முயற்சிகள் என்னும் நீரைப் பாய்ச்சினால், நாம் பணம் சம்பாதிக்கலாம் என்ற “தன்னம்பிக்கை” வளரும்.

  எல்லாவற்றுக்கும் மேலாக, எல்லா விடயங்களிலும் கீழ்க்காணும் சமன்பாடு மிக மிக அவசியம்”

  கடின உழைப்பு+கடவுளின் நினைப்பு= வெற்றி

  இச்சூத்திரத்தின் சூட்சமம் புரிந்தவனாற்றான் வெற்றிக் கனியைப் பறிக்க இயலும்.

  வெறும் கடினமாக உழைத்துக் கொண்டே இருப்பான்; ஆனால், அவனுக்கு “வாய்ப்புகள்” என்னும் வரம் வராவிட்டால் தோல்வி தான்

  வெறும் கடவுள் நம்பிக்கை மட்டுமே கொண்டிருப்பான்; ஆனால், கடினமாக உழைக்காமல் எல்லாம் கடவுள் பார்த்துக் கொள்வான் என்றிருப்பான்; அவனும் தோல்வியைச் சந்திப்பான்.

  எனவே,

  முதலில் “ஆசைப்படு” ( நிய்யத்)
  அடுத்து முயற்சியெடு (முஜாஹதா)
  அடுத்து பிரார்த்தனை செய் (துஆ0  நாம் இருக்கும் தவம் என்னும் வழிபாட்டின் மூலம் தான் “அறியாத புறத்தினின்றும்” வாய்ப்புகள் என்னும் வரம் - இறையருள்- வழிகாட்டல்- நம் வாசற்கதவினைத் தட்டும்; அதனால் நமக்குப் புதிய பாதைக் கிட்டும்!
  வாய்ப்புகள் என்பதும் அல்லாஹ்வால் காட்டப்படும் ஓர் உதிப்பே; அதனை உடன் பற்றிப் பிடித்துக் கொண்டுச் செயல்பட்டால் அந்த வாய்ப்பு என்னும் வரம் உங்களை ஏற்றிச் செல்லும் உயரம்!

  இங்குச் சொல்லப்பட்ட உழைப்பு, முயற்சி எல்லாவற்றிர்கும் அடிப்படையான ஒன்றும் உள்ளது. அதுவே, “கல்வி”

  தொழிலில் சேரவும்; வெல்லவும், பணம் சம்பாதிக்க்கவும் “கல்வி” வேண்டும். (இதில் படிப்பறிவும் +பட்டறிவும் வேண்டும்)
  வணிகத்திலும் இந்தக் கல்வியறிவு வேண்டும்.

  இப்படியாக

  ஆசைப்பட்டு, தன்னம்ப்பிக்கை ஊன்றி, முயற்சித்து, (விடாமுயற்சி என்பதும் அவசியம்) , வரும் வாய்ப்புகளைத் தவற விட்டு விடாமல் தொடர்ந்து சென்றால், பணம் கிட்டும்;பொருளில்லார்க்கு இவ்வுலகில்லை;அருளிலார்க்கு அவ்வுலகில்லை என்ற வள்ளுவனின் வாக்கும் பொய்யாகாது!

  ReplyDelete
 7. ///பொருளாதாரம் என்பது வெறும் பொருளோடு மட்டும் அல்ல, ஒரு மனிதனின் அந்தஸ்தோடும் ஒப்பிடப்படுகிறது ! சொந்தங்கள் ஓரங்கட்டப்பட்டு செல்வந்தர் சிறப்பிக்கப்படுவர்கள்///

  உண்மையான வரிகள். இத்தகைய நிகழ்ச்சிகளை நாம் இன்று கண்கூட காண்கிறோம். ஒரு காலத்தில் குடும்பம் கோத்திரமென்று பார்த்தார்கள். ஆனால் இன்றோ அந்த நிலை மாறி செல்வந்தரா.? என்று மட்டுமே பார்க்கின்றனர். அந்தப்பணம் எப்படி வந்தது என்றுகூட பார்ப்பதில்லை. பணவசதி இருப்பவருக்கு ஒரு நியாயம் இல்லாதவருக்கு ஒரு நியாயமாக இருக்கிறது.

  ஆனால் ஒன்று மட்டும் உண்மை. நேர்மை தவறி பொருளீட்டுபவர்கள் நிம்மதியுடன் வாழமாட்டார்கள்.

  ReplyDelete
  Replies
  1. நேர்மை தவரியோர்க்கு நரக நெருப்பு காத்திருப்பது அனைவரும் அறிந்ததே
   கிடைத்த பொருளுக்கு ஜகாத் சரியாக கணக்கிட்டு கொடுக்காமல் இருப்பதும் கேடே

   Delete
 8. கவியன்பன் அவர்களே உங்களது கருத்து சரியென்றாலும் ஒரு விஷயத்தில் உங்கள் கருத்திற்கு நான் மாறு படுகின்றேன் தொழிலில் சிறக்க கல்வி அடிப்படை என்பது சரியல்ல தொழிலில் சிறக்க கடும் முயற்ச்சி,சமயோஜித அறிவு,ஆளுமை திறன்,இறையருள் இவை நான்கும் இருக்கும் பட்சத்தில் அவனுக்கு முன்னேற்றம் தான் கல்வி பயின்றோரை வேலைக்கு வைத்துக்கொண்டு முன்னேறலாம்

  ReplyDelete
 9. பொருள் இல்லார்க்கு இவ்வுலகில்லை ...

  அருள் இல்லார்க்கு அவ்வுலகில்லை ..என்ற கருத்து உண்டு

  அருள் மணமிக்க பொருளாதாரம் கூறிய நண்பருக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 10. பதிவுக்கு நன்றி.

  அருமையான கட்டுரை, மனிதன் உணர்ந்து திருந்துவானா?

  இப்படிக்கு.

  K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
  த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
  உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

  ReplyDelete
  Replies
  1. அஸ்ஸலாமு அலைக்கும் காக்கா. காக்காவிற்கு வேலைப்பளு அதிகமே

   Delete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers