.

Pages

Monday, September 2, 2013

பங்களிப்பாளர்கள் மற்றும் வாசக நேசங்களுக்கு அன்பான அறிவிப்பு !

அன்பிற்கினிய சமூக விழிப்புணர்வு பக்கங்களின் பங்களிப்பாளர்கள் மற்றும் வாசக நேசங்களுக்கு அன்பான அறிவிப்பு !

இன்றைய சமூகத்தில் அன்றாடம்  நடக்கக்கூடிய அவலங்களின் உண்மையை பொதுமக்களிடம் தோலுரித்துக் காட்டவும், அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி நல்லதொரு தீர்வு எட்ட தூண்டுகோலாய் அமைய வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் உருவாக்கப்பட்டதுதான் 'சமூக விழிப்புணர்வு பக்கங்கள்' என்ற அனைத்து தரப்பினருக்கும் பொதுவான இந்த வலைதளம் எவ்வித லாப நோக்கமின்றி தன்னார்வலர் சிலரின் கடுமையான பணிச்சுமைகளுக்கிடையே தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த தளத்தில் பொதுமக்களுக்கு பயன்தரக்கூடிய அரசு சார்ந்த பல்வேறு தகவல்கள், சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள் ஆகியோருடனான சந்திப்புகள், கலந்தாய்வுகள், பயண அனுபவங்கள், விழிப்புணர்வு கவிதைகள், பல்வேறு தலைப்புகளில் தலையங்கம், புதிய தொழில்முனைவோருக்கான கட்டுரைகள், வேலை வாய்ப்பு செய்திகள், அரசு தொழிற்பயிற்சி முறை குறித்த தகவல்கள், கல்வி உதவி பெறும் வழிமுறைகள், ஒவ்வொரு துறைகளிலும் சிறந்து விளங்கிய சாதனையாளர்கள் என இப்படி பதிவுகளின் பட்டியல் நீண்டு கொண்டேச்செல்லும்...

உள்ளூர் படைப்பாளிகளின் திறமைகளை உள்ளூரில் மாத்திரமல்லாமல் உலகளவில் தமிழ் பேசும் அன்பர்களிடம் எடுத்துச்செல்லும் விதமாக இதில் பதியப்படுகின்ற ஒவ்வொரு ஆக்கங்களையும் உள்ளூர் செய்தி தளமாகிய அதிரை நியூஸ்'ஸில் இடம்பெறுவதோடு மட்டுமல்லாமல் உலகளவில் தமிழில் பிரபலமாக இருக்கக்கூடிய அனைத்து திரட்டிகளிலும் இணைக்கப்பட்டதில் பல படைப்புகள் அதிகமான வாசகர்களால் வாசிக்கப்பட்டு பிரபலமான - சூடான இடுகையாக தொடர்ந்து இருந்து வருகின்றன.

படைப்பாளிகளுக்கு நல்லதொரு ஊக்கம் தரும் வகையில் இதில் பதிகின்ற ஆக்கங்கள் ஒவ்வொன்றையும் சிறப்பாக வரவேற்கும் வகையில் உலகெங்கிலும் வசித்து வருகின்ற தமிழ் வாசகர்களின் சிறந்த விமர்சனங்களையும் பெற்று வருகின்றன. இவை படைப்பாளிகளுக்கு மேலும் சிறந்த படைப்பை உருவாக்க தூண்டுகோலாக அமையும் என்பதில் ஐயமில்லை. மேலும் வாசகர்களின் கருத்துரிமையை காக்கும் விதத்தில் தளத்தில் மட்டுறுத்தல் இன்றி சுதந்திரமாக தமது கருத்துகளை பதிய அனுமதி அளிக்கப்பட்டுள்ளதை அடுத்து, கட்டுரையை வாசிக்கும் அனைவராலும் படைப்பில் ஏற்படும் நிறை - குறைகளை அறிந்து நல்லதொரு தெளிவான விளக்கத்தை பெறவும் உதவுகிறது.

சமூக விழிப்புணர்வு பக்கங்களின் தளத்தை மேலும் மெருகூட்டும் வகையில் கீழ்கண்ட மாற்றங்களை செயல்படுத்த உத்தேசித்துள்ளோம்.

1. எழுத்தார்வத்தை வளர்க்கும் நோக்கில் புதிய பதிவர்களை தளத்தில் அறிமுகப்படுத்துவது...

2. தளத்தின் முக்கிய கொள்கைகளில் ஒன்றாகிய மதம் சம்பந்தப்பட்ட பதிவுகளை தவிர்த்துக்கொள்வது என்பதை மீண்டும் நடைமுறையில் கொண்டுவருவது...

3. சமூகத்தில் அன்றாடம் ஏற்படும் நிகழ்வின் அடிப்படையில் உருவாகும் ஆக்கங்களை தளத்தில் உடன் பதியக்கூடிய கட்டாயச்சூழலால், பங்களிப்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட ஒவ்வொரு நாள்களும் தற்காலிகமாக நிறுத்தி வைப்பது...

4. தளத்தில் பதியப்படும் படைப்புகளை ஒரே நேரத்தில் பிற சமூக வலைதளங்களிலும் பதிந்து வாசகர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தும் படைப்புகளை முன்னறிவிப்பின்றி நிறுத்தி வைப்பது... 

5. 'கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்' என்ற வாசகத்தை ஒவ்வொரு பதிவிலும் அடிக்குறிப்பிடுவது...

உள்ளிட்ட மாற்றங்கள் அமல்படுத்த இருப்பதால் தங்களின் மேலான கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை எங்களுக்கு வழங்கி சமூக விழிப்புணர்வு பக்கங்கள் தளம் மேம்பட உதவ நிர்வாகம் சார்பாக அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

மேற்குறிப்பிட்ட ஐந்து மாற்றங்கள் தொடர்பாக பங்களிப்பாளர்கள் - வாசக நெஞ்சங்கள் ஆகியோரிடமிருந்து கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.

நன்றி !

நிர்வாகம் - சமூக விழிப்புணர்வு பக்கங்கள்

20 comments:

 1. // தளத்தின் முக்கிய கொள்கைகளில் ஒன்றாகிய மதம் சம்பந்தப்பட்ட பதிவுகளை தவிர்த்துக்கொள்வது என்பதை மீண்டும் நடைமுறையில் கொண்டுவருவது...//

  ஆம்..நீங்கள் இஸ்லாமிய மார்க்க விஷயங்களில், அதன் கொள்கை கோட்பாடுகள், சட்டங்களில் தலையிட வேண்டாம். நீங்கள் சேவை புரிவதற்கென்று பல துறைகள் உள்ளன. உ.ம்: தெருவிளக்கு, தெருக்களுக்கு நல்ல சாலைகள், காஸ் சிலிண்டர்,ரேஷன் கார்டு, அரசு அலுவலகங்கள் சம்பந்தமானவை, பள்ளிக்கூடம், கல்லூரி போன்றவை. இவற்றுள் கவனம் செலுத்துமாறு தங்களை வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. ///ஆம்..நீங்கள் இஸ்லாமிய மார்க்க விஷயங்களில், அதன் கொள்கை கோட்பாடுகள், சட்டங்களில் தலையிட வேண்டாம். நீங்கள் சேவை புரிவதற்கென்று பல துறைகள் உள்ளன. உ.ம்: தெருவிளக்கு, தெருக்களுக்கு நல்ல சாலைகள், காஸ் சிலிண்டர்,ரேஷன் கார்டு, அரசு அலுவலகங்கள் சம்பந்தமானவை, பள்ளிக்கூடம், கல்லூரி போன்றவை. இவற்றுள் கவனம் செலுத்துமாறு தங்களை வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.///

   சகோதரர் அஹமது பிர்தவுஸ் அவர்களுக்கு தாங்களின் இந்த குதர்க்கமான வலைதள நாகரீகமற்ற கருத்திற்கு இதன் பங்களிப்பாளர் என்ற முறையில் நான் கண்டனம் தெரிவிக்கிறேன். காரணம் இவ்வலைதள உரிமையாளருக்கு அவருடைய நிபந்தனைகளைச் சொல்ல அவருக்கு உரிமை உள்ளது.

   அதனை ஏற்றுக் கொள்வதும் ஏற்றுக் கொள்ளாததும் பங்களிப்பாளர்களின் ஒத்துழைப்பு மனநிலையை பொறுத்து.

   முதலில் ஒன்றை விளங்கிகொள்ளுங்கள் இத்தளம் மார்க்க சம்பந்தமாக வாதிடுவதர்க்குரிய தளம் அல்ல.
   ஜவுளிக்கடையில் போய் மளிகை சாமான்கள் கேட்பது போல் உள்ளது உங்களின் கருத்து.

   மார்க்க விசயத்தில் மிகச் சரியாக இருக்கும் நீங்கள் இப்படி கருத்துக்கள் பதிந்து மனம் நோகடிப்பது சரியா..?கொஞ்சம் சிந்தியுங்கள்.

   மார்க்க விஷயங்களில் தத்துக் குட்டியாக இருக்கும் எங்களைப் போன்றோர் சமுதாயத்திற்காக அவரவர் பங்கிற்கு அவரவர்க்கு தெரிந்த சேவைகளை செய்வது தவறா..? விழிப்புணர்வை ஏற்ப்படுத்துவதும் மக்களுக்கு நல்ல செய்திகளை எத்தி வைப்பதும் ஒருவகையில் தாஃவா பணிதானே.!

   நான் யாரிடமும் வாதிட விரும்ப வில்லை. என் மனதில் பட்ட கருத்தைச் சொன்னேன்.

   சகோதரத்துவத்தை பேணி நடந்து அனைவரும் ஒன்று பட்டு வாழ்வோம். ஒற்றுமையெனும் கையிற்றை இருகப்பிடிப்போம்.

   Delete
  2. சகோ. மெய்சா அவர்களுக்கு

   வலைதள நிர்வாகியின் முடிவான மார்க்க விவகாரங்களை தவிர்த்து கொள்வது என்ற முடிவை முழுமனதாக வரவேற்றேனே தவிர அதனை எதிர்க்கவில்லை என்பதை என்னுடைய முந்தைய பின்னூட்டத்தை மீண்டும் படிப்பதன் மூலம் அறிந்துகொள்ளலாம்.

   அவரவர் அவர் தம் துறையில் சேவையாற்றுவது என்ற உங்களின் கருத்தையும் வரவேற்கிறேன்.

   Delete
 2. ஒருவன் விழிப்புணர்வு பெறவேண்டுமானால் அவன் தன்னை, தன்னை படைத்தவனை அறிந்து விழிப்புணர்வு பெற்றால் தான் உண்மையான விளிப்புனர்வாலவன் ஆவான். அதனால் விழிப்புணர்வு என்று நல்ல முயற்சியை தொடங்கிவிட்டு மதம்/மார்கம் என்ற கட்டுப்பாடுகளை வைத்தால் அது முழுமையான விளிப்புனர்வைத்தராது.அதை திறம்பட நடத்த வேண்டிய வழிமுறைகளை செய்து இன்னும் ஆலோசனை செய்து வரம்புகளை வைத்து, முன்பே தகுதி இல்லையெனில் நீக்கிடுவோம் போன்ற அறிவிப்புகள் செய்து ஜனநாயகம் காப்பது தான் நல்ல சமூக விழிப்புணர்வு நோக்கத்தை நிறைவேற்றும்.

  இல்லையேல் உயிரில்ல விளையாட்டுத்தான்.

  நன்றி !

  ReplyDelete
 3. அறிவை வளர்கும் வழிகளில் ஏற்படும் தடங்கல்களை நீக்கும் வரம்புகளை ஏற்படுத்தாது, அறிவு விழிப்புணர்வை முடக்குவது வலைதள வளர்ச்சிக்கும் ஏற்றதல்ல. வலைத்தளம் தன் உயிர் அழகை இழந்துவிடும்.

  வாகனம் உயிரிழப்புக்கும் காரணமாக அமைந்துவிடுகிறது என்பதனால், வானத்தை விட்டவர் எத்தனைப் பேர் ? களை வளர்ந்தால் நீக்கவேண்டும். பயிரே செய்யக் கூடாது என்றால் ! அது விவேகம் அன்று.

  நன்றி !

  ReplyDelete
 4. சமூக பிரச்சனைகளில் மதம் இடம் பெற்றால், அதனை சில இடங்களில் பேசித் தான் ஆகவேண்டும். மற்றபடி அனைத்துக் கொள்கைகளும் அருமை, ஏற்கனவே நானும் அதே வரையறையில் தான் பயணிக்கின்றேன். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 5. "வாகனத்தை விட்டவர்"

  என்று படிக்கவும்.

  ReplyDelete
 6. நல்ல யோசனைகள்... தொடருங்கள்...
  வாழ்த்துக்கள்....

  ReplyDelete
 7. அஸ்ஸலாமு அலைக்கும் ,
  நல்ல யோசனைகள் உங்களுக்குள்( சமூக விழிப்புணர்வு பக்கங்களின் பங்களிப்பாளர்ளுக்குள்)திட்டமாக்கி செயல்படுத்த வாழ்த்துகள் .
  உங்கள் சேவை உயர்வானது ."May Allâh reward you [with] goodness."

  ReplyDelete
 8. அஸ்ஸலாமு அலைக்கும்

  இத்தளத்தின் நேசன், பெரும்பாலான பதிவர்களின் நேசன் என்ற முறையில் என் கருத்து.

  //1. எழுத்தார்வத்தை வளர்க்கும் நோக்கில் புதிய பதிவர்களை தளத்தில் அறிமுகப்படுத்துவது...//

  தாரளமாய் வளரட்டும் எழுத்தும், தமிழும்!

  //2.தளத்தின் முக்கிய கொள்கைகளில் ஒன்றாகிய மதம் சம்பந்தப்பட்ட பதிவுகளை தவிர்த்துக்கொள்வது என்பதை மீண்டும் நடைமுறையில் கொண்டுவருவது...//

  இங்கே தான் இடிக்குது
  எந்த மதத்தையும் சாட வேண்டாம்,
  நம் மார்க்கத்திற்குள் குழப்ப கருத்துக்களை திணிக்க வேண்டாம்.
  இன இழிவு நீங்கனும்,
  உலகில் ஆட்சி என்றால் அது உமருடைய ஆட்சியாக இருக்கனும்,
  இப்படிப்பட்ட உயர் தத்துவங்களை சொன்னதன் நோக்கம் என்ன, இது போன்ற மார்க்கத்தின் உயரிய கருத்துக்களை எடுத்து வைப்பதால் எந்த குழப்பமும் வராது.

  //3. சமூகத்தில் அன்றாடம் ஏற்படும் நிகழ்வின் அடிப்படையில் உருவாகும் ஆக்கங்களை தளத்தில் உடன் பதியக்கூடிய கட்டாயச்சூழலால், பங்களிப்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட ஒவ்வொரு நாள்களும் தற்காலிகமாக நிறுத்தி வைப்பது...//

  இது ரொம்ப சரி, பதிவர் எழுதனுமே என்பதற்காக எதையாவது எழுதி விடக் கூடாதல்லவா!

  //4. தளத்தில் பதியப்படும் படைப்புகளை ஒரே நேரத்தில் பிற சமூக வலைதளங்களிலும் பதிந்து வாசகர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தும் படைப்புகளை முன்னறிவிப்பின்றி நிறுத்தி வைப்பது... //

  ரொம்ப முக்கியமல்லாத படைப்புகளை மட்டும் இப்படி செய்வது தப்பே இல்லெ!

  //5. 'கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்' என்ற வாசகத்தை ஒவ்வொரு பதிவிலும் அடிக்குறிப்பிடுவது...//

  இது Formality தானே!

  ReplyDelete
  Replies
  1. ///இங்கே தான் இடிக்குது
   எந்த மதத்தையும் சாட வேண்டாம்,
   நம் மார்க்கத்திற்குள் குழப்ப கருத்துக்களை திணிக்க வேண்டாம்.
   இன இழிவு நீங்கனும்,
   உலகில் ஆட்சி என்றால் அது உமருடைய ஆட்சியாக இருக்கனும்,
   இப்படிப்பட்ட உயர் தத்துவங்களை சொன்னதன் நோக்கம் என்ன, இது போன்ற மார்க்கத்தின் உயரிய கருத்துக்களை எடுத்து வைப்பதால் எந்த குழப்பமும் வராது.///

   அன்பின் சகோதரர் ஜஹபர் சாதிக் அவர்களே...
   ///மார்க்கத்தின் உயரிய கருத்துக்களை எடுத்து வைப்பதால் எந்த குழப்பமும் வராது.///

   நீங்கள் சொல்லும் இந்தக்கருத்தில் எந்த மாற்றமும் இல்லை. சரியாகவே சொல்லி இருக்கிறீர்கள். ஆனால் ஐந்து விரலும் ஒன்றாக இருப்பதில்லை என்று சொல்வது போல நம் சமுதாயத்தில் எல்லோருடைய கொள்கை கோட்பாடு வழிபாடு முறை ஓர் அணியில் ஒருங்கிணைந்து இல்லை.அப்படி இருந்தால் எந்தக் குழப்பங்களும் வர வாய்ப்பில்லை. என்னைப் பொறுத்த மட்டில் நான் மார்க்க விசயத்தில் முழுமையாக அறியாதவனாக இருந்தாலும் தௌஹீதக் கொள்கையை விரும்புபவன். ஆனால் நீங்கள் எப்படி என்பது எனக்குத் தெரியாது.

   சிலர் எழுதும் மார்க்க சம்பந்தமான எழுத்துக்கள் முரண்பாடாக தெரிந்தால் அவர்களுடன் வாதிட்டு ஆதார பூர்வமாக நிரூபித்து அவர்களுக்கும் அதை உணர்த்தி அவர்களை நல்வழிக்கு கொண்டுவர முயற்ச்சி செய்ய வேண்டுமே அன்றி. அவர்களை புறக்கணிப்பதோ வசைச் சொல்பாடுவதோ நாகரீகம் அல்ல.நமது மார்க்கமும் அப்படி சொல்லவில்லை. சரியா.!

   இதுபோன்ற சில கருத்துக்கள் வளர இப்படி நடந்து கொள்ளும் விதமும் ஒரு காரணம்.என்பது என் கருத்து எனது மனதில் பட்டதை தாங்களுடன் பகிர்ந்து கொண்டேன். எனது நோக்கம் என்னவென்றால் தளத்தில் மாற்றுக்கருத்து பதிபவர்களுக்கும் வாய்ப்புக் கொடுத்தால் தான் அவர்களுக்கு பின்னூட்டம் வாயிலாக எடுத்துச் சொல்ல வாய்ப்பாக இருக்கும். சொல்லவந்தது தவறான கருத்தாக இருப்பின் திருத்திக் கொள்வர். தாவாப் பணியின் நோக்கம் என்பது அறியாமையில் உள்ளவர்களை அறியாமையை போக்கி உணர்த்தி தெளிவு பெற வைப்பதே அன்றி. தூற்றித் துறப்பதல்ல.

   இனியாவது உண்மையை உணர்த்தி நற்க் கருத்துக்களை பரிமாறிக் கொண்டு சகோதரத்துவத்தை பேணி நடப் போமாக.!

   Delete
 9. ஒரு ஆக்கம் ஒரு வலைதளத்தில்தான் பதியவேண்டும் என்பது ஏற்றுக்கொள்ளவேண்டியதுதான். இல்லையேல் அது வலைதள வளர்ச்சியையும் பாதிக்கும். வலைதள வேலையும் சலிப்பில் ஆழ்திவிடும். எழுத்தனுக்கு உள்ள விருப்பம் வலைதலனுக்கும் ஏற்படுதல் இயற்கையே.

  ReplyDelete
 10. பதிவுக்கு நன்றி.

  தங்கள் எடுத்துருக்கும் இந்த முடிவு மிகவும் நல்லது. இது எல்லோருக்கும் இன்னும் நல்ல பயன்களை தரும் என்பதில் சந்தேகமில்லை, சில நேரங்களில் கருத்துக்களின் பாதைகள் மாறும்போது கற்களும் முட்களும் தாக்குகின்றன, நேரான பாதையில் போகும்போது கற்கள் முட்கள் இவைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

  ஆகவே, உங்கள் முடிவை நான் மனப்பூர்வமாக வரவேற்கின்றேன்.

  இப்படிக்கு.

  K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
  த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
  உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

  ReplyDelete
 11. அன்பின் மெய்சா காக்கா,
  அஸ்ஸலாமு அலைக்கும்.

  // ஐந்து விரலும் ஒன்றாக இருப்பதில்லை என்று சொல்வது போல நம் சமுதாயத்தில் எல்லோருடைய கொள்கை கோட்பாடு வழிபாடு முறை ஓர் அணியில் ஒருங்கிணைந்து இல்லை.அப்படி இருந்தால் எந்தக் குழப்பங்களும் வர வாய்ப்பில்லை//

  அதனால் தான் உள்ளுக்குள் குழப்பம் ஏற்படுத்தும் கருத்துக்களை தவிர்த்து விட்டு பொதுவான உயரிய நல் கருத்துக்களையும் யாரையும் சாடாமல் எழுதுவது இரு உலகுக்கும் நன்மை கிடைக்குமே!

  //வசைச் சொல்பாடுவதோ நாகரீகம் அல்ல.நமது மார்க்கமும் அப்படி சொல்லவில்லை. சரியா.!..//

  அதனால் தான் எம்மதத்தையும் சாட வேண்டாம். நற்கருத்துக்களையும் எத்தி வையுங்கள் என்று கருத்திட்டேன்.

  அல்லாஹ் தந்த அரிய வாய்ப்பை அருமையாய் பயன்படுத்துவோமாக!

  ReplyDelete
 12. மார்க அறிவும் உலக அறிவும்

  உலகில் மார்க அறிவென்றும் உலக அறிவென்றும் இஸ்லாமியன் அறிவை பிரிக்கின்றான். இறைவன் அவ்வாறு கூறவில்லை. ஒரு சமயம் இறைவனின் அறிவை மார்க அறிவென்றும் அவன் படைப்பு மனிதன், அவன் தன் என்ற நிலையில் சொல்வதை உலக அறிவென்றும் சொல்கின்றான் போலும்.

  தறிகெட்டு வாழும் மனிதனுக்கு இப்படித்தான் வாழவேண்டும் என்று கர்பித்தலை; இவன் மரியாதையுடன் ஒதுக்கி வைத்துவிட்டு, இவன் தன் இஸ்டம் போல் தவறாக வாழ்தலுக்கு உலக அறிவென்று பெயர் சூட்டி மடமையில் வீழத்தான் விரும்புகின்றான்.

  இறைவன் எல்லா அறிவுகளையும் தெரியாதவனா ? எல்லாம் அறிந்தவன் போட்ட பாதையில் செல்வது சிறப்பைத்தவிர சிறுமையைத் தந்திடுமோ ! அவன் அறிவுதானே சமூக சீர்திருத்த அறிவு. அவன் அறிவுகளைவிட்டு எந்த அறிவைப்பற்றி பேசினாலும் உயர்வைத்தராது; அமைதியைத் தராது; சீர்திருத்தமும் ஆகாது. வீண் பேச்சுத்தான்.

  முழுமையானவனின் அறிவைப்பற்றி பேசாது; எழுதாது, முழுமையற்றவனின் அறிவைப்பற்றி பேசுவது; எழுதுவது தான் அறிஞனின் விருப்பமோ. அந்தோ ! கைசேதம். உண்மையைப்பற்றி பேசாது; எழுதாது, மாயையைப்பற்றி பேசுதல்; எழுதுதல் ஞாயம் என்று அறிஞனே உண்மையை மறைக்க; புதைக்க கங்கணம் கட்டுகிறான்.

  நபிதாஸ்.

  ReplyDelete
 13. அதிரை.மெய்சா அவர்களே !

  //சிலர் எழுதும் மார்க்க சம்பந்தமான எழுத்துக்கள் முரண்பாடாக தெரிந்தால் அவர்களுடன் வாதிட்டு ஆதார பூர்வமாக நிரூபித்து அவர்களுக்கும் அதை உணர்த்தி அவர்களை நல்வழிக்கு கொண்டுவர முயற்ச்சி செய்ய வேண்டுமே அன்றி. அவர்களை புறக்கணிப்பதோ வசைச் சொல்பாடுவதோ நாகரீகம் அல்ல.நமது மார்க்கமும் அப்படி சொல்லவில்லை. சரியா.!//

  எழுத்துக்கள்; கருத்துக்கள் நன்றாகத்தான் இருக்கின்றது; இனிக்கின்றது.
  தற்போது நடந்த செயல்பாடுகள் ? ஜனநாயகம்; கருத்துரிமை புதைக்கப்பட்டது இந்த தி அதிரை நியுஸ் வலைதளத்தில் என்று வலைதள உலகில் பதிவைத் தந்துவிட்டதே ?!

  எடுத்தேன் கவிழ்தேன் அவசரம். அதையும் அன்று பூத்த அவசர அறிவு அழகாய் சில கருத்தை தந்து, மிரட்ட தூண்டி, முடிவெடுக்க வைத்து, இன்று செய்தமைக்கு, புகழ் பாடுகிறது.

  ஜனநாயக வழிமுறைகள் அறிஞனுக்கு தெரியாதா ?

  முள் கீறினால் முறையாக கூரை ஓடிக்கத்தெரிய பொறுமையும்; அமைதியும் வேண்டாமா ?

  ReplyDelete
 14. இது அன்பர் Ahamed Firdhous-ன் வாதம்.

  //ஆம்..நீங்கள் இஸ்லாமிய மார்க்க விஷயங்களில், அதன் கொள்கை கோட்பாடுகள், சட்டங்களில் தலையிட வேண்டாம்.//

  அப்படிஎன்றால் நீங்கள் யார் ?

  இஸ்லாமியன், இஸ்லாமிய மார்க்க விஷயங்களில், அதன் கொள்கை கோட்பாடுகள், சட்டங்களில் தலையிட வேண்டாமாம். வேறு யார் தலையிடுவது ?
  சட்டங்கள் நிறைய தெரிந்து வைத்திருக்கின்றீர்கள் என்பது தலைநிறைய கனம் தெரிகிறது.

  நன்றி !

  ReplyDelete
 15. அன்பு சேக்கனா நிஜாம் அவர்களே !

  //
  5. 'கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்' என்ற வாசகத்தை ஒவ்வொரு பதிவிலும் அடிக்குறிப்பிடுவது...
  //

  இதில் "குழப்பத்தை உண்டுபன்னுபவைகள்" சேர்த்தல் நலம்.

  //
  2. தளத்தின் முக்கிய கொள்கைகளில் ஒன்றாகிய மதம் சம்பந்தப்பட்ட பதிவுகளை தவிர்த்துக்கொள்வது என்பதை மீண்டும் நடைமுறையில் கொண்டுவருவது...
  //
  மதம் சம்பந்தப்பட்ட பதிவுகளை, கவனமுடன் பரிசீலித்து சந்தர்ப்பம் நிர்பந்தம் ஏற்ப்படும் பொழுது, அதனை நிறுத்தி, விளக்கம் கேட்டு, ஆக்கம் ஆக்கியோரின் அனுமதியுடன் நிறுத்துதல் அல்லது நீக்குதல். அல்லது ஆக்கியோர் நீக்க; நிறுத்த அனுமதிக்கா பட்சத்தில் ஆக்கம்தருபவர்கள் அனைவரின் முடிவுக்கு விட்டுவிடல் என்ற சம்மதத்தின்பேரில் ஆக்கங்களை பிரசுரித்தல்.

  என்று சேர்ப்பது நலம்.

  நன்றி !

  ReplyDelete
 16. பங்களிப்பாளர்கள் மற்றும் வாசக நேசங்களுக்கு அன்பான அறிவிப்பு !
  இதற்கு முடிவெடுத்த குழுக்களில் உள்ள யாவரிடமிருந்து கருத்தும் வரவில்லை, தன்னிலை விளக்கமும் வரவில்லை. வராதது ஏனோ !

  ReplyDelete
  Replies
  1. உண்மை ..?அவர்களின் கேள்வி ...?

   குழுக்களின் பதில் எங்கே ..அறிவிப்பே பதில் ..

   எனது கொள்கை மத சார்பில்லா எழுத்தே எழுதுவது ..

   மத சம்பந்த மான சர்ச்சை இந்த வலைதளத்திற்கு பொறுந்தாதஒன்று

   Delete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers