.

Pages

Wednesday, September 25, 2013

ஸ்மார்ட் போன்கள் !?

கடித காலத்தில்
கருத்துப் பரிமாற்றம்
கணினி காலத்தில்
காட்சிப் பரிமாற்றம்
இட்ட கடிதத்தின்
பதில் வர
காத்திருப்பு
கட்டாயம்
தொட்ட திரை
விரிய
சுருங்கிவிடும்
இவ்வுலகம்
அற்புத விளக்கை
தடவ
பூதம் வந்த கதை
வாய் பிளந்து
கேட்டிருப்போம்
நம் கையிலும்
அற்புதமாய்
ஸ்மார்ட் போன்கள்
எதிர்பார்ப்பில்லாது
பூதம் தரும்
நாம் கேட்டதை
காசிருந்தால்
மட்டுமே
திரை விரியும்
நம் போனில்
கையில காசு
வாயில தோசை
கதையாய்
பல்போனா சொல்போச்சு
அந்தக்காலம்
செல்போனா சொல்போச்சு 
இந்தக்காலம்
வாழ்க்கைச்சிரையில்
அடைபட்ட நமக்கு
கட்டாயம் உண்டு
செல்நம்பர்
மு.செ.மு.சபீர் அஹமது

15 comments:

  1. /// செல்போனா சொல்போச்சு இந்தக்காலம் ///

    ஆறாவது விரல்...

    ReplyDelete
    Replies
    1. ஆறாம் விரலோ மூன்றாம் கையோ மொத்தத்தில் மனிதனின் அங்கம்

      Delete
  2. வாவ்...! என்னே வேகம்! என்னே வளர்ச்சி!!
    தொழிலதிபரின் கவிஞர்க் கனவை நனவாக்கும் இந்தக் கைபேசி!

    ReplyDelete
    Replies
    1. மோதிரக்கையால் கைகுலுக்கப்பட்ட சந்தோஷம் கவியன்பரே

      Delete
    2. கை தூக்கி ஏற்றிவிடவும், திசை காட்டி வழியனுப்பவும், தமியேன் இருக்கின்றேன், இன்ஷா அல்லாஹ்!

      முகநூலில் இலண்டன் வானொலி London Tamil Radio மற்றும் ஒலிபரப்பும் சகோதரி திருமதி ஷைஃபா மலிக் ஆகியோரின் நட்பு வட்டத்தில் நீங்கள் இருந்தால் உங்கட்கு வாரந்தோறும் கவிதைக்கான அறிவிப்பு வரும்

      id in facebook Begum Sbegum
      London Tamil Radio

      Delete
  3. கவி ஞானம் இயற்கையாய் அமைந்த நண்பன் சபீரிடம்

    இது போன்ற கவிதைகள் வருவதில் எனக்கு ஒன்றும்

    ஆச்சரியம் இல்லை .இன்னும் மேலே ...இன்னும் மேலே மேலே எதிர் பார்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. இன்னும் மேலே என்றால் செல்போன் டவர் பற்றிய கவியா அல்லது சாட்லைட் பற்றிய கவிதையா நண்பரே

      Delete
  4. பதிவுக்கு நன்றி.

    அருமையான படைப்பு, வித்தியாசம் தெரியுது.
    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  5. ஸ்மார்ட் போனை தலைப்பாய் வைத்து கவி புனைந்துள்ள விதம் அருமை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. வாழ்க்கை - அதை
    சிறையாகப் பார்ப்போரும்
    நிறையாக பார்ப்போரும்
    நிறைந்தே உண்டு.

    நிறையாக பார்ப்பதில்
    நிம்மதி உண்டு
    சிறையாக பார்ப்பதில்
    வேதனை உண்டு.

    பார்க்கும் கோணம் - அதை
    ஈர்க்கும் மனதில்
    ஊக்கமாய் உவப்பாய்
    நோக்க நிற்குமே
    நிலையான இன்பம்.

    நன்றி ! துடுக்கான கவிதை.

    ReplyDelete
    Replies
    1. மூமீன்களுக்கு உலகம் ஓர் சிறைச்சாலை -நபிமொழி நபிதாஸ் அவர்களே

      Delete
    2. ஒரு மனிதன் கலிமா சொல்வதற்கு முன்பு இருக்கும் வாழ்க்கை முறைகும் அவன் கலிமா சொன்னபிறகு உள்ள வாழ்க்கை முறைக்கும் வேறுபாடுகள் உண்டு. கலிமா சொன்னபின் இஸ்லாமிய கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு வாழ வேண்டும். கலிமா சொல்வதற்கு முந்தய வாழ்வோடு ஒப்பிடும்பொழுது அது ஒரு சிறைபோன்ற வாழ்வுதான். ஆனாலும் நிம்மதியான சாந்தியான வாழ்வுதானே ? அவ்வாறுதான் சிறைச்சாலை என்பதின் பொருளாக கொள்ளவேண்டும் மன்றோ ? அதைவிடுத்து தண்டனைகள், நிம்மதியற்ற வாழ்வு என்று பொருள் கொள்வதாகுமா? வரம்புகள் வரம்புகளற்றவர்களுக்கு சிறைச்சாலைதான். நிம்மதியாக வாழும் வாழ்கைக்கு இடப்படும் வரம்புகள் நல்லதும், தேவையானதும் தானே ?

      கருத்திட காரணமான அன்பர் மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) அவர்களுக்கு நன்றி !

      Delete
  7. இது எல்லோருக்கும் பிடித்த கைபேசி அருமை வாழ்த்துக்கள்.

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers