.

Pages

Friday, September 6, 2013

நீரின்றி தவிக்கும் நம்மூரு குளங்கள் !

நம்மூரின் ஒவ்வொரு பகுதிகளிலும் காணப்படும் குளங்கள் ஒவ்வொன்றும் பல தலைமுறையைக் கண்ட பாரம்பரியமிக்கவை. ஒவ்வொன்றும் ஒரு வரலாற்றை எடுத்துச்சொல்லும் அளவுக்கு விசேஷமானவை. இன்றும் ஏதாவது ஒரு குளத்தைக் நாம் காண நேரிட்டால் நமது நெஞ்சம் துடிதுடித்து அக்குளத்தில் நீராடத்தோணும். அதில் குளித்து மகிழ்வோரைக் கண்டு நமது உள்ளம் பூரிப்படையும் ஆனந்தமடையும்.

இக்குளங்கள் நம்மூர் மற்றும் நம்மூரைச் சுற்றி வாழக்கூடியவர்கள் நீராடி மகிழ்வதற்கு மாத்திரமல்ல, ஆடு மாடுகள், பறவைகள் நீர் அருந்தி செல்வதற்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் பயன்தரக்கூடியதாகவும், நமதூருக்கு நீர் ஆதாரத்தை வாரி வழங்கக்கூடியவையாகவும் இருந்து வருகின்றன.

கோடை காலங்களில் நமக்கு தேவையான தண்ணீர் கிடைக்காதபோது, தாகத்தால் தவித்து விடுகிறோம். குடிக்க மட்டுமல்லாமல் குளிக்க, துணி துவைக்க, பாத்திரம் கழுவ, சமையல் செய்ய என அன்றாடம் தேவைப்படும் தண்ணீரின் அளவு சற்று கூடிக்கொண்டேதான் போகும்.

நம்மூரில் சமீப காலமாக மழை இல்லாமல் கடும் வெப்பம் நிலவி வந்ததன் காரணமாக நகரில் உள்ள குளங்களும் நீரின்றி வறன்று காணப்பட்டு வருகின்றன.

எப்புடி இருந்த நீ ! ஏன் இப்புடி ஆயிட்டே ? என கேட்கும் அளவிற்கு குளங்களின் நிலைமை மோசமடைந்துவிட்டது. நம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு தருணத்தில் நீந்தி மகிழ்ந்த நமதூர் குளங்கள் இன்று நீரின்றி வற்றிப்போய் அழகு இழந்து அநாதரவாய் கிடக்கின்றன.
சேக்கனா நிஜாம்
புகைப்படங்கள் : அதிரை நியூஸ்

17 comments:

 1. Assalamu alaiikkum...
  Kulangkalai kandavudan vethanaiyaaka vullathu...
  Edharkkana kaaranam ellorum arinthe unmaiye, ovavoru vittukalilum bumiyil tannirai urijakkudya adhinavina motorkal eruppathal eppady oru sulnilai adirai mannukku.
  rombavum maanathirkku vethanaiyaaka ullathu enathu oru sottu kannir adiraiyil ulla kulangkalai niraivida mudyaathu...
  Adirai makkal, vittukku vidu eniyaavathu adhinavina ayuthangkalai vaithu tannirai urinja vendaaam

  ReplyDelete
 2. இங்கும் அப்படித்தான் உள்ளது...

  ReplyDelete
 3. வறண்டு கிடக்கும் குளங்களைப் பார்க்கையில் மனது வலிக்கிறது. இவைகளை தூர் வாரி மழைநீர் சேமிப்பிற்குப் பயன்படுத்த முடியாதா?

  ReplyDelete
 4. எனது சிறு பிராயத்தில் நீராட மட்டுமல்ல. மாலையில் மைதானத்தில் விளையாடி விட்டு கூட்டமாக நண்பர்களுடன் வந்து குளத்தின் ஓர் ஓரமாய் தெளிவாய்க் கிடக்கும் நீரை இரு கை கொண்டு அள்ளிப் பருகுவோம். அந்த சுவை ஆயிரம் ஐஸ் சர்பத் குடித்தாலும் நிகராகாது. இப்போதைய குளங்களில் நீர் நிறைந்து கிடந்தாலும் அந்த சுவை கிடைப்பதில்லை. இன்றைய காலத்தில் நவீனங்கள் தலைதூக்கி சுகாதாரம் குறைந்து அசுத்தங்கள் பெருகி அனைத்தும் மாசுபட்டுப் போய் விட்டன. காலத்தில் மழை பொழிவதில்லை.ஆகவே நிலத்தடி நீர் குறைந்து குளத்து நீர் வேகமாகவற்றி விடுகின்றன.

  என்னவாயினும் குளங்கள் அழியாமல் காப்போம். என்றும் குன்றாத இன்முகத்துடன் நீராடுவோம்.

  ReplyDelete
 5. ஓடி விளையாண்ட நமக்கு
  நீராட பல குளங்கள்
  நாம் கண்டோம்
  அன்று

  இன்று
  ஓடிவிளையாட குளங்களே
  மைதானமாக
  நாம் காண்கிறோம்

  வரண்டது குளங்கள் மட்டுமல்ல
  நம் என்னமும் கூட

  ReplyDelete
 6. இன்று குளங்கள் மீன் வளக்கவும், சாக்கடை கழிவுகள் சேகரிக்கும் வடிகாலாகவும் ஆகிவிட்டது. எந்த குளமும் இதற்கு தப்பவில்லை.

  பெரும்பாலும் ஏழை, நடுத்தர மக்களும், இன்னும் ஆதிகாலம் தொட்டே குளத்தில் குளிக்கும் பெரியவர்களும் தான் குளத்தில் குளிக்கின்றனர். அதனால் குளம் சம்பந்தமாக யாரும் அக்கறைகொள்வதில்லை. இது மிகவும் வருத்தமானது.

  பெரும் நகரங்களில் நீச்சல் குளம் கட்டி அதில்தான் நீந்திகுளிக்க ஆசைப்படுவோர் குளிக்கவேண்டும். இயற்கையாக நமக்கு கிடைத்த குளங்களை கவனிக்காமல் விடுவது வரும் சந்ததிகளுக்கு செய்யும் ஒரு துரோகமே.

  குளங்கள் குளிப்பதற்கே. மீன் வளர்க்க தனியாக குளம் வெட்டி வளர்கவேண்டியதுதான். இயற்கை வளங்களை துஸ்பிரயோகம் செய்யவேண்டாம். சம்பத்தப்பட்டவர்கள் கவனிப்பார்களா ?

  மீன் வளர்க பல நோய்கள் உண்டாகும் அசுத்தங்களை குளத்தில் கலப்பது எந்தவகையில் நியாயம் ? மனித தர்மமா ?

  அன்று அன்பர் அதிரை மெய்சா சொன்னதுபோல் குளத்தின் நீரை குடித்தது உண்மைதானே.

  ஒவ்வொரு செயலும் பதியப்படுகிறது. பதில் சொல்லியே ஆகவேண்டும் நாளை. நிர்வாக கேடு யார் செய்தாலும் தவறே.

  ReplyDelete
 7. குளங்கள் இருந்த இடங்கள் பலவும் விளையாட்டுமைதானமாகவும், கட்டிடங்களாகவும் மாறிவிட்டன. மனிதனின் வளர்ச்சி :(

  ReplyDelete
 8. குளங்களின் வறட்சி - கண்ணீர்க்
  குளங்களாய்த் திரட்சி!
  வளங்கள் இல்லா நாடா?- ஏன்
  குளங்கள் ஆனது பொட்டல் காடா?

  கருநாகமாய்க் கொத்தும்- அந்தக்
  கர்நாடகம் போடும்
  ஒருநாடகம் எப்பொழுது மாறும்?
  அப்பொழுது நம் நீர்நிலை ஏறும்!

  ReplyDelete
 9. பழங்கால நாகரீகம் ...

  நகர கட்டமைப்பு ..

  ஊருக்குள் தெருக்களுக்கு நடுவே குளங்கள் ..

  ஊருக்கு வெளியே ஏரி...ஆறுகளில் இருந்து .

  நீர் கொண்டு வர வாய்க்கால் .என்று அருமையான அமைப்புகள்

  காவிரி ஆற்றின் மூல ஆதாரம் சிதைந்த நிலையில் ..

  குளங்கள் என்ன ஏரி என்ன எல்லாம் வறண்டே காண படும்

  இன்னும் சில ஆண்டுகளில் குளமேகாணாமல் போய் விடும்

  வடிவேலின் காமெடி போல குளத்தை காணவில்லை என்று

  புகார் அளிக்க வேண்டியது தான்

  ReplyDelete
 10. வருங்காலங்களில் தண்ணீருக்காக போர் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன என சமூக ஆர்வலர்கள் பலர் கருதிய நிலையில் நீர் ஆதாரங்களை பெருக்க, அவற்றை பாதுகாக்க வழிவகை ஏற்படுத்த வேண்டும் என்பதே இந்த ஆக்கத்தின் நோக்கம்.

  வாசித்து கருத்திட்ட நண்பர்களுக்கு நன்றி !

  ReplyDelete
  Replies
  1. கடும் வறட்சியில் காய்ந்து கிடக்கும் குளங்களை எங்களுக்கும் காண்பித்து தக்க சமயத்தில் நினைவூட்டி அனைவரின் பார்வைக்கும் எடுத்து வந்த சகோதரர் சேக்கனா நிஜாம் அவர்களுக்கு பாராட்டுக்களுடன் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

   Delete
 11. குளம் இருந்த இடமே தெரியாமல் போன ஊர்களின் பட்டியலும் அதிகம். நல்ல பகிர்வு.

  ReplyDelete
 12. இற்றைப் பொழுதினில் அருகிவிட்ட நீச்சல் பயிற்|சி என்பது மிகவும் வருத்தமான விடயம்! நாங்கள் எங்களூரின் பிரதான “செடியன் குளம்” “செக்கடிக் குளம்” ஆகிய குளங்களில் நீராடியும், நீச்சலடித்தும் பழகினோம்; அதன் காரணமாக, ஜித்தாவில் இருந்த பொழுது, அயலூர் நண்பர்கட்கு அங்குள்ள நீர்த்தேக்கத்தில் நீச்சல் பயிற்சிக் கொடுத்தேன் என்பதை நினக்கும் போதில், எனக்குப் பயிற்சிக் கூடமாய் விளாங்கிய அவ்விரு குளங்களையும் அகம் நிறைவாய் நினைத்துப் பார்க்கிறேன்; அதனால், இன்று இருக்கும் நிலையில் குளங்களில் வறட்சி; எங்களின் நினைவுகளில் கண்ணீரின் திரட்சியால் கண்கள் தான் “குளமாயின:!

  குளங்களில் மூழ்கிக் குளித்தால் உடம்பில் உள்ள வெப்பம் அடங்கி உடலில் உயிரணுக்களை அழிக்கும் அவ்வெப்பம் குறையும்; அதனால் ஆண்மையும் வீரியமும் கிட்டும் என்பது சித்தர்களின் வைத்ய சாத்திரம் கூறும் பேருண்மை!

  அதனை நிருபிக்கும் வண்ணம், இற்றைப் பொழுதினில் “பாத்ரூம்” குளியலாற்றான், நவநாகரீக நகர வாழ்வினால்,
  அதிகமாக ஆண்மைக் குறைவு மற்றும் மலட்டுத்தன்மைகள் உண்டாகின்றன என்பதும் ஒர் ஆய்வு!

  ReplyDelete
 13. மறந்தான் மறந்தான்
  மனிதன் மறந்தான்
  மரத்தைத்தான்
  மறந்தான்

  என்றால்

  நீராதாரம் தான் நிலத்தின் ஆதாரம் என்பதையும் மறதானே!

  “நீரின்றி இல்லை உலகு” என்பதைப் படித்தானே; பின்னே ஏன் மறந்தானோ?

  மண், நீர், மரம் என்னும் வளங்கள் இன்றிப் போவதே மனிதன் சந்திக்கப்போகும் “மூன்றாம் உலகப்போர்” என்பதை என் குருவாம் தமிழி திருவாம் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் “மூன்றாம் உலகப் போர்” என்னும் அவர்களின் நூல் வெளியீட்டில் சுவிஸ் லிருந்து பேசிய சொற்பொழிவைக் கேளுங்கள் இந்தச் சுட்டியை சொடுக்குக:

  https://www.youtube.com/watch?feature=player_embedded&v=pfOCi6oWOLA#t=1545

  தயைகூர்ந்து முழு உரையையும் உன்னிப்பாக அவதானிக்க வேண்டுகிறேன். உங்களின் பார்வைக்காகத் தேடிப் பிடித்து ஈண்டுப் பதிவு செய்துள்ளேன்.

  இதுவே “மூன்றாம் உலகப் போர்” என்னும் அபாயம்!

  ஓசான் படலம் ஓட்டையாகி விட்டது
  லேசா மனிதன் யோசிக்காமல் உழல்கின்றான்!

  மழையின்றிப் போவதற்கு மனிதனின்
  பிழைகள்தான் காரணம்; புரியாமல்
  விழிக்கின்றோம்;அதனாற்றான் சமூக
  விழிப்புணர்வில் பதிகின்றோம் இதனை!

  ReplyDelete
 14. இப்போதைக்கு உள்ள ரியல் எஸ்டேட்காரர்களின் எதிர்ப்பார்க்குக்கு ஏற்றார்போல குளங்களும் வெறும் தரையாக மாறி எங்களையும் பிளாட் போடுங்க என்று சொல்லும் அளவுக்கு உள்ளது.

  இதே நிலை நீடித்தால் இங்கேயும் வீடுகள் கட்டியெழுப்புவதற்கு காலநேரம் ஆகாது.

  வருந்தக்கூடிய நல்ல பதிவு... அனைவரும் துஆ செய்வோம்

  ReplyDelete
 15. கிணற்றில் குளிப்பது, குளத்தில் குளிப்பது, ஏரியில் குளிப்பது போன்ற அனுபங்கள் இன்றைய தலைமுறையிடம் இல்லாமல் போய்விட்டது!

  2 வாளி தண்ணீரில் அவசர அவசரமாக “கடமை’க்கு குளித்துவிட்டு, பரபரப்புகளை நோக்கி ஓடிவிடுகிறார்கள்.

  எல்லா நிலைகளிலும் மனிதர்களுக்கு வாழ்வு தரும் நதியின் வாழ்வுரிமையை நாம் அழிக்கலாமா?

  தோழர்களே... ஆறு, ஏரி, குளங்களில் ஆக்கிரமிப்புகளை எதிர்க்கத் துணிவோம்! நீர்நிலைகளில் கழிவுகள் கலப்பதை எதிர்ப்போம்!

  மூன்றாம் உலகப்போர் நிகழ்ந்தால், அது தண்ணீருக்கான யுத்தமாகத்தான் இருக்கும் என்ற எச்சரிக்கையை அனைவருக்கும் எடுத்துரைப்போம்!

  ReplyDelete
 16. எதை விட்டுச்செல்லப்போகிறோம்..... நம் தலைமுறைகளுக்கு...

  இயற்கை வளங்கள் கண்முன்னே கொள்ளை போகின்றன...

  செய்வதறியாமல் மக்கள்...

  ஆறுகளில் இனி தண்ணீர் ஓடாது....

  ஆம் ஆங்காங்கே பள்ளத்தாக்குகள் தோன்றியுள்ளன....

  மலைகளை வெட்டி மடுவாக்கி கொள்ளையிட்டு.....

  கோடீசுவரர்கள் ஆகி விட்டார்கள்...

  மீதேன் வாயு எடுக்கிறேன் என்று காவிரி படுகையை....

  பாலைவனமாக்க திரிகிறார்கள்....

  நிலக்கரி எடுக்கிறேன் என்ற பேரில் மொத்தத்தையும் அபகரித்து....

  அரசுக்கும் மக்களுக்கும் நாமம் போட்டு விட்டார்கள்....

  ஆறுகளில் அணைகளை கட்டி தண்ணீரை தடுத்து விட்டார்கள்...

  ஏரிகளை ஆக்கிரமித்து நீராதாரத்தை குலைத்து விட்டார்கள்..

  விளை நிலங்களை வீட்டுமனைகளாக்கி விவசாயத்தை அழித்து வருகிறார்கள்....

  போதாக்குறைக்கு அணு உலை என்று சொல்லி மக்கள் வாழ்வுக்கு உலை வைக்கிறார்கள்...

  ஐயகோ... இனி வரும் தலைமுறைகளுக்கு நாம் என்ன விட்டு செல்லபோகிறோம்...

  மாசு நிறைந்த சூழலையா...

  வளமற்ற பூமியையா...

  அந்நிய நாட்டு கோதுமையையா..

  வெறும் பணத்தையும் வீட்டையும் சேர்த்து வைத்து விட்டு....

  வாழ்வாதாரத்தை அழித்து விட்டு போவதில் என்ன பயன்....

  சிந்தியுங்கள்... மக்களே...

  ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers