.

Pages

Saturday, October 12, 2013

[ 15 ] அதிரை சித்திக்கின் 'வளைகுடா வாழ்க்கை' [ காடாறு மாதம் !? நாடாறு மாதம் !? ]

காடாறு  மாதம் !? நாடாறு மாதம் !?
பழங்காலத்தில் விவசாயிகள் தனது வாழ்க்கையை பற்றி கூறும்போது காடாறு மாதம் நாடாறு மாதம் என்பர். அதாவது பணபயிர் எனப்படும் சோளம், கரும்பு போன்ற பயிர் விளைவிக்கும் போது அதனை பாதுகாக்கும் பொருட்டு மரத்தின் மேல் குடில் அமைத்து, மிருகங்கள் விளைநிலத்தை சேதப்படுத்தாமல் பாதுகாப்பர். கதிர் முற்றிய பின்னர் களவு போகாமல் பாது காத்து வருவர். நன்கு விளைந்த பின்னர் அதனை நகருக்குள் கொண்டு வந்து விற்பனை செய்வர். இதற்கு ஆறுமாத அவகாசம் தேவைப்படும் அதனையே நாடாறு மாதம் காடாறு மாதம் என்பர்.

ஆனால், நான் கூற வரும் நிகழ்வு வளைகுடாவில் வசித்த நபர் பற்றியது...
ஆறு மாத காலத்திற்கு மேல் வளைகுடாவில் வசிக்க மாட்டார். ஏதாவது ஒரு அரபியிடம் விசா பெற்று அந்த அரபியிடம் வேலை பார்க்காது வேறு இடத்தில் வேலை செய்து வருபவராக இருந்தார். ஆறுமாதம் வேலைப்பார்த்து கிடைக்கும் பணத்தில் ஊருக்கு போக வர விமான டிக்கெட் எடுப்பது நான்கு மாதம் ஊரில் இருந்து செலவு செய்ய போதுமான பணம் வைத்து கொள்வது.. இப்படியாக பத்து வருடத்தினை கழித்து விட்டார்.

மனைவி, மக்கள் செல்வ செழிப்பில்லா வாழ்விலேயே வாழ்ந்தனர். கால போக்கில் அவர்  வாழ்வில் முதுமையுடன் நோயும்  ஒன்று சேர்ந்து கொள்ள வளைகுடா பயணம் தடைபட்டு போனது. முதிய வயதை கழிக்க எந்த வித வசதியும் இல்லாமல் பஞ்ச பராரியாய் கடைவீதியிலும், டீக்கடை வாசலிலும் வருவோர், போவோரிடம் யாசகம் கேட்கும் நிலைக்கு தள்ளபட்டார். மனைவி கசந்த வாழ்க்கைக்கு தள்ளப்பட்டார். பிள்ளைகளும் பாராமுகமாக இருந்திடவே !

இவாரா !?  அவர் !? என்று வியக்கும் நிலைக்கு ஆளானார் !

மனம் போன போக்கில் போகாமல் மனதை கட்டுப்படுத்தி, உழைத்து வந்த நோக்கினை நிறைவு செய்ய வேண்டும் என்ற நல் நோக்கில் இந்த பதிவை வெளியிடுகிறேன்.

மனைவி மக்கள் உங்களின் உழைப்பை நம்பி வாழும் காலங்களில் நீங்கள் நன்கு உழைத்து குடும்பத்தினை காப்பாற்றினால் நீங்கள் முதுமையில் நன்கு கவனிக்க படுவீர்கள் என்பது திண்ணம்.
[ வளைகுடாப்பயணம் தொடரும்... ]
'பத்திரிக்கைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்

18 comments:

  1. விதைத்ததை அறுவடை செய்வார்.

    பொறுப்பற்ற குணத்தை விதைத்தார், வளர்த்தார்.
    பொறுப்பற்ற குணங்களை அறுவடை செய்தார்.

    ReplyDelete
    Replies
    1. குடும்ப தலைவன் ...
      தியாக உணர்வு கொண்டவனாக இருத்தல்
      மிக அவசியம் ..சுய நலமாய் செயல் பட்டால் ..
      முடிவு நலமாக இராது

      Delete
  2. // காடாறு மாதம் !? நாடாறு மாதம் !? //

    விளக்கிய விதம் அருமை !

    // மனைவி மக்கள் உங்களின் உழைப்பை நம்பி வாழும் காலங்களில் நீங்கள் நன்கு உழைத்து குடும்பத்தினை காப்பாற்றினால் நீங்கள் முதுமையில் நன்கு கவனிக்க படுவீர்கள் என்பது திண்ணம். //

    சரியாகச்சொன்னீர்கள்

    ReplyDelete
    Replies
    1. குடும்ப தலைவனின் உழைப்பை ...தியாகத்தை ..
      பிள்ளைகளிடம் எடுத்துரைப்பது தாயின் கடமை

      Delete
  3. வணக்கம்
    மனைவி மக்கள் உங்களின் உழைப்பை நம்பி வாழும் காலங்களில் நீங்கள் நன்கு உழைத்து குடும்பத்தினை காப்பாற்றினால் நீங்கள் முதுமையில் நன்கு கவனிக்க படுவீர்கள் என்பது திண்ணம்

    உண்மைதான் பதிவு அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. அன்பு சகோ ரூபன் ...
      தங்கள் வருகைக்கு நன்றி ...

      Delete
  4. நீங்கள் கூறிய அனைத்து உண்மை

    ReplyDelete
    Replies
    1. அன்பு சகோ சுடலை முத்து ..
      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

      Delete
  5. பயனுள்ள தகவல் வேகுதூர பயணம் மேற்கொண்டு சம்பாதிக்க சென்றவர்கள் சம்பாத்தியத்திலேயே குறியாய் இருக்கவேண்டும் இல்லையேல் இக் கட்டுரையில் உள்ளதுபோல் ஆகிவிடும்

    ReplyDelete
    Replies
    1. வளைகுடா பயணத்தில் இது முக்கிய குறிக்கோளாய்
      கொண்டு செயல் பாடல் அவசியம் நண்பா

      Delete
  6. உண்ணமையை உரைக்க சொன்னீர்கள் அருமையான விளக்கம்.
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி தம்பி ஹபீப் அவர்களே

      Delete
  7. சிந்திக்க வைப்பதோடு மட்டுமல்லாது நல்ல படிப்பினையூட்டும் பதிவு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி அதிரை மெய்சா அவர்களே

      Delete
  8. vaLaigudaa vaazhkkai pagirndhamaikku mikka nandRi. naam solvadhai solli vaippOm. nootRil paththu pEraavadhu sindhiththu viLangi thiruththikkoLvar.
    anwar basha.

    ReplyDelete
    Replies
    1. சகோ ..அன்வர் பாட்சா அவர்களே ...!
      தங்கள் வருகைக்கு நன்றி ...!
      நாம் சொவதை சொல்வோம் ..நூறில் பத்து பேராவது
      திருந்துவார்கள் ///
      மிக சரியாக சொன்னீர்கள் அன்வர் பாட்சா அவர்களே .

      Delete
  9. எங்கள் வாழ்வும் அப்படித்தானே! இந்த இனிய பெருநாளில் கூட தனிமையில் இருக்கின்றோம்.

    முன்பு ஜித்தாவில் பணியாற்றிய சமயம், எங்களின் ஒப்பந்தம் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் விடுப்பில் தாயகம் செல்ல முடியும் என்றிருந்ததை, அடியேனின் ஒரு மனுவால் எங்களின் மேலாண்மை இயக்குநரிடம் வாதாடி இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை விடுப்பில் தாயகம் செல்ல வேண்டும் என்று திருத்தம் ஏற்படுத்தினேன்; அல்ஹம்துலில்லாஹ்.

    ReplyDelete
  10. தங்களின் ..உழைப்பும் ..தியாக சிந்தையும் என்றும்
    தங்கள் குடும்பத்தை வளம்பெற செய்யும் ..கவியன்பரே

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers