.

Pages

Friday, October 11, 2013

[ 4 ] அறிவுத்தேன்

இந்து; இஸ்லாம் என்றும், கிருத்துவம்; சீக்கியம் என்றும் பௌத்தம்; ஜைனம் என்றும் இறைவன் பலப்பிரிவுகளை ஏற்படுத்தவில்லை. இவைகள் மனிதன் இறைவனை அறிந்து அடைவதற்கு உண்டான அந்தந்த காலத்து வழிகள். கால இடைவெளியில்  அந்தந்த காலத்தில் வெவ்வேறு இடங்களில் உண்டாகி தனித்ததுபோல் அறியாமையினால் நிற்கின்றது.  அடுத்த காலத்தில் தோன்றிய வழியோடு இணங்கி இருந்திருந்தால் இன்று ஒரே வழியாகத்தான் இருந்திருக்கும்.

எல்லா வழிகளிலும் அனுஷ்டான முறைகள் வெவ்வேறாக இருப்பினும் நோக்கம் ஒன்றே. அவனை  அறிந்து  அடையவேண்டும் என்பதுதான். அதனால் ஏதாவது ஒன்றை எடுத்து விளக்கம் தந்தால் அனுஷ்டானங்களை அறிந்து அதனை செய்து அவனை அடைதல் இலகுவாகும். இஸ்லாமியத்தை அறிந்ததால் அதனைக்கொண்டு விளக்கம் தந்தால் குறுகிய கண்ணோட்டத்துடன் பார்க்கமாட்டார்கள் என்ற நம்பிக்கையில் இக்கட்டுரை தொடராக வருகிறது. உண்மை சாராம்சத்தை புரிந்து கொள்ளவேண்டும் என்ற நோக்கில் எழுதப்பட்டதால் தகுதியான கருத்துக்களும் ஏற்றுக்கொள்ளப்படும்.

- நபிதாஸ் 

வணக்கத்தின் தாத்பரியம் :
இதன் தாத்பரியத்தை உணர்ந்தால் வணக்க நிலைகள் எப்படி இருக்கவேண்டும் என்ற உண்மைகள் தெரியலாம். செய்கின்ற வணக்க எண்ணச்செயலைத் தவிர வேறு எண்ணங்கள், செயல்கள் குறிக்கீடு இல்லாது வணங்கவேண்டும் என்ற உண்மை மறை பொருளாக விளங்கலாம்.

வணக்கத்தில், வணக்கம் சம்பந்தப்பட்ட அனுஷ்டானங்களை தவிர வேறு சப்தம், அசைவுகள் தன் அல்லது பிறர் கவனத்தை இறை ஓர்மை எண்ணத்திலிருந்து விலக்கும் வேறு எந்த சிந்தனையையும் தூண்டுமாறு இருக்கக்கூடாது என்புதும் புரியலாம். (ஆனால் இன்று பெரும்பான்மை அவ்வாறு இல்லை !)

வணக்கத்தில் ஓர்மை நிலையில் செய்யும் செயல்கள் இரண்டற்ற ஓர் உள்ளமை இருப்பு அறிந்த/உணர்ந்த நிலையில் ஒன்றின் செயலாய் இருக்க வேண்டும். எவ்வாறெனில்,

பரத்தின் செயலில்
பலவது இருந்தும்
ஒன்றின் செயலாய்
அறிதல் ஞானம் !

பூமி பேச வேண்டும் என்றால் எப்படி பேசும். நீங்களோ அல்லது நானோ பேசினால் அது பூமி பேசியதாகத்தானே அர்த்தம். பூமியில் உள்ள அனைத்தினது செயல்கலெல்லாம் பூமியின் செயல்களே. அதுபோல் பரம் என்ற பிரபஞ்சம் அதில் பல செயல்கள் இருந்தாலும் அது பிரபஞ்ச ஒன்றின் ஒரு செயலே ஆகும். அவ்வாறு ஒன்றினது செயல் என்று அறிவது ஞானம். வணக்கத்தில் அவ்வாறு வேறுகள் அற்ற ஒன்றினது செயலாக இருத்தல் வேண்டும். இதுவே வணக்கத்தில் ஓர்மை நிலையில் செய்யும் செயல்கள். இரண்டற்ற ஓர் உள்ளமை இருப்பு அறிந்த/உணர்ந்த நிலையில் செய்யும் செயல்கள் ஒன்றினது செயல் ஆகும்.

தானியங்கி அரிசிமாவு அரவை இயந்திரம். அதில் மின்சாரம் செல்ல, மோட்டார் சுற்ற, பெல்ட் அசைய, அரவை சுற்ற, அரிசி அதில் விழ, மாவாகி தானே வரும். பல செயல்களின் தொடர் இணைப்பால் ஒரு செயல். ஒவ்வொன்றையும் தனியாகப் பார்த்தால் பல செயல்கள். இவையனைத்தும் ஒரு செயலே. ஓர் அரவை இயந்திரத்தின் ஒரே செயலே.

நடக்க நினைக்க
காலது நடக்கும்
காண பார்க்கும் -இது
அரூப வணக்கம் !

அரூபம் எண்ணம்
உருவம் தன்னில்
நிகழும் செயலாய்
அதுதான் வணக்கம் !

முன்பு எழுதப்பட்டதிலும் இதற்கான விளக்கமுண்டு. இருப்பினும் இவ்விளக்கத்தையும் காண்போம்.

நடக்க நினைக்க காலது நடக்கும். காண கண் பார்க்கும் இது அரூப வணக்கம். எப்படியெனில், நினைப்புகள் எல்லாம் அரூபம். இந்த அரூப எண்ணத்திற்கேற்ப அவ்வெண்ணம் தோன்றிய உருவில் அவ்வுருவத்தின்  உருவகால், கண் இயங்குகிறது. மேலும்  இவைகள் மனிதனுடையது அன்றி வேறில்லை. ஒர் உள்ளமைதான். இரண்டுள்ளமையில்லை. அரூபம் எண்ணம்தனை அப்படியே சம்பந்தப்பட்ட உருவம் அவ்வெண்ணங்களை செயல்களாக நிகழ்த்துகின்றது. அது வணக்கம். அதைத்தான் வணக்கம் என்று சொல்லமுடியும். இரண்டற்ற ஒர்மைநிலையில் தான் பூரண செயல்பாடுகள் நிகழும். இதுபோல் (அரூப) வணக்கம் இருக்கவேண்டும்.

வணங்கும் ஒருவன்
வணங்க 'அவனில்'
இணங்கி இழந்து
இல்லா திருப்பான் !

இல்லாது இருப்பான் என்றால் என்ன ?
தொடரும்...
நபிதாஸ்

7 comments:

  1. அல்லாஹு ஒருவனே.

    அருமையான ஆக்கம் வாழ்த்துக்கள்.

    சிந்தித்து செயல்படுவீர் வணக்கத்தை.

    ReplyDelete
  2. நல்லது ஹபீப் அவர்களே !

    இறைவன் ஒருவனே என்பதை ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் ஒருவனுக்கு செய்யும் வணக்கத்தில் அகந்தை இல்லாமல், தூய்மை இவைகள் இருக்கவேண்டும். வணக்கம் என்று செய்துகொண்டு பல சிந்தனைகள். அவைகள் இறைவனுக்குட்பட்ட எண்ணத்தில் இருந்து அகன்றவைகள். இவ்வாறான வணக்கத்தில் வணங்குபவருக்கு நன்மை எப்படி கிடைக்கும்? தனது சுய எண்ணங்கள் துளிகூட இல்லாமல் இறை எண்ணமே இருக்கவேண்டும்.
    இவைகள் கவனத்தில் கொண்டு வணக்கம் இருக்கவேண்டுமே. எனவே அன்றாடம் அனைவரும் செய்யும் வணக்கத்தில் தெளிவு வேண்டும் அல்லவா ? அந்த சிந்தனையை தூண்ட இத்தொடர் அமையவேண்டும் என்பது என் அவா.

    பொதுவாக எழுதியவைகளை புரிய வேண்டும் எனில் இது போன்ற கேள்வி உள்ள கருத்துக்களே நல்லது. இதனை நான் வரவேற்கின்றேன். புரியாமல் ஆக்க புகழ்ச்சிகள் ஒரு ஏமாற்றமே.

    ReplyDelete
  3. எத்தனை ஆயிரம் உட்பிரிவினை இருந்தாலும் வணக்கத்திற்குரியவன் இறைவனைத் தவிர வேறு யாருமில்லை.அவன் தனித்தவன்.இணைதுணை அற்றவன். உருவமற்றவன்.கண்களுக்கு புலப்படாதவன். இதை முழுமையாக நம்புவதே ஈமானின் உறுதிப்பாடாகும்.

    ReplyDelete
  4. //வணக்கத்திற்குரியவன் இறைவனைத் தவிர வேறு யாருமில்லை//

    இக்கருத்துக்கு உலகில் யாரும் மறுப்பு சொன்னதே இல்லை. அனைவரும் ஏற்றுக்கொண்ட கருத்துதான். நாத்திகன் கூட இறைவனை காட்டினால் (புரிய வைத்தால்) வணங்க சம்மதம்.

    இங்கு அதனை வழியுறுத்தி கட்டுரை செல்லவில்லை. மாறாக, வணக்கத்தின் தாத்பரியம் என்பதனை விவரித்து கட்டுரை செல்கிறது. அன்பரே.

    இறைவனுக்கு உருவம், உருவமில்லாதவன் என்பனவைகளும் இவ்விடத்தில் அலசவில்லை. வணக்கத்தின் தாத்பரியம் அதனையே தான் அலசப்பட்டுள்ளது.

    இறைவனுக்கு உருவம் இல்லை என்பதை இந்து ஞானமும் கூறத்தான் செய்கிறது. அது சம்பந்தமாக இங்கு எழுதவில்லை.

    தங்களின் உறுதிப்பாடு இஸ்லாமியர் அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கொடியதுதான்.

    ReplyDelete
  5. என்னிடம் கேள்விகள் எழுதியதிலிருந்து கேட்கப்படுவதை வரவேற்கின்றேன். நல்ல கேள்விகள் அறிவில் பாதி என்பது பேரறிஞரின் அமுத மொழி அன்றோ. அனைவரும் தெளிவைநோக்கியே.

    ReplyDelete
  6. ஓர்மையின் அவசியம் ஓங்கி ஒலிக்கட்டும்!

    ReplyDelete
  7. இறைவனின் ஒரு பண்பு தேவையற்ற நிலை. தேவையற்றவன் என்பதை புரிய தேவையற்றனே விரும்பும் ஒன்றுதான் ஓர்மை. ஓர்மையில் ஒருவன் தேவையற்றவன் ஆகிரான். அப்படியாகில் தேவையற்றவனுக்கு தேவையா என்பன போன்ற கேள்விகள் எழலாம். என்று ஒருவன் ஓர்மையின் விளக்கத்தை புரிவானாகில் அன்று அவனிடம் தேவையற்றவனுக்கு இது ஒரு தேவையா என்பன போன்ற தேவையாகத் தோன்றும் கேள்விகளும் எழாது. அது வணகத்தில் உள்ளது.

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers