.

Pages

Tuesday, October 15, 2013

எப்பவுமே அலார்ட்டா இருக்கோணும் ஆமாம் !?

வாக்கு ஒப்புகைச் சீட்டு: 
தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு வாக்காளர்கள், தாம் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் பொருட்டு அவர்களுக்கு ஒப்புகைச் சீட்டு வழங்கும் வசதியை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பொருத்த நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வசதியை வரும் தேர்தலின்போதே அறிமுகப்படுத்துமாறும் உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.  

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்காளர்கள் தங்களது வாக்குகளைப் பதிவு செய்யும்போது அவர்கள் எந்தக் கட்சியின் வேட்பாளருக்கு வாக்களித்தார்கள் என்பதை உறுதிப்படுத்த ரசீது வழங்கும் நடைமுறையை கொண்டுவர வேண்டும் என சுப்பிரமணியன் சுவாமி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த மனு, தலைமை நீதிபதி பி.சதாசிவம் மற்றும் நீதிபதி ரஞ்சன் கோகாய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது,மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்த நீதிபதிகள், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வாக்கு ஒப்புகைச் சீட்டு வழங்கும் வசதியைப் பொருத்துவதற்காக உரிய நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

இந்த ஒப்புகைச் சீட்டில் வாக்குச் சாவடியின் பெயர், வேட்பாளரின் பெயர், அவர் சார்ந்துள்ள கட்சியின் பெயர், சின்னம் போன்றவை இடம்பெற்றிருக்கும். இதன் மூலம் ஒரு வாக்காளர் தன்னுடைய வாக்கு தான் விரும்பிய கட்சி, வேட்பாளருக்குத்தான் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதனால் ஏற்படும் நடவடிக்கைகளை [ செயல்பாடுகள் ] சுவாரஸ்யமாக அலசுவோம்...

சம்பவம் 1:
இதனால் நம் பஞ்சாயத்தார்களுக்கு அறிவிப்பது என்னவென்றால் சென்ற தேர்தலில் நம் பஞ்சாயத்து வாக்குகள் ஏலம் விடப்பட்டது போல் இந்த முறையும் வேட்பாளர்கள் ஏலம் கேட்கலாம் எங்கள் பஞ்சாயத்துக்கு கட்டுப்பட்டு 500 வாக்குகள் இருக்கு பாத்து கேளுங்க ஏலத்த!

அங்கு வந்த வேட்பாளரில் ஒருவர் போனமுறை நாந்தே ஏலம் எடுத்தேன் 500 ஓட்டுன்னு சொல்லித்தே ஏலம் கேக்கவச்சிய விழுந்த ஓட்டுல 5 செல்லாத ஒட்டு 17 ஒட்டு மாத்தி போட்டுட்டானுவ அதுனால இது சரிபட்டு வராது இப்ப புதுசா சட்டம் வந்திருக்குள்ள ஓட்டு போட்ட ஒடனே சீட்டு வருமாமே அந்த சீட்ட கொண்டு வந்து கொடுத்துட்டு பணத்த வாங்கிகோங்க என்ன சரிதானே ?

சம்பவம் 2:
வேட்பாளர்: "இந்தாமா போன தேர்தல்ல ஒங்கிட்ட பணத்த கொடுத்துட்டு சத்தியம் வங்குனதேலாம் வானா  நீ ஓட்ட மாத்தி போட்டே சாமி குத்தமாயிடும் அதுனால ஓட்டு போட்ட சீட்ட கொண்டா கையிலே காசு வாயில தோச இன்னாங்ர"

சம்பவம் 3:
இந்த பாருங்கப்பா நம்மகிட்ட காசு வாங்குனவன் பேரு அட்ரசு எல்லாத்தையும் குறிச்சுக்கோ செல்லுல போட்டோவும் எடுத்துக்க  ஒட்டு போட்டுட்டு வெளியில வருவானுள்ள கையில இருக்குற சீட்ட வாங்கி பாரு மாத்தி போட்டானுன்னு வச்சுக்கோ அங்கேயே போட்டு தள்ளிடு.

நல்லது செய்யப்போயி இப்படியும் சம்பவங்கள் நடக்க நிறைய சான்ஸ் இருக்கு

"எப்பவுமே அலார்ட்டா இருக்கோணும் ஆமாம்"  :)

மு.செ.மு.சபீர் அஹமது

8 comments:

  1. அலசிய விதம் அருமை !

    அதிரையின் ஹாட்டான எழுத்தாளராக வலம் வந்து கொண்டிருக்கும் சபீர் காக்காவுக்கு வாழ்த்துக்கள்...

    பட்டையை கிளப்புங்க :)

    ReplyDelete
  2. வணக்கம்
    தமிழக மக்களுக்கான விழிப்புணர்வுப் பதிவாக அமைந்துள்ளது கருத்துக்கள் நன்று வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. அப்படீன்னா... யாருக்கு ஒட்டு போட்டாலும்
    பணம் கிடைக்குங்கிற மனப்பான்மைதான் வளரும்
    என்கிறீங்க !

    ஒட்டு போட்டால் பணம் என்கிற மனப்பான்மை வளர்ந்தால்... நாடு பின்னோக்கிச் செல்லும்.
    சுரண்டல் முன்னோக்கி செல்லும்.
    வளர்ச்சி திட்டங்கள் முறிந்துவிடும்.
    குறுக்கு வழியே சம்பாத்தியத்திற்கு முக்கியமாகிவிடும்.
    பலகோடி அதிபர்கள் உடன் உண்டாகிவிடுவார்கள்.

    ReplyDelete
  4. வடிவேலு ..காமெடி ஞாபகத்திற்கு வருகிறது ....
    ஒவ்வொருவரின் வாக்கும் மறைத்தால் மட்டுமே ...
    நியாயமான தேர்வு நிகழும் ..சரியான தகவலை ..
    மக்கள் முன் விவாதத்திற்கு முன் வைத்தது நல்ல
    எழுத்தாளுமை ..வாழ்த்துக்கள் ...உச்ச நீதிமன்ற தீர்ப்பு
    மெச்சும்படி இல்லை ...

    ReplyDelete
  5. ஆம். உண்மையில் இக்கட்டுரையில் கையாளாப்பட்ட நகைச்சுவைகளாக இருந்தாலும், எதிர்காலத்தில் இவைகள் அரங்கேறும். அரசியல் எழுத்தாளராகவும் பத்திரிகைகளில் நல்லதொரு விமர்சகராகவும் வரும் வாய்ப்புகள் உங்களுக்குப் பல உள.

    ReplyDelete
  6. நல்லதொரு விழிப்புணர்வு பதிவு. நம் நாட்டில் ஏழையானாலும் செல்வந்தரானாலும் பணம் கொடுத்தால் எப்படியும் ஓட்டை பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கை எல்லா அரசியல்வாதிகள் மனதிலும் வேரூன்றி விட்டது. ஆகவே மக்கள் தான் உணர்ந்து நடந்து கொள்ளவண்டும்.

    ReplyDelete
  7. விழிப்புணர்வு பதிவு.
    ஓட்டை போட்ட்டு பொய் சொல்ல இயலாது இது அரசியல்வாதிகளுக்கு லாபம் ஏன்னா பணம் வீண் போகது யாரு நமக்கு ஒட்டு போட்டான் அவனுக்கு மட்டும் பணம் குடுப்பா. ஆனால் மக்கள் பாவம் ஓவ்வரு கட்சி காரர்களிடம் நான் உங்களுக்குதான் ஒட்டு போடுவேன் என்று சொல்லி பணம் வாங்குவான் ஆனால் இப்படி ஒரு நிலைமை வந்தால் எப்படி.

    ReplyDelete
    Replies
    1. தீர்பளித்த நீதி மான்களிடம் இக்கட்டுரையை படிக்க கொடுத்தால்? தப்புப்பண்ணிட்டமோ!ன்னு யோசனை பண்ண ஆரம்பிச்சிடுவாங்கோ!!! ஹ ஹா ஹ

      Delete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers