.

Pages

Tuesday, October 8, 2013

தண்ணீர் !!! தண்ணீர் !!!!

நீ அதிசயம் மட்டுமல்ல ...
ஆச்சரியமான ஆசான் ....
                                                                                                 
உன் நேர்மையான பாதை வழி எங்கும் இன்பமே ....
உன் பாகுபாடில்லாத அனுகுமுறை யால்
நீ போகும், நிற்கும் ,நடக்கும்,ஓடும் இடமெல்லாம் சுகமே ....

நீ பார்க்காத பள்ளம் எங்குமில்லை
அதனால் நீ தளர்வதுமில்லை
பள்ளத்தை நிறைத்து பொங்கி எழும்
உன் வேகம் உணர்த்தும் உத்வேகம், பாய்ச்சிடுமே புத்துணர்ச்சி ....

சுத்தத் தங்கமாக வலம் வந்து
மற்றவர்களின் மாசுக்களை சுமந்து செல்லும்
நீ உண்மையில் ஒரு சீர்திருத்தவாதி .....
அழுத்தமாக நீ செய்யும் தியாகம் ....நன்மையின் உச்சம் ..

நீ பயணித்த பாதையில்தான்
உயிரினம் வாழுமிடம் அமைத்தது ...
உன் வருகையால் அடைந்த தைரியம்...அளவிடற்கரியது ...

உன் சலசலப்பில் நாங்கள்
உன்னை பருகினோம் ,
உன்னில் நீந்தினோம் ,
உன்னில் பயணித்தோம் ,
உன் வரவால் பயிரிட்டோம் ...
உன்னால் நாங்கள் அடையும் சுகம் ...விவரிக்கமுடியதது ...

உன் பருவ காலங்களில் நீ
வரும் வழியெல்லாம் உன்னுடன் நீ
அழைத்து வரும் துள்ளல் தரும் இதம்.... எப்படிச் சொல்வேன் ?...

நீ பாய்ந்த பிரதேசங்களில் எல்லாம்
தரை நிலமாக இருந்தவை எல்லாம்
பூஞ்சோலை யாய் மாறியது ....
உயிரினம் சுவாசிக்க ....புசிக்க .....
மட்டுமல்ல ..ரசிக்க வும் !!!!

ஆனால்..........?

நீ பயணித்த வழியில் வாழுமிடம்
அமைத்த உயிரினம் .....

உன் வழியை ,
உன் பாதையை ,
சில மாதங்கள் நீ தங்குமிடத்தை எல்லாவற்றையும்
உயிரினங்கள் அடைத்து கூடு கட்டிகொண்டன .....

உன் வரவை அவர்களே (உயிரினங்கள் ) தடுத்து கொண்டார்கள் ..
இழப்பு ....யாருக்கு ?...
நீரின்றி அமையாது உலகம் .......

சிந்திப்போமா?.....நாளை விடியலுக்கு .....

harmys அப்துல் ரஹ்மான்

குறிப்பு : இந்த படைப்பு 'அதிரை நிருபர் பதிப்பகம்என்ற இணையதளத்தில் வெளிவந்து அனைவரின் வரவேற்பையும், பாராட்டுதலையும் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

14 comments:

 1. தண்ணீருக்காக, எங்கோயோ ஒரு சகோதரன் வறண்ட தொண்டையோடு, உலர்ந்த நாக்கோடு காத்திருக்கிறான் என்ற சிந்தனை நம்மிடம் வரட்டும்.

  இன்று நாம் நமது பங்களிப்பாக தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்தி அவற்றை சேமித்து நாளை நமது சந்ததியினர் பயன்பெறும் வகையில் வழிவகுத்துக் கொடுப்போம்.

  சிறந்த படைப்பு !

  தொடர வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. தண்ணீரை கண்ணீர்மல்க நினைக்க வைத்த வரிகள். சொல்லப்பட்டிருக்கும் அத்தனை வரிகளும் உண்மையின் ரண வடுக்கள். அருமை அருமை வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. சிந்தித்து உணர வேண்டிய வரிகள்... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 4. தண்ணீரின் முக்கியத்துவம் உங்கள் கவிவரிகளில் தெரிகின்றது.தண்ணீரை சேம்மிபீர்.தண்ணீர் தட்டுபாடு வந்தால் தான் அதனுடைய அருமை புரியும்.

  ReplyDelete
 5. உயர்வான இடம்
  நோக்கி செல்லும்
  மனிதர் எங்கே?

  தாழ்வையே
  நோக்கி செல்லும்
  தண்ணீர் எங்கே!

  தண்ணீர் செல்லும்
  இடமெலாம்
  செழிப்பு

  மனிதன்
  கால் பட்ட
  இடமெல்லாம்
  செடிகளின்
  இறப்பு

  தண்ணீர்
  இல்லாவிடில்
  கண்ணீர்

  இரண்டாம் அப்துல் ரஹ்மான் கிடைத்து விட்டார் நமக்கு [கவிக்கோ]

  ReplyDelete
  Replies
  1. உங்கள் பார்வை:

   மனிதன்
   கால் பட்ட
   இடமெல்லாம்
   செடிகளின்
   இறப்பு !

   என் பார்வை:

   மனிதன்
   கால் பட்ட
   இடமெல்லாம்
   செழிப்பு !

   இன்று
   செழிப்புத் தானே !

   Delete
  2. தண்ணீரோடு மானுடனை ஒப்பிடுகையில் நீர்தான் சிறப்பு செழிப்பு "தாயை பழித்தாலும் தண்ணீரை பழிக்காதே" எனும் வழக்கு மொழி நம்மில் உண்டு

   Delete
  3. மனிதன் தான் வாழ காட்டை அழித்தான் சுற்றுச்சுழலை சீர்கெடுத்தான் நீரை மாசு படுத்தினான் பின்வரும் சந்ததியினருக்கு மாசுபட்ட காற்று, நீர்,சூழ்நிலைகளை உருவாக்கினான் சுய செழிப்பு உண்டு பன்னிக்கொண்டான் என்பது உண்மைதான்

   Delete
  4. தங்களது அறிவுகளை மதிக்கின்றேன்.
   இறைவன் மனிதனுக்காக அனைத்தையும் படைத்தேன், என்று கூறுவதையும் நினைவு செய்ய விரும்புகிறேன்.
   மனிதனின் அறிவியல் வளர்ச்சியில் மாசுகள் உண்டானது உண்மைதான். இருப்பினும் மாசு அதனை நீக்கவே மனிதன் விரும்புகிறான், முயல்கிறான். மனிதன் வேண்டுமென்றே மாசுகளை செய்ய விரும்பவில்லை என்பதை தாங்கள் அறிவீர்கள்.
   நீர் உயர்வானதுதான். நீரின்றி மனிதன் இல்லை. எனவே நீரும் சேர்ந்தே மனிதன் தானே !

   Delete
 6. தண்ணீரின் தன்மை தனை
  தரமான கவி வரியால்
  தகுதியான அதன் குணங்களை
  தவழவிட்ட விதம் அருமை.

  நீரின்றேல் நீர் இல்லை- அது
  கூறும் கருத்து படம்- எனில்
  தேறும் கருத்துக்கள் இதோ.

  தாகம் தண்ணீரைத் தேடி
  பாவம் கண்ணீரும் வற்றி
  காகம் கற்களையும் தூக்கி
  தேகம் மாண்டதுதான் பாக்கி.

  ReplyDelete
 7. சுத்தத் தங்கமாக வலம் வந்து
  மற்றவர்களின் மாசுக்களை சுமந்து செல்லும்
  நீ உண்மையில் ஒரு சீர்திருத்தவாதி .....
  அழுத்தமாக நீ செய்யும் தியாகம் ....நன்மையின் உச்சம் ..///
  மிக ..அருமையான பார்வை ..
  அழுத்தமான கருத்து

  ReplyDelete
 8. நானும் மனிதன் தானே என்கிறீரா?
  நீரும் சேர்ந்தே மனிதன் என்கிறீரா?
  நீரும் இறைவன் படைப்புதான்!
  நா[னு][மு]ம் இறைவன் படைப்புதான்!

  ReplyDelete
 9. உன் சலசலப்பில் நாங்கள்
  உன்னை பருகினோம் ,
  உன்னில் நீந்தினோம் ,
  உன்னில் பயணித்தோம் ,
  உன் வரவால் பயிரிட்டோம் ...
  உன்னால் நாங்கள் அடையும் சுகம் ...விவரிக்கமுடியதது ...

  விவரிக்க முடியா பல செய்திகளை விளக்கியும் சிந்திக்கவும் வைத்த வரிகள் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 10. Thanks to all who read and comments

  ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers