கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் !
1980 களில் பெற்றோர்களுக்கு பிள்ளைகளின் படிப்பு மீது அவ்வளவு அக்கறை இருந்ததில்லை. உயர்நிலை பள்ளியில் தேர்ச்சி அடைந்தால் மகிழ்ச்சியில் தொடர்ந்து படிக்க வைப்பார்கள். தேர்ச்சி அடையாவிட்டால் சிறிதுகாலம் வெட்டியாய் சுற்றிதிரியும் மகனை எங்காவது வேலை செய் என்பார்கள்.
இவர்கள் சரியான வழிகாட்டுதல் இல்லாமல் தவிக்கும் நிலையால் திக்கு தெரியா காட்டில் விட்டதை போல இருக்கும் அந்த இளைஞன் ஏதாவது எடுபிடி வேலை செய்யும் நிலைக்கு தள்ளபடுவான். அவனின் எதிர் காலம் சூனியமாய் போய் விடும்.
இன்றைய காலம் கல்வியின் அருமை, கற்றவரின் சிறப்பு நன்றாய் அறிந்த காலம் மூன்று வயது பிள்ளையை பள்ளிக்கு போ என்று துரத்தும் நிலை. எனவே பெற்றோரின் கவனம் கல்விச்சாலைக்கு அனுப்புவதிலேயே கவனமாக இருக்கின்றனர். தேர்வில் தோற்றாலும் மீண்டும் முயற்சிக்க செய்கின்றனர்.
இவற்றுக்கு அப்பால், முற்றிலும் தேறாத பிள்ளைகள் பலரும் உள்ளனர். அவர்களுக்கு வேறு வழியை காண்பிக்க, விழிப்புணர்வு பெற்றோர்களிடம்
உள்ளதா ? என்பது கேள்வி குறியே !?
வளைகுடாவில் நடந்த நிகழ்வை இங்கு பதிய விரும்புகிறேன்...
ஓரளவு வசதியான வீட்டு பிள்ளை. உயர் நிலை பள்ளிக்கூடம் கூட செல்ல வில்லை. ஊரில் மரியாதையாக நடமாடிய அவருக்கு கல்யாணம் ஆனது. குடும்பத்தை கவனிக்கும் பொறுப்பு வந்தது. ஊரில் சரியான தொழில் இல்லை. வளைகுடா சென்றால் பணம் சம்பாதிக்கலாம் என்ற ஆலோசனை பலமுனைகளில் இருந்தும் வரவே.
உடனே வளைகுடா பயமானார். அங்கு சென்று வேலை தேடினார். சென்ற இடங்களில் உனக்கு என்ன வேலை தெரியும் ? என்ற வினாவே மேலோங்கி நின்றது. எனக்கு ஒன்றும் தெரியாதே என்றார். உற்றார் உறவினர் பலர் இருந்தும் அவருக்கு சரியாக உதவிட முடியவில்லை. காரணம் ஊரில் மரியாதையாக வளம் வந்தவர் அவரிடம் துப்பரவு தொழிலாளியாக வேலை செய்ய தயாரா ? என்று கேட்க துணிவில்லை. சூசகமாக சொல்லி விட்டார்கள்
எப்படியும் சாதிக்க வேண்டும் வைராக்கியம். எந்த வேலையும் செய்ய தயார் என்றார் அவர்.
கூடுதலான வேலை குறைவான சம்பளம் :
கடைநிலை ஊழியர் என்பதால் யாருடைய கவனமும் அவர் மீது திரும்பவில்லை. யார் முதலாளி என்றே தெரியாத நிலை. வெறுத்தே போனார் என்னதான் கடினமாக உழைத்தாலும் எந்த பலனும் இல்லை.
ஒரு முடிவுக்கு வந்தார். நமது கை திறமையை காட்ட நாம் தொழிலை கற்போம் என்று முடிவெடுத்தார் ..தனது குடியிருப்பிற்கு அருகில் உள்ள
கார் பழுது பார்க்கும் கடைக்கு சென்று உதவியாளராய் தம்மை
சேர்த்து கொள்ளும்படி வேண்டினார். கடைக்காரரோ, தம்மிடம் ஏற்கனவே உதவியாளர் உள்ளார் என கூறினார்.
தினமும் மூன்று மணி நேரம் இலவசமாக சேவை செய்கிறேன் என்றார் நம்மவர். கடைக்காரர் விநோதமாக பார்த்தார். எதோ இறக்க குணம் கொண்டவராக சரி என சம்மதித்தார். காலம் கடந்தது மூன்று வருடத்திற்கு பிறகு நம்மவர் ஒரு சிறந்த மெக்கானிக்காக உருவானார். நல்ல கம்பெனியில் நல்ல சம்பளத்தில் வேலை பார்த்து வருகிறார். தினமும் முதலாளியின் ஆலோசனை. வாடிக்கையாளரின் நேரடி உரையாடல் மிக சந்தோசமான வாழ்க்கை.
படித்து பட்டதாரியாக இருக்க வேண்டும் என்ற நிலை இல்லை என்றால் பரவாயில்லை ஏதாவது ஒரு தொழிலை கற்றவராக வேலை தேடுங்கள் வெற்றி நிச்சயம் !
அடுத்த வாரம்... 'பைக் மேசெஞ்சர்கள்' பற்றியது...

[ வளைகுடாப்பயணம் தொடரும்... ]
'பத்திரிக்கைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்
””கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்
ReplyDeleteகவலை உனக்கில்லை ஒத்துக்கொள்””
என்ற பாடல் வரிகளை நினைவுபடுத்தும் அருமையான ஆக்கம்; படிப்பவர்க்குக் கிட்டும் ஓர் ஊக்கம்; அரபகத்தில் இன்னற்படுவோரின் நிலையறிந்தத் தாக்கம் !
இற்றைப் பொழுதின் இளைஞர்கள் தட்டச்சுப் பயிற்சிக் கூடச் செல்வதில்லை; எங்கெடுத்தாலும் திரைப்படம், திரைப்படம், திரைப்படம் என்றே கதியாகிப் போனோம். முகநூல், வலைப்பதிவு, மடற்குழு என்று எங்குப் போனாலும், அரட்டைப்பேச்சும், அதில் 90 விழுக்காடுக் கேளிக்கை நிறைந்த திரைப்படப் பேச்சுத்தான் நிறைக்கிறது.
நம்முடைய ஆதங்கம் இற்றை இளைஞர்களை எட்டுமா என்பதும் ஐயமாக இருப்பினும், எழுதுவது எம் கடன்; திருந்துவது அவர்களின் மகாக் கடன் என்றே சொல்லுவோமாக.
அருமையான ஆக்கத்திற்கு வாழ்த்துகள், அதிரைத் தமிழூற்றே!
மிக்க நன்றி கவியன்பரே
Delete///படித்து பட்டதாரியாக இருக்க வேண்டும் என்ற நிலை இல்லை என்றால் பரவாயில்லை ஏதாவது ஒரு தொழிலை கற்றவராக வேலை தேடுங்கள் வெற்றி நிச்சயம் !///
ReplyDeleteவளைகுடா வாழ்க்கையை பற்றி ஒவ்வொருவாரமும் வாரமும் நல்ல பயனுள்ள தகவல்களை தந்து கொண்டிருக்கிறீர்கள் இந்தவாரப் பதிவின் இறுதியில் நல்லதொரு மெசேஜை சொல்லியிருக்கிறீர்கள். அருமை வாழ்த்துகள்.
நம் அடுத்த தலைமுறையினர் அறியவே ..இந்த பதிவு
Deleteதங்களின் ஒத்துழைப்பு இன்றி அமையாத ஒன்று மிக்க நன்றி அதிரை மெய்சா அவர்களே
திறமையை கற்கும் ஆர்வம் இருக்கவேண்டும். இனியென்ன வெற்றிதான்.
ReplyDeleteநன்றாய் கூறினீர்கள் அறிஞர் நபி தாஸ் அவர்களே
Delete
ReplyDeleteஇனிக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்
தூய தமிழ்மணக்க! நேய மனங்கமழ!
ஆய கலைகள் அணிந்தொளிர! - மாயவனே!
இன்பத் திருநாளாய் என்றும் இனித்திருக்க!
அன்பாம் அமுதை அளி!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
நல்வாழ்த்துக்கள் ..இனிய தமிழால்..வளம் வளம் வந்த தமிழறிஞர் ...கவிஞர்.கி பாரதி தாசன் அவர்களே ..தங்கள் வருகைக்கு நன்றி ...
Deleteவெளிநாடுகளில் தமிழ் ..தமிழர் ஓர் ஆய்வு என்ற தளிப்பில் புத்தகம் எழுத உள்ளேன் ..பிரான்சில்
தமிழர் நிலை ..தமிழர்களிடம் மொழி பற்று எந்த அளவில் உள்ளது என்பதை அறிய விளைகிறேன்
தங்களின் மேலான ஆதரவு தேவை
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteசகோ, அதிரை சித்திக்கின் வளைகுடா பயணம் இன்னும் தொடர அதன் விசா காலாம் நீடிக்க வேண்டுகின்றேன்.
ஒவ்வொரு பதிப்பும் மிகவும் அருமை, இதிலிருந்து என்ன தெரியுது, ஞானம் தன்னம்பிக்கை விடாமுயற்ச்சி நேர்மை இவை நான்கும் இருந்தால்...........
இருந்தாலும் கூட நானே அசந்து விட்டேன்.
பாராட்டுக்கள்.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
நன்றி ..ஜமால் காக்கா அவர்களே .
Deleteதங்கள் வருகைக்கு நன்றி
அருமை
ReplyDeleteநன்றி சகோ ..சிம்புள் ...
Deleteதங்கள் வருகைக்கு நன்றி
பயனுள்ள நல்ல தகவல்கள் இன்றைய இளைஞர்கள் முக்கியம் படிக்க வேண்டிய கருத்துக்கள் வாழ்த்துக்கள் நண்பரே
ReplyDeleteநன்றி நண்பரே ...
Deleteஇவ்வாக்கத்தை புத்தகமாய் வெயிட முடிவு செய்துள்ளேன் ..தம்பி நிஜாமும் இதற்கு உதவ முன்
வந்துள்ளார்கள் ..தங்களின் ஆதரவும் தேவை ..
இது பற்றி தம்பி நிஜாமிடம் பேசிக்கொள்ளவும் ...
நன்றி
// படித்து பட்டதாரியாக இருக்க வேண்டும் என்ற நிலை இல்லை என்றால் பரவாயில்லை ஏதாவது ஒரு தொழிலை கற்றவராக வேலை தேடுங்கள் வெற்றி நிச்சயம் ! //
ReplyDeleteநல்ல உபதேசம் !
ஒவ்வொரு வாரமும் நல்லதொரு உபதேசத்துடன் கட்டுரைகளை முடித்து வருவது சிறந்து எழுத்தாளர் என்பதை நிருபித்து வருகிறீர்கள்.
வாழ்த்துக்கள் காக்கா
நன்றி ..தம்பி நிஜாம் ..
Deleteகளம் காண தளம் அமைத்த தங்களின் பங்கு இன்றி அமையாதது
அருமையாக சொன்னீர்கள் கைத்தொழில் ஒன்றை சில சமயம் கை கொடுக்கும்.வாழ்த்துக்கள் தோழரே.
ReplyDeleteதங்கள் கருத்திற்கு நன்றி ....!
ReplyDeleteகைத்தொழில் என்றும் கை கொடுக்கும் என்றென்றும் ...,
கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் எழுதியவர் யார்?
ReplyDeleteஅருமையான பதிவு நன்றி நண்பரே
ReplyDelete