kalinjabyr:SteelSeries | Titanium Auto Sales
The SteelSeries was the world'...
Saturday, January 4, 2014
மனித மனம்
மனித மனம்
பூக்களின் குணம்
வாடாமல் பாதுகாப்போம்
மனித மனம்
தேனின் சுவை
தெவிட்டாமல் பார்த்துக்கொள்வோம்
மனித மனம்
தென்றலின் இதம்
புயலாய் மாறாமல் நிதானிப்போம்
மனித மனம்
தெளிந்த நீரோடை
கலங்கா நிலை காண்போம் .
மனித மனம்
நிலை கண்ணாடி
புன்னைகைத்து புன்னகை
புண் முறுவல் காண்போம்
இனி வரும் நாட்களை
வண்ண பூக்களால் நிறைத்து
மனம் பரப்புவோம்
இனி வரும் நாட்களை
இனிய குணங்களால் உறவாடி
தேனின் சுவை காண்போம் .
இனி வரும் நாட்களை
இதம் தரும் தென்றலாய் வீசி
சமுதாயத்தில் இதம் காண்போம்
இனி வரும் நாட்களை
புன்னகையால் பிரதி பலித்து
நல் நட்பை பெறுவோம்
மதம் கடந்த நட்பு
நாடு கடந்த நட்பு
மொழி மறந்த நட்பு பாராட்டி
நட்பு என்ற பூக்களால்
இனி வரும் நாட்களை வரவேற்போம்
இனி வரும் நாட்களை
அன்பு எனும் தேன்கலந்து
கலக்கம் இல்லா நீரோடையாய் அமைய
இறைவனை இறைஞ்சுவோம்
நம் அனைவருக்கும்
இனி வரும் நாட்கள் நலமாய் அமைய
வாழ்த்துகிறேன்...
பூக்களின் குணம்
வாடாமல் பாதுகாப்போம்
மனித மனம்
தேனின் சுவை
தெவிட்டாமல் பார்த்துக்கொள்வோம்
மனித மனம்
தென்றலின் இதம்
புயலாய் மாறாமல் நிதானிப்போம்
மனித மனம்
தெளிந்த நீரோடை
கலங்கா நிலை காண்போம் .
மனித மனம்
நிலை கண்ணாடி
புன்னைகைத்து புன்னகை
புண் முறுவல் காண்போம்
இனி வரும் நாட்களை
வண்ண பூக்களால் நிறைத்து
மனம் பரப்புவோம்
இனி வரும் நாட்களை
இனிய குணங்களால் உறவாடி
தேனின் சுவை காண்போம் .
இனி வரும் நாட்களை
இதம் தரும் தென்றலாய் வீசி
சமுதாயத்தில் இதம் காண்போம்
இனி வரும் நாட்களை
புன்னகையால் பிரதி பலித்து
நல் நட்பை பெறுவோம்
மதம் கடந்த நட்பு
நாடு கடந்த நட்பு
மொழி மறந்த நட்பு பாராட்டி
நட்பு என்ற பூக்களால்
இனி வரும் நாட்களை வரவேற்போம்
இனி வரும் நாட்களை
அன்பு எனும் தேன்கலந்து
கலக்கம் இல்லா நீரோடையாய் அமைய
இறைவனை இறைஞ்சுவோம்
நம் அனைவருக்கும்
இனி வரும் நாட்கள் நலமாய் அமைய
வாழ்த்துகிறேன்...
'பத்திரிக்கைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்
Subscribe to:
Post Comments (Atom)
ஒவ்வொரு வரியும் அருமை...
ReplyDeleteதங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் உட்பட அனைவருக்கும் 2014 இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
மனித மனம்
ReplyDeleteதெளிந்த நீரோடை
கலங்கா நிலை காண்போம்
ஆம் !
அதனைத் தெளிந்த
அழகிய நீரோடையாக
அனுதினம் கலங்காது
அக்கறையுடன் காண்போம் !.
அதனால்.....
மனிதனான மனம்
மறதியைக் களைந்து
மாண்புற வேண்டுவோமே !
புது வருடத்தின் வித்தியாச வாழ்த்து
ReplyDeleteமனித மனத்தின் பன்முகத்தை அறிவுரையுடன் கவிதையாக்கி படைத்துள்ளீர்கள். அருமை. வாழ்த்துக்கள்.
ReplyDeleteநல்லதை நினைத்து நல்லதைச் செய்து அனைவரும் நலமுடன் வாழ்வோம்.!
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteபுது வருடத்தில் முளைத்த இந்த கவிதை, இனி வாரா வாரம் முளைத்துக் கொண்டே இருக்கும்போல் தெரிகிறதே.
பாராட்டுக்கள், வாழ்த்துக்கள். .
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.
//மதம் கடந்த நட்பு
ReplyDeleteநாடு கடந்த நட்பு
மொழி மறந்த நட்பு பாராட்டி
நட்பு என்ற பூக்களால்
இனி வரும் நாட்களை வரவேற்போம்//
இந்தியாவை விட வளைகுடாவில் இதுதான் மிகைத்து நிற்கிறது... இது இந்தியாவிலும் பிரதிபலிக வேண்டும்..
தத்துவ முத்துக்கள்!
ReplyDelete