.

Pages

Friday, January 10, 2014

விஞ்சிடும் தமிழரின் சாதனைகள் !


பாடலாசிரியர் : அதிரை கவியன்பன் கலாம், அபுதபி
பாடியவர் : அதிரை ஜஃபர், ஜித்தா
விஞ்சிடும் தமிழரின் சாதனைகள்
...........வையகம் புகழ்ந்திடும் போதினிலே
நெஞ்சினில் மிகைத்திடும் இன்பமுமே
............நேர்மையை மதித்திடும் அன்புடனே!

இன்றுள மின்மடல் கண்டவராம்
,,,,,,,,,இகத்தினில் மென்பொருள் வென்றவராம்
சென்றிடும் இடங்களில்  எம்மவராம்
.........சீரிளம் திறமையில் எம்தமிழர்!

உழைப்பினில் இவரையே வேண்டிடுவர்
......உலகினில் உண்மையை நாடுபவர்
அழைப்பதும் தமிழரை என்பதையே
.....அறிந்தவர் உணருவர் மன்பதையில்!

பேரிடர் நேரிடும் போதினிலே
......பேருத விசெய்திடும் மானிடராம்
யாரிடம் கேட்பினும் கூறிடுவர்
....யாமறிந் தவுண்மையை ஏற்றிடுவர்!

சிறப்புடன் நேர்மையைப் போற்றிடுவர்
......செயலுடன் சொல்லையும் காத்திடுவர்
பிறந்ததன் தாய்மொழிப் பற்றினிலே
.....பிறரையும் விஞ்சுவர் பாரினிலே!

"கவியன்பன்"
அபுல் கலாம் 
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com
குறிப்பு :
இந்தக் கவிதை கடந்த [ 09-01-2014 ] அன்று இலண்டன் தமிழ் வானொலியின் கவிதை நேரம் நிகழ்ச்சியில் ஒலிப்பரப்புச் செய்யப்பட்டது. அதன் காணொளி இதோ...

15 comments:

 1. தமிழநென்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா /// நல்ல கவி

  ReplyDelete
  Replies
  1. "இந்தியர் எளியில்சிந்தும் உழைப்பு” என்னும் தலைப்பில் முன்பு ஒரு வெண்பா இயற்றி உள்ளேன்

   பார்க்க: http://kalaamkathir.blogspot.ae/2011/01/blog-post_02.html

   இன்று ”விஞ்சிடும் தமிழரின் சாதனைகள்”

   நாளை (இனி, இன்ஷா அல்லாஹ்) “அதிரையைப் பற்றி அபுல்கலாமின் பாடல்” என்னும் தலைப்பில் எழுதிக் கொண்டிருக்கும் வண்ணப்பாடல் ஒலிக்கும், எமது வண்ணப்பாடகரின் தேன்குரலில்!

   யான் பிறந்த தேசம், இனம், ஊருக்கு என்னால் இயன்ற அளவுக்குப் புகழ்மாலைச் சூட்டுத்ல் என் பாமாலைக்கு உரிய தேவை என்றே எண்ணுகின்றேன். அதிலும், உங்களைப் போன்ற நாட்டு, இன, மொழி, ஊர்ப் பற்று மிக்கோரின் ஊக்கம் என்னை மேன்மேலும் அவ்வண்ணம் பாடல்கள் இய்ற்ற உதவும் என்பதும் திண்ணம் ஆகும்.

   மார்க்கம் பற்றி எழுதவில்லையா? என்ற கேள்விக் கணைகள் வரும் முன் என் விடை என்னும் கேடயம் இதோ:

   தமியேன் இயற்றியுள்ள 238 கவிதைகளில் அதிகப் பெரும்பான்மையான வரிகள் மார்க்கம் இழையோடும் தறிகளில் தான் நெய்யப்பட்டப் பட்டுப் பாக்கள் என்பதையும் ஈண்டுக் பதிவு செய்கின்றேன்.

   உங்களின் உயர்வான கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நனறி= ஜஸாக்கல்லாஹ் கைரன்.

   Delete
  2. \\இந்தியர் வெளியில் சிந்தும் உழைப்பு\\ என்று திருத்தி வாசிக்கவும். தட்டச்சுப் பிழைக்கு மன்னிக்கவும்.

   Delete
 2. தமிழரின் பெருமை அருமை !

  உலகெங்குமுள்ள தமிழர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும்.

  கவிதையை படைத்த - பாடிய இரு படைப்பாளிகளுக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. உலகளாவியத் தமிழறிஞர்கள், வாசகர்கள் உள்ளங்களில் எங்களின் பெயரும், ஊரின் பெருமையும் ஏற்கனவே தங்களின் பேருதவியால் பரவிக் கொண்டிருப்பதற்கு நாங்கள் என்றும் கடப்பாடு உடையவர்களாகின்றோம்.

   தற்பொழுது தமியேனின் தலைமையில் “கவிதைப் போட்டி- பரிசு 5001” என்னும் நிகழ்வுக்கு உலகளாவிய கவிஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று அவ்ர்களின் தொடர்பும், அவர்களின் கவிதைகளை வாசித்துத் தெரிவு செய்யும் ஓர் அரிய வாய்ப்பும் கிட்டி விட்டது; அல்ஹம்துலில்லாஹ், துபாய்த் தமிழர்ச் சங்கமம் என்னும் அமைப்பில் கலை, இலக்கியச் செயலாளராக நியமிக்கப்பட்டப் பொறுப்பில் பணியாற்றும் பேறு பெற்றதனால். இதுவரை எழுதியோரின் கவிதைகள் யாவும் மிகவும் அருமையானவைகள் என்றாலு,ம் ஒருவர்க்கு மட்டுமே (புது முயற்சி என்பதால்) பரிசு என்று அமைப்பினர் முடிவு செய்து விட்டதால், முதற்சுற்றில் தெரிவு செய்யப்பட்டப் பத்துக் கவிஞர்கட்கு மட்டும் (அவர்களின் நபிதாஸும் அடங்குவார்) “வாய்ப்புகள் தந்திடும் வாழ்வு” என்னும் தலைப்பில் 16 அடிகட்குள் பாடல் எழுத வேண்டும் என்று அறிவுறுத்திச் சுற்றறிக்கை விட்டுள்ளோம்.

   மேலும், ஏற்கனவே, இல்ண்டன், அமெரிக்கா போன்ற மேலை நாடுகளின் தமிழ் வானொலிகளிலும் என் கவிதைகள் வாசிக்கப்பட்டும் வ்ருகின்றன. எல்லாம் நீங்கள் தரும் ஊக்கம் என்பதை மட்டும் யாம் மறந்திட மாட்டோம்.

   மேன்மேலும், உங்களின் ஆதரவுக்கும், ஊக்கத்திற்கும் உ.ளம்நிறைவான நன்றிகள்= ஜஸாக்கல்லாஹ் கைரன்.

   நிற்க. முன்னர்த் திட்டமிட்டபடி, இம்மாத இறுதியில் தாயகம் வரும் ஏற்பாட்டைத் தள்ளி வைத்து விட்டேன்; அலுவலகத்தில் என் துறைக்கான கணக்குத் தணிக்கைத் துவங்கி விட்டதால் ,இன்ஷா அல்லாஹ் ஜூலை இறுதியில் (நோன்புப் பெருநாளைக்கு) பயணமாகத் திட்டமிட்டுள்ளேன்.

   ஆனால், ஏற்கனவே திட்டமிட்டபடி இம்மாதம் இறுதியில் புறப்பட்டு வந்திருந்தால், இன்னும் தமிழர்களின் இதயங்களில் இடம்பிடிக்கும் ஓர் அரிய வாய்ப்பு ஏற்பட்டிருக்கும்:

   1) சென்னை டிஸ்கவரி புக் பேலஸ் என்னும் பதிப்பகத்தர்ரிடம் யான் கொண்ட ஒப்பந்தத்தின்படி இம்மாத்மே என் கவிதைத்தொகுப்பு (நீங்கள் தெரிவு செய்த அதே தலைப்பில் (கலாமின் பேசும் கவிதைகள்) வெளியிட்டு, இப்பொழுதுத் துவங்கியுள்ளப் புத்தகக் கண்காட்சியில் என் கவிதை நூலும் இடம் பெற்றிருக்கும்.

   என்ன செய்வது? எமக்குத் தொழில் ஒன்று உள்ளது; அதுவும் கணக்கர் என்னும் கடினமான மற்றும் பொறுப்புள்ள வேலை; குறிப்பாக இந்தக் கணக்குத் தணிக்கை என்னும் பருவத்தில் வெளிச் செல்ல இயலாது. என் கண்புரை அறுவை சிகிச்சை மற்றும் ஒரு முக்கியமான வேலை ஆகியன்வற்றையும் தள்ளி வைத்து விட்டு வாழ்வாதாரத்தின் அடிப்படையான் என் பணிக்கு முதலிடம் கொடுத்து விட்டேன்; எனினும் இப்படிப்பட்ட இன்னும் பலவேறு வாய்ப்புகள் (இலங்கை மற்றும் சிங்கை நாடுகளில் வந்த இலக்கியக் கூட்டம் மற்றும் நேர்காணல், விருது பெறும் அழைப்புகள்) யாவும் என் பணி நெருக்கம காரணீயமாகவே தள்ளிப் போடப்ப்ட்டவைகள். (உம்ராவுக்குச் சென்ற போது கூட மூன்று நாட்கள் மட்டும் தான் விடுப்புத் தந்தார்கள்)

   இவைகளை நீண்டு செல்லும் இப்பின்னூட்டத்தில் ஈண்டு யான் விளக்கிடும் நோக்கம்: தற்பெருமை அலங்காரம் அன்று; மாறாக, உலகளாவியப் புகழ என்னும் உச்சியை நோக்கி யான் பயணிப்பதெல்லாம் உங்களின் ஆசிகளைத் தேக்கித் தான் என்ப்தையும், என்னைப் பின்பற்றி, என் கதவுகளைத் தட்டுங்கள்; திற்ந்து வழி காட்டுகின்றேன், என்று மற்றக் க்விஞர்கட்கும் யான் விடும் ஓர் அன்பான அழைப்பு தான் என்றும் உங்களின் மனசாட்சிக்கும் தெரியும் என்று எனக்கும் தெரியும்!

   Delete
 3. தமிழரின் சாதனை கவித்தீபத்தின் காந்த வரிகளிலும் தேன்குரல் சகோ.ஜாஃபரின் குரலிலும் ஓங்கி ஒலித்தது. மிக அருமை வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. அன்பின் அதிரை மெய்சா , உங்களின் அருமையான வாழ்த்துக்கு எங்களின் அகம்நிறைவான நனறிகள்= ஜ்ஸாக்கல்லாஹ் கைரன்.

   Delete
 4. பாரினில் தமிழரை போற்றுகின்ற
  ...........பாதையில் படைத்திடும் பாக்களிலே
  வீரியம் நிறைந்திடும் வார்த்தையினில்
  ...........வீழ்ந்திடும் மயங்கிய மானிடன்நான்

  ReplyDelete
  Replies
  1. கூரிய நற்சுவைப் பாக்களிலே
   ...கூர்மதி உன்னிடம் காண்பதிலும்
   நேரிய வழிகளை ஞானமுதம்
   ...நீயுமே தருவதும் தேனுணவே!

   Delete
  2. தேனுணவின் மூலம் தேடும்
   ..........தேவனவன் ஞானம் பெற்று
   மானிடனின் ஈனம் நீக்கி
   ..........மாண்புடனே அறிவில் நிற்பீர்

   Delete
 5. அன்பின் நபிதாஸ்.
  அஸ்ஸலாமு அலைக்கும்,

  யாம் நடத்தும் கவிதைப் போட்டியின் முதற்சுற்று முடிவை அறிவிக்கும் தருவாயில் இன்னும் இரு கவிஞர்கள் இறுதியாக அனுப்பியக் கவிதைகளும் இடம்பெற்று அவற்றையும் தேர்வினில் எடுத்துக் கொள்ள வேண்டிய வண்ணம் ஆகிவிட்டதாலும், இறுதித் தேர்வின் திகதியும் நீட்டிக்கப்பட்டு விட்டதாலும், உங்கட்கான (முதற்சுற்றின் தேர்வாளர்க்கான) அறிவிப்பு மடல் இன்றோ நாளையோ தலைமையிடத்திலிருந்து (துபாய்த் தமிழர்ச் சங்கமம்) அனுப்பி வைப்பர் என்பதை நினைவுபடுத்திக் கொள்கின்றேன்.

  இப்போட்டி மிகவும் கடினாமாகவே அமையும் வண்ணம், உலகின் மூலைகளிலிருந்து தமிழ்க் கவிஞர்களின் படைப்புகள் என்னிடம் வந்து சேர்ந்த வண்ணம் இருக்கின்றன. அவற்றுள் முதல் சுற்றிற்கான பத்துக் கவிஞர்களைத் தெரிவுச் செய்யும் பணியில் யான் மிக்வும் சிரமப்படும் அளவுக்கு யாரை விடுவது யாரைத் தொடுவது என்று மிகவும் சிக்கலான ஒரு தேர்வில் உங்களின் படைப்பும் ஏற்கப்பட்டுள்ளது. எனினும், இறுதித் தேர்வை உலகின் மிகச் சிறந்த பாவலர்- கவிமாமணி - புலவர்கள் அடங்கிய குழுவே தீர்மானிக்கும்.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் விரிவான விளக்கங்களுக்கு மிகுந்த நன்றி.

   Delete
  2. அன்பின் நபிதாஸ்.
   அஸ்ஸலாமு அலைக்கும்

   துபாய்த் தமிழர்ச் சங்கமத்தின் கவிதைபோட்டி - ன் முதல் சுற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த 10 படைப்புகள்

   1. லண்டன் வாழ் கவிஞர் கிரிகாசன் அவர்களின் கவிதை

   2. ஈழத்து கவிஞர் உமர் அலி முகம்மதிஸ்மாயில் அவர்களின் “மூக்குத்தியழகிகள்”

   3. கவியருவி முத்துப்பேட்டை மலிக்கா ஃபாரூக் அவர்களின் "அது வரை "

   4. ஈழத்து கவிஞர் பாவரசி -கலைமகள் ஹிதாயா றிஸ்வி அவர்களின் " புகழ் பாடுங்கள் "

   5. முத்துலாபுரம் கவிஞர் அழகுபாண்டி அரசப்பன் அவர்களின் " மனிதம் வளர்ப்போம் "

   6. சென்னை பெருங்களத்தூர் கவிஞர் தமிழ் செல்வி நிக்கோலஸ் அவர்களின் " கைம்பெண்ணினின் கனவுகள் "

   7. பொற்கிழிக்கவிஞர் டாக்டர். ச.சவகர்லால் அவர்களின் " பூக்கள் பேசினால் "

   8. பொள்ளாச்சி கவிஞர் இரா. பூபாலன் அவர்களின் " புத்தனின் பேரழுகை "

   9. சேலம் முத்தமிழ் மன்ற செயலாளர் கவிஞர் மாதுகண்ணன் அவர்களின் " இரகசியம்"

   10. அதிரை கவிஞர் நபிதாஸ் அவர்களின்" அறியாமை அகன்றால் "

   எங்களின் அழைப்பினை ஏற்று உலகின் பலவேறு பாகங்களிலிருந்தும் மிகவும் அற்புதமாகவும் , மொழிப் புலமை மற்றும் கவித்துவத்துடனும் மிக்க ஆர்வத்துடன் கலந்து கொண்டு கவிதைகள் வனைந்து அனுப்பிய அத்தனை கவிஞர்கட்கும் எங்களின் உளம்நிறைவான நன்றியை உரித்தாக்குகின்றோம். அத்தனை கவிஞர்களிலும் முதற்சுற்றில் பத்துக் கவிஞர்களை மட்டும் தேர்ந்த்டுப்பதில் மிகவும் சிரமமாகவே இருக்கும் அளவுக்கு அனைவரும் மிகவும் அருமையான கவிதைகளை வனைந்தனுப்பியிருந்தீர்கள். எனினும், இறுதிச் சுற்றில் ஒரே ஒரு கவிஞர்க்கு மட்டும் பரிசில் வழங்குவதென முன்னர்த் தீர்மானித்த வண்ணம் செயல்பட வேண்டியிருப்பதால், இந்த இறுதிச் சுற்றில் இந்தப் பத்துக் கவிஞர்களையும் கலந்து கொள்ள- ஒரே தலைப்பில் யாத்து அனுப்ப வேண்டியுள்ளோம். மிகச்சிறந்த ஒரு படைப்பை மட்டும் தேர்ந்தேடுக்கும் இறுதி சுற்றின் முடிவுக்கு ஜனவரி 25 ஆம் தேதி வரை காத்திருப்போம் .

   இனி வரும் காலங்களில் பரிசில்களை நீட்டவும் செய்வோம். இஃது எங்களின் முதல் முயற்சியாகும்.

   மீண்டும் உளம்நிறைவான நன்றிகள். உலகத் தமிழர்கள் அனைவருக்கும் எங்கள் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்

   அன்புடன்
   துபாய்த் தமிழர்ச் சங்கமம்
   7

   Delete
 6. பதிவுக்கு நன்றி.

  அருமை, இனிமை, பெருமை, நன்மை.

  பாராட்டுக்கள், வாழ்த்துக்கள். .

  இப்படிக்கு.
  K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
  த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
  உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

  ReplyDelete
 7. உண்மை.

  அன்புக்குப் பாராட்டுகள் மச்சான்

  ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers